SBS

SBS Tamil - SBS தமிழ்

News TA ↓ Odcinki: 2596

Independent news and stories from SBS Audio, connecting you to life in Australia and Tamil-speaking Australians. - தமிழ் பேசும் ஆஸ்திரேலியர்களுடனும், ஆஸ்திரேலிய வாழ்க்கையுடனும் இணைய உங்களுக்கு உதவும் பக்கசார்பற்ற செய்திகள் மற்றும் கதைகள்.

Koniecznie odwiedź stronę podcastu i wesprzyj twórcę: www.sbs.com.au

Autor

SBS

Kategoria

News

Strona podcastu

www.sbs.com.au

Ostatni odcinek

13 paź 2026

Gdzie słuchać?

Podcasty w aplikacji Replaio Radio Już wkrótce

Podcasty trafią do aplikacji już wkrótce. Zainstaluj teraz i jako pierwszy zobacz nowe podejście do podcastów

Pobierz z Google Play Zainstaluj za darmo Android prawie 10 mln pobrań · ocena 4,8 iOS niedługo

Odcinki

நேபாள அனர்த்தம்: உறவுகளுக்காகக் காத்திருக்கும் ஆஸ்திரேலியத் தமிழ்க் குடும்பங்கள் 23.09.2026

நேபாள வெள்ளம் மற்றும் மண்சரிவுகளால் பாதிக்கப்பட்ட ஆஸ்திரேலிய தமிழ் குடும்பங்களுக்கு அரசின் மேலதிக ஆதரவை வலியுறுத்தி, தமிழ்க் கலை மற்றும் பண்பாட்டுக்கழகம் (TACA) இன்று புதன் கிழமை, சிட்னியில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தியது. பாதிக்கப்பட்ட குடும்பங்களின் கோரிக்கைகள் மற்றும் அவர்களின் அனுபவங்களைப் பதிவு செய்கிறது இந்த விவரணம். நிகழ்ச்சியாக்கம்: மகேஸ்வரன் பிரபாகரன்.

எது நடந்தால் நாட்டில் வட்டிவீதம் குறையும்? 23.09.2026

வீட்டுக்கடன் கட்டுபவர்கள் எல்லோரும் இப்போது ஒரே கேள்வியைத்தான் கேட்கிறார்கள்: வட்டிவீதம் எப்போது குறையும்? அதற்கு RBA (ஆஸ்திரேலிய ரிசர்வ் வங்கி) ஆளுநர் Michele Bullock இந்த வாரம் சொன்ன பதில் பலரை ஆச்சரியப்படுத்தியிருக்கிறது. இது குறித்த செய்தியை எடுத்து வருகிறார் குலசேகரம் சஞ்சயன்.

ஐ.நா பாதுகாப்புச் சபையில் ஆஸ்திரேலியாவுக்கு இடம் கிடைக்குமா? 23.09.2026

2029 முதல் 2030 வரையிலான காலப்பகுதியில் ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையில் நிரந்தரமற்ற உறுப்பினர் பதவியைப் பெறுவதற்கான தனது பிரசாரத்தை ஆஸ்திரேலியா அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளது. இதுகுறித்த செய்தியின் பின்னணியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்

பிரசவத்திற்குப் பிறகான உடல் மற்றும் உளநலம்: பெண்கள் அறிந்துகொள்ள வேண்டியவை 23.09.2026

குழந்தை பிறந்த பிறகு, ஒரு பெண்ணின் உடலில் ஏற்படும் முக்கியமான உடல் மற்றும் உளநல மாற்றங்கள் மற்றும் அதற்கு எப்போது மருத்துவரை அணுக வேண்டும்? என்பது போன்ற பல கேள்விகளுக்கு பதில் தருகிறார் சிட்னியில் மகப்பேறு மருத்துவராக கடமையாற்றும் டாக்டர் மீரா மணி அவர்கள். அவரோடு உரையாடுகிறார் செல்வி இன்பசேகரன். #sbsaudiopodcast Your health and well-being after childbirth: Essential guidance for new mothers

இன்றைய செய்திகள்: 23 செப்டம்பர் 2026, புதன்கிழமை 23.09.2026

SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (புதன்கிழமை 23/09/2026) செய்திகள். வாசித்தவர்: மகேஸ்வரன் பிரபாகரன்.

