SBS
SBS Tamil - SBS தமிழ்
Independent news and stories from SBS Audio, connecting you to life in Australia and Tamil-speaking Australians. - தமிழ் பேசும் ஆஸ்திரேலியர்களுடனும், ஆஸ்திரேலிய வாழ்க்கையுடனும் இணைய உங்களுக்கு உதவும் பக்கசார்பற்ற செய்திகள் மற்றும் கதைகள்.
Koniecznie odwiedź stronę podcastu i wesprzyj twórcę: www.sbs.com.au
Gdzie słuchać?
Podcasty w aplikacji Replaio Radio Już wkrótcePodcasty trafią do aplikacji już wkrótce. Zainstaluj teraz i jako pierwszy zobacz nowe podejście do podcastów
Odcinki
கையில் காசு(cash-in-hand) வேலைகள் தொடர்பில் ATO எச்சரிக்கை – நூற்றுக்கணக்கானோர் மீது வழக்கு 17.09.2026 2:47
வரி தொடர்பான குற்றங்களுக்காக நூற்றுக்கணக்கான தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் மீது வழக்குத் தொடரப்பட்டுள்ளதுடன் மில்லியன் கணக்கான டாலர் அபராதங்கள் விதிக்கப்பட்டுள்ளன. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.
ஆஸ்திரேலியாவின் குடியேற்றக் கொள்கையில் அதிரடி மாற்றங்கள் – புதிய விதிமுறைகள் அறிமுகம் 17.09.2026 9:49
ஆஸ்திரேலிய அரசானது குடியேற்ற எண்ணிக்கையைக் கட்டுப்படுத்தும் நோக்கில், மாணவர் விசா, குடும்ப உறுப்பினர்களின் வருகை மற்றும் விசா விதிமீறல்கள் தொடர்பில் புதிய மாற்றங்களை அறிவித்துள்ளது. அதேவேளை, நாட்டின் தொழிலாளர் தேவையை கருத்தில் கொண்டு கட்டுமானம், சுகாதாரம், கல்வி உள்ளிட்ட துறைகளில் திறன் மிக்கவர்களுக்கு முன்னுரிமை வழங்கவும் புதிய நடவடிக்கைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இதுபற்றிய செய்தியின் பின்னணிய...
கண் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் வழிகள் 17.09.2026 11:08
நமது கண்ணை சிறந்த முறையில் எப்படி பராமரிப்பது என்பது உட்பட கண் நலம் சார்ந்த சில கேள்விகளுக்கு பதிலளிக்கிறார் மெல்பனைச் சேர்ந்த கண் மருத்துவ நிபுணர் ராஜ் பத்மராஜ் அவர்கள். அவரோடு உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.
யாழ்ப்பாண நண்பர்கள் உலகத்திற்கே உணவூட்ட வழி செய்கிறார்கள் 17.09.2026 12:46
இந்தியா மற்றும் இலங்கை உட்பட உலகின் பல பகுதிகளிலும், விவசாயம் இன்றும் பாரம்பரிய வழி முறையைப் பின்பற்றித் தான் நடக்கிறது. புவி வெப்பமயமாகி வரும் போது, உலக மக்கள் அனைவருக்கும் எப்படி உணவு வழங்க முடியும் என்றும், வளங்களை எப்படி திறனுடன் பயன்படுத்த முடியும் என்றும் பலரும் சிந்திக்க ஆரம்பித்திருக்கும் வேளையில், சில தமிழ் இளைஞர்கள் தங்கள் சொந்த முயற்சியால் புதிய வழிகளை அறிமுகப்படுத்தியுள்ளார்கள். அவர்கள...
கல்யாணத்திற்கு பிறகும் காதல் தொடர வேண்டுமா? 17.09.2026 12:13
காதலிப்பவர்கள் திருமண பந்தத்தில் இணைந்து கொள்வதற்கு முன் தெரிந்து கொள்ள வேண்டியவை மற்றும் திருமணத்திற்கு பின் உறவில் வரும் பிரச்சனைகளை எவ்வாறு கையாள்வது என்பது குறித்து விளக்கமாக உரையாடுகிறார் 3R Counselling நிறுவனத்தில் Relationship Counsellor & Educator-ராக பணியாற்றி வரும் சிந்தியா நாதன் அவர்கள். அவரோடு உரையாடுகிறார் செல்வி இன்பசேகரன். Keeping love alive after marriage
அவமதிப்பு, அரை மன்னிப்பு: Pauline Hanson சர்ச்சை என்ன சொல்கிறது 17.09.2026 16:05
“அவர்கள்தான் இப்பூமியிலேயே மிகவும் நாகரீக முதிர்ச்சியற்ற இனம் - the most primitive race on Earth - அவர்கள் எதையுமே சாதிக்கவில்லை" என்று, One Nation கட்சியின் தலைவர், செனட்டர் Pauline Hanson கூறியது மாபெரும் சர்ச்சையாக மாறியுள்ளது. அறுபத்தையாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக இந்தக் கண்டத்தில் வாழ்ந்து வரும் மனித குலத்தின் மூத்த சமூகங்களில் ஒன்றான பூர்வீகக்குடியின மக்களை அவர் இப்படி விவரித்தது நாட்டின் பல்...
