SBS
SBS Tamil - SBS தமிழ்
Independent news and stories from SBS Audio, connecting you to life in Australia and Tamil-speaking Australians. - தமிழ் பேசும் ஆஸ்திரேலியர்களுடனும், ஆஸ்திரேலிய வாழ்க்கையுடனும் இணைய உங்களுக்கு உதவும் பக்கசார்பற்ற செய்திகள் மற்றும் கதைகள்.
Koniecznie odwiedź stronę podcastu i wesprzyj twórcę: www.sbs.com.au
Gdzie słuchać?
Podcasty w aplikacji Replaio Radio Już wkrótcePodcasty trafią do aplikacji już wkrótce. Zainstaluj teraz i jako pierwszy zobacz nowe podejście do podcastów
Odcinki
AI உதவியுடன் நடைபெறும் மோசடிகள்: ஏமாறாமலிருப்பது எப்படி? 07.09.2026 9:51
Scam - இணைய மோசடிகள் நாளுக்கு நாள் நுட்பமானதாக மாறி வரும் நிலையில், பெரிய பணப் பரிமாற்றங்களில் மக்கள் எவ்வாறு ஏமாற்றப்படுகிறார்கள்? மோசடிக்காரர்களுக்கு நம்மைப் பற்றிய தகவல்கள் எப்படிக் கிடைக்கின்றன? AI எனப்படும் செயற்கை நுண்ணறிவு இந்த ஆபத்தை மேலும் அதிகரிக்கிறதா? என்று எழும் பல கேள்விகளுக்கு பிரிஸ்பேனில் வாழும் தொழில்நுட்பத் துறை Test Manager நதியா சந்திரசேகரன் அவர்கள் பதில் தருகிறார். “Kaapiyam w...
இந்தியா & தமிழ்நாடு: கடந்த 7 நாட்கள் செய்திகளின் தொகுப்பு 06.09.2026 9:30
தமிழக முதலமைச்சர் விஜய் பிரதமர் வேட்பாளரா?; டாஸ்மாக் ஊழியர்கள் 217 பேரை பணியிடை நீக்கம் - ஊழியர்கள் போராட்டம்; தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு குறித்து திமுக கடும் விமர்சனம்; உள்ளிட்ட செய்திகளோடு "செய்திகளின் பின்னணி" நிகழ்ச்சிக்காக இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ். India & Tamil Nadu: News highlights from the past 7 days
இந்த வார ஆஸ்திரேலிய செய்திகள் (30 ஆகஸ்ட் – 5 செப்டம்பர் 2026) 05.09.2026 5:46
ஆஸ்திரேலியாவின் இந்த வார (30 ஆகஸ்ட் – 5 செப்டம்பர் 2026) முக்கிய செய்திகளின் தொகுப்பு. வாசித்தவர்: றைசெல். Top news from Australia this week (30 August – 5 September 2026)
These workers say their jobs were replaced by AI. Could it happen to you? - SBS Examines : AI செயற்கை நுண்ணறிவு உங்கள் வேலையையும் பறிக்குமா? 04.09.2026 11:15
Evidence shows AI is changing jobs, rather than completely replacing them. But the impact on the Australian workforce is likely to be unequal. - பணியிடங்களில் செயற்கை நுண்ணறிவு எனப்படும் AI தொழில்நுட்பம் வேகமாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் இந்த AI தொழில்நுட்பம் எதிர்கால வேலைவாய்ப்புகளை எவ்வாறு மாற்றக்கூடும்?
வீட்டில் பெண் ஒருவரை அடிமையாக வைத்திருந்த குற்றச்சாட்டில் மெல்பன் நபருக்கு சிறை 04.09.2026 2:53
மெல்பனில் பெண் ஒருவரை அடிமையாக வைத்துத் துன்புறுத்திய குற்றச்சாட்டில் நபர் ஒருவருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.
