SBS
SBS Tamil - SBS தமிழ்
Independent news and stories from SBS Audio, connecting you to life in Australia and Tamil-speaking Australians. - தமிழ் பேசும் ஆஸ்திரேலியர்களுடனும், ஆஸ்திரேலிய வாழ்க்கையுடனும் இணைய உங்களுக்கு உதவும் பக்கசார்பற்ற செய்திகள் மற்றும் கதைகள்.
Koniecznie odwiedź stronę podcastu i wesprzyj twórcę: www.sbs.com.au
Gdzie słuchać?
Podcasty w aplikacji Replaio Radio Już wkrótcePodcasty trafią do aplikacji już wkrótce. Zainstaluj teraz i jako pierwszy zobacz nowe podejście do podcastów
Odcinki
நான்காவது தடவையாக உயர்ந்த வட்டி விகிதம்: வீட்டுக்கடன் வைத்திருப்பவர்களை எவ்வாறு பாதிக்கும் 30.09.2026 7:45
ஆஸ்திரேலியாவின் அதிகாரபூர்வ வட்டி வீதத்தை 4.6 ஆக உயர்த்தும் தனது முடிவினை ரிசர்வ் வங்கி செவ்வாய்க்கிழமை செப்டம்பர் 29ம் திகதி அறிவித்தது. 2011ஆம் ஆண்டுக்குப் பின்னர் வீட்டுக் கடன் பெற்ற மில்லியன் கணக்கான குடும்பங்கள் எதிர்கொள்ளும் மிக உயர்ந்த வட்டி வீதம் இதுவாகும். இதுகுறித்த செய்தியின் பின்னணியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம். #sbsaudiopodcast
திலீபன் நினைவுச் சிலை அகற்றம்: வடக்கு – கிழக்கில் போராட்டங்கள் 29.09.2026 8:32
யாழ்ப்பாணத்தில் திலீபன் நினைவு நாள் நிகழ்வின் போது அமைக்கப்பட்ட சிலை காவல்துறையினரால் அகற்றப்பட்ட நிலையில் மீண்டும் அதனை அமைக்க கோரி வடக்கு கிழக்கில் போராட்டங்கள் இடம்பெற்று வருவதோடு. தமிழ் தரப்பிலிருந்து கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன. இது தொடர்பில் “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன். #sbsaudiopodcast
நாட்டின் வட்டி விகிதம் 15 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்ந்தது 29.09.2026 2:32
ஆஸ்திரேலியாவின் அதிகாரபூர்வ வட்டி வீதம் குறித்த தனது முடிவினை ரிசர்வ் வங்கி இன்று அறிவித்தது. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம். #sbsaudiopodcast
படகு மூலம் வந்த 30,000 பேருக்கு ஆஸ்திரேலிய அரசு நிரந்தர விசா வழங்கியுள்ளதாக தகவல் 29.09.2026 3:20
2009 முதல் 2014ஆம் ஆண்டு வரை படகு வழியாக ஆஸ்திரேலியா வந்த 30,000-க்கும் அதிகமான புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு நிரந்தர விசாக்கள் வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம். #sbsaudiopodcast
இன்றைய செய்திகள்: 29 செப்டம்பர் 2026 - செவ்வாய்க்கிழமை 29.09.2026 4:12
SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (செவ்வாய்க்கிழமை 29/09/2026) செய்திகள். வாசித்தவர் றேனுகா துரைசிங்கம்.
Who really runs Australia, and where you fit in - ஆஸ்திரேலியாவை உண்மையில் யார் நடத்துகிறார்கள், அதில் உங்கள் பங்கு என்ன? 28.09.2026 8:56
Do you know who can help you with a business permit, a rental problem or family support? Through the stories of Fedele, Carol and Abeer, learn how Australia’s three levels of government work. Find out what local, state or territory, and federal governments are responsible for and where to turn for help. - தொழில் ஒன்றைத் தொடங்குவதற்கான வணிக அனுமதி, வாடகை பிரச்சனை அல்லது குடும்ப ஆதரவு என்பனவற்றுக்கு...
