SBS
SBS Tamil - SBS தமிழ்
Independent news and stories from SBS Audio, connecting you to life in Australia and Tamil-speaking Australians. - தமிழ் பேசும் ஆஸ்திரேலியர்களுடனும், ஆஸ்திரேலிய வாழ்க்கையுடனும் இணைய உங்களுக்கு உதவும் பக்கசார்பற்ற செய்திகள் மற்றும் கதைகள்.
Koniecznie odwiedź stronę podcastu i wesprzyj twórcę: www.sbs.com.au
Gdzie słuchać?
Podcasty w aplikacji Replaio Radio Już wkrótcePodcasty trafią do aplikacji już wkrótce. Zainstaluj teraz i jako pierwszy zobacz nowe podejście do podcastów
Odcinki
ஆஸ்திரேலிய அரசின் கடன் ஒரு டிரில்லியனாக ($1000 பில்லியன்) உயர்ந்தது! நாடு கடனில் மூழ்குகிறதா? 20.08.2026 3:05
ஆஸ்திரேலிய ஃபெடரல் அரசின் மொத்தக் கடன் – அதாவது gross debt, முதல் முறையாக ஒரு டிரில்லியன் டாலர் அளவை கடந்துள்ளது. இது குறித்த தகவலை முன்வைக்கிறார் றைசெல். Australian government debt rises to one trillion ($1000 billion) dollars!
விக்டோரியர்களுக்கு வாரத்திற்கு $50 Toll கட்டண உச்சவரம்பு – லிபரல் கட்சியின் தேர்தல் வாக்குறுதி 20.08.2026 2:24
விக்டோரியா மாநிலத் தேர்தலில் வெற்றி பெற்றால், வாகனங்களுக்கான Toll கட்டணத்தை வாரத்திற்கு $50 ஆகக் கட்டுப்படுத்தும் திட்டத்தை லிபரல் கட்சி அறிவித்துள்ளது.இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.
பெற்றோர் விசாவிற்கான காத்திருப்பு: 21 மாதங்களில் 1500 பேர் விசா கிடைக்க முன்பே மரணம் 20.08.2026 2:46
ஆஸ்திரேலியாவுக்கான பெற்றோர் விசா பரிசீலனை முறையில் நிலவும் நீண்டகால காத்திருப்பு குடும்பங்களை கடுமையாக பாதித்து வருவதாக குடிவரவு முகவர்கள் மற்றும் விண்ணப்பதாரர்கள் தெரிவிக்கின்றனர். இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.
சமையல் நன்றாக வருவதன் ரகசியம் என்ன? - Chef தாமு பதில் 20.08.2026 14:20
தமிழகத்தின் புகழ் மிக்க சமையல்கலைஞர்களில் ஒருவர் தாமு அவர்கள். சமையல் துறையில் முனைவர் பட்டம் பெற்றுள்ள தாமு அவர்கள் சமயல் துறையில் தனது பயணம் மற்றும் சவால்கள் குறித்து உரையாடுகிறார். அவரோடு உரையாடியவர் செல்வி இன்பசேகரன். இந்நிகழ்ச்சி ஒரு மறு ஒலிபரப்பு Interview with Chef Damu
சிகரெட் விலையைக் குறைக்கக் கோருவது நியாயமா? 20.08.2026 10:10
நம் நாட்டில், ஒரு (packet cigarette) பாக்கெட் சிகரெட்டின் சட்டப்பூர்வ விலை இன்று 40 டொலரையும் தாண்டி, சில குறிப்பிட்ட சிகரெட்டுகள் 60 டொலரை நெருங்குகிறது. இதில் பெரும்பகுதி அரசு விதிக்கும் excise என்னும் புகையிலை வரிதான். இந்த அதிக வரிதான் கருப்புச் சந்தை சிகரெட் வர்த்தகத்தை வளர்த்துவிட்டது என்று வாதிடும் One Nation கட்சி, அந்த வரியை 75 சதவீதம் குறைக்கக் கோருகிறது. இந்த யோசனை நாடு முழுவதும் பரபரப்...
