SBS

SBS Tamil - SBS தமிழ்

News TA ↓ Odcinki: 2614

Independent news and stories from SBS Audio, connecting you to life in Australia and Tamil-speaking Australians. - தமிழ் பேசும் ஆஸ்திரேலியர்களுடனும், ஆஸ்திரேலிய வாழ்க்கையுடனும் இணைய உங்களுக்கு உதவும் பக்கசார்பற்ற செய்திகள் மற்றும் கதைகள்.

Koniecznie odwiedź stronę podcastu i wesprzyj twórcę: www.sbs.com.au

Autor

SBS

Kategoria

News

Strona podcastu

www.sbs.com.au

Ostatni odcinek

16 paź 2026

Gdzie słuchać?

Podcasty w aplikacji Replaio Radio Już wkrótce

Podcasty trafią do aplikacji już wkrótce. Zainstaluj teraz i jako pierwszy zobacz nowe podejście do podcastów

Pobierz z Google Play Zainstaluj za darmo Android prawie 10 mln pobrań · ocena 4,8 iOS niedługo

Odcinki

நாட்டின் வட்டி வீதம் குறித்த அறிவிப்பை வெளியிட்டது ரிசர்வ் வங்கி! 11.08.2026

ஆஸ்திரேலியாவின் அதிகாரபூர்வ வட்டி வீதம் குறித்த தனது முடிவினை ரிசர்வ் வங்கி இன்று அறிவித்தது. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.

இன்றைய செய்திகள்: 11 ஆகஸ்ட் 2026 - செவ்வாய்க்கிழமை 11.08.2026

SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (செவ்வாய்க்கிழமை 11/08/2026) செய்திகள். வாசித்தவர் : செல்வி இன்பசேகரன். Today's highlights ( 11 August 2026 - Tuesday)

NSW வாடகைதாரர்களுக்கு புதிய திட்டம் - வாடகை ஒப்பந்த முன்கட்டணம் (bond) இனி உங்களோடு கூடவே வரும் 10.08.2026

வீடு மாறுவது என்பது பல வாடகைதாரர்களுக்கு ஒரு பெரிய தலைவலி — குறிப்பாக, பழைய வீட்டின் ஒப்பந்த முன்கட்டணம் (bond) தொகை திரும்பி வருவதற்கு முன்பே, புதிய வீட்டுக்கு இன்னொரு ஒப்பந்த முன்கட்டணம் (bond) தொகையைக் கண்டுபிடிக்க வேண்டிய நிலை. நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் இந்த நிலையை மாற்றும் ஒரு புதிய திட்டம் இந்த வாரம் நடைமுறைக்கு வந்திருக்கிறது. அது குறித்த செய்தியின் பின்னணியை எடுத்து வருகிறார் குலசேகரம்...

குடும்ப வன்முறை வழக்கில் ரகசிய உரையாடல் பதிவு ஆதாரமாகுமா? 10.08.2026

குடும்ப வன்முறை வழக்கு ஒன்றில் ரகசியமாக பதிவு செய்யப்பட்ட உரையாடலை ஆதாரமாக பயன்படுத்துவது குறித்த முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பு ஒன்றை உயர் நீதிமன்றம் வழங்கியுள்ளது. இது குறித்த செய்தியை எடுத்து வருகிறார் செல்வி இன்பசேகரன். Secret recording admissible as evidence in Domestic Violence case

‘காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளைக் குணப்படுத்த அரங்கு ஒரு வழி’ - அ. மங்கை 10.08.2026

இந்தியாவின் சென்னையைச் சேர்ந்த, புகழ்பெற்ற இந்தியப் பெண்ணியவாதியும், நாடக இயக்குநரும், நாடக ஆசிரியரும், ஓய்வுபெற்ற ஆங்கில இலக்கியப் பேராசிரியருமான அ. மங்கை அவர்கள், கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற IFTR (International Federation for Theatre Research) சர்வதேச நாடக ஆராய்ச்சிக் கூட்டமைப்பின் மாநாட்டில் கலந்துகொண்டார். தாயகம் திரும்புவதற்கு முன்பு, அவர் சிட்னியில் சில நாட்கள் தங்கியிருந்தார். அந்த வாய்ப்பைப்...