You are already inside the system | How Australia Works - முன்னோட்டம்: நீங்கள் ஏற்கனவே இந்த அமைப்பின் ஒரு பகுதி | ஆஸ்திரேலியா எவ்வாறு இயங்குகிறது? 28.09.2026 4:05
How do Australia’s governments, laws and public services affect your everyday life? Through real stories, this introduction to the series shows you where to start when you need information and support, and how to question a decision. - ஆஸ்திரேலிய அரசு, சட்டங்கள் மற்றும் பொதுச் சேவைகள் உங்கள் அன்றாட வாழ்க்கையில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்துகின்றன? உண்மையான கதைகள் மூலம், உங்களுக்குத் தகவல்களும் ஆதரவ...
உங்களது வருமானவரியைத் தாக்கல் செய்துவிட்டீர்களா? காலக்கெடு நெருங்குகிறது! 28.09.2026 3:25
2025–26 நிதியாண்டுக்கான வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்ய ஆஸ்திரேலியர்களுக்கு இன்னும் சுமார் ஒரு மாதமே உள்ளது. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம். #sbsaudiopodcast
சிட்னியில் நடைபெறும் பழைய மாணவிகளுக்கான வலைப்பந்தாட்டப் போட்டி 28.09.2026 10:49
Chundikuli Girls' College Alumni Association NSW ஏற்பாட்டில் பல அமைப்புகள் ஒன்றிணைந்து நடத்தும் பெண்களுக்கான சிறப்பு வலைப்பந்தாட்ட நிகழ்வு, எதிர்வரும் அக்டோபர் 5ஆம் திகதி சிட்னியில் நடைபெறவுள்ளது. இந்த நிகழ்வு தொடர்பான மேலதிக தகவல்களைப் பகிர்ந்துகொள்கிறார்கள் ஷிவானி தீரஜ் மற்றும் சிவாயினி அருள்குமரன் ஆகியோர். அவர்களோடு உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம். #sbsaudiopodcast
புற்றுநோய் மருந்துக்கு ஆஸ்திரேலிய அரசிடம் ஒப்புதல் கோரும் தமிழ்க் குடும்பம் 28.09.2026 17:06
கணையப் புற்றுநோய்(pancreatic cancer)க்கான மருந்து, Daraxon Racib ஆஸ்திரேலியாவில் பயன்படுத்தப்படுவதற்கு விரைவாக ஒப்புதல் அளிக்க வலியுறுத்தி, நோயாளிகளும் நோயாளிகள் நலன் சார்ந்த அமைப்புகளும் நாடாளுமன்ற உறுப்பினர்களையும் சுகாதாரத் துறை அதிகாரிகளையும் சந்தித்துப் பேசியுள்ளனர். அமெரிக்காவின் FDA அமைப்பு இம்மருந்திற்கு இரண்டு மாதங்களுக்குள்ளேயே ஒப்புதல் அளித்தது, ஆனால் ஆஸ்திரேலியாவில், TGA அமைப்பு அதே நட...
Medicare தளத்தை ஊடுருவிய AI. எங்கள் தரவுகளுக்கு என்ன பாதுகாப்பு? 28.09.2026 11:01
ஒரு கணினி நிரலிடம் “இல்லை, இந்தத் தகவலை உங்களுக்குத் தர முடியாது” என்று சொல்லப்படுகிறது. அது அமைதியாகத் திரும்பிப் போகவில்லை. வேறு வழியைத் தேடியது, கண்டுபிடித்தது, உள்ளே நுழைந்தது. இது அறிவியல் புனைகதை அல்ல. இவ்வாண்டு ஜூன் மாதம், ஆஸ்திரேலியாவின் Medicare அமைப்புடன் தொடர்புடைய ஓர் அரசு இணையதளத்தில் நடந்த உண்மைச் சம்பவம். ChatGPT-ஐ உருவாக்கிய OpenAI நிறுவனத்தின் AI முகவர், அதாவது AI agent, இதைச் செய...
இன்றைய செய்திகள்: 28 செப்டம்பர் 2026 - திங்கட்கிழமை 28.09.2026 3:58
SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (திங்கட்கிழமை 28/09/2026) செய்திகள். வாசித்தவர் றேனுகா துரைசிங்கம்.
