SBS
SBS Tamil - SBS தமிழ்
Independent news and stories from SBS Audio, connecting you to life in Australia and Tamil-speaking Australians. - தமிழ் பேசும் ஆஸ்திரேலியர்களுடனும், ஆஸ்திரேலிய வாழ்க்கையுடனும் இணைய உங்களுக்கு உதவும் பக்கசார்பற்ற செய்திகள் மற்றும் கதைகள்.
Koniecznie odwiedź stronę podcastu i wesprzyj twórcę: www.sbs.com.au
Gdzie słuchać?
Podcasty w aplikacji Replaio Radio Już wkrótcePodcasty trafią do aplikacji już wkrótce. Zainstaluj teraz i jako pierwszy zobacz nowe podejście do podcastów
Odcinki
2026 Census: உங்கள் அடையாளமும், உங்கள் மொழியும் ஏன் முக்கியம்? 05.08.2026 17:49
நாட்டில் ஆகஸ்ட் 11 – எதிர்வரும் செவ்வாய்க்கிழமை நடைபெறும் – Census - மக்கள்தொகைக் கணக்கெடுப்பு குறித்து கலந்துரையாடுகின்றனர் தமிழ் சமூகத் தலைவர்களான திருநந்தகுமார், அனகன் பாபு மற்றும் ஐஸ்வர்யா ஆனந்த் ஆகியோர். ஒவ்வொருவரும் மக்கள்தொகைக் கணக்கெடுப்பில் பங்கேற்பது ஏன் அவசியம் என்பதையும், வீட்டில் பேசப்படும் மொழியாக தமிழை பதிவு செய்வதன் முக்கியத்துவத்தையும் அவர்கள் விவாதிக்கின்றனர். அவர்களோடு உரையாடுகி...
பறவைக் காய்ச்சல்: கோவிட்-19 பெருந்தொற்று போன்ற இன்னொரு அபாயமா? 05.08.2026 8:15
தெற்கு ஆஸ்திரேலியாவில் பறவைகளிடையே பெரும் உயிரிழப்புச் சம்பவம் உறுதிசெய்யப்பட்டதைத் தொடர்ந்து, பறவைக் காய்ச்சல் பரவுவதைத் தடுக்க முடியாது என்றும், குறிப்பிடத்தக்க இழப்புகள் தவிர்க்க முடியாதவை என்றும் ஃபெடரல் அரசு எச்சரித்துள்ளது. காட்டுப் பறவைகளால் ஏற்படும் தொற்று அபாயத்தைக் குறைப்பதற்காக, திறந்தவெளி முட்டை மற்றும் கோழி உற்பத்தியாளர்கள் தங்கள் கோழிகளை அடைத்து வைக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இத...
இன்றைய செய்திகள்: 5 ஆகஸ்ட் 2026 புதன்கிழமை 05.08.2026 5:08
SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (புதன்கிழமை 05/07/2026) செய்திகள். வாசித்தவர்: றைசெல். Today's Top News (5 August 2026 – Wednesday)
Census கணக்கெடுப்பு -ஏன் இது எமது சமூகத்துக்கு மிகவும் அவசியமானது? 04.08.2026 12:34
2026 Census -ஆஸ்திரேலிய மக்கள் தொகைக் கணக்கெடுப்பு ஆகஸ்ட் 11, செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது. இந்தக் கணக்கெடுப்பு ஏன் எமது சமூகத்துக்கு மிகவும் முக்கியமானது என எமது நேயர்களில் சிலர் தமது கருத்துகளை எம்முடன் பகிர்ந்துகொண்டனர். நிகழ்ச்சியாக்கம் மகேஸ்வரன் பிரபாகரன்.
இலங்கை: தமிழ், முஸ்லிம் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு வேண்டி பேச்சுவார்த்தை 04.08.2026 8:17
இலங்கையில் தமிழ், முஸ்லிம் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வு வேண்டி ஆறு கட்சிகளின் பிரதிநிதிகள், அதிபர் அநுர குமார திசாநாயக்க மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ ஆகியோரைச் சந்தித்து பேச்சுக்களை மேற்கொண்டார்கள். இது தொடர்பில் “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன். Sri Lanka: Talks sought to resolve the issues of Tamil and Muslim p...
