SBS

SBS Tamil - SBS தமிழ்

News TA ↓ Odcinki: 2596

Independent news and stories from SBS Audio, connecting you to life in Australia and Tamil-speaking Australians. - தமிழ் பேசும் ஆஸ்திரேலியர்களுடனும், ஆஸ்திரேலிய வாழ்க்கையுடனும் இணைய உங்களுக்கு உதவும் பக்கசார்பற்ற செய்திகள் மற்றும் கதைகள்.

Koniecznie odwiedź stronę podcastu i wesprzyj twórcę: www.sbs.com.au

Autor

SBS

Kategoria

News

Strona podcastu

www.sbs.com.au

Ostatni odcinek

13 paź 2026

Gdzie słuchać?

Podcasty w aplikacji Replaio Radio Już wkrótce

Podcasty trafią do aplikacji już wkrótce. Zainstaluj teraz i jako pierwszy zobacz nowe podejście do podcastów

Pobierz z Google Play Zainstaluj za darmo Android prawie 10 mln pobrań · ocena 4,8 iOS niedługo

Odcinki

ஆஸ்திரேலியாவின் புகழ்பெற்ற இயற்கை அதிசயத்தை காண இனி முன்பதிவு அவசியம் 13.10.2026

விக்டோரியா மாநிலத்தின் பிரபல சுற்றுலா தலமான Twelve Apostles பாறைகளைக் காண இனி முன்பதிவு அவசியம்; நுழைவுக் கட்டணமும் அறிமுகமாகிறது. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம். #sbsaudiopodcast

நியூ சவுத் வேல்ஸ் டிஜிட்டல் ஓட்டுநர் உரிமங்களில் புதிய மாற்றம் 13.10.2026

நியூ சவுத் வேல்ஸ் டிஜிட்டல் ஓட்டுநர் உரிமங்களைப் பயன்படுத்தும் முறையில் முக்கிய மாற்றம் கொண்டுவரப்படுகிறது. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம். #sbsaudiopodcast

இன்றைய செய்திகள்: 13 அக்டோபர் 2026 - புதன்கிழமை 13.10.2026

SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (செவாய்க்கிழமை 13/10/2026) செய்திகள். வாசித்தவர் குலசேகரம் சஞ்சயன்.

How laws are made, and how they affect you | How Australia Works - சட்டங்கள் எப்படி உருவாக்கப்படுகின்றன, உங்களை எவ்வாறு பாதிக்கின்றன|ஆஸ்திரேலியா எவ்வாறு செயல்படுகிறது? 12.10.2026

How are laws made in Australia? Through Wurundjeri Elder Uncle Dave Wandin’s story of the Birrarung, also known as the Yarra River, learn how an idea becomes a bill, passes through Victoria’s parliament and receives royal assent, the formal approval that makes it law. - ஆஸ்திரேலியாவில் சட்டங்கள் எவ்வாறு உருவாக்கப்படுகின்றன? யர்ரா நதி என்றும் அழைக்கப்படும் பரரங் பற்றிய வுருண்ட்ஜெரி மூத்தவரான David...

Money Laundering என்றால் என்ன? மோசடிகளில் சிக்காமல் இருப்பது எப்படி? 12.10.2026

Money Laundering என்றால் என்ன? சாதாரண பொதுமக்களும் சர்வதேச மாணவர்களும் இது குறித்து ஏன் விழிப்புடன் இருக்க வேண்டும்? மோசடிகளால் அதிகம் பாதிக்கப்படக்கூடியவர்கள் யார்? மோசடிகளில் சிக்காமல் இருக்க நாம் கவனிக்க வேண்டிய எச்சரிக்கை அறிகுறிகள் என்ன? உள்ளிட்ட பல கேள்விகளுக்கு பதிலளிக்கிறார் Money Laundering தடுப்பு தொடர்பாக சான்றிதழ் பெற்ற நிபுணரும் ஆலோசகருமான Karthick Elangovan அவர்கள். அவரோடு உரையாடுகிற...