இந்தியா & தமிழ்நாடு: கடந்த 7 நாட்கள் செய்திகளின் தொகுப்பு 27.09.2026 9:21
தமிழக அரசியலில் அதிர்வலைகளை ஏற்படுத்தும் 'ஜெம்' வீரமணி விவகாரம்; தமிழக இடைத்தேர்தல் - அனல் பறக்கும் பரப்புரைகள்; எல்நினோ தாக்கம் - தமிழகத்தில் கொளுத்தும் வெயில்; உள்ளிட்ட செய்திகளோடு "செய்திகளின் பின்னணி" நிகழ்ச்சிக்காக இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ். #sbsaudiopodcast
Migrants are sending billions overseas each year. Are they hurting Australia's economy? - SBS Examines: குடிவந்தோர் தாய்நாட்டிற்குப் பணம் அனுப்புவதால் எமது பொருளாதாரம் பாதிக்கப்படுகிறதா? 27.09.2026 9:16
Remittances have become a talking point in Australia's migration debate, with some saying they're draining our economy. But what's the real impact — both for the economy, and for migrants and their families? - இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஆஸ்திரேலியாவிற்கு வருகை தந்து, மெல்பன் நகரின் மார்வெல் ஸ்டேடியத்தில் கூடியிருந்த ஆயிரக்கணக்கான உள்ளூர் இந்திய வம்சாவளியினரைச் சந்தித்...
இந்த வார ஆஸ்திரேலிய செய்திகள் (20 செப்டம்பர் – 26 செப்டம்பர் 2026) 25.09.2026 6:00
ஆஸ்திரேலியாவின் இந்த வார (20 செப்டம்பர் – 26 செப்டம்பர் 2026) முக்கிய செய்திகளின் தொகுப்பு. வாசித்தவர்: குலசேகரம் சஞ்சயன்.
வீடு வாங்குவதற்காக ஆஸ்திரேலியர்கள் செய்யும் கடும் தியாகங்கள் 25.09.2026 2:22
வீடு ஒன்றை சொந்தமாக்குவதற்காக தங்களது அன்றாடச் செலவுகளைக் குறைத்துக்கொள்ள ஆஸ்திரேலியர்கள் அதிக அளவில் தயாராக இருப்பதாக புதிய ஆய்வு தெரிவித்துள்ளது. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம். #sbsaudiopodcast
ஆஸ்திரேலியாவில் வேலை இல்லாதோர் எண்ணிக்கை உயர்வு 25.09.2026 8:14
ஆஸ்திரேலியாவின் வேலைவாய்ப்பு சந்தையில் புதிய மாற்றம் ஏற்பட்டுள்ளது; ஆகஸ்ட் மாதத்தில் வேலை இல்லாதோர் விகிதம் COVID-19க்குப் பின்னர் முதன்முறையாக 4.6 சதவீதமாக உயர்ந்துள்ளது. வேலைவாய்ப்பு எண்ணிக்கை அதிகரித்திருந்தாலும், வேலை தேடுபவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்துள்ளது. இதுபற்றிய செய்தியின் பின்னணியினை முன்வைக்கிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.
What are Indigenous Protected Areas in Australia? - ஆஸ்திரேலியாவில் உள்ள பூர்வீகக்குடி மக்கள் பாதுகாக்கும் பகுதிகள் என்றால் என்ன? 25.09.2026 8:31
National parks, nature reserves, marine sanctuaries and Indigenous Protected Areas protect different environments and operate under different rules. What makes an Indigenous Protected Area different, and how can you find out whether you are welcome to visit? - ஆஸ்திரேலியாவின் பூர்வீகத் தாவரங்கள் மற்றும் வன விலங்குகளின் அழகை அனுபவிப்பதற்காக நீங்கள் ஒரு பயணத்தைத் திட்டமிடலாம். நீங்கள் திட்டமிடும் இட...
இன்றைய செய்திகள்: 25 செப்டம்பர் 2026 - வெள்ளிக்கிழமை 25.09.2026 4:22
SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வெள்ளிக்கிழமை 25/09/2026) செய்திகள். வாசித்தவர் குலசேகரம் சஞ்சயன்.
