SBS

SBS Tamil - SBS தமிழ்

News TA ↓ Odcinki: 2598

Independent news and stories from SBS Audio, connecting you to life in Australia and Tamil-speaking Australians. - தமிழ் பேசும் ஆஸ்திரேலியர்களுடனும், ஆஸ்திரேலிய வாழ்க்கையுடனும் இணைய உங்களுக்கு உதவும் பக்கசார்பற்ற செய்திகள் மற்றும் கதைகள்.

Koniecznie odwiedź stronę podcastu i wesprzyj twórcę: www.sbs.com.au

Autor

SBS

Kategoria

News

Strona podcastu

www.sbs.com.au

Ostatni odcinek

14 paź 2026

Gdzie słuchać?

Podcasty w aplikacji Replaio Radio Już wkrótce

Podcasty trafią do aplikacji już wkrótce. Zainstaluj teraz i jako pierwszy zobacz nowe podejście do podcastów

Pobierz z Google Play Zainstaluj za darmo Android prawie 10 mln pobrań · ocena 4,8 iOS niedługo

Odcinki

கார் திருட்டு சம்பவங்களில் விக்டோரியா முதலிடம் 11.09.2026

ஆஸ்திரேலியாவில் வீடு புகுந்து கொள்ளை மற்றும் கார் திருட்டு சம்பவங்களில் விக்டோரியா முதலிடத்தில் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.

Prostate cancer in Australia: Testing, treatment and support - புரோஸ்டேட் புற்றுநோய்: ஆண்கள் தெரிந்துகொள்ள வேண்டியவை 11.09.2026

About one in five Australian men will be diagnosed with prostate cancer in their lifetime. Understanding the prostate, your risk and the options for testing can help with early detection and treatment. In this episode of Australia Explained, learn about prostate cancer, PSA testing, treatment and support. - ஆரம்ப கட்டங்களில் புரோஸ்டேட் புற்றுநோய் பெரும்பாலும் எந்த அறிகுறிகளையும் ஏற்படுத்துவதில்லை....

Sunscreen சர்ச்சை - SPF50 பாதுகாப்பில் கேள்விக்குறி 11.09.2026

ஆஸ்திரேலியாவில் SPF50+ என விற்பனை செய்யப்பட்ட சில சன்ஸ்கிரீன்கள், எதிர்பார்த்த அளவிலான சூரியப் பாதுகாப்பை வழங்கவில்லை என்ற சர்ச்சை தீவிரமடைந்துள்ளது. 20 சன்ஸ்கிரீன் தயாரிப்புகள் சந்தையில் இருந்து மீளப்பெறப்பட்ட நிலையில், அவற்றின் உற்பத்தியாளர் Wild Child Laboratories மீது தற்போது நீதிமன்ற வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதுபற்றிய செய்தியின் பின்னணியினை முன்வைக்கிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.

இன்றைய செய்திகள்: 11 செப்டம்பர் 2026 - வெள்ளிக்கிழமை 11.09.2026

SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வெள்ளிக்கிழமை 11/09/2026) செய்திகள். வாசித்தவர் : செல்வி இன்பசேகரன். Today's highlights ( 11 September 2026 - Friday)

SBS On Demandயின் தற்போதைய பிரபலமான நிகழ்ச்சிகள்! 10.09.2026

SBS On Demand என்பது SBS வழங்கும் காணொளிகளை இலவசமாக stream செய்யும் ஒரு சேவை. இந்த சேவையில் தற்போது பிரபலமாக பார்க்கப்படும் சில நிகழ்ச்சிகளை விவரிக்கிறார் ஊடகத்துறையில் பல ஆண்டுகளாக பணியாற்றும் இரா.சத்தியநாதன் அவர்கள். நிகழ்ச்சி தயாரிப்பு: றைசெல். What’s popular on SBS On Demand