ஆஸ்திரேலியாவின் பூர்வீக உயிரினங்களை வெளிநாட்டுக்கு கடத்த முயன்ற இளைஞர் கைது 04.09.2026 2:43
ஆஸ்திரேலியாவிற்குச் சொந்தமான பல பூர்வீக உயிரினங்களை வெளிநாட்டுக்கு கடத்த முயன்ற இளைஞர் கைதுசெய்யப்பட்டுள்ளார். இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.
வீடுகளின் விலை வரும் மாதங்களில் எப்படி இருக்கும்? 04.09.2026 9:26
நாட்டின் வீட்டுச் சந்தையில் சரிவு தொடர்கிறது. நாடு முழுவதும் இந்த சரிவு பரவியிருந்தாலும் தலைநகரங்களில் உள்ள புறநகர்ப் பகுதிகளில் அதன் தாக்கம் அதிகமாகவுள்ளது. இது குறித்த செய்தியின் பின்னணியை எடுத்து வருகிறார் குலசேகரம் சஞ்சயன்.
இன்றைய செய்திகள்: 04 செப்டம்பர் 2026 - வெள்ளிக்கிழமை 04.09.2026 4:29
SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வெள்ளிக்கிழமை 04/09/2026) செய்திகள். வாசித்தவர் : செல்வி இன்பசேகரன். Today's highlights ( 04 September 2026 - Friday)
How can my child learn about Indigenous Australia? - பூர்வீகக்குடி மக்களின் கலாச்சாரம் மற்றும் வரலாற்றை உங்கள் குழந்தை எவ்வாறு கற்றுக்கொள்ளலாம்? 04.09.2026 8:53
Supporting your child’s connection with the world’s oldest continuing living culture is one of the greatest gifts you can offer them while raising them in Australia. But if you’re new to the country, you may be unsure where to begin. Here are some starting points and ideas to help you and your child learn about Aboriginal and Torres Strait Islander peoples, cultures and history. - ஆஸ்திரேலியாவின்...
இந்தப் பிரபஞ்சத்தில் நாம் மட்டும்தானா? விடை தேடல் தொடங்குகிறது 04.09.2026 6:58
இந்தப் பிரபஞ்சத்தில் நாம் மட்டும்தான் இருக்கிறோமா? பல நூற்றாண்டுகளாக விடை தேடப்படும் இந்தக் கேள்விக்கு, NASAவின் புதிய Roman Space Telescope பதில் தருமா? அதன் தேடல் பற்றி விளக்குகிறார் ஊடகத்துறையில் பல ஆண்டுகளாக பணியாற்றும் இரா.சத்தியநாதன் அவர்கள். விவரண தகவல்: Yasmine Alwakal and Abbie O'Brien for SBS News. Are we alone in the universe? We might just be one step closer to finding out
இலங்கை: இந்த வார முக்கிய செய்திகள் 03.09.2026 8:33
இலங்கையின் கிழக்கு பகுதி உள்ளிட்ட பல பகுதிகளிலும் கடும் வறட்சியான காலநிலையினால் குடிநீருக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதுடன் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு; பல்வேறு தரப்பினரதும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் நீதித்துறையில் சீர்திருத்தங்களை மேற்கொள்ளும் 22 வது அரசியலமைப்பு திருத்தத்திற்கு அரசு தயாராகிவருகின்றது. இவை உள்ளிட்ட செய்திகளோடு “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சிக்காக விவரணமொன்றை முன்வைக்கி...
உலகளாவிய பேரழிவு வந்தால் எந்த நாடு தப்பிப் பிழைக்கும்? 03.09.2026 2:50
உலகளாவிய பேரழிவு ஒன்று ஏற்பட்டால், அதனைச் சமாளிக்கும் திறன் கொண்ட நாடுகளில் ஆஸ்திரேலியா முன்னிலையில் இருப்பதாக புதிய ஆய்வொன்று தெரிவிக்கிறது. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.