இந்தியா & தமிழ்நாடு: கடந்த 7 நாட்கள் செய்திகளின் தொகுப்பு 12.10.2026

இடைத்தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் அமோக வெற்றி; ராகுல் காந்தி மற்றும் பிரதமர் நரேந்திர மோடியுடன் தமிழக முதலமைச்சர் விஜய் சந்திப்பு; இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் பதவி விலக வேண்டும் என்று தமிழகத்தில் ஆர்ப்பாட்டம்; உள்ளிட்ட செய்திகளோடு "செய்திகளின் பின்னணி" நிகழ்ச்சிக்காக இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ். #sbsaudiopodcast

இன்றைய செய்திகள்: 12 அக்டோபர் 2026 - திங்கட்கிழமை 12.10.2026

SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (திங்கட்கிழமை 12/10/2026) செய்திகள். வாசித்தவர் றேனுகா துரைசிங்கம்.

13 கோடி பெயர்களை நீக்கிய தேர்தல் ஆணையத்துக்கு எதிராக வீதிக்கு வந்த இளைஞர்கள் 11.10.2026

இந்தியத் தலைநகர் புதுடெல்லியில் இந்தியத் தேர்தல் ஆணையத்துக்கு எதிராகப் போராடச் சென்ற நூற்றுக்கணக்கான போராட்டக்காரர்கள், ஊடகவியலாளர்கள், மற்றும் வழக்குரைஞர்கள் காவல்துறையால் தடுத்துவைக்கப்பட்டனர். இது குறித்த செய்தியின் பின்னணியை எடுத்து வருகிறார் குலசேகரம் சஞ்சயன். #sbsaudiopodcast

இந்த வார ஆஸ்திரேலிய செய்திகள் (4 – 10 அக்டோபர் 2026) 09.10.2026

ஆஸ்திரேலியாவின் இந்த வார (4 – 10 அக்டோபர் 2026) முக்கிய செய்திகளின் தொகுப்பு. வாசித்தவர்: றைசெல். Top news from Australia this week (4 – 10 October 2026)

உலக நீதிக்காகக் குரல் கொடுக்கும் தமிழ்ப் பெண்ணுக்கு நோபல் அமைதிப் பரிசு 09.10.2026

2026ஆம் ஆண்டுக்கான நோபல் அமைதிப் பரிசு, தமிழ்ப் பின்னணியைக் கொண்ட தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த நீதிபதி நவநீதம் பிள்ளைக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த தகவலை விரிவாக முன்வைக்கிறார் பல ஆண்டுகளாக ஊடகத்துறையில் பணியாற்றும் இரா.சத்தியநாதன் அவர்கள். Navanethem Pillay: The Tamil-rooted voice for global justice

Robots milking cows: How migrants are innovating Australian agriculture - பால் கறக்கும் ரோபோக்கள்: ஆஸ்திரேலிய விவசாயத்தில் குடிவந்தோர் புகுத்தும் புதுமைகள் 09.10.2026

Australia’s vibrant food scene reflects our multiculturalism. But it’s not just about offering diverse cuisine: migrants are finding innovative ways to support local industries. - ஆஸ்திரேலியாவின் துடிப்பான உணவு உற்பத்திச் சூழல் நமது பன்முகப் பண்பாட்டைப் பிரதிபலிக்கிறது. மேலும், பிராந்திய இடங்களில் வளர்ந்து வரும் பன்முகத்தன்மை, அங்குள்ள உணவு வகைகளும் மாறிவருவதைக் குறிக்கிறது. பலதரப்பட்ட உணவு வகைகளை...

பெண்ணாக மாறியது லாட்டரி வென்றதைப் போன்ற உணர்வு – சிட்னி தமிழ் திருநங்கை கவிதா 09.10.2026

சிட்னியைச் சேர்ந்த தமிழ் திருநங்கையான கவிதா, ஒரு சட்டத்தரணியாக பணியாற்றி வருகிறார். தனது வாழ்க்கைப் பயணம், அவர் எதிர்கொண்ட சவால்கள், அவற்றைக் கடந்து வந்த அனுபவங்கள் மற்றும் திருநங்கைகள் சமூகத்தில் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து நம்முடன் மனம் திறந்து பகிர்ந்துகொள்கிறார். அவரோடு உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம் #sbsaudiopodcast

உச்சத்தை எட்டிய வீட்டு வாடகைச் சுமை – திணறும் வாடகைக்கிருப்போர் 09.10.2026

ஆஸ்திரேலியாவில் வீட்டு வாடகை தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில், தற்போது வாடகைக்கிருப்போர் மேலும் வாடகை உயர்வைச் சமாளிக்க முடியாத நிலையை எட்டியுள்ளதாக புதிய ஆய்வு தெரிவித்துள்ளது. பல முக்கிய நகரங்களில் வாடகை உயர்வு தற்போது மந்தமடைந்துள்ள போதிலும், வாடகைச் செலவு இன்னும் வரலாறு காணாத அளவில் அதிகமாகவே உள்ளது. இதுபற்றிய செய்தியின் பின்னணியினை முன்வைக்கிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.