இன்றைய செய்திகள்: 17 செப்டம்பர் 2026 - வியாழக்கிழமை 17.09.2026 4:46
SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வியாழக்கிழமை 17/09/2026) செய்திகள். வாசித்தவர் குலசேகரம் சஞ்சயன்.
வசதியான ஓய்வு காலத்திற்கு ஆஸ்திரேலியர்கள் சேமிக்க வேண்டிய super தொகை எவ்வளவு? 16.09.2026 3:05
ஆஸ்திரேலியர்கள் வசதியான ஓய்வுக்கால வாழ்க்கையை நடத்த, தங்களது superannuation நிதியில் முன்பைவிட சற்று அதிகமாக சேமித்து வைத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.
காது கேட்கும் திறன் குறைபாடு மறதி நோய் (Dementia) அபாயத்தை அதிகரிக்குமா? 16.09.2026 12:51
காது கேட்கும் திறன் குறைபாடு, பார்வைக் குறைபாடு மற்றும் சமூகத் தனிமை ஆகியவை மறதி நோய் (Dementia) அபாயத்துடன் தொடர்புடையவை என்று ஆய்வு ஒன்று கண்டறிந்துள்ளது. இது குறித்து விரிவாக விளக்குகிறார் முதியோர் நல மருத்துவர் டாக்டர் பூரணி முருகானந்தன் அவர்கள். அவரோடு உரையாடுகிறார் செல்வி இன்பசேகரன். #sbsaudiopodcast Does hearing impairment increase the risk of dementia?
‘தாயகம்’ என்றால் என்ன? – இக்கேள்வியை ஆராயும் ஆவணப்படம் 16.09.2026 12:51
பூநாரைகள் (flamingos), அலையாத்திக் காடுகள் மற்றும் இலங்கையின் வடக்குப் பகுதி கடற்கரையின் கண்கவர் அழகிற்கு மத்தியில், சுற்றுச்சூழல் அழிவு, கடும் வெப்பம், குறைந்து வரும் கடல்வாழ் உயிரினங்கள், நில இழப்பு மற்றும் பெரிய அளவிலான வளர்ச்சித் திட்டங்களை எதிர்கொள்ளும் மீனவ, விவசாய மற்றும் கடலோரச் சமூகங்களின் வாழ்வியலைச் சித்தரிக்கும் ஆவணப்படம், ‘தாயகம்’ (Homeland). போருக்குப் பிந்தைய இடம்பெயர்வு, காற்றாலை ம...
ஆஸ்திரேலியாவின் பணக்கார suburb-களில் வீட்டு விலை கடும் வீழ்ச்சி! 16.09.2026 6:20
ஆஸ்திரேலியாவின் முக்கிய நகரங்களில், அதிக விலை கொண்ட, அதாவது உயர் ரக வீடுகளின் விலைகள் வேகமாகக் குறைந்து வருகின்றன. இது தொடர்பில் செய்தியின் பின்னணியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.
இன்றைய செய்திகள்: 16 செப்டம்பர் 2026, புதன்கிழமை 16.09.2026 3:30
SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (புதன்கிழமை 16/09/2026) செய்திகள். வாசித்தவர்: மகேஸ்வரன் பிரபாகரன்.
இலங்கை விவகாரம் குறித்து ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் கலந்துரையாடல் 15.09.2026 8:53
ஜெனிவாவில் இடம்பெற்று வரும் ஐ.நா மனிதஉரிமை பேரவையின் கூட்டத் தொடரில் இலங்கை தொடர்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ள நிலையில், இது தொடர்பில் “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.
மனித மூளையைப் பிரதிபலிக்கும் AI - ஆஸ்திரேலியத் தொழில்நுட்பக் கண்டுபிடிப்பு 15.09.2026 3:55
மனித மூளை இயங்குவதைப் போலவே சிந்தித்துச் செயல்படும் ஒரு செயற்கை நுண்ணறிவுத் தயாரிப்பை - ஒரு AI chipஐ - ஆஸ்திரேலிய நிறுவனம் ஒன்று உருவாக்கியிருக்கிறது. சிட்னியைத் தளமாகக் கொண்ட ' BrainChip' நிறுவனத்தின் இந்தக் கண்டுபிடிப்பு தொழில்நுட்ப உலகின் கவனத்தை ஈர்த்திருக்கிறது. இது குறித்த செய்தியை எடுத்து வருகிறார் குலசேகரம் சஞ்சயன்.
மெல்பனின் வடமேற்கில் உருவாகிறது புதிய Suburb! 15.09.2026 2:23
மெல்பனின் வடமேற்கில் புதிய suburb ஒன்று உருவாகிறது. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.
