SBS

SBS Tamil - SBS தமிழ்

News TA ↓ Odcinki: 2604

Independent news and stories from SBS Audio, connecting you to life in Australia and Tamil-speaking Australians. - தமிழ் பேசும் ஆஸ்திரேலியர்களுடனும், ஆஸ்திரேலிய வாழ்க்கையுடனும் இணைய உங்களுக்கு உதவும் பக்கசார்பற்ற செய்திகள் மற்றும் கதைகள்.

Koniecznie odwiedź stronę podcastu i wesprzyj twórcę: www.sbs.com.au

Autor

SBS

Kategoria

News

Strona podcastu

www.sbs.com.au

Ostatni odcinek

14 paź 2026

Gdzie słuchać?

Podcasty w aplikacji Replaio Radio Już wkrótce

Podcasty trafią do aplikacji już wkrótce. Zainstaluj teraz i jako pierwszy zobacz nowe podejście do podcastów

Pobierz z Google Play Zainstaluj za darmo Android prawie 10 mln pobrań · ocena 4,8 iOS niedługo

Odcinki

நேபாள பெருவெள்ளத்தில் காணாமல்போன சிட்னி தம்பதி – மகன் பகிரும் தகவல்கள் 01.09.2026

நேபாளம் -திபெத் எல்லையில் பேரழிவை ஏற்படுத்திய திடீர் பெருவெள்ளத்தில் சிக்கி காணாமல்போனவர்களில் சிட்னியிலிருந்து சென்ற வெங்கட்ராமன் -சித்ரா தம்பதியரும் அடங்குகின்றனர். தமது பெற்றோர் தொடர்பில் நல்லதொரு தகவல் கிடைக்கவேண்டுமென சிட்னியில் அவர்களது இரு மகன்களும் காத்திருக்கின்றனர். தமது பெற்றோர் காணாமல்போனமை தொடர்பில் பிந்திய தகவல்களை நம்முடன் பகிர்ந்துகொள்கிறார் வெங்கட்ராமன் தம்பதியரின் மூத்த மகன் ஆகாஷ...

சிட்னியில் குப்பைத் தொட்டியிலிருந்து பச்சிளம் குழந்தையின் உடல் மீட்பு! 01.09.2026

சிட்னியில் குப்பைத் தொட்டி ஒன்றிலிருந்து பிறந்து சில நாட்களேயான ஆண் சிசுவின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.

இன்றைய செய்திகள்: 01 செப்டம்பர் 2026 - செவ்வாய்க்கிழமை 01.09.2026

SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (செவ்வாய்க்கிழமை 01/09/2026) செய்திகள். வாசித்தவர் றேனுகா துரைசிங்கம்.

ஆஸ்திரேலியாவில் தொழில் ஒன்றை வாங்கும் முன் கவனிக்க வேண்டிய முக்கிய விடயங்கள் 31.08.2026

ஆஸ்திரேலியாவில் ஏற்கனவே இயங்கி வரும் ஒரு தொழிலை வாங்கும்போது கவனிக்க வேண்டிய முக்கிய அம்சங்கள் குறித்து விரிவாக விளக்குகிறார் CA & FCPA எனும் தகுதிகள் கொண்ட ABC Money Solutionsஇன் ஜெகா நடராஜா அவர்கள். அவரோடு உரையாடுகிறார் செல்வி இன்பசேகரன். Key things to consider before buying a business in Australia

தஞ்சாவூர் ஓவியம்: பாரம்பரியமும் எதிர்காலமும் 31.08.2026

பல நூற்றாண்டுகளைக் கடந்து வந்த தஞ்சாவூர் ஓவியக் கலை, புதிய தலைமுறையையும் சென்றடைகிறதா? AI வளர்ந்து வரும் காலத்தில் இந்தக் கலை வளர்கிறதா, மறைகிறதா என்பதை குறித்து Melbourne வாழ் தஞ்சாவூர் ஓவியக் கலைஞர்களுடன் உரையாடுகிறார் சரண்யா பாலகிருஷ்ணன்.