Plug-in Solar: வாடகை வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகளுக்கும் சூரிய மின்சாரம் 23.09.2026

வீட்டின் கூரையில் பெரிய solar system அமைக்க முடியாதவர்களுக்கும், வாடகை வீட்டில் வசிப்பவர்களுக்கும் solar மின்சாரத்தைப் பயன்படுத்தும் வாய்ப்பு Plug in Solar System ஊடாக விரைவில் கிடைக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது. Plug in Solar System என்றால் என்ன, இது எவ்வாறு மின்சாரத்தை உற்பத்திசெய்கிறது போன்ற கேள்விகளுக்குப் பதிலளிக்கிறார் மொஹமட் யூசுப் அவர்கள். அவரோடு உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள அனோஜனுக்கு மன்னிப்பை கோரும் மக்கள் 22.09.2026

சவூதி அரேபியாவில் நீதிமன்றத்தால் மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ள அம்பாறையைச்சேர்ந்த சிவராஜா அனோஜனுக்குவிடுதலையையும் மன்னிப்பையும் கோரி பலஇடங்களில் கவனயீர்ப்பு போராட்டம்.அனோஜனின் விடுதலைக்கு தேவையானஅனைத்து நடவடிக்கைகளையும்முன்னெடுக்கின்றோம் அதிபர் அநுரகுமாரதிசாநாயக்க தெரிவிப்பு. இது தொடர்பில் “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சிஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச்செய்தியாளர் மதிவாணன்

பாதுகாப்புக் குறைபாடு: ஆஸ்திரேலியாவில் 32,000 வாகனங்களைத் திரும்பப் பெறுகிறது BYD 22.09.2026

BYD நிறுவனம் ஆஸ்திரேலியாவில் தனது முதல் பெரிய அளவிலான recall திரும்பப்பெறல் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இது குறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.

அக்டோபர் முதல் கிரெடிட் கார்டுகளில் முக்கிய மாற்றங்கள் 22.09.2026

அக்டோபர் முதல் கிரெடிட் கார்டுகளில் முக்கிய மாற்றங்கள் வருகின்றநிலையில் வாடிக்கையாளர்கள் கவனிக்க வேண்டியது என்ன என்பது குறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.

AI கேமரா கண்காணிப்பு: ஒரு லட்சத்து 32 ஆயிரம் NSW வாகன ஓட்டிகளுக்கு அபராதம் 22.09.2026

NSW-ல் கடந்த ஆண்டு 1 லட்சத்தி 32 ஆயிரம் பேருக்கு சீட்பெல்ட் தொடர்பிலான அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.

இன்றைய செய்திகள்: 22 செப்டம்பர் 2026 - செவ்வாய்க்கிழமை 22.09.2026

SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (செவ்வாய்க்கிழமை 22/09/2026) செய்திகள். வாசித்தவர் றேனுகா துரைசிங்கம்.

2026-க்கான உலகின் சிறந்த விமான சேவை எது தெரியுமா? 21.09.2026

2026ம் ஆண்டுக்கான உலகின் மிகச்சிறந்த விமான சேவைகள் எவை என்ற புதிய பட்டியலை விமானதரப்படுத்தல் நிறுவனமான Skytrax வெளியிட்டுள்ளது. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.

மூன்று தசாப்தங்களாகப் Pauline Hanson நிலையான ஆதரவைத் தக்கவைத்துக் கொள்ள முடிந்தது எப்படி? 21.09.2026

ஆஸ்திரேலியாவின் தீவிர வலதுசாரி மற்றும் குடியேற்ற எதிர்ப்பு அரசியல் கட்சியான Pauline Hanson’s One Nation கட்சி, வரலாற்று ரீதியாக பன்முகத்தன்மைக்கும் (Multiculturalism) குடியேற்றங்களுக்கும் எதிராக தீவிரக் கொள்கைகளைக் கொண்டு இயங்கி வருவது நாம் அறிந்தது. இந்தக் கட்சிக்கான ஆதரவும் அதற்கான எதிர்ப்புகளும் அண்மைக்காலமாக அதிகரித்து வருகிறது. இந்தக் கட்சியின் தலைவர் Pauline Hanson அண்மையில் கூறிய சில கருத்த...