ஆஸ்திரேலிய மணலில் மலர்ந்த இயற்கை அதிசயம்! 10.09.2026

வெண்மணல் கடற்கரை… பளிங்கு போன்ற நீர்நிலைகள்… மணலில் வளரும் மழைக்காடுகள்… இயற்கை இவ்வளவு அழகாக ஒன்றாகச் சேரும் இடங்கள் உலகில் மிகச் சிலவே. அத்தகைய ஓர் இயற்கை அதிசயம்தான் Fraser Island — இன்று K’gari என அழைக்கப்படும் உலகின் மிகப்பெரிய மணல் தீவு. UNESCO உலகப் பாரம்பரியப் பட்டியலில் இடம்பெற்றுள்ள இந்தத் தீவின் அழகு, வரலாறு மற்றும் ஆச்சரியமூட்டும் சிறப்புகளை “நம்ம ஆஸ்திரேலியா” நிகழ்ச்சி மூலம் அறிமுகப்ப...

'No one looks Aussie': Photos of missing Australians in Nepal-Tibet floods prompt racist comments - துயரத்திலும் இனவெறியா? நேபாள வெள்ளத்தில் காணாமல் போனவர்கள் குறித்த கருத்துகள் 10.09.2026

Amid the death and devastation of the Nepal-Tibet floods, racism is emerging on social media platforms. - நேபாளத்தில் ஏற்பட்ட பேரழிவை ஏற்படுத்திய வெள்ளத்தில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். ஆனால், இந்தத் துயரத்துக்கும் பேரழிவுக்கும் மத்தியில், ஒரு குறிப்பிட்ட வகையான இனவெறி வெளிப்பட்டுள்ளது.

பிள்ளை வளர்ப்பு பராமரிப்பாளர்(Foster carer) ஆவது எப்படி? 10.09.2026

Foster carer - பிள்ளை வளர்ப்பு பராமரிப்பாளர் ஆவது எப்படி ? மேலும் இதில் கலாச்சார பின்னணி எவ்வாறு பெரிதும் பங்களிக்கிறது? என்பது குறித்து தனது அனுபவத்தை பகிர்ந்துக்கொள்கிறார் பிரிஸ்பனை சேர்ந்த சித்த வைத்தியர் டாக்டர் செல்வி மணி அவர்கள். அவரோடு உரையாடுகிறார் செல்வி இன்பசேகரன். இந்நிகழ்ச்சி ஒரு மறு ஒலிபரப்பு. How to become a foster carer?

வீட்டுக் கடனை அடைக்க ஓய்வூதிய நிதி – ஆஸ்திரேலிய அரசியலில் புதிய போர்க்களம் 10.09.2026

வாழ்க்கைச் செலவு நாளுக்கு நாள் ஏறிக்கொண்டிருக்கும் இந்த வேளையில், வாடகை கட்டவோ, வீட்டுக் கடனை (mortgageஐ) அடைக்கவோ சிரமப்படும் ஆஸ்திரேலியர்கள் ஏராளம். இந்த நிலையில், "உங்கள் ஓய்வுகாலத்துக்காகச் சேமிக்கப்படும் Superannuation பணத்தில் ஒரு பகுதியை, இப்போதே வாடகை அல்லது வீட்டுக் கடனுக்குப் பயன்படுத்த அனுமதிக்கலாமா என்ற கேள்வி இப்போது ஆஸ்திரேலிய அரசியலை உலுக்கிக் கொண்டிருக்கிறது. இது குறித்த செய்தியின்...

உளவியல் பாதிப்புகளால் அவதிப்படுபவர்கள் எங்கே உதவி பெறலாம்? 10.09.2026

ஆஸ்திரேலியாவில் பல murder-suicide சம்பவங்களை, அதாவது ஒருவர் மற்றொருவரைக் கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்துகொள்கின்ற சம்பவங்களை அதிகம் கேள்விப்படுகிறோம். இப்படியான மனநிலைக்கு ஒருவர் செல்வதற்கான காரணம் என்ன? இதனை எப்படித் தடுக்கலாம் என்பது தொடர்பில் மனநல மருத்துவர் அமுதநிலா காசியானந்தன் அவர்களோடு உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.

இன்றைய செய்திகள்: 10 செப்டம்பர் 2026 - வியாழக்கிழமை 10.09.2026

SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வியாழக்கிழமை 10/09/2026) செய்திகள். வாசித்தவர் குலசேகரம் சஞ்சயன்.