Dry eye-கண்கள் உலர்வாக இருப்பது ஆபத்தானதா? 20.08.2026 11:41
Dry eye என்பது எல்லோரையும் பாதிக்கக்கூடிய ஒன்று. இது ஏன் ஏற்படுகிறது என்பது பற்றியும் இதனால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் பற்றியும் விளக்கமளிக்கிறார் மெல்பனைச் சேர்ந்த கண் மருத்துவ நிபுணர் ராஜ் பத்மராஜ் அவர்கள். அவரோடு உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.
இன்றைய செய்திகள்: 20 ஆகஸ்ட் 2026 - வியாழக்கிழமை 20.08.2026 4:31
SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வியாழக்கிழமை 20/08/2026) செய்திகள். வாசித்தவர் குலசேகரம் சஞ்சயன்.
பத்தாம் ஆண்டு நினைவலைகளில் நா. முத்துக்குமார்: சிறப்பு நேர்காணலின் மீள் பதிவு 19.08.2026 13:02
பத்து ஆண்டுகளுக்கு முன்பு, தமிழ் திரையுலகம் மிகச்சிறந்த நவீன கவிஞர்களில் ஒருவரான நா. முத்துக்குமார் அவர்களை இழந்தது. 1,500-க்கும் மேற்பட்ட பாடல்கள் வழியே, தந்தை பாசத்தின் கதகதப்பு முதல் காதலின் இனிமையான வலி வரை நமது ஆழமான உணர்வுகளுக்கு எளிய வடிவில் உயிர் கொடுத்தவர் அவர். அவரது பத்தாம் ஆண்டு நினைவை நினவுகூரும் இந்நாளில், அவரின் சிறப்பு நேர்காணலை உங்களோடு மீண்டும் பகிர்ந்து, காலத்தால் அழியாத அவரின்...
சட்டவிரோத குடிவரவு ஆலோசனை வழங்கிய முகவர்கள் மீது அரசு கடும் நடவடிக்கை! 19.08.2026 3:06
ஆஸ்திரேலியாவில் சட்டவிரோதமாக குடிவரவு ஆலோசனை வழங்கும் முகவர்களுக்கு எதிராக அதிகாரிகள் நடவடிக்கையை தீவிரப்படுத்தியுள்ளனர்.இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.
விக்டோரியாவில் காளான் உணவால் மூவர் கொல்லப்பட்ட வழக்கு: Erin Patterson மீண்டும் நீதிமன்றத்தில்! 19.08.2026 3:01
நச்சுக் காளான் கறி மூலம் மூவர் கொலைசெய்யப்பட்ட வழக்கில் சிறைவைக்கப்பட்ட Erin Patterson மீண்டும் நீதிமன்றில் முன்னிலையாகிறார். இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.
நகைச்சுவை முதல் வில்லத்தனம் வரை – வி.கே. ராமசாமி நூற்றாண்டு 19.08.2026 10:30
தமிழ்த் திரையுலகில் அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக தனக்கென தனி முத்திரை பதித்தவர் வி.கே. ராமசாமி. 21 வயதிலேயே 60 வயது முதியவராக திரையில் தோன்றி அசத்திய அவர், நகைச்சுவை, குணச்சித்திரம், வில்லன் என பல்வேறு பாத்திரங்களில் நான்கு தலைமுறை நடிகர்களுடன் நடித்தவர். அவரது பிறந்த நூற்றாண்டில், வி.கே.ஆரின் திரைப்பயணத்தை நினைவுகூர்கிறார் சுமார் நாற்பது ஆண்டுகால பத்திரிகை அனுபவம் கொண்ட ஊடகவியலாளர் ச.சுந்தரதாஸ் அவ...
டார்வினில் முதல் முறையாக தமிழர் மரபுக் கொண்டாட்டம்! 19.08.2026 7:20
Northern Territory தலைநகர் டார்வின் நகரில் முதன்முறையாக தமிழ் மரபுத் திருவிழா (Tamil Heritage Festival) நடைபெறுகிறது. தமிழர்களின் மொழி, கலை, இசை, நடனம், உணவு, வரலாறு என நமது மரபின் பல்வேறு அம்சங்களை ஒரே இடத்தில் கொண்டாடும் இவ்விழா குறித்து நம்முடன் கலந்துரையாடுகின்றனர் டார்வின் நகரில் இயங்கும் Northern Territory தமிழ் சங்கத்தின் தலைவர் கவிதாசன் விவேகானந்தன் மற்றும் தமிழ் வேந்தன் சதாசிவம் ஆகியோர்....