Pauline Hanson கூறுவதுபோல், பன்முகப் பண்பாடு அளவுக்கு மீறிச் சென்றுவிட்டதா? 21.09.2026

ஆஸ்திரேலியாவின் தீவிர வலதுசாரி மற்றும் குடியேற்ற எதிர்ப்பு அரசியல் கட்சியான Pauline Hanson’s One Nation கட்சி, வரலாற்று ரீதியாக பன்முகத்தன்மைக்கும் (Multiculturalism) குடியேற்றங்களுக்கும் எதிராக தீவிரக் கொள்கைகளைக் கொண்டு இயங்கி வருவது நாம் அறிந்தது. இந்தக் கட்சிக்கான ஆதரவும் அதற்கான எதிர்ப்புகளும் அண்மைக்காலமாக அதிகரித்து வருகிறது. இந்தக் கட்சியின் தலைவர் Pauline Hanson அண்மையில் கூறிய சில கருத்த...

SUV & Ute பயன்பாடு பெருகும் நிலையில் பாதசாரிகளின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலா? 21.09.2026

ஆஸ்திரேலியாவில் கடந்த சில ஆண்டுகளாக SUV-கள் மற்றும் பெரிய ute வகை வாகனங்களின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. அதே நேரத்தில், பாதசாரிகள் உயிரிழக்கும் சம்பவங்களும் அதிகரித்து வருவது கவனத்தை ஈர்த்துள்ளது. இது குறித்த செய்தியின் பின்னணியை எடுத்து வருகிறார் செல்வி இன்பசேகரன். #sbsaudiopodcast As SUV and Ute use increases, is pedestrian safety under threat?

இன்றைய செய்திகள்: 21 செப்டம்பர் 2026 - திங்கட்கிழமை 21.09.2026

SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (திங்கட்கிழமை 21/09/2026) செய்திகள். வாசித்தவர் றேனுகா துரைசிங்கம்.

இந்தியா & தமிழ்நாடு: கடந்த 7 நாட்கள் செய்திகளின் தொகுப்பு 20.09.2026

தமிழகம் முழுவதும் வேகமாக பரவும் டெங்கு காய்ச்சல் - ஒரே நாளில் 253 பேர் பாதிப்பு; பரபரக்கும் தமிழக இடைத்தேர்தல் களம்; தவெக அரசுடன் கம்யூனிஸ்ட் கட்சிகளின் மோதல் போக்கு; உள்ளிட்ட செய்திகளோடு "செய்திகளின் பின்னணி" நிகழ்ச்சிக்காக இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ். India & Tamil Nadu: News highlights from the past 7 days

இந்த வார ஆஸ்திரேலிய செய்திகள் (13 செப்டம்பர் – 19 செப்டம்பர் 2026) 19.09.2026

ஆஸ்திரேலியாவின் இந்த வார (13 செப்டம்பர் – 19 செப்டம்பர் 2026) முக்கிய செய்திகளின் தொகுப்பு. வாசித்தவர்: குலசேகரம் சஞ்சயன்.

கணவனைக் கொன்று துண்டு துண்டுகளாக வெட்டி வீசிய சிட்னி பெண்ணுக்கு சிறை 18.09.2026

தனது கணவரைக் கொன்று, அவரது உடலைத் துண்டு துண்டுகளாக வெட்டி வீசிய சிட்னி பெண்ணுக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.