ஆஸ்திரேலியாவின் 'கோடீஸ்வர' காளை - காரணம் என்ன? 15.09.2026 3:56
ஒரு பரிசுக் காளை என்றால், பச்சைப் பசேலென்ற வயல்வெளியில், சுற்றிலும் பசுக்களுடன் நிற்கும் காட்சிதான் நம் மனதில் வரும். ஆனால், ஆஸ்திரேலியாவின் மிக விலையுயர்ந்த காளை, தன் சந்ததியை வேறு விதத்தில் பெருக்கப் போகிறது. இது குறித்த செய்தியை எடுத்து வருகிறார் குலசேகரம் சஞ்சயன்.
இன்றைய செய்திகள்: 15 செப்டம்பர் 2026 - செவ்வாய்க்கிழமை 15.09.2026 4:40
SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (செவ்வாய்க்கிழமை 15/09/2026) செய்திகள். வாசித்தவர் றேனுகா துரைசிங்கம்.
வாழ்க்கைச் செலவு நெருக்கடியால் அதிகமான ஆஸ்திரேலியர்கள் செய்யும் குற்றம் எது தெரியுமா? 14.09.2026 2:29
பெட்ரோல் திருட்டு ஆஸ்திரேலியர்களிடையே அதிகரித்துவருவதாக புதிய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.
மறைந்த சாலமன் பாப்பையாவின் மனம் கவர்ந்த இலக்கியம் 14.09.2026 11:42
தமிழ் உலகு நன்கறிந்த பேச்சாளர் சாலமன் பாப்பையா அவர்கள் கடந்த செப்டம்பர் 11ம் திகதி வெள்ளிக்கிழமை தனது 90வது வயதில் காலமானார். தனக்கு பிடித்த இலக்கியம் எது என்பது தொடர்பில் அவர் SBS தமிழ் ஒலிபரப்புக்கு வழங்கிய நேர்காணலின் மறு பதிவு இது. சாலமன் பாப்பையா அவர்களோடு உரையாடியவர்: றைசெல்.
வீட்டுக்கடன் பெறுவதற்கு முன் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய விடயங்கள் 14.09.2026 10:51
வீட்டுக்கடன் பெறுவது தொடர்பில் எமக்கு எழக்கூடிய சில முக்கியமான கேள்விகளுக்குப் பதிலளிக்கிறார் Secure Lending Solutions என்ற நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் Mortgage Broker குமரன் மதுரை அவர்கள்.அவருடன் உரையாடுபவர் றேனுகா துரைசிங்கம்
‘சதையைத் தின்னும்’ புண்: ஆஸ்திரேலியாவில் பரவும் Buruli ulcer குறித்து புதிய ஆய்வு 14.09.2026 8:39
வெப்பமான காலநிலை தொடங்குவதையடுத்து, கொசுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்ற எதிர்பார்ப்பு நிலவும் நிலையில், ஆஸ்திரேலியாவில் அரிதாகக் காணப்படும் ஒரு வகை தோல் நோய் குறித்து மருத்துவ மற்றும் ஆராய்ச்சியாளர்கள் கவனம் செலுத்தி வருகின்றனர். இது குறித்த செய்தியின் பின்னணியை எடுத்து வருகிறார் செல்வி இன்பசேகரன். ‘Flesh-eating’ ulcer: New research into the spread of Buruli ulcer in Australia
இன்றைய செய்திகள்: 14 செப்டம்பர் 2026 - திங்கட்கிழமை 14.09.2026 4:55
SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (திங்கட்கிழமை 14/09/2026) செய்திகள். வாசித்தவர் றேனுகா துரைசிங்கம்.
இந்தியா & தமிழ்நாடு: கடந்த 7 நாட்கள் செய்திகளின் தொகுப்பு 13.09.2026 9:41
முதலமைச்சர் விஜய்யின் லண்டன் பயணம்; திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசாவின் சர்ச்சை பேச்சு! வலுக்கும் கண்டனங்கள்; தமிழக இடைத்தேர்தல் - பரபரக்கும் தமிழக அரசியல் களம்; உள்ளிட்ட செய்திகளோடு "செய்திகளின் பின்னணி" நிகழ்ச்சிக்காக இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ். India & Tamil Nadu: News highlights from the past 7 days
இந்த வார ஆஸ்திரேலிய செய்திகள் (06 செப்டம்பர் – 12 செப்டம்பர் 2026) 12.09.2026 5:57
ஆஸ்திரேலியாவின் இந்த வார (06 செப்டம்பர் – 12 செப்டம்பர் 2026) முக்கிய செய்திகளின் தொகுப்பு. வாசித்தவர்: குலசேகரம் சஞ்சயன்.
கார் திருட்டு சம்பவங்களில் விக்டோரியா முதலிடம் 11.09.2026 2:42
ஆஸ்திரேலியாவில் வீடு புகுந்து கொள்ளை மற்றும் கார் திருட்டு சம்பவங்களில் விக்டோரியா முதலிடத்தில் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.
Podobne podcasty
Replaio nie jest wydawcą podcastów; nazwy audycji, okładki i audio należą do ich autorów i są rozpowszechniane przez publiczne kanały RSS