தொழிற்சாலையில் தயாராகும் வீடுகள்: நாட்டின் வீட்டு நெருக்கடிக்கு புதிய தீர்வா? 04.08.2026 3:35
ஆஸ்திரேலியாவின் நீடித்து வரும் வீட்டு நெருக்கடிக்கு தீர்வு காண்பதுடன், நாட்டின் உற்பத்தித் துறையையும் மீண்டும் வலுப்படுத்த தொழிற்சாலையில் தயாரிக்கப்படும் வீடுகள் உதவக்கூடும் என புதிய ஆய்வறிக்கை ஒன்று தெரிவிக்கிறது. இது குறித்த செய்தியை எடுத்து வருகிறார் செல்வி இன்பசேகரன். Factory-Built homes: A new solution to Australia’s housing crisis?
இன்றைய செய்திகள்: 04 ஆகஸ்ட் 2026 - செவ்வாய்க்கிழமை 04.08.2026 4:33
SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (செவ்வாய்க்கிழமை 04/08/2026) செய்திகள். வாசித்தவர் : செல்வி இன்பசேகரன். Today's highlights ( 04 August 2026 - Tuesday)
விசா இல்லாமல் உலகை வலம் வரலாம்… எந்த நாட்டின் கடவுச்சீட்டு சக்தி வாய்ந்தது? 04.08.2026 3:00
விசா இல்லாமல் எத்தனை நாடுகளுக்குப் பயணம் செய்யலாம் என்பதன் அடிப்படையில் உலகின் சக்திவாய்ந்த கடவுச்சீட்டுகள் எவை என்ற புதிய பட்டியலை Henley & Partners நிறுவனம் வெளியிட்டுள்ளது.இதுகுறித்த செய்தியை எடுத்து வருகிறார் செல்வி இன்பசேகரன். Travel the world without a visa: Which country has the most powerful passport?
முடிவுக்கு வந்த வரிச் சலுகை... பெட்ரோல் விலை மீண்டும் உயருமா? 03.08.2026 3:35
ஆஸ்திரேலியாவில் வாகன ஓட்டிகளுக்கு வழங்கப்பட்டு வந்த எரிபொருள் வரிச் சலுகை (fuel excise cut) ஆகஸ்ட் 2 நள்ளிரவுடன் முடிவுக்கு வந்துள்ளது. இதனால் வரும் நாட்களில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் மீண்டும் அதிகரிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்த செய்தியை எடுத்து வருகிறார் செல்வி இன்பசேகரன். Fuel excise cut ends: What it means for petrol prices?
ஆஸ்திரேலியாவில் லாட்டரியில் அதிக பரிசுகளை வென்ற மாநிலம் எது தெரியுமா? 03.08.2026 2:29
ஆஸ்திரேலியாவில் கடந்த நிதியாண்டில் லாட்டரி அதிஷ்டலாபச் சீட்டு மூலம் கோடீஸ்வரர்களாக மாறியவர்களின் எண்ணிக்கையும், அதில் Divison One முதல் பிரிவு பரிசுகளை வென்ற பகுதிகளும் வெளியாகியுள்ளன. இது குறித்த செய்தியை எடுத்து வருகிறார் செல்வி இன்பசேகரன்.
அறிவியல் துறையில் அதி உயர் விருது பெற தேர்வாகியுள்ள தமிழர் 03.08.2026 11:35
ஆஸ்திரேலியாவின் முதன்மையான அறிவியல் விருதுகளில் ஒன்று, யூரேகா பரிசு. 19 பிரிவுகளில் ஆஸ்திரேலிய அருங்காட்சியகம் வழங்கும் யூரேகா பரிசுகளுக்கான இறுதிப் போட்டியில் 58 போட்டியாளர்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளனர். ஆஸ்திரேலிய அருங்காட்சியகத்தின் யூரேகா பரிசுகளின் வெற்றியாளர்கள் செப்டம்பர் 3ஆம் தேதி, வியாழக்கிழமை அன்று சிட்னி நகர மண்டபத்தில் நடைபெறும் விழாவில் அறிவிக்கப்படுவார்கள். இறுதிச் சுற்றிலுள்ள போட்டிய...