தொழிலாளர்களுக்கு விரைவான தொழில்துறைத் தகுதிகள்: ஆஸ்திரேலிய அரசு நடவடிக்கை 09.09.2026

கட்டுமானத் துறையில் ஏற்கனவே அனுபவமும் திறனும் கொண்ட ஆயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு, தங்களது தொழில்துறைத் தகுதிகளை விரைவாகப் பெறுவதற்கான லேபர் அரசின் திட்டம் நடைமுறைக்கு வருகிறது. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.

உங்கள் Social Media Feed-ஐ முடிவு செய்வது நீங்களா? – புதிய சட்டம் வருகிறது 09.09.2026

சமூக ஊடகப் பயன்பாட்டில் அல்காரிதம்களின் தாக்கத்தைக் குறைக்கும் நோக்கில், புதிய digital duty of care சட்ட முன்வரைவு விரைவில் நாடாளுமன்றத்தில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்த செய்தியின் பின்னணியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்

பறை இசை – பாரம்பரியமும் புதிய தலைமுறையும் 09.09.2026

ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழமையான தமிழர்களின் பாரம்பரிய இசைக்கலையான பறை இசை, புதிய தலைமுறையினரை சென்றடைகிறதா? இதன் வளர்ச்சி மற்றும் இளைஞர்களின் ஆர்வம் குறித்து மெல்பன் பறை இசைக் கலைஞர்களுடன் உரையாடுகிறார் சரண்யா பாலகிருஷ்ணன். #sbsaudiopodcast

உளவியல் ஆலோசனையை AI வழங்க முடியுமா? 09.09.2026

அமெரிக்கா முழுவதும் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், 12 முதல் 21 வயதுக்குட்பட்ட இளைஞர்களில் சுமார் 20 சதவீதமானோர் (19.2% பேர்), சோகம், கோபம், பதற்றம் அல்லது மன அழுத்தத்தை உணரும்போது ChatGPT, Gemini, Character. AI மற்றும் Meta AI போன்ற செயற்கை நுண்ணறிவு (AI) chatbotsஐப் பயன்படுத்தி ஆலோசனை பெற்றுள்ளதாகத் தெரிவித்துள்ளனர். முந்தைய ஆண்டில் இந்த அளவு 13.1% ஆக இருந்தது; அதேவேளையில், மனநல நிபுணரிடம் ஆலோசனை பெற்ற...

இன்றைய செய்திகள்: 09 செப்டம்பர் 2026 - புதன்கிழமை 09.09.2026

SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (புதன்கிழமை 09/09/2026) செய்திகள். வாசித்தவர் குலசேகரம் சஞ்சயன்.

நாமல் ராஜபக்ஸ கைது விவகாரம் – பின்னணி என்ன? 09.09.2026

சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஸ இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவின் விசாரணைகளின் பின்னர் கைது செய்யப்பட்ட நிலையில், எதிர்வரும் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு. இது தொடர்பில் “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.

இன்றைய செய்திகள்: 08 செப்டம்பர் 2026 - செவ்வாய்க்கிழமை 08.09.2026

SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (செவ்வாய்க்கிழமை 08/09/2026) செய்திகள். வாசித்தவர் றேனுகா துரைசிங்கம்.

குடும்ப உறவில் நிதி வன்முறை: உரிமைகளும் பாதுகாப்பும் 07.09.2026

குடும்ப உறவில் நிதி வன்முறையை ஒருவர் எவ்வாறு அடையாளம் காண்பது? மேலும் நிதி குறித்து அவர்களின் உரிமைகள் யாவை? அதனை எவ்வாறு பாதுகாத்துக்கொள்வது? போன்ற பல கேள்விகளுக்கு பதில் தருகிறார் குடும்பச் சட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட சிறப்பு நிபுணரும் சட்டத் துறையில் 10 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் கொண்டவரும் Sun Legal நிறுவனத்தின் முதன்மை வழக்கறிஞருமான அபூர்வா சுந்தர் அவர்கள். அவரோடு உரையாடுகிறார் செல்வி இன்ப...

