SBS

SBS Tamil - SBS தமிழ்

News TA ↓ Odcinki: 2604

Independent news and stories from SBS Audio, connecting you to life in Australia and Tamil-speaking Australians. - தமிழ் பேசும் ஆஸ்திரேலியர்களுடனும், ஆஸ்திரேலிய வாழ்க்கையுடனும் இணைய உங்களுக்கு உதவும் பக்கசார்பற்ற செய்திகள் மற்றும் கதைகள்.

Koniecznie odwiedź stronę podcastu i wesprzyj twórcę: www.sbs.com.au

Autor

SBS

Kategoria

News

Strona podcastu

www.sbs.com.au

Ostatni odcinek

14 paź 2026

Gdzie słuchać?

Podcasty w aplikacji Replaio Radio Już wkrótce

Podcasty trafią do aplikacji już wkrótce. Zainstaluj teraz i jako pierwszy zobacz nowe podejście do podcastów

Pobierz z Google Play Zainstaluj za darmo Android prawie 10 mln pobrań · ocena 4,8 iOS niedługo

Odcinki

ஆஸ்திரேலியாவில் நமது வேலைகளை AI மாற்றுமா, பறிக்குமா? 26.08.2026

முனைவர் பிரியா ஜெகநாதன் அவர்கள் பிரிஸ்பேனை தளமாகக் கொண்ட AI நிறுவனத்தை நிர்வகித்து வருகிறார். அவர் பிரபல TEDx பேச்சாளர். தொழில் நிறுவனங்கள் AI, automation மற்றும் digital systems-ஐ பயன்படுத்தி வளர்ச்சியடைய உதவும் வகையில், ஆலோசனை வழங்கும் நிபுணர். ஆஸ்திரேலியாவில் வேலைவாய்ப்பு, வணிகம் மற்றும் குடியேற்ற சமூகங்கள் மீது செயற்கை நுண்ணறிவான - AI ஏற்படுத்தும் தாக்கம் குறித்தும், தொடரும் மாற்றங்களுக்கு மக்...

மர்மங்கள் – ஒரு தொடர்கதை: கடலில் மறைந்த ஆஸ்திரேலிய பிரதமருக்கு என்ன நடந்தது? 26.08.2026

ஆஸ்திரேலிய பிரதமர் Harold Holt கடலில் காணாமற்போன சம்பவம் நிகழ்ந்து இந்த ஆண்டு 59 ஆண்டுகள் ஆகின்றன. நண்பர்களுடன் கடலில் நீந்தச் சென்ற Harold Holt, அதன் பின்னர் திரும்பி வரவே இல்லை. அவர் கடலில் மூழ்கி உயிரிழந்தாரா? தற்கொலை செய்துகொண்டாரா? கொல்லப்பட்டாரா? அல்லது கடத்தப்பட்டாரா? Harold Holt-க்கு உண்மையில் என்ன நடந்தது? ‘மர்மங்கள் – ஒரு தொடர்கதை’ (Unresolved Mysteries) தொடரில், இன்றுவரை பல கேள்விகளை எழ...

இன்றைய செய்திகள்: 26 ஆகஸ்ட் 2026 - புதன்கிழமை 26.08.2026

SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (புதன்கிழமை 26/08/2026) செய்திகள். வாசித்தவர் குலசேகரம் சஞ்சயன்.

ஆஸ்திரேலியாவில் பென்குயின்களுக்கு ஏன் தடுப்பூசி போடப்படுகிறது? எப்படி போடப்படுகிறது? 25.08.2026

விக்டோரியா மாநிலத்தில் பெங்குயின்களை பாதுகாக்க தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இது குறித்த தகவலை முன்வைக்கிறார் றைசெல். Why are penguins being vaccinated in Australia, and how is it done?

இலங்கை மீண்டும் ஒரு பொருளாதார நெருக்கடியை சந்திக்குமா? 25.08.2026

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் கடனுதவி அடுத்த வருடம் மார்ச் மாதத்துடன் நிறைவடையவுள்ளது. இந்த நிலையில், இலங்கையின் எதிர்கால பொருளாதார நிலை தொடர்பில் எதிர்க்கட்சிகள் மற்றும் பொருளாதாரத்துறை நிபுணர்களின் கருத்துகளுக்கு அரசு பதிலளித்துள்ளது. இது தொடர்பில் “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன். Will Sri Lanka face an economic crisis again?