ஆஸ்திரேலியாவில் மழை பெய்தும் தீராத தண்ணீர் பிரச்சனை ஏன்? 10.08.2026

ஆஸ்திரேலியாவில் சில பகுதிகளில் அதிகளவு மழை பெய்தாலும், நாட்டின் பல பகுதிகளில் தண்ணீர்த் தட்டுப்பாடு தொடர்ந்து ஒரு முக்கிய பிரச்சனையாகவே உள்ளது. குடிநீர் மற்றும் விவசாயத்திற்குத் தேவையான நீரைப் பெறுவதில் ஏன் இந்த சவால் நீடிக்கிறது? மழைநீரை நாம் போதுமான அளவு சேமிக்கிறோமா? இதற்கான நீண்டகாலத் தீர்வுகள் என்ன? இந்தக் கேள்விகளை ஆராய்ந்து விவரிக்கிறார் ஊடகத்துறையில் பல ஆண்டுகளாக பணியாற்றும் இரா.சத்தியநாதன...

இன்றைய செய்திகள்: 10 ஆகஸ்ட் 2026 - திங்கட்கிழமை 10.08.2026

SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (திங்கட்கிழமை 10/08/2026) செய்திகள். வாசித்தவர் குலசேகரம் சஞ்சயன்.

இந்தியா & தமிழ்நாடு: கடந்த 7 நாட்கள் செய்திகளின் தொகுப்பு 09.08.2026

தொகுதி மறுவரையறை மசோதாவிற்கு தமிழகத்தில் மீண்டும் எதிர்ப்பு; தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் இடையே கடும் விவாதம்; தவெக தலைமையிலான அரசின் முதல் நிதிநிலை அறிக்கை உள்ளிட்ட செய்திகளோடு "செய்திகளின் பின்னணி" நிகழ்ச்சிக்காக இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ். India & Tamil Nadu: News highlights from the past 7 days

Census 2026: பூர்த்தி செய்யாவிட்டால் அல்லது தவறான தகவல் தந்தால் அபராதம் எவ்வளவு? 09.08.2026

ஆஸ்திரேலியாவில் ஆகஸ்ட் 11 – எதிர்வரும் செவ்வாய்க்கிழமை நடைபெறும் மக்கள்தொகைக் கணக்கெடுப்பில் கலந்துகொள்ளத் தவறினால் அபராதம் விதிக்கப்படலாம் என்பது குறித்த தகவலை முன்வைக்கிறார் றைசெல். Census 2026: What are the penalties for non-compliance or false information?

இந்த வார ஆஸ்திரேலிய செய்திகள் (2 - 8 ஆகஸ்ட் 2026) 07.08.2026

ஆஸ்திரேலியாவின் இந்த வார (2 - 8 ஆகஸ்ட் 2026) முக்கிய செய்திகளின் தொகுப்பு. வாசித்தவர்: றைசெல். Top news from Australia this week (2 - 8 August 2026)

Census 2026: Why does the government ask these questions, and what happens to my personal details? - Census 2026: உங்கள் தகவல்கள் ஏன் சேகரிக்கப்படுகின்றன? 07.08.2026

Your answers won't impact your visa status, your child's education, or your rights in Australia — but they're important to help understand your community. - 2026 Census மக்கள் தொகை கணக்கெடுப்பில் நீங்கள் அளிக்கும் பதில்கள் உங்கள் விசா நிலை, உங்கள் குழந்தையின் கல்வி அல்லது ஆஸ்திரேலியாவில் உங்களுக்குள்ள உரிமைகள் மீது எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாது. ஆனால், உங்கள் சமூகத்தைப் பற்றி அரசு நன்றாகப் புரி...

Census-இல் சேகரிக்கப்படும் தகவல்கள் பாதுகாப்பாக இருக்குமா? 07.08.2026

ஆஸ்திரேலியாவில் 2026 Census மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆகஸ்ட் 11ஆம் தேதி நடைபெற உள்ளது. Census மூலம் சேகரிக்கப்படும் தனிப்பட்ட தகவல்கள் பாதுகாப்பாக இருக்குமா? இது குறித்த செய்தியின் பின்னணியை எடுத்து வருகிறார் செல்வி இன்பசேகரன். 2026 Census – Will the personal information collected in the Census be kept safe?