நேபாள பெருவெள்ளம்: காணாமல் போன 43 ஆஸ்திரேலியர்களில் 11 பேர் தமிழர்கள்! 31.08.2026

நேபாளம் மற்றும் திபெத்தில் பேரழிவை ஏற்படுத்திய திடீர் பெருவெள்ளத்தைத் தொடர்ந்து 43 ஆஸ்திரேலியர்கள் காணாமல்போயுள்ளனர். இவர்களில் 11 பேர் தமிழர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த விவரணமொன்றை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.

சீனி கலந்த பானங்களுக்கு வரி : ஆரோக்கியமும் வருவாயும் அதிகரிக்குமா? 31.08.2026

ஆஸ்திரேலியாவில் சர்க்கரை அல்லது சீனி கலந்த குளிர்பானங்களுக்கு வரி விதிப்பது குறித்த விவாதம் மீண்டும் சூடுபிடித்துள்ளது. இந்த வரி உடல்நலத்தை மேம்படுத்துவதுடன் அரசுக்கு கணிசமான வருவாயையும் பெற்றுத்தரலாம் என புதிய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. இது குறித்த செய்தியின் பின்னணியை முன் வைக்கிறார் செல்வி இன்பசேகரன். Sugary drinks tax: Will it improve health and boost revenue?

இன்றைய செய்திகள்: 31 ஆகஸ்ட் 2026 - திங்கட்கிழமை 31.08.2026

SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (திங்கட்கிழமை 31/08/2026) செய்திகள். வாசித்தவர் குலசேகரம் சஞ்சயன்.

இந்தியா & தமிழ்நாடு: கடந்த 7 நாட்கள் செய்திகளின் தொகுப்பு 30.08.2026

நேபாளத்தில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் சிக்கிய தமிழக மக்களை மீட்க தீவிர முயற்சி; பரந்தூர் விமான நிலைய திட்டம் ரத்து - முதலமைச்சர் விஜய் அறிவிப்பு; ஜல்லிக்கட்டு தொடர்பாக த.வெ.க. சட்டமன்ற உறுப்பினரின் பேச்சுக்கு தலைவர்கள் கண்டனம்; உள்ளிட்ட செய்திகளோடு "செய்திகளின் பின்னணி" நிகழ்ச்சிக்காக இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ். India & Tamil Nadu: News highlights from the past 7 days

இந்த வார ஆஸ்திரேலிய செய்திகள் (23 - 29 ஆகஸ்ட் 2026) 29.08.2026

ஆஸ்திரேலியாவின் இந்த வார (23 - 29 ஆகஸ்ட் 2026) முக்கிய செய்திகளின் தொகுப்பு. வாசித்தவர்: றைசெல். Top news from Australia this week (23- 29 August 2026)

How do we actually count Australia's migration intake? - SBS Examines : ஆஸ்திரேலியாவின் குடியேற்ற எண்ணிக்கை எப்படிக் கணக்கிடப்படுகிறது? 28.08.2026

Migration numbers have been dominating headlines, with politicians and commentators quoting several different figures. But many metrics significantly overstate how many people are permanently settling in Australia. So how is migration actually measured? - ஆஸ்திரேலியாவில் குடிவரவு என்பது அரசியல் மற்றும் சமூக விவாதங்களில் அதிகம் பேசப்படும் ஒரு முக்கியமான விடயமாக உள்ளது. ஆனால், குடிவரவு எண்ணிக்கை என்...

தமிழ் சமூகத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்திட்டம் 28.08.2026

தமிழ் சமூகத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்திட்டமொன்றை விக்டோரியாவில் இயங்கும் VALID அமைப்பு முன்னெடுத்துவருகிறது. இது தொடர்பில் அந்த அமைப்பைச் சேர்ந்த அகிலன் குறூஸ் அவர்களுடனும் இத்திட்டத்தின் பயனாளிகளில் ஒருவரான மதுரா தவசீலன் அவர்களுடனும் உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.

நாட்டுக்குள் உள்வாங்கப்படும் அகதிகளின் எண்ணிக்கை குறைக்கப்படுமா? – பிரதமர் பதில் 28.08.2026

மனிதாபிமான அடிப்படையில் உள்வாங்கப்படும் அகதிகளின் எண்ணிக்கை குறைக்கப்படுமா என்பது தொடர்பில் ஆஸ்திரேலிய அரசு பதிலளித்துள்ளது. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.