குடிவரவு எண்ணிக்கை: Labor, Coalition கூட்டணி, One Nation கட்சிகள் என்ன முன்மொழிகின்றன, ஏன்? 25.08.2026

ஆஸ்திரேலிய அரசியலில் இந்த ஆண்டு மீண்டும் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தும் ஒரு சொல் - 'குடிவரவு.' ஒவ்வொரு ஆண்டும் எத்தனை பேரை நம் நாட்டிற்குக் குடிவர அனுமதிக்க வேண்டும் என்ற கேள்வி இப்போது ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய அரசியல் மோதல்களில் ஒன்றாக மாறியிருக்கிறது. இது குறித்த செய்தியின் பின்னணியை எடுத்து வருகிறார் குலசேகரம் சஞ்சயன்.

மெல்பன்–கொழும்பு நேரடி விமான சேவையை தொடங்கியது Jetstar 25.08.2026

இலங்கைக்கு பயணம் செய்யும் ஆஸ்திரேலியர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், மெல்பனில் இருந்து கொழும்புக்கு நேரடி விமான சேவையை ஜெட்ஸ்டார் நிறுவனம் தொடங்கியுள்ளது.இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.

இன்றைய செய்திகள்: 25 ஆகஸ்ட் 2026 - செவ்வாய்க்கிழமை 25.08.2026

SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (செவ்வாய்க்கிழமை 25/08/2026) செய்திகள். வாசித்தவர் : செல்வி இன்பசேகரன். Today's highlights ( 25 August 2026 - Tuesday)

வயதுடன் மாறும் புரோஸ்டேட் ஆரோக்கியம்: ஆண்கள் தெரிந்துகொள்ள வேண்டியவை 24.08.2026

வயது அதிகரிக்கும்போது ஆண்களின் புரோஸ்டேட் சுரப்பியில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படுகின்றன? புரோஸ்டேட் ஆரோக்கியத்தை எவ்வாறு பாதுக்காப்பது? புரோஸ்டேட் புற்றுநோய் ஏற்படுவதற்கான முக்கிய ஆபத்துக் காரணிகள் என்ன? போன்ற பல கேள்விகளுக்கு பதில் தருகிறார் மெல்பனில் Urologist சிறுநீரக மருத்துவராக பணிபுரியும் டாக்டர் சுதேசன் சுந்தரலிங்கம். அவரோடு உரையாடுகிறார் செல்வி இன்பசேகரன். Prostate changes with age: Causes,...

Superannuation பணத்தை முன்கூட்டியே எடுக்க முடியுமா? விதிமுறைகளும் விதிவிலக்குகளும் 24.08.2026

ஆஸ்திரேலியாவில் ஓய்வுக்காலத்திற்காக சேமிக்கப்படும் சூப்பரானுவேஷன் பணம், தற்போது சுமார் 4.4 டிரில்லியன் டாலராக உள்ளது. வாழ்க்கைச் செலவுகள் அதிகரித்து வரும் நிலையில், இந்தப் பணத்தில் ஒரு பகுதியையாவது ஓய்வு பெறுவதற்கு முன்பாக எடுத்துக்கொள்ள அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் அவ்வப்போது எழுகின்றன. இது குறித்த செய்தியின் பின்னணியை எடுத்து வருகிறார் செல்வி இன்பசேகரன். Can you access your superannuation...

Birth and pregnancy care options in Australia - ஆஸ்திரேலியாவில் குழந்தைப் பேறு: கர்ப்ப காலப் பராமரிப்பு முதல் பிரசவம் வரை 24.08.2026

If you're first-time parents in Australia, choosing where and how to give birth can feel overwhelming. Whether you go through the public or private health system, it is important to understand your options and know where to reach out for advice to make the right decision for you and your baby. - நீங்கள் முதன்முறையாக பெற்றோராகப் போகிறீர்கள் என்றால் எங்கு, எவ்வாறு குழந்தையைப் பெற்றெடுப்பது என்பதைத்...