குழந்தைகளின் screen time குறித்து பெற்றோர் ஏன் அதிகம் கவலைப்படத் தேவையில்லை? 07.08.2026

குழந்தைகளின் Screen time குறித்து பெற்றோர் மத்தியில் நீண்ட காலமாக கவலை நிலவி வருகிறது. அதிக நேரம் டிஜிட்டல் சாதனங்கள் பயன்படுத்துவது குழந்தைகளின் வளர்ச்சியை பாதிக்குமா என்ற கேள்வியும் தொடர்ந்து எழுப்பப்பட்டு வருகிறது. இது குறித்த செய்தியின் பின்னணியை எடுத்து வருகிறார் சரண்யா பாலகிருஷ்ணன்.

What is the Garma Festival and why is it important? - Garma என்றால் என்ன? அது ஏன் முக்கியமானது? 07.08.2026

The Garma Festival is Australia’s largest Indigenous cultural gathering where thousands of people travel to a remote town in Nhulunbuy on northeast Arnhem Land in the Northern Territory. Here's what happens at Garma and who can attend. - ஒவ்வொரு ஆண்டும் செய்திகளில் Garma Festival குறித்த செய்திகளை நீங்கள் கேட்கலாம். குறிப்பாக, ஆஸ்திரேலிய அரசியல் தலைவர்கள் வடகிழக்கு Arnhem Land பகுதிக்கு சென்று இந்...

இன்றைய செய்திகள்: 07 ஆகஸ்ட் 2026 - வெள்ளிக்கிழமை 07.08.2026

SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வெள்ளிக்கிழமை 07/08/2026) செய்திகள். வாசித்தவர் : சரண்யா பாலகிருஷ்ணன் Today's highlights ( 07 August 2026 - Friday)

இலங்கை: இந்த வார முக்கிய செய்திகள் 06.08.2026

மத்திய மலைநாட்டு மாவட்டங்களில் சீரற்ற காலநிலையின் காரணமாக 8 பேர் உயிரிழந்ததோடு சுமார் 12 ஆயிரம் பேர் வரையில் பாதிக்கப்பட்டுள்ளார்கள்: ஒரு நாள் பயணமாக இலங்கை வந்திருந்த இந்திய வெளியுறவு செயலாளர் இலங்கை அதிபர், பிரதமர் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் உள்ளிட்ட பல்வேறு தலைவர்களை சந்தித்து பேசினார். இவை உள்ளிட்ட செய்திகளோடு “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சிக்காக விவரணமொன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தி...

ஆஸ்திரேலியாவின் எந்த விமான நிலையத்தில் அதிக விமான ஓடுபாதைகள் உள்ளன? 06.08.2026

ஆஸ்திரேலியாவின் எந்த விமான நிலையத்தில் அதிக விமான ஓடுபாதைகள் உள்ளன என்ற தகவலை முன்வைக்கிறார் றைசெல். Which airport in Australia has the most runways?

2026 Census: ஏன் தமிழ் அமைப்புகள் ஒரே குரலில் அழைப்பு விடுக்கின்றன? 06.08.2026

ஆஸ்திரேலியாவில் ஆகஸ்ட் 11 (செவ்வாய்க்கிழமை) Census - மக்கள்தொகைக் கணக்கெடுப்பு நடைபெறுகிறது. இது தொடர்பாக ஆஸ்திரேலிய தமிழ் சமூகத்தின் சமூகத் தலைவர்களில் ஒருவரான ஆறுமுகம் ராஜீவன் அவர்கள் நம்முடன் உரையாடுகிறார். நாடு முழுவதும் சுமார் 30 தமிழ் அமைப்புகள் இணைந்து முன்னெடுத்து வரும் 2026 மக்கள்தொகைக் கணக்கெடுப்பு விழிப்புணர்வு குறித்து ராஜீவனோடு உரையாடுகிறார் றைசெல். Rajeevan is a well-known Tamil comm...

இருள் விழுங்க இயலா இசையாளர் 06.08.2026

வைக்கம் விஜயலட்சுமி பிரபல திரைப்படப் பின்னணிப் பாடகியும் காயத்ரிவீணை எனும் அரியதோர் இசைக்கருவி இசைப்பதில் தேர்ந்தவரும் ஆவார். வைக்கம் விஜயலட்சுமி அவர்கள் 2017ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா வந்திருந்த வேளை தனது இசைப்பயணம் குறித்தும் தனிப்பட்ட வாழ்க்கை குறித்தும் குலசேகரம் சஞ்சயனுடன் மனம் திறந்து பேசியிருந்தார், அந்த நேர்காணலின் மறு ஒலிபரப்பு இது.

