SBS

SBS Tamil - SBS தமிழ்

News TA ↓ Odcinki: 2612

Independent news and stories from SBS Audio, connecting you to life in Australia and Tamil-speaking Australians. - தமிழ் பேசும் ஆஸ்திரேலியர்களுடனும், ஆஸ்திரேலிய வாழ்க்கையுடனும் இணைய உங்களுக்கு உதவும் பக்கசார்பற்ற செய்திகள் மற்றும் கதைகள்.

Koniecznie odwiedź stronę podcastu i wesprzyj twórcę: www.sbs.com.au

Autor

SBS

Kategoria

News

Strona podcastu

www.sbs.com.au

Ostatni odcinek

15 paź 2026

Gdzie słuchać?

Podcasty w aplikacji Replaio Radio Już wkrótce

Podcasty trafią do aplikacji już wkrótce. Zainstaluj teraz i jako pierwszy zobacz nowe podejście do podcastów

Pobierz z Google Play Zainstaluj za darmo Android prawie 10 mln pobrań · ocena 4,8 iOS niedługo

Odcinki

இன்றைய செய்திகள்: 17 ஆகஸ்ட் 2026 - திங்கட்கிழமை 17.08.2026

SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (திங்கட்கிழமை 17/08/2026) செய்திகள். வாசித்தவர் றேனுகா துரைசிங்கம்.

40 ஆண்டு வீட்டுக் கடன்: இன்று சுமை குறையும், நாளை செலவு கூடுமா? 17.08.2026

ஆஸ்திரேலியாவில் பொதுவாக வீட்டுக் கடன்கள் 30 ஆண்டுகள் வரை வழங்கப்படுகின்றன. ஆனால் கடந்த சில ஆண்டுகளில், சில சிறிய வங்கிகள் மற்றும் கடன் வழங்கும் நிறுவனங்கள் 40 ஆண்டு கால வீட்டுக் கடன்களை அறிமுகப்படுத்தியுள்ளன. இது குறித்த செய்தியின் பின்னணியை எடுத்து வருகிறார் செல்வி இன்பசேகரன். 40 year home loans: Lower repayments today, Higher costs tomorrow?

இந்தியா & தமிழ்நாடு: கடந்த 7 நாட்கள் செய்திகளின் தொகுப்பு 16.08.2026

சுதந்திர தின விழாவில் கோட்டையில் முதல் முறையாக கொடி ஏற்றிய முதலமைச்சர் விஜய்; “போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு” மாநில அளவிலான உறுதிமொழி ஏற்பு மற்றும் விழிப்புணர்வு இயக்கம்; முதலமைச்சர் விஜய் குறித்து அவதூறாக பேசிய விவகாரம் - நயினார் நாகேந்திரன் மீது புகார்; உள்ளிட்ட செய்திகளோடு "செய்திகளின் பின்னணி" நிகழ் India & Tamil Nadu: News highlights from the past 7 days

இந்த வார ஆஸ்திரேலிய செய்திகள் (9 - 15 ஆகஸ்ட் 2026) 14.08.2026

ஆஸ்திரேலியாவின் இந்த வார (9 - 15 ஆகஸ்ட் 2026) முக்கிய செய்திகளின் தொகுப்பு. வாசித்தவர்: றைசெல். Top news from Australia this week (9 - 15 August 2026)

பணத்திற்கு விற்கப்படும் demerit புள்ளிகள்: அபராதம் எவ்வளவு தெரியுமா? 14.08.2026

பணம்பெற்றுக்கொண்டு யாரென்றே தெரியாத ஒருவரின் demerit புள்ளிகளை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கை ஒரு பெரிய வியாபாரமாக ஆஸ்திரேலியாவில் வளர்ந்துகொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கான தண்டனை என்ன தெரியுமா? இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.

What are my rights if stopped by police in Australia? - காவல்துறை அதிகாரமும், உங்கள் உரிமைகளும் – தெரிந்துகொள்ள வேண்டியது என்ன? 14.08.2026

Police officers have a range of operational powers they can exercise under legislation, including to ask questions, give ‘move on’ directions and conduct searches. Here’s what you need to know about your basic rights and obligations in a police interaction. - நீங்கள் காவல்துறையினரால் ஒரு பொது இடத்தில் நிறுத்தப்படும்போது அல்லது வாகனம் ஓட்டும்போது தடுத்து நிறுத்தப்படும் சந்தர்ப்பங்களில், உங்களுக்கு...

