Maalaimalar.com
Maalaimalar Tamil
LISTEN TO DAILY NEWS
Koniecznie odwiedź stronę podcastu i wesprzyj twórcę: hubhopper.com
Gdzie słuchać?
Podcasty w aplikacji Replaio Radio Już wkrótcePodcasty trafią do aplikacji już wkrótce. Zainstaluj teraz i jako pierwszy zobacz nowe podejście do podcastów
Odcinki
மாதவரம் பால் பண்ணையில் முதலமைச்சர் விஜய் ஆய்வு 07.10.2026 2:21
சென்னை மாதவரம் பால் பண்ணையானது மிகப் பழமையான பால்பதன நிறுவனமாகும். இந்நிறுவனம் 1963-ஆம் ஆண்டு, அரசு மற்றும் யுனிசெஃப் (UNICEF) ஆகியவற்றின் கூட்டுத் திட்டத்தின் மூலம் மாதவரம் பால் பண்ணை வளாகத்தில் நாளொன்றுக்கு 50,000 லிட்டர் பால் பதப்படுத்தும் திறனுடன் நிறுவப்பட்டது.
மாலை செய்திகள் (07-10-2026) 07.10.2026 2:48
த.வெ.க. ஆட்சியில் மின்வெட்டை மிஞ்சும் அளவுக்குத் தலைதூக்கும் அரிவாள் வெட்டு- மு.க.ஸ்டாலின்
தினமும் குளிக்கும்போது இதை செய்தால் என்ன பலன்? 07.10.2026 0:37
தினமும் குளிக்கும்போது இந்த சிறிய பழக்கத்தைப் பின்பற்றுவது உடலையும் மனதையும் புத்துணர்ச்சியாக வைத்திருக்க உதவும்.
சர்க்கரை நோய்க்கு உதவும் தொட்டாச்சிணுங்கி? 07.10.2026 0:42
தொட்டாச்சிணுங்கி செடியின் மருத்துவப் பயன்கள் குறித்து பல்வேறு தகவல்கள் கூறப்படுகின்றன. சர்க்கரை நோயை கட்டுப்படுத்த இது உதவுமா? அதன் பயன்கள் என்ன என்பதை தெரிந்துகொள்ளுங்கள்.
சினிமா செய்திகள் (06-10-2026) 06.10.2026 1:16
நெல்சன் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் 2 படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது. படத்தில் மோகன்லால், சிவராஜ்குமார், எஸ்.ஜே.சூர்யா, வித்யா பாலன் ஆகியோர் நடித்துள்ளனர். படம் அக்டோபர் 15ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
ஜெம் வீரமணி விவகாரம்: திமுக வழக்கு தொடர அனுமதி- அமைச்சர்கள் ஆதவ் அர்ஜூனா, நிர்மல் குமார் மேல்முறையீடு 06.10.2026 1:42
சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த ஜெம் கிரானைட் உரிமையாளர் வீரமணிக்கு எதிரான வழக்கில், உரிய நடவடிக்கை எடுக்காமல் முந்தைய திமுக அரசு தப்பிக்க விட்டுவிட்டதாக தவெகவைச் சேர்ந்த தமிழக அமைச்சர்கள் சி.டி.ஆர்.நிர்மல் குமார் மற்றும் ஆதவ் அர்ஜுனா ஆகியோர் பேட்டி அளித்திருந்தனர். அதேபோ
மாலை செய்திகள் (06-10-2026) 06.10.2026 3:45
சென்னை வருகை தருகிறார் பிரதமர் மோடி: முதலமைச்சர் விஜயுடன் இணைந்து மெட்ரோ ரெயிலில் பயணம்!
சினிமா செய்திகள் (05-10-2026) 05.10.2026 1:43
‘மண்டாடி’ திரைப்படம் கடந்த செப்டம்பர் 10-ம் தேதி தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் திரையரங்குகளில் வெளியானது.‘மண்டாடி’ படத்துக்கு நல்ல விமர்சனங்கள் கிடைத்ததால் திரைகள் அதிகரிக்கப்பட்டன. இந்த நிலையில், ‘மண்டாடி’ திரைப்படம் 25 நாட்களில் உலகளவில் ரூ. 150 கோடியையும் தமிழகத்தில் மட்டும் ரூ. 100 கோடியையும் வசூலித்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.