இன்றைய செய்திகள்: 24 ஆகஸ்ட் 2026 - திங்கட்கிழமை 24.08.2026

SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (திங்கட்கிழமை 24/08/2026) செய்திகள். வாசித்தவர் குலசேகரம் சஞ்சயன்.

இந்தியா & தமிழ்நாடு: கடந்த 7 நாட்கள் செய்திகளின் தொகுப்பு 23.08.2026

தமிழக சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கார் என்ற முதலமைச்சர் விஜயின் அறிவிப்பிற்கு திமுக எதிர்ப்பு; திமுகவில் பதவிக்கு வயது வரம்பு நிர்ணயம் என்று செயற்குழுக் கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு; மேகமலை ஆக்கிரமிப்பு விவகாரத்தில் 118 அரசு ஊழியர்கள் மீது நடவடிக்கை; உள்ளிட்ட செய்திகளோடு "செய்திகளின் பின்னணி" நிகழ்ச்சிக்காக இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ். India & Tamil Nadu: News highlights from t...

இந்த வார ஆஸ்திரேலிய செய்திகள் (16 - 22 ஆகஸ்ட் 2026) 21.08.2026

ஆஸ்திரேலியாவின் இந்த வார (16 - 22 ஆகஸ்ட் 2026) முக்கிய செய்திகளின் தொகுப்பு. வாசித்தவர்: றைசெல். Top news from Australia this week (16 - 22 August 2026)

புதிய சுற்றுலா வரியை அறிமுகப்படுத்தும் Fiji: ஆஸ்திரேலியப் பயணிகளுக்கு கூடுதல் செலவா? 21.08.2026

Fiji அரசு, பெரிய அளவிலான சுற்றுலா நிறுவனங்களுக்கு புதிய சுற்றுலா சேவை வரியை அறிமுகப்படுத்துவதால் இந்த வரியின் செலவு பயணிகளிடமே சுமத்தப்படக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.

Can you pick fruit from someone's garden? - அடுத்தவர் வீட்டுக்கு வெளியே உள்ள மரங்களிலிருக்கும் பழங்களைப் பறிக்கலாமா? 21.08.2026

Walking through an Australian suburb, you might spot everything from curry leaves and lemons to tomatoes and herbs growing in front gardens or on verges. But is it legal to pick it? This guide explains when it's legal to pick produce, why permission matters, and how community gardens offer another way to grow your own food. - அடுத்தவரின் தோட்டத்தில் அல்லது அவர்களின் வீட்டிற்கு வெளியே சாலையோரத்தில்...

Citizenship is more complex than you think - SBS Examines : ஆஸ்திரேலியராக இருப்பது என்றால் என்ன? 21.08.2026

What does it mean to be Australian? While citizenship is being used in political discourse as a way to determine whether someone belongs, the intricacies of citizenship around the world make it much more complicated. - ஆஸ்திரேலியராக இருப்பது என்றால் என்ன? பல ஆண்டுகளாக கேட்கப்பட்டு வரும் கேள்வி இது. ஆனால் சமீப காலமாக, அரசியல் விவாதங்களைப் பார்க்கும்போது, ஆஸ்திரேலியராக இருப்பதற்கு நீங்கள் ஆஸ்திரேலிய...

Pump and Dump மோசடி: என்ன? இந்த வலையில் சிக்காமல் இருப்பது எப்படி? 21.08.2026

சமூக ஊடகங்கள் வழியாக வரும் முதலீட்டு மோசடிகள் தற்போது புதிய வடிவம் எடுத்துள்ளன. குறிப்பாக ‘Pump and Dump’ எனப்படும் மோசடி குறித்து அரசு எச்சரித்துள்ளது. இந்த மோசடி எப்படி நடக்கிறது? இதிலிருந்து நமது பணத்தை எப்படிப் பாதுகாப்பது? இது குறித்து விளக்குகிறார் Cyber Risk Senior Manager, Master of Cybersecurity and Forensics எனும் தகுதிகள் கொண்ட C. செந்தில் அவர்கள். அவர் University of Sunshine Coastயில்...