Binding Death Benefit Nomination: உங்கள் Super பணம் யாருக்குச் செல்லும்? 14.08.2026

Superannuation என்பது நம்முடைய எதிர்காலத்திற்காக சேமிக்கும் முக்கியமான தொகை. ஆனால், ஒருவர் உயிரிழந்த பிறகு அந்தப் பணம் யாருக்குச் செல்லும் என்பது பலருக்கும் தெரியாமல் இருக்கலாம். இதுதொடர்பான Binding Death Benefit Nomination மற்றும் அதன் விதிமுறைகள் குறித்த செய்தியின் பின்னணியை எடுத்து வருகிறார் சரண்யா பாலகிருஷ்ணன்.

ஆஸ்திரேலியாவில் புற்றுநோய் விழிப்புணர்வில் 10 ஆண்டுகள் – Pink Sari-யின் பயணம் 14.08.2026

Pink Sari Inc என்பது ஆஸ்திரேலியாவில் வாழ்கின்ற தெற்காசியப் பின்னணியைச் சேர்ந்த புற்றுநோயாளிகள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு ஆதரவு வழங்கும் ஒரு சமூக அமைப்பு. தெற்காசிய மக்களுக்கான தனது சேவையில் பத்து ஆண்டுகளை கொண்டாடும் Pink Sari Inc அமைப்பு குறித்த விவரணம். இந்த சிறப்பு நிகழ்ச்சியில், Pink Sari அமைப்பின் தலைவர் சாந்தா விஸ்வநாதன், துணைத் தலைவர் Dr ருக்மணி வெங்கட்ராமன், Public Officer விஜய் தயா...

இன்றைய செய்திகள்: 14 ஆகஸ்ட் 2026 - வெள்ளிக்கிழமை 14.08.2026

SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வெள்ளிக்கிழமை 14/08/2026) செய்திகள். வாசித்தவர் : செல்வி இன்பசேகரன்.

இலங்கை: இந்த வார முக்கிய செய்திகள் 13.08.2026

இந்திய இலங்கை மீனவர் பிரச்சினைக்கு தீர்வு காண மீண்டும் ஒரு பேச்சுவார்த்தை; இலங்கையின் நீதித்துறை சீர்திருத்தங்களை உள்ளடக்கிய 22வது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் பல்வேறு வாதப்பிரதிவாதங்கள் உள்ளிட்ட செய்திகளோடு “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சிக்காக விவரணமொன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன். Top news from Sri Lanka this week (9 - 14 August)

NSW அரசு 250 டாலர்களுக்கு புதிய Washing Machine வழங்குகிறது! 13.08.2026

வாழ்க்கைச் செலவு நெருக்கடிக்கு உதவும்வகையில் 250 டாலர்களுக்கு புதிய Washing Machine-சலவை இயந்திரத்தை வழங்கும் திட்டத்தின் புதிய சுற்று தற்போது திறக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.

தோள்மூட்டு வலி எதனால் ஏற்படுகிறது? தவிர்ப்பது எப்படி? 13.08.2026

நம்மில் பலர் தோள்மூட்டு வலியை அனுபவித்திருப்போம் அல்லது அனுபவித்துக் கொண்டிருப்போம். இது ஏற்படுவதற்கான காரணம் என்ன? இதை எப்படித் தவிர்க்கலாம் என்பது பற்றி விளக்கமளிக்கிறார் எலும்பு முறிவு சத்திரசிகிச்சை நிபுணர் கனகரட்ணம் காண்டீபன் அவர்கள். அவருடன் உரையாடுபவர் றேனுகா துரைசிங்கம்.