தமிழ் மொழிக் கற்றலை ஊக்குவிக்க ஆஸ்திரேலிய அரசு நிதியுதவி 03.09.2026 3:00
தங்கள் பாரம்பரிய மொழிகளைக் கற்றுக்கொள்வதற்கும், அவற்றைத் தொடர்ந்து பேணுவதற்கும் இளம் ஆஸ்திரேலியர்களுக்கு மேலும் வாய்ப்புகளை ஏற்படுத்தும் வகையில், அரசு நிதியுதவியை அறிவித்துள்ளது. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.
'நல்ல திரைப்படத்திற்கு நல்ல கதை முக்கியம்' - கார்த்திக் சுபராஜ் 03.09.2026 14:30
"பீட்சா" திரைப்படம் மூலம் சுமார் 10 ஆண்டுகளுக்கு முன் திரைத்துறையில் இயக்குனராக அறிமுகமான கார்த்திக் சுபராஜ் அவர்கள் தனது திரைப் பயணம் குறித்து நம்மோடு பகிர்ந்துக்கொள்கிறார். அவரோடு உரையாடுகிறார் செல்வி இன்பசேகரன். இந்நிகழ்ச்சி ஒரு மறுஒலிபரப்பு 'Good Script is important for a good movie' - Karthik Subbaraj
Camera கண்ணாடிகள்: உங்கள் தனியுரிமைக்கு அச்சுறுத்தலா? 03.09.2026 9:00
பார்ப்பதற்குச் சாதாரணக் கண்ணாடிதான். ஆனால், அதை அணிந்திருப்பவர் நீங்கள் அறியாமலேயே உங்களை இரகசியமாகப் படம்பிடிக்க முடியும். 'ஸ்மார்ட் கிளாஸஸ்' (smart glasses) என்றழைக்கப்படும் இந்தக் கண்ணாடிகள், இப்போது ஆஸ்திரேலியாவில் ஒரு பெரிய விவாதத்தைக் கிளப்பியிருக்கின்றன. இவை உங்கள் தனியுரிமைக்கு ஓர் அச்சுறுத்தல் என்றும் இவற்றை இறக்குமதி செய்வதைத் தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை இப்போது அதிகரிப்பதும் குறித்...
குழந்தைகளின் எலும்பு முறிவு – பெற்றோர் அறிந்துகொள்ள வேண்டியவை 03.09.2026 7:49
சிறுவர்களில் அடிக்கடி எலும்பு முறிவு ஏற்படுவதுண்டு. இந்த நிகழ்ச்சியில் சிறுவர்களில் ஏற்படும் எலும்பு முறிவு பற்றியும் இதைத் தடுக்கலாமா என்பது பற்றியும் விளக்கமளிக்கிறார் எலும்பு முறிவு சத்திரசிகிச்சை நிபுணர் கனகரட்ணம் காண்டீபன் அவர்கள். அவருடன் உரையாடுபவர் றேனுகா துரைசிங்கம்
அப்பா எனும் அரவணைப்பு 03.09.2026 12:30
செப்டம்பர் 6ஆம் திகதி “தந்தையர் தினம்” கொண்டாடப்படுகிறது. தனது குழந்தையின் தந்தையான தனது கணவன் எப்படி ஒரு நல்ல அப்பாவாக இருக்கிறார் என்பது தொடர்பில் அப்சாநிகாத், அபிராமி, கோபிகா, கலைமதி ஆகியோர் பகிர்ந்துகொள்கின்றனர். நிகழ்ச்சி தயாரிப்பு: றைசெல். (இந்த பதிவு முதலில் 2019ஆம் ஆண்டு ஒலிபரப்பானது)
இன்றைய செய்திகள்: 03 செப்டம்பர் 2026 - வியாழக்கிழமை 03.09.2026 4:20
SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வியாழக்கிழமை 03/09/2026) செய்திகள். வாசித்தவர் குலசேகரம் சஞ்சயன்.
