SBS

SBS Tamil - SBS தமிழ்

News TA ↓ Odcinki: 2596

Independent news and stories from SBS Audio, connecting you to life in Australia and Tamil-speaking Australians. - தமிழ் பேசும் ஆஸ்திரேலியர்களுடனும், ஆஸ்திரேலிய வாழ்க்கையுடனும் இணைய உங்களுக்கு உதவும் பக்கசார்பற்ற செய்திகள் மற்றும் கதைகள்.

Koniecznie odwiedź stronę podcastu i wesprzyj twórcę: www.sbs.com.au

Autor

SBS

Kategoria

News

Strona podcastu

www.sbs.com.au

Ostatni odcinek

13 paź 2026

Gdzie słuchać?

Podcasty w aplikacji Replaio Radio Już wkrótce

Podcasty trafią do aplikacji już wkrótce. Zainstaluj teraz i jako pierwszy zobacz nowe podejście do podcastów

Pobierz z Google Play Zainstaluj za darmo Android prawie 10 mln pobrań · ocena 4,8 iOS niedługo

Odcinki

கைதுகள் தொடரும் நிலையில் இந்திய - இலங்கை மீனவர் பேச்சுவார்த்தை ஒத்திவைப்பு 06.10.2026

இந்திய - இலங்கை மீனவர் பிரச்சினைகள் தொடர்பாக நடைபெறுவதாக இருந்த பேச்சுவார்த்தை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதை மீனவர் அமைப்புகள் கண்டித்திருக்கும் நிலையில், இலங்கையில் தொடர்ந்து எல்லை தாண்டும் இந்திய மீனவர்களின் கைதுகள் இடம்பெற்றுவருகின்றன. இது தொடர்பில் “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன். Arrests continue as India–Sri Lanka fishermen talks are postp...

குடியேற்றத்தில் வரலாறு காணாத குறைப்பு: லிபரல்-நேஷனல் கூட்டணி அறிவிப்பு 06.10.2026

குடியேற்றம் தொடர்பான தனது புதிய கொள்கையை Coalition- எதிர்கட்சி கூட்டணி வெளியிட்டுள்ளது. இதன்படி ஆஸ்திரேலிய அரசு திட்டமிட்டுள்ள நிகர வெளிநாட்டு குடியேற்ற எண்ணிக்கையை விட சுமார் 60 ஆயிரம் குறைவாக, அதாவது ஆண்டுக்கு ஒரு லட்சம் பேரை மட்டுமே அனுமதிப்பதை இலக்காகக் கொண்டுள்ள புதிய கொள்கையை Coalition அறிவித்துள்ளது. இதுகுறித்த செய்தியின் பின்னணியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம் #sbsaudiopodcast

பத்துப் பேர் காயமடைந்த Newcastle கார் விபத்து: இந்திக்க சமரசிங்க மீது வழக்குத் தாக்கல் 06.10.2026

அக்டோபர் 3 சனிக்கிழமை Newcastle Knights அணியின் ரசிகர்கள் கூட்டத்துக்குள் கார் ஒன்று மோதியதாகக் கூறப்படும் சம்பவத்தில், இளம் ஓட்டுநர் மீது 9 பிரிவுகளில் வழக்குத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம். #sbsaudiopodcast

இன்றைய செய்திகள்: 06 அக்டோபர் 2026 - செவ்வாய்க்கிழமை 05.10.2026

SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (செவ்வாய்க்கிழமை 06/10/2026) செய்திகள். வாசித்தவர் றேனுகா துரைசிங்கம்.

Why power is split, and how that protects you | How Australia Works - அதிகாரம் ஏன் பிரிக்கப்படுகிறது, அது உங்களை எவ்வாறு பாதுகாக்கிறது|ஆஸ்திரேலியா எவ்வாறு இயங்குகிறது? 05.10.2026

After receiving a fine for not wearing his motorbike helmet correctly, Hugo decides to have the matter heard in court. His story explains how Parliament, government and the courts have different roles, and how some official decisions can be questioned. - மோட்டார் சைக்கிள் தலைக்கவசத்தைச் சரியாக அணியாததற்காக அபராதம் விதிக்கப்பட்ட ஹியூகோ (Hugo) அந்த விவகாரத்தை நீதிமன்றத்தில் முன்வைக்க முடிவு செய்கிறா...