4 பில்லியன் டொலர் நிவாரணம் – Centrelink கொடுப்பனவு யாருக்கு அதிகரிக்கிறது? 21.08.2026

செப்டம்பர் மாதம் ஒரு நல்ல செய்தியுடன் தொடங்குகிறது. முதியோர் ஓய்வூதியம் முதல் வேலைதேடுவோர் கொடுப்பனவு வரை, Centrelink கொடுப்பனவுகளைப் பெறும் ஐந்து மில்லியனுக்கும் அதிகமான ஆஸ்திரேலியர்களுக்கு, வரும் செப்டம்பர் 20ஆம் தேதி முதல் கொடுப்பனவுகள் உயரவிருக்கின்றன. இது குறித்த செய்தியின் பின்னணியை எடுத்துவருகிறார் குலசேகரம் சஞ்சயன்.

இன்றைய செய்திகள்: 21 ஆகஸ்ட் 2026 - வெள்ளிக்கிழமை 21.08.2026

SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வெள்ளிக்கிழமை 21/08/2026) செய்திகள். வாசித்தவர் : செல்வி இன்பசேகரன்.

இலங்கை: இந்த வார முக்கிய செய்திகள் 20.08.2026

எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் நீதித்துறை சம்பந்தமான 22ஆவது அரசியலமைப்புத் திருத்தம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது; யுத்த காலத்தில் இந்தியாவில் தஞ்சம் புகுந்துள்ள இலங்கை அகதி மக்கள் மீண்டும் தாயகம் திரும்புவதற்கு பல்வேறு நடைமுறைகளுடன் அரசு அனுமதி வழங்கியுள்ளது. இவை உள்ளிட்ட செய்திகளோடு “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சிக்காக விவரணமொன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்த...

ஆஸ்திரேலிய அரசின் கடன் ஒரு டிரில்லியனாக ($1000 பில்லியன்) உயர்ந்தது! நாடு கடனில் மூழ்குகிறதா? 20.08.2026

ஆஸ்திரேலிய ஃபெடரல் அரசின் மொத்தக் கடன் – அதாவது gross debt, முதல் முறையாக ஒரு டிரில்லியன் டாலர் அளவை கடந்துள்ளது. இது குறித்த தகவலை முன்வைக்கிறார் றைசெல். Australian government debt rises to one trillion ($1000 billion) dollars!

விக்டோரியர்களுக்கு வாரத்திற்கு $50 Toll கட்டண உச்சவரம்பு – லிபரல் கட்சியின் தேர்தல் வாக்குறுதி 20.08.2026

விக்டோரியா மாநிலத் தேர்தலில் வெற்றி பெற்றால், வாகனங்களுக்கான Toll கட்டணத்தை வாரத்திற்கு $50 ஆகக் கட்டுப்படுத்தும் திட்டத்தை லிபரல் கட்சி அறிவித்துள்ளது.இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.

பெற்றோர் விசாவிற்கான காத்திருப்பு: 21 மாதங்களில் 1500 பேர் விசா கிடைக்க முன்பே மரணம் 20.08.2026

ஆஸ்திரேலியாவுக்கான பெற்றோர் விசா பரிசீலனை முறையில் நிலவும் நீண்டகால காத்திருப்பு குடும்பங்களை கடுமையாக பாதித்து வருவதாக குடிவரவு முகவர்கள் மற்றும் விண்ணப்பதாரர்கள் தெரிவிக்கின்றனர். இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.

சமையல் நன்றாக வருவதன் ரகசியம் என்ன? - Chef தாமு பதில் 20.08.2026

தமிழகத்தின் புகழ் மிக்க சமையல்கலைஞர்களில் ஒருவர் தாமு அவர்கள். சமையல் துறையில் முனைவர் பட்டம் பெற்றுள்ள தாமு அவர்கள் சமயல் துறையில் தனது பயணம் மற்றும் சவால்கள் குறித்து உரையாடுகிறார். அவரோடு உரையாடியவர் செல்வி இன்பசேகரன். இந்நிகழ்ச்சி ஒரு மறு ஒலிபரப்பு Interview with Chef Damu

Słuchaj podcastu SBS Tamil - SBS தமிழ் w Replaio

Radio i podcasty w jednej aplikacji - za darmo, bez zakładania konta. Zainstaluj już dziś i nie przegap premiery

Pobierz z Google Play

Replaio nie jest wydawcą podcastów; nazwy audycji, okładki i audio należą do ich autorów i są rozpowszechniane przez publiczne kanały RSS