வேலை விடுமுறை வீசா மந்தநிலை - கட்சிகளிடையே பிளவு! 19.08.2026 8:41
ஆஸ்திரேலியாவின் குடிவரவுக் கொள்கையில் மீண்டும் ஒரு சூடான விவாதம். இந்த முறை "வேலை விடுமுறை வீசா", பொதுவாக “Backpacker வீசா" என்று அழைக்கப்படும் வீசா மீது கவனம் திரும்பியுள்ளது. இந்த வீசா விண்ணப்பங்களை, முன்பை விட மெதுவாகச் செயலாக்கப் போவதாக அரசு உறுதிப்படுத்தியுள்ளது. ஆனால் இந்த நடவடிக்கை எதிர்க்கட்சிகளிடையே பெரும் பிளவை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்த செய்தியின் பின்னணியை எடுத்து வருகிறார் குலசேகர...
இன்றைய செய்திகள்: 19 ஆகஸ்ட் 2026 புதன்கிழமை 19.08.2026 5:14
SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (புதன்கிழமை 19/07/2026) செய்திகள். வாசித்தவர்: றைசெல். Today's Top News (19 August 2026 – Wednesday)
இலங்கையின் காலநிலை மாற்றமும் அதன் கடுமையான தாக்கமும் 18.08.2026 8:33
இலங்கையின் பல மாவட்டங்களில் எல் நினோ காலநிலையின் தாக்கம் காரணமாக பெரும் வறட்சி ஏற்பட்டுள்ளது. குடிநீருக்கு பெருந்தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதுடன் விவசாய நடவடிக்கைகளும் பாதிப்பிற்குளாகியுள்ளது. இது தொடர்பில் “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சியை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன். Climate change in Sri Lanka and its severe impact - A report
ஆஸ்திரேலியாவில் விளையும் வெள்ளை ஸ்ட்ராபெர்ரிகள் – சுவைத்துப் பார்த்திருக்கிறீர்களா? 18.08.2026 3:13
சிவப்பு நிறத்தில் மட்டுமே கிடைத்து வந்த இனிப்பு, சாறுமிக்க ஸ்ட்ராபெர்ரிகள் தற்போது வெள்ளை மற்றும் இளஞ்சிவப்பு நிறங்களிலும் ஆஸ்திரேலியாவில் வணிக ரீதியாக விளைவிக்கப்படுகின்றன.இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.
50 வயதை எட்டும் ஆஸ்திரேலியர்களுக்கு அரசு அனுப்பும் கடிதம் 18.08.2026 2:38
டிமென்ஷியா அபாயத்தைக் குறைக்க, 50 வயதிலேயே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் தொடங்க வேண்டும் என ஆஸ்திரேலிய அரசு வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.
இன்றைய செய்திகள்: 18 ஆகஸ்ட் 2026 - செவ்வாய்க்கிழமை 18.08.2026 4:31
SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (செவ்வாய்க்கிழமை 18/08/2026) செய்திகள். வாசித்தவர் : செல்வி இன்பசேகரன். Today's highlights ( 18 August 2026 - Tuesday)
Whose responsibility is it to prevent hateful content on social media? - SBS Examines : சமூக ஊடகங்களில் வெறுப்புப் பேச்சு - பொறுப்பு யாருடையது? 17.08.2026 11:08
Social media companies have had to explain to the Royal Commission on Antisemitism and Social Cohesion how they moderate harmful content on their platforms. But experts say we still don't know the full picture. - யூத எதிர்ப்பு மற்றும் சமூக ஒற்றுமை தொடர்பான ராயல் கமிஷன் விசாரணையில், தங்களது தளங்களில் தீங்கு விளைவிக்கும் உள்ளடக்கங்களை எவ்வாறு கண்காணித்து கட்டுப்படுத்தப்படுகின்றன என்பது குறித்து சமூக...