மெல்பனின் சில சாலைகளில் வேக வரம்பு 30km/h ஆக குறைக்கப்படுகிறது 05.10.2026

மெல்பனின் சில பகுதிகளில், வாகனங்களுக்கான வேக வரம்பு குறைக்கப்படும் புதிய சோதனைத் திட்டம் தொடங்குகிறது. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம். #sbsaudiopodcast

12 உயிர்களைக் காவுகொண்ட ஆஸ்திரேலியாவின் பயங்கர தொடர்கொலை: ஏன் இன்று மீண்டும் பேசப்படுகிறது? 05.10.2026

ஆஸ்திரேலியாவின் குற்ற வரலாற்றில் மிகவும் அதிர்ச்சியூட்டிய சம்பவங்களில் ஒன்று ஸ்னோடவுன் பேரல் கொலைகள். 12 பேரின் உயிரைப் பறித்த இந்தத் தொடர் கொலைகள் பல ஆண்டுகள் மறைக்கப்பட்டிருந்தன. இந்த வழக்கில் குற்றம் ஒப்புக்கொண்டவர்களில் ஒருவரான ஜேம்ஸ் வ்லாசாக்கிஸ் 26 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருந்த பிறகு தற்போது பரோல் வழங்கப்பட்டு சமூகத்திற்குத் திரும்புவதற்கான நடைமுறையில் உள்ளார். இதையொட்டி, ஆஸ்திரேலியாவ...

அரசு ஏன் சர்வதேச மாணவர்களுக்கான பட்டயப் படிப்பு (Graduate Diploma course) வீசாவை நீக்கியது? 05.10.2026

சர்வதேச மாணவர் வீசா முறையில் நடக்கும் முறைகேடுகளுக்கு எதிராக, ஆஸ்திரேலிய அரசு தனது பிடியை மேலும் இறுக்கியுள்ளது. இன்று, அக்டோபர் ஐந்தாம் தேதியுடன் ஒரு டிப்ளோமா படிப்புக்காக வழங்கப்படும் வீசா நீக்கப்படுகிறது. ஆனால் அதற்குள், கிட்டத்தட்ட மூவாயிரம் மாணவர்கள் அந்தப் படிப்பில் சேர, கடைசி நிமிடத்தில், அவசர அவசரமாக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இப்படியான நடவடிக்கை மூலம், “ஏமாற்ற முயலாதீர்கள்!” என்று - கல்லூரிக...

இன்றைய செய்திகள்: 05 அக்டோபர் 2026 - திங்கட்கிழமை 05.10.2026

SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (திங்கட்கிழமை 05/10/2026) செய்திகள். வாசித்தவர் றேனுகா துரைசிங்கம்.

இந்தியா & தமிழ்நாடு: கடந்த 7 நாட்கள் செய்திகளின் தொகுப்பு 04.10.2026

தமிழகத்தை உலுக்கி வரும் 'ஜெம்' வீரமணி பாலியல் வழக்கு - 'ஜெம்' வீரமணி மீது குண்டர் சட்டம்; மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் - பரபரக்கும் தமிழக அரசியல் களம்; உள்ளிட்ட செய்திகளோடு "செய்திகளின் பின்னணி" நிகழ்ச்சிக்காக இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ். #sbsaudiopodcast

இந்த வார ஆஸ்திரேலிய செய்திகள் (27 செப்டம்பர் – 3 அக்டோபர் 2026) 02.10.2026

ஆஸ்திரேலியாவின் இந்த வார (27 செப்டம்பர் – 3 அக்டோபர் 2026) முக்கிய செய்திகளின் தொகுப்பு. வாசித்தவர்: றைசெல். Top news from Australia this week (27 September – 3 October 2026)

Western Sydney விமான நிலையத்திலிருந்து City செல்ல பேருந்து கட்டணம் எவ்வளவு? 02.10.2026

சிட்னியின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள புதிய Western Sydney சர்வதேச விமான நிலையத்திலிருந்து Sydney CBD-க்கு இயக்கப்படவுள்ள நேரடி Shuttle பேருந்து சேவைக்கான கட்டணம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம். #sbsaudiopodcast

Do you know how to disagree respectfully? - SBS Examines: மரியாதையுடன் கருத்து வேறுபாடுகளை வெளிப்படுத்துவது எப்படி? 02.10.2026

Half of us believe that most people can’t be trusted. At the same time, 47 per cent of Australians often feel very lonely. Could learning to disagree well help foster connection? - எம்மில் பாதிப் பேர், பெரும்பாலான மக்களை நம்ப முடியாது என்று நினைக்கிறோம். அதே நேரத்தில், இந்நாட்டில் வசிக்கும் 47 சதவீதமானவர்கள் மிகவும் தனிமையாக இருப்பதாக அடிக்கடி உணர்கிறார்கள். கருத்து வேறுபாடுகளை நன்கு கையாளக் கற்று...