இன்றைய செய்திகள்: 09 அக்டோபர் 2026 - வெள்ளிக்கிழமை 08.10.2026

SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வெள்ளிக்கிழமை 09/10/2026) செய்திகள். வாசித்தவர் குலசேகரம் சஞ்சயன்.

இலங்கையின் இந்த வார முக்கிய செய்திகளின் தொகுப்பு (அக்டோபர் 03 – 09, 2026) 08.10.2026

இலங்கையில் கடந்த சனி முதல் இன்று வெள்ளி வரை (அக்டோபர் 03 – 09) என்று கடந்த 7 நாட்கள் இடம்பெற்ற செய்திகளின் தொகுப்பு. முன்வைக்கிறார் SBS தமிழ் ஒலிபரப்பின் இலங்கைச் செய்தியாளர் மதிவாணன். Top news from Sri Lanka this week (October 03 – 09, 2026)

ஆஸ்திரேலியாவின் செல்வாக்கு மிக்க 10 வர்த்தகத் தலைவர்கள்! 08.10.2026

2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்திரேலியாவின் செல்வாக்கு மிக்க 10 வர்த்தகத் தலைவர்களின் பட்டியலை Australian Financial Review வெளியிட்டுள்ளது. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம். #sbsaudiopodcast

தைராய்ட் பிரச்சினை வராமல் தடுப்பது எப்படி? 08.10.2026

நமது தொண்டையிலுள்ள தைராய்ட் சுரப்பியிலிருந்து ஹோர்மோன் சுரப்பது குறைவதால் ஏற்படும் நோய் நிலைமையே Hypothyroidism ஆகும். இது ஏன் ஏற்படுகிறது, இது ஏற்படாமல் தடுக்க முடியுமா என்பது உள்ளிட்ட பல கேள்விகளுக்குப் பதில் தருகிறார் மெல்பனைச் சேர்ந்த மருத்துவர் நளிமுடீன் அவர்கள். அவரோடு உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.

உலுரு: இயற்கை செதுக்கிய ஆஸ்திரேலியாவின் புனித அதிசயம் 08.10.2026

ஆஸ்திரேலியாவின் மையப்பகுதியில் உயர்ந்து நிற்கும் உலுரு, ஒரு பிரமாண்டமான பாறை மட்டுமல்ல. கோடிக்கணக்கான ஆண்டுகளாக உருவாகி வந்த இந்த இயற்கை அதிசயம், இந்த நாட்டின் பூர்வீக மக்களின் பண்பாடு, ஆன்மிகம் மற்றும் பாரம்பரியத்துடன் ஆழமாக இணைந்துள்ளது. உலுரு ஏன் அவர்களுக்கு புனிதமானது? உலகம் முழுவதும் இருந்து மக்கள் ஏன் இதைக் காண வருகிறார்கள்? உலுருவின் வரலாறு, இயற்கைச் சிறப்புகள் மற்றும் அதன் பண்பாட்டு முக்கி...

போதைப் பொருள், மதுபானம், சூதாட்டம்: ஒருவர் அடிமையானால் என்ன செய்யலாம்? 08.10.2026

அக்டோபர் மாதம், மனநல விழிப்புணர்வு மாதம். Addiction – ஒரு பொருளுக்கோ அல்லது செயலுக்கோ அடிமையானவர்களுக்கு சிறப்பு சேவைகள் வழங்கி வரும், வைத்தியர் மகேந்திரன் கஜஹரன் அவர்களுடன் உரையாடுகிறார் குலசேகரம் சஞ்சயன். இது ஒரு மறு ஒலிபரப்பு