ஒட்டகம் ஆஸ்திரேலிய விலங்கல்ல, ஆனால் காட்டு ஒட்டகம் அதிகம் வாழும் நாடானது எப்படி? 13.08.2026

ஆஸ்திரேலிய தேசத்தில் வாழ வந்த ஐரோப்பியர்கள் தங்களுடைய வசதிக்காக இங்கு அறிமுகப்படுத்திய அயல் மண்ணின் உயிரினங்களும் தாவரங்களும் அநேகம். ஆடு மாடு, குதிரை,கழுதை, எருமை, ஒட்டகம், நரி, நாய், பூனை, எலி, பன்றி, மான், முயல், மைனா, எறும்பு, தவளை என பலவித உயிரினங்களும், லாண்டானா, மதீரா, பிட்டூ, ரப்பர் கொடி போன்ற தாவரவினங்களும் என்று அந்த பட்டியல் நீள்கிறது. இந்த தகவலையும், அந்த தகவலின் பின்னாலிருக்கும் அவலங்...

கார் இன்சூரன்ஸ் கட்டணம் ஏன் இவ்வளவு உயர்கிறது? நீண்டகால வாடிக்கையாளர்களுக்கு சலுகை கிடைக்கிறதா? 13.08.2026

நாம் ஓட்டும் வாகனத்தின் மதிப்பு ஆண்டுதோறும் குறைந்தாலும், இன்சூரன்ஸ் பிரிமியம் மட்டும் ஏன் தொடர்ந்து உயர்கிறது? நீண்டகாலமாக ஒரே இன்சூரன்ஸ் நிறுவனத்தில் இருப்பவர்களுக்கு உண்மையில் சலுகை கிடைக்கிறதா? கார் இன்சூரன்ஸ் கட்டண உயர்வின் காரணங்களை ஆராயும் செய்தி விவரணத்தை முன்வைக்கிறார் றைசெல். Why are car insurance premiums rising so much? Do long-term customers get a better deal?

நர்த்தகியாகி கலை உலகில் சாதித்த நடராஜ் 13.08.2026

புகழ் பெற்ற பத்மஸ்ரீ , நிருத்திய சூடாமணி, கலைமாமணி தமிழிசை பரதநாட்டிய கலைஞர் திருநங்கை நர்த்தகி நடராஜ் அவர்கள் தான் நடராஜாக பிறந்திருந்தாலும் தன்னுள் இருந்த பெண்மையை உணர்ந்து அதனை நாட்டிய கலையாக வடிகால் செய்து இன்று உலகம் போற்றும் தனித்துவமான தஞ்சாவூர் பாணி பரதநாட்டியத்திலும் தமிழிசை நடனத்திலும் புகழ் பெற்று திகழ்கிறார். அவர் தான் எதிர்கொண்ட பிரச்சனைகள், தடைகள், சவால்கள் முதலியவற்றை மனம் திறந்து ந...

இன்றைய செய்திகள்: 13 ஆகஸ்ட் 2026 - வியாழக்கிழமை 13.08.2026

SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வியாழக்கிழமை 13/08/2026) செய்திகள். வாசித்தவர் குலசேகரம் சஞ்சயன்.

உரிமை கோரப்படாத பல மில்லியன் டாலர்கள்: உங்கள் பங்கும் இருக்கலாம் 12.08.2026

கிட்டத்தட்ட 10 லட்சம் ஆஸ்திரேலியர்கள், Medicare-ரிட மிருந்து கிடைக்க வேண்டிய $274.5 மில்லியன்களை இன்னும் பெறாமல் உள்ளனர். இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.

ஆஸ்திரேலியாவின் உணவு delivery பணியாளர்களுக்கு சம்பள உயர்வு 12.08.2026

ஆஸ்திரேலியாவின் உணவு டெலிவரி பணியாளர்களுக்கு நன்மையளிக்கும் வகையில் புதிய விதிமுறைகளை Fair Work Commission அறிவித்துள்ளது. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.

தமிழ்க் கதைகள், AI, இளைய தலைமுறை, அடுத்த இலக்கு – கதை சொல்லி கவிதாவின் பகிர்வு 12.08.2026

தமிழ்நாட்டைச் சேர்ந்த கவிதா ஜீவா அவர்கள் மிகவும் பிரபலமான Podcaster மற்றும் YouTuber. பொறியாளரான இவர், தனது பிரபலமான கதை போட்காஸ்ட் (Kadhai Podcast) மூலம் தமிழ் கதை சொல்லியாக டிஜிட்டல் உலகில் தனித்துவமான இடத்தைப் பிடித்துள்ளார். தமிழ் இலக்கியம், வரலாறு மற்றும் பல்வேறு வகையான கதைகளை மையமாகக் கொண்டு நூற்றுக்கணக்கான Podcast-களை வெளியிட்டுள்ள கவிதா, தமிழ் கதை சொல்லும் மரபை புதிய தலைமுறை டிஜிட்டல் நேயர...