ஆஸ்திரேலிய மாணவர் விசாவில் இன்று முதல் புதிய மாற்றங்கள் 02.10.2026

அக்டோபர் 2ம் திகதி முதல் நடைமுறைக்கு வரும்வகையில் ஆஸ்திரேலிய மாணவர் விசாவில் அரசு மாற்றங்களை அறிவித்துள்ளது. இதுதொடர்பில் விளக்குகிறார் Ramyam Australian Education and Visa Services நிறுவனரும் குடிவரவு முகவருமான Dr அண்ணாமலை மகிழ்நன் அவர்கள். அவரோடு உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம் #sbsaudiopodcast

புதிய நாடு, புதிய வாழ்க்கை, புதிய சவால்கள்: சர்வதேச மாணவர்கள் என்ன செய்யலாம்? 02.10.2026

ஆஸ்திரேலியாவில் படிக்கும் பல சர்வதேச மாணவர்கள் கல்வியுடன் சேர்த்து தனிமை, பண அழுத்தம், குடும்ப எதிர்பார்ப்புகள் மற்றும் மனஅழுத்தம் போன்ற சவால்களையும் எதிர்கொள்கிறார்கள். இப்படியான சிக்கல்களை எதிர்கொள்ளும் மாணவர்கள் என்ன செய்யவேண்டும் என்று விளக்குகிறார் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இணையவழி ஆலோசனை சேவைகளை வழங்கி வருகின்ற Mind Matterz Counselling mind-matterz-counselling.netlify.app நிறுவனர் இளவரசி ரா...

இன்றைய செய்திகள்: 02 அக்டோபர் 2026 - வெள்ளிக்கிழமை 02.10.2026

SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வெள்ளிக்கிழமை 02/10/2026) செய்திகள். வாசித்தவர் குலசேகரம் சஞ்சயன்.

இலங்கை: இந்த வார முக்கிய செய்திகள் 01.10.2026

பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு பதிலாக புதிய சட்டத்தின் வரைபு அரசினால் வெளியிடப்பட்டுள்ளது. புதிய சட்ட வரைபு தொடர்பில் பலரும் எதிர்ப்பு; இலங்கையில் அதிகரித்து செல்லும் வீதி விபத்துக்களினால் வருடாந்தம் சுமார் 2500 பேர் உயிரிழப்பு இவை உள்ளிட்ட செய்திகளோடு “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சிக்காக விவரணமொன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன். Top news from Sri Lanka this week

Daylight saving நேரமாற்றம் நடைமுறைக்கு வருகிறது! 01.10.2026

ஆஸ்திரேலியாவின் பல மாநிலங்களில் Daylight saving நேரமாற்றம் Oct 4 ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 2 மணிக்கு நடைமுறைக்கு வருகிறது. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம். #sbsaudiopodcast

நடுவானில் நடந்த திகில்: Flydubai விமானத்தில் அதிர்ச்சிகரமான சம்பவம் 01.10.2026

நடுவானில் திடீரென கட்டுப்பாட்டை இழந்த Flydubai விமானம்… பயணிகள் கண்முன்னே நடந்த அதிர்ச்சிகரமான சம்பவம். உயிருக்கு ஆபத்தான சூழலில், விமானத்தை மீண்டும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து, 174 பேரையும் காப்பாற்றிய அந்த சில நிமிடங்கள் எப்படி இருந்தன? இச் செய்தியின் பின்னணியினை முன்வைக்கிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.