பூர்வீகக்குடி மக்களின் கலாச்சாரத் திருவிழா, Garma, என்றால் என்ன? 03.08.2026 9:41
ஒவ்வொரு ஆண்டும் ஆஸ்திரேலியாவின் வடக்கே அமைந்துள்ள Arnhem Land பகுதியில் நடைபெறும் Garma திருவிழா ஆஸ்திரேலியாவின் மிகப் பெரிய பூர்வீகக் குடிமக்களின் கலாச்சாரக் கூடமைப்பாகும். இந்த விழா Yolŋu மக்களின் வாழ்க்கை மற்றும் கலாச்சாரத்தை நான்கு நாட்கள் கொண்டாடும் முக்கிய நிகழ்வாக விளங்குகிறது. மேலும், பூர்வீகக் குடி மக்களைப் பாதிக்கும் சமூக, அரசியல் மற்றும் சுற்றுச்சூழல் பிரச்சினைகள் குறித்த உரையாடல்களுக்க...
இன்றைய செய்திகள்: 03 ஆகஸ்ட் 2026 - திங்கட்கிழமை 03.08.2026 4:49
SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (திங்கட்கிழமை 03/08/2026) செய்திகள். வாசித்தவர் குலசேகரம் சஞ்சயன்.
Stem cell : மருத்துவத்தின் எதிர்காலமா? தெரிந்துகொள்ள வேண்டிய உண்மைகள்! 02.08.2026 12:37
Stem cell (குருத்தணு) என்றால் என்ன, அதன் வகைகள், பயன்பாடுகள் மற்றும் குருத்தணு தானம் குறித்து விரிவாக உரையாடுகிறார் Royal North Shore மருத்துவமனையில் Haematologist-ஆக பணியாற்றும் டாக்டர் பூமகள் குமார் அவர்கள். அவரோடு உரையாடுகிறார் செல்வி இன்பசேகரன்.
இந்தியா & தமிழ்நாடு: கடந்த 7 நாட்கள் செய்திகளின் தொகுப்பு 02.08.2026 9:46
தமிழகத்தில் மீண்டும் பெரும் பிரச்சனையாக மாறும் மேகதாது அணை விவகாரம்; “தொகுதி மறுசீரமைப்பை ஆதரிப்பவர்கள் தமிழ்நாட்டின் எட்டப்பர்கள்” என்ற ராகுல் காந்தியின் விமர்சனம்; திருச்சி கிழக்கு உள்ளிட்ட 5 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலுக்கு ஆக.24 வரை தடை நீட்டிப்பு உள்ளிட்ட செய்திகளோடு "செய்திகளின் பின்னணி" நிகழ்ச்சிக்காக இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ். India & Tamil Nadu: News highlights from the pas...
இலங்கையில் இரு உயர் அதிகாரிகளுக்கு மரண தண்டனை தீர்ப்பு! 02.08.2026 5:17
இலங்கையில் உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் தடுக்கத் தவறிய குற்றச்சாட்டிற்காக முன்னாள் காவல்துறை மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோருக்கு கடந்த வெள்ளிக்கிழமை மரண தண்டனை விதிக்கப்பட்டது. இது தொடர்பில் “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன். Two senior officials sentenced to death...
இந்த வார ஆஸ்திரேலிய செய்திகள் (26 ஜூலை – 1 ஆகஸ்ட் 2026) 01.08.2026 6:28
ஆஸ்திரேலியாவின் இந்த வார (26 ஜூலை – 1 ஆகஸ்ட் 2026) முக்கிய செய்திகளின் தொகுப்பு. வாசித்தவர்: றைசெல். Top news from Australia this week (26 July – 1 August 2026)
உலகிலேயே முதல்முறை - திமிங்கலம் குட்டி ஈன்ற காட்சி 31.07.2026 4:35
ஒரு அபூர்வமான, மனதைக் கொள்ளை கொள்ளும் காட்சி நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தின் வடக்குப் பகுதி கடற்கரையில் ஒரு drone மூலம் பதிவாகியிருக்கிறது. ஒரு கூன்முதுகுத் திமிங்கலம் (humpback whale) தன் குட்டியை ஈன்ற அரிய தருணம் வரலாற்றில் முதல்முறையாகப் பதிவாகியுள்ளது. இது குறித்த செய்தியை எடுத்து வருகிறார் குலசேகரம் சஞ்சயன்.
Census 2026: மோசடிகளைக் கண்டறிவது எப்படி? 31.07.2026 3:35
2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்திரேலிய மக்கள்தொகை கணக்கெடுப்பு (Census) நடைபெறவுள்ள நிலையில், அதைப் பயன்படுத்தி மோசடி செய்ய முயற்சிக்கும் நபர்களிடம் இருந்து பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று ஆஸ்திரேலிய புள்ளிவிபரப் பணியகம் (ABS) அறிவுறுத்தியுள்ளது. இது குறித்த செய்தியை எடுத்து வருகிறார் செல்வி இன்பசேகரன். Census 2026: How to identify scams?