ஆரோக்கியமான உணவு பொருட்களை தெரிவு செய்ய சுலபமான வழி! 06.08.2026

கடைகளில் உணவு பொருட்கள் வாங்கும் போது நாம் கவனிக்க வேண்டிய விடயங்கள் மற்றும் பைகளில் அடைக்கப்பட்ட உணவு பொருட்களில் காணப்படும் Health Star Rating என்றால் என்ன? அதனை எப்படி நாம் பயன்படுத்தவேண்டும் என்பதனை விளக்குகிறார் உணவுமுறை நிபுணரான பிரியா ஐயர் அவர்கள். அவரோடு உரையாடுகிறார் செல்வி இன்பசேகரன். What is the purpose of the Health Star Rating on food packages?

ஆஸ்திரேலியாவின் குடிவரவுக் கொள்கையில் புதிய மாற்றம்! 06.08.2026

ஆஸ்திரேலியாவில் அதிகரித்து வரும் நிகர வெளிநாட்டு குடியேற்றத்தை கட்டுப்படுத்தும் வகையில், skilled visa விண்ணப்பங்களை பரிசீலிக்கும் நடைமுறையில் பெடரல் அரசு மாற்றங்களை கொண்டுவந்துள்ளது. இது குறித்த செய்தியின் பின்னணியை எடுத்து வருகிறார் செல்வி இன்பசேகரன். Australia introduces new immigration policy changes

இன்றைய செய்திகள்: 06 ஆகஸ்ட் 2026 - வியாழக்கிழமை 06.08.2026

SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வியாழக்கிழமை 06/08/2026) செய்திகள். வாசித்தவர் குலசேகரம் சஞ்சயன்.

Cabin Baggage விதிகளில் அதிரடி மாற்றம் அறிவித்துள்ள விமான நிறுவனம்! 06.08.2026

ஆஸ்திரேலியாவின் குறைந்த கட்டண விமான நிறுவனமான Jetstar, தனது விமானங்களில் பயணிகள் எடுத்துச் செல்லும் cabin baggage தொடர்பான விதிகளில் முக்கிய மாற்றத்தை அறிவித்துள்ளது. இது குறித்த செய்தியை எடுத்து வருகிறார் செல்வி இன்பசேகரன். Airline introduces new Cabin Baggage rules for passengers

இலக்கை அடைந்தார், உயிர் நீத்தார்! 05.08.2026

ஒரு அசாதாரணமான மனிதரின் கதை. 82 வயதில், ஆஸ்திரேலியா முழுவதும் சைக்கிளில் பயணித்து, ஒரு கொடிய நோயுடன் போராடுபவர்களுக்காகக் குரல் கொடுத்த Bob Montgomery அவர்களின் கதை. தைரியத்தின் கதை; தியாகத்தின் கதை; இறுதியில், இதயத்தைத் தொடும் ஒரு விடைபெறலின் கதையும் கூட. Bob Montgomery அவர்களின் பயணம் குறித்த கதையை எடுத்து வருகிறார் குலசேகரம் சஞ்சயன்.

வாய் துர்நாற்றத்தை தடுப்பது எப்படி? 05.08.2026

பல் சுகாதாரம் குறித்த விழிப்புணர்வு வாரம் ஆகஸ்ட் 3ஆம் தேதி முதல் 9ஆம் தேதி வரை கடைப்பிடிக்கப்படுகிறது. இந்தப் பின்னணியில் பல் சுகாதாரம் தொடர்பில் நமக்கு எழக்கூடிய சில முக்கியமான கேள்விகளுக்குப் பதிலளிக்கிறார் குயின்ஸ்லாந்தில் பல ஆண்டுகள் பல் மருத்துவராக பணியாற்றிவரும் ராஜி அவர்கள். அவரோடு உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.

Słuchaj podcastu SBS Tamil - SBS தமிழ் w Replaio

Radio i podcasty w jednej aplikacji - za darmo, bez zakładania konta. Zainstaluj już dziś i nie przegap premiery

Pobierz z Google Play

Replaio nie jest wydawcą podcastów; nazwy audycji, okładki i audio należą do ich autorów i są rozpowszechniane przez publiczne kanały RSS