ஆஸ்திரேலியாவை அடையாளப்படுத்தும் ஈம்யு: ஆச்சரிய தகவல்கள் 01.10.2026

கங்காருவைப் போலவே ஆஸ்திரேலியாவின் அடையாளமாக அறியப்படும் இன்னொரு உயிரினம் ஈம்யு. பறக்க முடியாது; ஆனால் மிக வேகமாக ஓடும். கடும் வெப்பத்தையும் உணவுப் பற்றாக்குறையையும் தாங்கும். அதிலும், முட்டைகளை அடைகாத்து குஞ்சுகளை வளர்ப்பது ஆண் ஈம்யு என்பது இன்னொரு ஆச்சரியம். இப்படிப் பல தனித்துவங்களைக் கொண்ட ஆஸ்திரேலியாவின் ஈம்யு பறவை பற்றிய சுவாரஸ்யமான தகவல்களை “நம்ம ஆஸ்திரேலியா” நிகழ்ச்சியில் தொகுத்து வழங்குகிற...

முதன்முறையாகப் பறை இசைக்குக் கலைமாமணி வென்ற பனையூர் ராஜா! 01.10.2026

கலை மற்றும் இலக்கியத் துறையில் சிறப்பான பங்களிப்பு செய்பவர்களுக்கு வருடாவருடம் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம், கலைமாமணி விருதுகளை வழங்கி வருகிறது. 8 வருட இடைவெளிக்குப் பிறகு, 2011 ஆம் ஆண்டிலிருந்து 2018 ஆம் ஆண்டிற்கான விருதுகள் 2018ஆம் ஆண்டு வழங்கப்பட்டன. அதன்போது, முதன்முறையாக, ஒரு பறை இசைக் கலைஞருக்கு கலைமாமணி விருது வழங்கப்பட்டது. அந்த விருது பெற்ற டாக்டர் பனையூர் ராஜாவுடன் குலசேகரம் சஞ்சயன் 20...

சிட்னி விமானநிலையத்திலிருந்து பயணிப்பது ஆபத்தானதா? 01.10.2026

சிட்னி விமான நிலையத்தில் ஜூலை 27ஆம் தேதி இரண்டு பயணி விமானங்கள் ஒன்றுக்கொன்று வெறும் 120 மீட்டர் தூரத்தில் ஓடுபாதையில் அவசரமாக நிறுத்தப்பட்டன. ஒரு விமானத்தில் 157 பேர். மற்றதில் 55 பேர். ஒரு பெரும் அனர்த்தம் மயிரிழையில் தவிர்க்கப்பட்டது. பதிவுகள் 2003ஆம் ஆண்டில் தொடங்கியதிலிருந்து, ஆஸ்திரேலியாவில் நடந்த மிக மோசமான ஓடுபாதை நிகழ்வுகளில் இதுவும் ஒன்று என்று, நாட்டின் போக்குவரத்துப் பாதுகாப்பு விசாரணை...

இன்றைய செய்திகள்: 01 அக்டோபர் 2026 - வியாழக்கிழமை 01.10.2026

SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வியாழக்கிழமை 01/10/2026) செய்திகள். வாசித்தவர் குலசேகரம் சஞ்சயன்.

Bathlaவின் சரிவு: வீடு கட்டுபவர்கள் தெரிந்துகொள்ள வேண்டியது என்ன? 30.09.2026

ஆஸ்திரேலியாவின் கட்டுமானத் துறை தற்போது பல்வேறு சவால்களை எதிர்கொண்டு வருகிறது. வீட்டுச் சந்தை மாற்றங்கள், அதிகரித்த கட்டுமானச் செலவுகள் மற்றும் நிதி அழுத்தங்களுக்கு மத்தியில், Bathla Group போன்ற பெரிய கட்டுமான நிறுவனத்தின் வீழ்ச்சி பல கேள்விகளை எழுப்பியுள்ளது. இதன் பின்னணியில், Bathla நிறுவனத்தின் முன்னாள் ஊழியரும், கட்டுமானத் துறையில் அனுபவம் கொண்டவரும், சிட்னியில் Sydneywide Homes எனும் கட்டுமான...

இன்றைய செய்திகள்: 30 செப்டம்பர் 2026, புதன்கிழமை 30.09.2026

SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (புதன்கிழமை 30/09/2026) செய்திகள். வாசித்தவர்: மகேஸ்வரன் பிரபாகரன்.

Słuchaj podcastu SBS Tamil - SBS தமிழ் w Replaio

Radio i podcasty w jednej aplikacji - za darmo, bez zakładania konta. Zainstaluj już dziś i nie przegap premiery

Pobierz z Google Play

Replaio nie jest wydawcą podcastów; nazwy audycji, okładki i audio należą do ich autorów i są rozpowszechniane przez publiczne kanały RSS