சர்வதேச மாணவர்களின் எதிர்காலம் - யார் கையில்? 08.10.2026

இந்நாட்டில் படிக்க விரும்பும் வெளிநாட்டு மாணவர்களின் எதிர்காலம், அடுத்த ஆஸ்திரேலிய நாடாளுமன்றத் தேர்தலில் யார் வெல்கிறார்கள் என்பதைப் பொறுத்தே அமையலாம். நேற்று முன்தினம், எதிர்க்கட்சியான Liberal-National Coalition கூட்டணி தனது குடியேற்றக் கொள்கையை வெளியிட்டது. அத்துடன் இது குறித்து Labor கட்சி, Liberal-National Coalition கூட்டணி மற்றும் One Nation ஆகிய மூன்று கட்சிகளின் திட்டங்களும் வெளிவந்துவிட்ட...

திறன்சார் குடியேற்றம்: யார் என்ன வாக்குறுதி தருகிறார்கள்? 08.10.2026

நம் நாட்டின் திறன்சார் குடியேற்றம் பற்றிய அரசியல் விவாதம் இந்த வாரம் புதிய கட்டத்தை எட்டியுள்ளது. நேற்று முன்தினம், எதிர்க்கட்சியான Liberal-National Coalition கூட்டணி தனது குடியேற்றக் கொள்கையை வெளியிட்டது. கடந்த மாதம் அரசும், One Nation கட்சியும் தம் திட்டங்களை அறிவித்திருந்தன. இது குறித்த செய்தியின் பின்னணியை எடுத்து வருகிறார் குலசேகரம் சஞ்சயன்.

இன்றைய செய்திகள்: 08 அக்டோபர் 2026 - வியாழக்கிழமை 07.10.2026

SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வியாழக்கிழமை 08/10/2026) செய்திகள். வாசித்தவர் குலசேகரம் சஞ்சயன்.

AI-யிடம் மனநல ஆலோசனை பெறுகிறீர்களா? 07.10.2026

அமெரிக்காவில் நீடித்திருக்கும் இளைஞர் மனநல நெருக்கடியுடன், AI chatbots எனப்படும் செயற்கை நுண்ணறிவு செயலிகளின் விரைவான விரிவாக்கமும் ஒருங்கே நிகழ்ந்துள்ளது. இது, மனநல ஆலோசனைக்காக இளைஞர்கள் எந்த அளவிற்கு இந்தத் தொழில்நுட்பத்தை நாடுகிறார்கள் என்ற கேள்வியை எழுப்புகிறது. RAND என்ற ஆய்வு நிறுவனம், 2025-ஆம் ஆண்டில் அமெரிக்கப் பதின்ம வயதினர் மற்றும் இளைஞர்களிடையே மனநல ஆலோசனைக்காக AI உரையாடல் மென்பொருட்களை...

இன்றைய செய்திகள்: 07 ஒக்டோபர் 2026, புதன்கிழமை 07.10.2026

SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (புதன்கிழமை 07/10/2026) செய்திகள். வாசித்தவர்: மகேஸ்வரன் பிரபாகரன்.

தமிழ் உள்ளிட்ட தெற்காசிய சமூகங்களில் ஏன் சில நோய்கள் அதிகம்? என்ன செய்யலாம்? 06.10.2026

NSW Multicultural Health Week ஆகஸ்ட் 31 முதல் செப்டம்பர் 6 வரை கடைப்பிடிக்கப்பட்டது. இதன் தூதராக செயல்பட்டவர் NSW மாநிலத்தில் பணியாற்றும் GP - பொது மருத்துவர் டாக்டர் சாந்தினி தவசீலன். தெற்காசிய சமூகங்களில் சுகாதார விழிப்புணர்வை ஏற்படுத்தும் பணியில் ஈடுபட்டுவரும் அவர், தமிழ் மக்கள் உள்ளிட்ட தெற்காசிய சமூகங்கள் எதிர்கொள்ளும் உடல்நலப் பிரச்சினைகள், சுகாதார சேவைகளை அணுகுவதில் உள்ள தடைகள், பாரம்பரிய ம...

Słuchaj podcastu SBS Tamil - SBS தமிழ் w Replaio

Radio i podcasty w jednej aplikacji - za darmo, bez zakładania konta. Zainstaluj już dziś i nie przegap premiery

Pobierz z Google Play

Replaio nie jest wydawcą podcastów; nazwy audycji, okładki i audio należą do ich autorów i są rozpowszechniane przez publiczne kanały RSS