Pineapple - அன்னாசிப் பழத்துக்கும் அரசியலுக்கும் என்ன தொடர்பு? 03.09.2026 4:26
ஆப்பிரிக்க நாடான Burkina Fasoவில் அன்னாசிப் பழத்துக்கும் அரசியலுக்கும் தொடர்பு இருக்கும் தகவலை முன்வைக்கிறார் றைசெல். Pineapples and Politics: What’s the connection?
நேபாளத்தில் சில நிமிடங்களில் 900 உயிர்கள் காப்பாற்றப்பட்டது எப்படி? 03.09.2026 3:55
நேபாளத்தில் பள்ளியின் தலைமை ஆசிரியரின் முடிவினால் சில நிமிடங்களில் 900 உயிர்கள் காப்பாற்றப்பட்டன. இந்த தகவலை முன்வைக்கிறார் றைசெல். How 900 students’ lives were saved in minutes in Nepal
வசந்த காலம் தொடக்கம் – பருவகால ஒவ்வாமையால் பாதிக்கப்படுவோருக்கு எச்சரிக்கை 02.09.2026 2:23
ஆஸ்திரேலியாவில் வசந்த காலம் தொடங்கியுள்ள நிலையில், Hay fever எனப்படும் பருவகால ஒவ்வாமையால் பாதிக்கப்படுவோருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.
Australia Post கடித விநியோக சேவையை கைவிடும் அபாயம் உள்ளதா? 02.09.2026 7:55
கடித சேவையின் எதிர்காலம் மாறிக்கொண்டிருக்கிறது. ஆனால், வீடுகளுக்கு நேரடியாகக் கடிதம் கொண்டுவரும் சேவை தொடரும் என்றும் ஒரு கடிதத்தை அனுப்ப நீங்கள் இன்று செலுத்தும் கட்டணம், வரும் காலத்தில் இரண்டு டொலர்களை எட்டலாம் என்றும் Australia Post நிறுவனத்தின் தலைமை நிர்வாகி Paul Graham, SBS செய்திப்பிரிவினருக்கு அளித்த பேட்டியில் ஓர் எச்சரிக்கையை விடுத்திருக்கிறார். இது குறித்த செய்தியின் பின்னணியை எடுத்து வ...
சிட்னியில் அனைத்துலக திருக்குறள் மாநாடு! 02.09.2026 10:18
“அனைத்துலக திருக்குறள் மாநாடு” செப்டம்பர் மாதம் 4ஆம் தேதி சிட்னி Blacktownஇல் உள்ள ஆஸ்திரேலிய கத்தோலிக்க பல்கலைக்கழகத்தில் நடைபெறவுள்ளது. இம்மாநாடு குறித்து தமிழ் வளர்ச்சி மன்றத்தின் தலைவர் முனைவர் சந்திரிகா சுப்பிரமணியன் மற்றும் International Thirukkural Foundation Mauritiusஇன் செயலாளர் பேராசிரியர் பஞ்ச் ராமலிங்கம் ஆகியோர் நம்முடன் உரையாடுகின்றனர். அவர்களோடு உரையாடியவர்: றேனுகா துரைசிங்கம்
இன்றைய செய்திகள்: 02 செப்டம்பர் 2026 - புதன்கிழமை 02.09.2026 4:40
SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (புதன்கிழமை 02/098/2026) செய்திகள். வாசித்தவர் குலசேகரம் சஞ்சயன்.
‘நீதிக்கான நீள் பயணம்’- யாழ்ப்பாணத்தில் சர்வதேச மாநாடு 01.09.2026 8:32
"நீதிக்கான நீள் பயணம்" என்ற தொனிப்பொருளில் வடக்கு , கிழக்கு காணாமலாக்கப்பட்டோர் உறவினர் சங்கத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்தில் சர்வதேச மாநாடும் பேரணியும் இடம்பெற்றுள்ளது. இது தொடர்பில் “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.
Podobne podcasty
Replaio nie jest wydawcą podcastów; nazwy audycji, okładki i audio należą do ich autorów i są rozpowszechniane przez publiczne kanały RSS