Private health insurance மாற்றங்கள்: மாநிலங்களின் எதிர்ப்பை மீறி முன்னேறும் பெடரல் அரசு! 07.09.2026

65 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு வழங்கப்படும் தனியார் மருத்துவக் காப்பீட்டுத் தள்ளுபடியைக் குறைக்கும் பெடரல் அரசின் திட்டத்திற்கு மாநில மற்றும் பிராந்திய அரசுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இது குறித்த செய்தியின் பின்னணியை எடுத்து வருகிறார் செல்வி இன்பசேகரன். Private health insurance changes: Federal government pushes ahead despite opposition from the states!

இன்றைய செய்திகள்: 07 செப்டம்பர் 2026 - திங்கட்கிழமை 07.09.2026

SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (திங்கட்கிழமை 07/09/2026) செய்திகள். வாசித்தவர் றேனுகா துரைசிங்கம்.

AI உதவியுடன் நடைபெறும் மோசடிகள்: ஏமாறாமலிருப்பது எப்படி? 07.09.2026

Scam - இணைய மோசடிகள் நாளுக்கு நாள் நுட்பமானதாக மாறி வரும் நிலையில், பெரிய பணப் பரிமாற்றங்களில் மக்கள் எவ்வாறு ஏமாற்றப்படுகிறார்கள்? மோசடிக்காரர்களுக்கு நம்மைப் பற்றிய தகவல்கள் எப்படிக் கிடைக்கின்றன? AI எனப்படும் செயற்கை நுண்ணறிவு இந்த ஆபத்தை மேலும் அதிகரிக்கிறதா? என்று எழும் பல கேள்விகளுக்கு பிரிஸ்பேனில் வாழும் தொழில்நுட்பத் துறை Test Manager நதியா சந்திரசேகரன் அவர்கள் பதில் தருகிறார். “Kaapiyam w...

இந்தியா & தமிழ்நாடு: கடந்த 7 நாட்கள் செய்திகளின் தொகுப்பு 06.09.2026

தமிழக முதலமைச்சர் விஜய் பிரதமர் வேட்பாளரா?; டாஸ்மாக் ஊழியர்கள் 217 பேரை பணியிடை நீக்கம் - ஊழியர்கள் போராட்டம்; தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு குறித்து திமுக கடும் விமர்சனம்; உள்ளிட்ட செய்திகளோடு "செய்திகளின் பின்னணி" நிகழ்ச்சிக்காக இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ். India & Tamil Nadu: News highlights from the past 7 days

இந்த வார ஆஸ்திரேலிய செய்திகள் (30 ஆகஸ்ட் – 5 செப்டம்பர் 2026) 05.09.2026

ஆஸ்திரேலியாவின் இந்த வார (30 ஆகஸ்ட் – 5 செப்டம்பர் 2026) முக்கிய செய்திகளின் தொகுப்பு. வாசித்தவர்: றைசெல். Top news from Australia this week (30 August – 5 September 2026)

These workers say their jobs were replaced by AI. Could it happen to you? - SBS Examines : AI செயற்கை நுண்ணறிவு உங்கள் வேலையையும் பறிக்குமா? 04.09.2026

Evidence shows AI is changing jobs, rather than completely replacing them. But the impact on the Australian workforce is likely to be unequal. - பணியிடங்களில் செயற்கை நுண்ணறிவு எனப்படும் AI தொழில்நுட்பம் வேகமாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் இந்த AI தொழில்நுட்பம் எதிர்கால வேலைவாய்ப்புகளை எவ்வாறு மாற்றக்கூடும்?

Słuchaj podcastu SBS Tamil - SBS தமிழ் w Replaio

Radio i podcasty w jednej aplikacji - za darmo, bez zakładania konta. Zainstaluj już dziś i nie przegap premiery

Pobierz z Google Play

Replaio nie jest wydawcą podcastów; nazwy audycji, okładki i audio należą do ich autorów i są rozpowszechniane przez publiczne kanały RSS