ஐயாயிரம் ஆண்டுகள்: தமிழின் நீட்சி 31.07.2026 24:11
ஒரு மொழி ஐயாயிரம் ஆண்டுகள் எப்படி உயிர்வாழ்கிறது? தமிழ் அதைச் சரியாகச் செய்திருக்கிறது - உலகின் தொன்மையான உயிருள்ள மொழிகளில் ஒன்று; மதுரையிலிருந்து, மட்டக்களப்பு மட்டுமல்ல, இங்கு மெல்பன் வரை, கோடிக்கணக்கானோரால் இன்றும் பேசப்படும் மொழி. ஆனால், உயிர்வாழ்வது என்பது பாதுகாப்பாக இருப்பது அல்ல. ஆங்கிலமும், algorithmகளும், வேகமான பண்பாட்டு மாற்றங்களும் நிறைந்த இந்தக் காலகட்டத்தில் - ஒரு மொழியை, அதனுள் மட...
வீட்டுக் கடன் பெற்றோருக்கு நிம்மதி - வட்டியுயர்வு வாய்ப்புக் குறைகிறது 31.07.2026 8:32
நாட்டிலுள்ள வீட்டுக் கடன் பெற்றவர்கள், வணிகர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த பணவீக்கத் தரவுகள் வெளியாகியுள்ளன. அந்தத் தரவுகள் என்ன சொல்கின்றன? ஆகஸ்ட் மாதத்தில் ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை உயர்த்துமா? இதுபற்றிய செய்தியின் பின்னணியினை முன்வைக்கிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.
What are the rules for taking photos in Australia? - ஆஸ்திரேலியாவில் புகைப்படம் எடுப்பதற்கு முன் தெரிந்துகொள்ள வேண்டிய விதிமுறைகள் 31.07.2026 10:26
Whether you’re new to taking photographs, a social media content creator or a professional photographer, it’s important to be aware of where you can and can’t take photographs. Here’s what to consider before you take that perfect photograph, legally. - நீங்கள் சமூக ஊடகப் பதிவுகளை உருவாக்குபவராக இருந்தாலும், தொழில்முறை புகைப்படக் கலைஞராக இருந்தாலும் அல்லது புகைப்படம் எடுக்கத் தொடங்கியவராக இருந்தாலு...
இன்றைய செய்திகள்: 31 ஜூலை 2026 - வெள்ளிக்கிழமை 31.07.2026 3:43
SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வெள்ளிக்கிழமை 31/07/2026) செய்திகள். வாசித்தவர் : சரண்யா பாலகிருஷ்ணன்
இலங்கை: இந்த வார முக்கிய செய்திகள் 30.07.2026 8:37
எதிர்கட்சிகள் மற்றும் சட்டத்தரணிகளின் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதை அதிகரிக்க அரசு எடுத்துள்ள தீர்மானம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது ; ஒன்றிணைந்து செயற்படும் முயற்சியில் எதிர்கட்சிகள் பேச்சுவார்த்தை உள்ளிட்ட செய்திகளோடு “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சிக்காக விவரணமொன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன். Top news from Sri Lanka this week
பச்சிளங்குழந்தைக்கு சரியான முறையில் பாலூட்டுவது எப்படி? 30.07.2026 9:37
உலகம் முழுவதும் ஒவ்வோர் ஆண்டும் ஆகஸ்ட் 1 முதல் 7ஆம் தேதி வரை 'தாய்ப்பாலூட்டல் தொடர்பிலான விழிப்புணர்வு வாரம்’ கடைபிடிக்கப் படுகிறது. இந்தப்பின்னணியில் குழந்தைகளுக்கு பாலூட்டுவது தொடர்பில் தாய்மாருக்கான சில ஆலோசனைகளை வழங்குகிறார் புதிதாகப் பிறந்த குழந்தைகள் தொடர்பில் சிறப்பு நிபுணத்துவம் பெற்றவரும் குழந்தைகள் நல மருத்துவருமான Consultant Neonatologist & Paediatrician Dr லலிதா கிருஷ்ணன். அவரோடு உரையா...
Podobne podcasty
Replaio nie jest wydawcą podcastów; nazwy audycji, okładki i audio należą do ich autorów i są rozpowszechniane przez publiczne kanały RSS