விக்டோரிய காவல்துறையில் தமிழ்ப் பெண்: விதுஷா துஷ்யந்தனின் பயணம் 17.08.2026 16:43
மெல்பனைச் சேர்ந்த தமிழ்ப்பெண் விதுஷா துஷ்யந்தன் விக்டோரிய காவல்துறையில் இணைந்து பணியாற்றிவருகிறார். அவரது காவல்துறை பயணம் குறித்து விதுஷாவோடு உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம். விக்டோரிய காவல்துறை அதிகாரி ராஜேஷ் சாம்பமூர்த்தியும் இந்த உரையாடலில் பங்கேற்கிறார்.
Partner விசா கட்டணத்தில் மாற்றங்கள்: விண்ணப்பதாரர்கள் கவனிக்க வேண்டியது என்ன? 17.08.2026 12:51
Partner visa துணைவர் விசா கட்டணங்கள் ஜீலை 1ஆம் தேதி முதல் உயர்த்தப்பட்டுள்ளன. இந்த அதிகரிப்பினால் ஏற்படும் பாதிக்கப்புகள் குறித்தும் துணைவர் விசா சமர்ப்பிக்கும் போதும் சமர்ப்பித்த பிறகும் கவனிக்க வேண்டிய முக்கிய விடயங்கள் குறித்தும் விளக்குகிறார் பல ஆண்டுகள் அனுபவம் கொண்ட குடிவரவு முகவர் ஆறுமுகம் திருவேங்கடம் அவர்கள். அவரோடு உரையாடுகிறார் செல்வி இன்பசேகரன். Changes to Partner Visa fees: What appli...
இன்றைய செய்திகள்: 17 ஆகஸ்ட் 2026 - திங்கட்கிழமை 17.08.2026 4:38
SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (திங்கட்கிழமை 17/08/2026) செய்திகள். வாசித்தவர் றேனுகா துரைசிங்கம்.
40 ஆண்டு வீட்டுக் கடன்: இன்று சுமை குறையும், நாளை செலவு கூடுமா? 17.08.2026 7:52
ஆஸ்திரேலியாவில் பொதுவாக வீட்டுக் கடன்கள் 30 ஆண்டுகள் வரை வழங்கப்படுகின்றன. ஆனால் கடந்த சில ஆண்டுகளில், சில சிறிய வங்கிகள் மற்றும் கடன் வழங்கும் நிறுவனங்கள் 40 ஆண்டு கால வீட்டுக் கடன்களை அறிமுகப்படுத்தியுள்ளன. இது குறித்த செய்தியின் பின்னணியை எடுத்து வருகிறார் செல்வி இன்பசேகரன். 40 year home loans: Lower repayments today, Higher costs tomorrow?
இந்தியா & தமிழ்நாடு: கடந்த 7 நாட்கள் செய்திகளின் தொகுப்பு 16.08.2026 9:34
சுதந்திர தின விழாவில் கோட்டையில் முதல் முறையாக கொடி ஏற்றிய முதலமைச்சர் விஜய்; “போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு” மாநில அளவிலான உறுதிமொழி ஏற்பு மற்றும் விழிப்புணர்வு இயக்கம்; முதலமைச்சர் விஜய் குறித்து அவதூறாக பேசிய விவகாரம் - நயினார் நாகேந்திரன் மீது புகார்; உள்ளிட்ட செய்திகளோடு "செய்திகளின் பின்னணி" நிகழ் India & Tamil Nadu: News highlights from the past 7 days
இந்த வார ஆஸ்திரேலிய செய்திகள் (9 - 15 ஆகஸ்ட் 2026) 14.08.2026 6:07
ஆஸ்திரேலியாவின் இந்த வார (9 - 15 ஆகஸ்ட் 2026) முக்கிய செய்திகளின் தொகுப்பு. வாசித்தவர்: றைசெல். Top news from Australia this week (9 - 15 August 2026)
Podobne podcasty
Replaio nie jest wydawcą podcastów; nazwy audycji, okładki i audio należą do ich autorów i są rozpowszechniane przez publiczne kanały RSS