இலங்கை: இந்த வார முக்கிய செய்திகள் 24.09.2026 10:32
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான தீர்ப்பை அறிவித்தது நீதிமன்றம்; 22 வது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் மக்கள் வாக்கெடுப்பு தேவையில்லையென உயிர் நீதிமன்றம் அறிவிப்பு இவை உள்ளிட்ட செய்திகளோடு “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சிக்காக விவரணமொன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.
Braces vs Clear aligners: சீரற்ற பற்களை சரிசெய்ய எது சிறந்தது? 24.09.2026 10:16
சீரற்ற பற்களைச் சரிசெய்வதற்கு braces மற்றும் Invisalign போன்ற clear aligners-ஐ நாம் பயன்படுத்துவோம். இந்த இரண்டிற்கும் உள்ள வேறுபாடுகள் என்ன என்பது உட்பட பல முக்கிய விடயங்கள் பற்றி விளக்குகிறார் பிரிஸ்பேனில் பல ஆண்டுகள் பல் மருத்துவராக பணியாற்றும் ராஜி அவர்கள். அவரோடு உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.
NSW Hall of Champions இல் சேர்க்கப்பட்ட முதல் தமிழர்! 24.09.2026 13:31
நாட்டின் மிகவும் அலங்கரிக்கப்பட்ட ஜிம்னாஸ்டிக் வீரர்களில் ஒருவரான பிரசாந்த் செல்லத்துரை அவர்கள் பெயர் NSW Hall of Champions இல் சேர்க்கப்பட்டுள்ளது. காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற இவர், 2022ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட ஆறு தடகள வீரர்களில் ஒருவர். ஆஸ்திரேலியாவில் இப்படியான ஒரு பெருமையைப் பெறும் முதல் தமிழர் என்ற பெருமையும் இவரை சாரும். பிரசாந்த் செல்லத்துரை அவர்களோடு 2022...
தேநீர்: ஒரு கோப்பையில் இத்தனை நன்மைகளா? 24.09.2026 12:30
தேயிலையின் மருத்துவ குணம் மற்றும் ஆரோக்கியமான முறையில் எவ்வாறு தேநீர் தயாரிப்பது என்று பிரிஸ்பனில் வசிக்கும் சித்த மருத்துவர் டாக்டர் செல்வி மணி அவர்கள் வழங்கும் தகவல்களுடன் தேயிலையின் சிறப்பு குறித்த விவரணம் ஒன்றை தயாரித்து வழங்குகிறார் செல்வி இன்பசேகரன். Tea: So many benefits in just one cup?
ஆஸ்திரேலியாவின் தேவை அதிகக் குழந்தைகளா, அதிகக் குடியேற்றவாசிகளா? 24.09.2026 9:21
ஒரு பெண் தன் வாழ்நாளில் சராசரியாக எத்தனை குழந்தைகளைப் பெறுகிறார் தெரியுமா? ஆஸ்திரேலியாவில் அந்த எண்ணிக்கை இப்போது ஒன்றரைக்கும் குறைவாகிவிட்டது. ஒரு சமூகம் தன் எண்ணிக்கையைத் தக்கவைக்க, அந்த சமூகத்திலுள்ள ஒவ்வொரு பெண்ணும் சராசரியாக 2.1 குழந்தைகளைப் பெற்றெடுக்க வேண்டும். குறையும் பிறப்பு விகிதமும், அதிகரிக்கும் முதியோர் தொகையும் நம் நாட்டுக்கு ஓர் பெரும்பிரச்சனையாக மாறுகிறது. இதுகுறித்த செய்தியின் பி...
இன்றைய செய்திகள்: 24 செப்டம்பர் 2026 - வியாழக்கிழமை 24.09.2026 4:25
SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வியாழக்கிழமை 24/09/2026) செய்திகள். வாசித்தவர் குலசேகரம் சஞ்சயன்.
Podobne podcasty
Replaio nie jest wydawcą podcastów; nazwy audycji, okładki i audio należą do ich autorów i są rozpowszechniane przez publiczne kanały RSS