அம்மா விதைத்த கதை விதை: உலகத் தமிழர்களை சென்றடைந்த கதை சொல்லி கவிதா 12.08.2026

தமிழ்நாட்டைச் சேர்ந்த கவிதா ஜீவா அவர்கள் மிகவும் பிரபலமான Podcaster மற்றும் YouTuber. பொறியாளரான இவர், தனது பிரபலமான கதை போட்காஸ்ட் (Kadhai Podcast) மூலம் தமிழ் கதை சொல்லியாக டிஜிட்டல் உலகில் தனித்துவமான இடத்தைப் பிடித்துள்ளார். தமிழ் இலக்கியம், வரலாறு மற்றும் பல்வேறு வகையான கதைகளை மையமாகக் கொண்டு நூற்றுக்கணக்கான Podcast-களை வெளியிட்டுள்ள கவிதா, தமிழ் கதை சொல்லும் மரபை புதிய தலைமுறை டிஜிட்டல் நேயர...

When can my teenager start work in Australia? - ஆஸ்திரேலியாவில் 18 வயதுக்கு உட்பட்டவர்கள் எப்போது வேலை செய்யத் தொடங்கலாம்? 12.08.2026

Teenagers in Australia can undertake paid work under certain restrictions, with general employment rights also protecting young workers. Here’s what you need to know as a parent or guardian of a worker under 18. - ஆஸ்திரேலியாவில், 18 வயதிற்கு கீழ் உள்ள குழந்தைகள் குறிப்பிட்ட நிபந்தனைகளில் சம்பள வேலை செய்யலாம். வேலை செய்யும் இடங்களில் உங்கள் பிள்ளை நியாயமாக நடத்தப்படுவதையும், அவர்களின் முதல் வேலை அ...

இன்றைய செய்திகள்: 12 ஆகஸ்ட் 2026 - புதன்கிழமை 12.08.2026

SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (புதன்கிழமை 12/08/2026) செய்திகள். வாசித்தவர் : சரண்யா பாலகிருஷ்ணன் Today's highlights ( 12 August 2026 - Wednesday)

இலங்கை சிறைகளில் தொடரும் வன்முறைகளுக்கு காரணம் என்ன? 11.08.2026

இலங்கையில் கடந்த ஐந்து வாரங்களில் சிறைச்சாலைகளில் ஏற்பட்ட மோதல்களில் 10 சிறை அதிகாரிகள் உட்பட 36 பேர் உயிரிழந்துள்ளதுடன், 163 பேர் வரையில் காயமடைந்துள்ளனர். இது தொடர்பில் “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன். Why are Sri Lanka's prisons exploding in violence?

நாட்டின் வட்டி வீதம் குறித்த அறிவிப்பை வெளியிட்டது ரிசர்வ் வங்கி! 11.08.2026

ஆஸ்திரேலியாவின் அதிகாரபூர்வ வட்டி வீதம் குறித்த தனது முடிவினை ரிசர்வ் வங்கி இன்று அறிவித்தது. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.

இன்றைய செய்திகள்: 11 ஆகஸ்ட் 2026 - செவ்வாய்க்கிழமை 11.08.2026

SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (செவ்வாய்க்கிழமை 11/08/2026) செய்திகள். வாசித்தவர் : செல்வி இன்பசேகரன். Today's highlights ( 11 August 2026 - Tuesday)

Słuchaj podcastu SBS Tamil - SBS தமிழ் w Replaio

Radio i podcasty w jednej aplikacji - za darmo, bez zakładania konta. Zainstaluj już dziś i nie przegap premiery

Pobierz z Google Play

Replaio nie jest wydawcą podcastów; nazwy audycji, okładki i audio należą do ich autorów i są rozpowszechniane przez publiczne kanały RSS