நமது உடலுக்குள் வாழும் நுண்ணுயிரிகள்: எங்கிருந்து வருகின்றன? என்ன செய்கின்றன? 28.08.2026

நமது உடலுக்குள் வாழும் நுண்ணுயிரிகள் நம்முடைய நோய் எதிர்ப்பு சக்தியில் பாரிய தாக்கம் செலுத்துகின்றன. இந்த நுண்ணுரியிரிகள் நமது உடலுக்குள் எப்படி செல்கின்றன? எவ்வாறு தொழிற்படுகின்றன என்பது உட்பட சில கேள்விகளுக்குப் பதிலளிக்கிறார் அமெரிக்காவில் வாழும் Dr பரத் பிருத்விராஜ்- Asst. Professor Adjunct, City University of New York, Brooklyn, NY & MetaSUB global consortium, India Lead and Senior Scientist....

இன்றைய செய்திகள்: 28 ஆகஸ்ட் 2026 - வெள்ளிக்கிழமை 28.08.2026

SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வெள்ளிக்கிழமை 28/08/2026) செய்திகள். வாசித்தவர் : செல்வி இன்பசேகரன். Today's highlights (28 August 2026 - Friday)

இலங்கை: இந்த வார முக்கிய செய்திகள் 27.08.2026

யாழ்ப்பாணத்தில் அரசு நடத்திய காணாமலாக்கப்பட்டோர் சர்வதேச தின நிகழ்விற்கு காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் சங்கம் எதிர்ப்பு ; மாகாணசபை தேர்தல் நடத்தப்பட வேண்டும் என தொடர்ந்து எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வரும் நிலையில், தேர்தலை நடத்துவதே அரசின் எதிர்பார்ப்பாகும் என அரசு அறிவிப்பு. இவை உள்ளிட்ட செய்திகளோடு “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சிக்காக விவரணமொன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாண...

பல தமிழர்களும், ஆஸ்திரேலியர்களும் அகப்பட்ட நேபாள வெள்ளப் பேரழிவு 27.08.2026

நேபாளம்–திபெத் எல்லையில் ஏற்பட்ட கொடிய திடீர் வெள்ளப் பேரழிவில் குறைந்தது நூற்று அறுபது பேர் உயிரிழந்திருக்கிறார்கள்; சுற்றுலாப் பயணிகள் மற்றும் முப்பத்திநான்கு ஆஸ்திரேலியர்கள் உட்பட நூற்றுக்கணக்கானோர் காணாமல் போயிருக்கிறார்கள். நூற்று ஐம்பதுக்கும் மேற்பட்ட உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். காணாமல் போனவர்கள் தனித்தனி யாத்திரை மற்றும் சுற்றுலாக் குழுக்களைச் சேர்ந்தவர்க...

Takeaway coffee குடிப்பவரா நீங்கள்? இதையும் கவனியுங்கள்! 27.08.2026

Takeaway coffee குடிப்பவரா நீங்கள்? சில paper cup-களில் உள்ள பிளாஸ்டிக் படலம், சூடான பானத்தில் microplastic துகள்களை வெளியிடக்கூடும் என புதிய ஆய்வு தெரிவிக்கிறது. இது குறித்த தகவலை முன்வைக்கிறார் றைசெல். Do you drink Takeaway Coffee? A warning you should know about

இன்னும் Census படிவத்தை பூர்த்தி செய்யவில்லையா? 27.08.2026

உங்கள் Census – மக்கள் தொகைக் கணக்கெடுப்பு படிவத்தை நீங்கள் இன்னும் பூர்த்தி செய்யவில்லையா? இது குறித்து Australian Bureau of Statistics தரும் தகவலை முன்வைக்கிறார் றைசெல். Haven’t completed your Census form yet?

புரதச்சத்து, குறிப்பாக வயதான பெண்களுக்கு ஏன் மிகவும் முக்கியம்? 27.08.2026

புரதச்சத்து உடலுக்குத் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு ஊட்டச்சத்தாகும். இது தசைகள், எலும்புகள், தோல் மற்றும் உடல் செல்கள் அனைத்திற்கும் அடிப்படையாகும். குறிப்பாக, வயதான பெண்களுக்கு புரதச்சத்து ஏன் முக்கியம், நமது உணவில் அதனை எவ்வாறு எடுப்பது போன்ற பல கேள்விகளுக்கு பதில் தருகிறார் பெர்த் நகரில் உடல் எடை குறைப்பு ஆலோசனை சேவை வழங்கி வரும் Flexinutria நிறுவனத்தின் நிறுவனர் ஊட்டச்சத்து நிபுணர் மாலதி...