Why are migrant queer men facing barriers to sexual healthcare? - SBS Examines : பாலியல் ஆரோக்கியம்: பேசத் தயங்க வேண்டிய விடயமல்ல! 18.09.2026

Medication that helps prevent HIV transmission is readily available in Australia, including for temporary visa holders and those without Medicare. So why are some LGBTQI+ migrants missing out? - பாலியல் ஆரோக்கியம் குறித்து பேசுவது பலருக்கும் சங்கடமானதாக இருக்கலாம். ஆனால், சரியான ஆதரவு கிடைத்தால், இந்த உரையாடல் மனம் திறந்து உரையாடும் வகையிலும், அனைவரையும் வரவேற்கும் வகையிலும் அமையலாம். Queer ஆண்களை...

Travelling safely in rural and remote Australia - ஆஸ்திரேலியாவின் கிராமப்புற மற்றும் தொலைதூரப் பகுதிகளில் பாதுகாப்பாக பயணம் செய்வது எப்படி 18.09.2026

Australia is a vast and diverse country to explore, but driving in rural and remote areas can involve conditions you may not encounter in cities. Knowing what to expect and how to prepare can help you travel more safely and confidently. - சுற்றிப் பார்ப்பதற்கு ஒரு பரந்த மற்றும் பன்முகத்தன்மை வாய்ந்த நாடு ஆஸ்திரேலியா. ஆனால், நகரங்களில் நீங்கள் சந்திக்காத சூழ்நிலைகளை, கிராமப்புற மற்றும் தொலைதூரப் பக...

அரசின் புதிய குடிவரவுக் கொள்கை முன்மொழிவுகள் என்ன தாக்கத்தை ஏற்படுத்தும்? 18.09.2026

அரசு முன்மொழிந்துள்ள புதிய குடிவரவுக் கொள்கை மாற்றங்கள், திறன்சார் குடியேற்றம், மாணவர் வீசாக்கள், குடும்ப ஒன்றிணைவு மற்றும் நிரந்தர வதிவிடம் பெறுவதற்கான வழிகளில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தவுள்ளன. ஆஸ்திரேலியாவுக்குக் குடிபெயர விரும்புவோர், இங்கு படிக்கும் மாணவர்கள், தமது குடும்பத்தினரை அழைத்துவர எண்ணுவோர் எனப் பலரையும் இவை நேரடியாகப் பாதிக்கவுள்ளன என்பதால், நமது தமிழ்ச் சமூகத்திற்கு இக்கொள...

இன்றைய செய்திகள்: 18 செப்டம்பர் 2026 - வெள்ளிக்கிழமை 18.09.2026

SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வெள்ளிக்கிழமை 18/09/2026) செய்திகள். வாசித்தவர் : செல்வி இன்பசேகரன். Today's highlights (18 September 2026 - Friday)

இலங்கை: இந்த வார முக்கிய செய்திகள் 17.09.2026

மட்டக்களப்பில் கால்நடை மேய்ச்சல் நிலத்தை மீட்க 03 வருடங்களாக போராடும் கால்நடைப் பண்ணையாளர்கள்; இலங்கையில் தொடரும் துப்பாக்கி சூட்டு சம்பவங்களில் இதுவரையான காலப்பகுதியில் 37 துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் 18 பேர் உயிரிழந்துள்ளனர். இவை உள்ளிட்ட செய்திகளோடு “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சிக்காக விவரணமொன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.

கையில் காசு(cash-in-hand) வேலைகள் தொடர்பில் ATO எச்சரிக்கை – நூற்றுக்கணக்கானோர் மீது வழக்கு 17.09.2026

வரி தொடர்பான குற்றங்களுக்காக நூற்றுக்கணக்கான தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் மீது வழக்குத் தொடரப்பட்டுள்ளதுடன் மில்லியன் கணக்கான டாலர் அபராதங்கள் விதிக்கப்பட்டுள்ளன. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.

Słuchaj podcastu SBS Tamil - SBS தமிழ் w Replaio

Radio i podcasty w jednej aplikacji - za darmo, bez zakładania konta. Zainstaluj już dziś i nie przegap premiery

Pobierz z Google Play

Replaio nie jest wydawcą podcastów; nazwy audycji, okładki i audio należą do ich autorów i są rozpowszechniane przez publiczne kanały RSS