மேற்கு ஆஸ்திரேலியாவுக்கான GST ஒதுக்கீடு பிற மாநிலங்களை வஞ்சிக்கிறதா? 27.08.2026

ஆஸ்திரேலியாவின் மிகச் செல்வந்த மாநிலம் எது? சந்தேகமே இல்லை - மேற்கு ஆஸ்திரேலியாதான். இரும்புத் தாது ஏற்றுமதியில் உலகையே வழிநடத்தும் மாநிலம் அது. ஆனால் அதே செல்வந்த மாநிலம்தான், ஒவ்வொரு ஆண்டும் GST வரி வருவாயில் தேவைக்கும் அதிகமான பங்கைப் பெறுகிறது என்றால் நம்புவீர்களா? நாட்டின் சுதந்திரமான பொருளாதார ஆலோசனை அமைப்பான உற்பத்தித்திறன் ஆணையம் - Productivity Commission – இதனை வெளிப்படையாகவே 'விலையுயர்ந்...

சிறிய பொம்மைகளால் Woolworths விற்பனை அதிகரித்ததும், Coles விற்பனை மந்தமடைந்ததும் எப்படி? 27.08.2026

Woolworths சமீபத்தில் Disney Ooshies பொம்மைகளை வழங்கியபோது, பல குடும்பங்களின் பொருட்கள் வாங்கும் பழக்கத்தை மாற்றிக்கொண்டனர். இந்த சிறிய பொம்மைகள் Super Market பொருட்கள் விற்பனையில் ஏற்படுத்திய தாக்கம் குறித்த தகவலை முன்வைக்கிறார் றைசெல். How collectible toys boosted Woolworths sales but slowed Coles

இன்றைய செய்திகள்: 27 ஆகஸ்ட் 2026 - வியாழக்கிழமை 27.08.2026

SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வியாழக்கிழமை 27/08/2026) செய்திகள். வாசித்தவர் குலசேகரம் சஞ்சயன்.

ஆஸ்திரேலியா அறிவோம்: உலக ஏழு அதிசயங்களில் ஒன்று பவளப்பாறை! 26.08.2026

உலகின் ஏழு இயற்கை அதிசயங்களில் ஒன்று என்றும், சீனப் பெருஞ்சுவரை விடவும் பெரியது என்றும், விண்வெளியிலிருந்து பார்த்தாலும் தெரியக்கூடிய அளவு பெரியதுமான “வாழும் அதிசயம்” என்று பல பெருமைகளுக்குரியது ஆஸ்திரேலியாவின், குயின்ஸ்லாந்து மாநிலத்திலுள்ள Great Barrier Reef எனப்படும் பேரரண் பவளப்பாறைத் திட்டு (Great Barrier Reef). இது குறித்த அரிய தகவல்களை “நம்ம ஆஸ்திரேலியா” நிகழ்ச்சி மூலம் முன்வைக்கிறார் கீதா...

ஆஸ்திரேலியாவில் தற்காலிக விசா வைத்திருப்போர் எண்ணிக்கை 30 லட்சமாக அதிகரிப்பு 26.08.2026

ஆஸ்திரேலியாவில் 25 முதல் 29 வயதுக்குட்பட்டவர்களில் சுமார் மூன்றில் ஒருவர் தற்காலிக விசா வைத்திருப்பதாக புதிய ஆய்வுத் தகவல் ஒன்று தெரிவிக்கிறது. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.

Słuchaj podcastu SBS Tamil - SBS தமிழ் w Replaio

Radio i podcasty w jednej aplikacji - za darmo, bez zakładania konta. Zainstaluj już dziś i nie przegap premiery

Pobierz z Google Play

Replaio nie jest wydawcą podcastów; nazwy audycji, okładki i audio należą do ich autorów i są rozpowszechniane przez publiczne kanały RSS