திமுக மீது அவதூறு பரப்புவதை நிறுத்திவிட்டு, விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும்: உதயநிதி ஸ்டாலின் 05.10.2026 0:57
திமுக ஆட்சியில் கிலோ 109 ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்பட்ட துவரம் பருப்பின் விலையானது, தற்போது 77.89 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வரும் சூழலில், இந்த விலை குறைப்பிற்கு காரணம் கழக அரசு தான் என்றும், இந்த உண்மைகளை மறைத்துவிட்டு த.வெ.க ஆட்சியில் தான் குறைந்த விலைக்கு துவரம் பருப்பு கொள்முதல் செய்யப்பட்டது, என்று அவதூறு பரப்புவதை ஏற்க முடியாது என்றும் எதிர்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ள...
மாலை செய்திகள் (05-10-2026) 05.10.2026 3:14
வெற்றிப் பயணம் திட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை ஐகோர்ட்
நனிசிறக்கும் நான்கு திட்டங்கள்..!- முதலமைச்சர் விஜய் பதிவு 04.10.2026 0:23
முதலமைச்சர் விஜய், நான்கே மாதங்களில் செயல்படுத்தப்பட்டதாகக் குறிப்பிடும் நான்கு முக்கிய திட்டங்களை தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை, பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்ட விரிவாக்கம் ஆகியவை அதில் இடம்பெற்றுள்ளன. தாய்மாமன் தங்க மோதிரத் திட்டம், மகளிருக்கான வெற்றிப்பயணம் ஆகிய திட்டங்களையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மாலை செய்திகள் (04-10-2026) 04.10.2026 2:22
மகளிர் குறித்து பேசினால் பொறுத்துக் கொள்ளமாட்டேன் - முதலமைச்சர் விஜய்
சினிமா செய்திகள் (03-10-2026) 03.10.2026 1:43
தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தின் புதிய நிர்வாகிகளின் வேண்டுகோளை ஏற்று, தமிழ் திரையுலகின் முன்னணி பாடலாசிரியரும் கவிஞருமான கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் சங்கத்தின் ஆயுட்கால உறுப்பினராக முறைப்படி இணைந்துள்ளார்
அநாகரிகக் கூட்டத்தை நடத்தியுள்ளார் மு.க.ஸ்டாலின்- முதலமைச்சர் விஜய் கண்டனம் | Maalaimalar 03.10.2026 1:31
திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தாராபுரத்தில் நடைபெற்ற இடைத்தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பேசும்போது, தவெக வேட்பாளர் சத்யபாமா குறித்து உருவ கேலி செய்யும் வகையில் பேசினார். இதற்கு முதலமைச்சரும், தவெக தலைவருமான விஜய் கடும் கண்டனத்தை எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் "தாராபுரம் தொகுதி இடைத்தேர்தல் பரப்புரைப் பொதுக்கூட்டம் என்ற பெயரில், தீய சக்தியான தி.மு.க. சார்பில் ஓர் அவதூறு மற்றும் அநாகரிகக்...
மாலை செய்திகள் (03-10-2026) 03.10.2026 4:28
அநாகரிகக் கூட்டத்தை நடத்தியுள்ளார் மு.க.ஸ்டாலின்- முதலமைச்சர் விஜய் கண்டனம்
சாப்பிட மறுக்கும் குழந்தைகளுக்கு சத்தான உணவு இதுதான்! 03.10.2026 0:49
சாப்பிட மறுக்கும் குழந்தைகளுக்கு பிடிக்கும் வகையில் சத்தான உணவுகளை தேர்வு செய்வது அவசியம். வளர்ச்சிக்குத் தேவையான புரதம், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்த உணவுகளை சேர்த்துக் கொடுக்கலாம்.
முடி வளர்ச்சிக்கு மருதாணியை இப்படி பயன்படுத்துங்க! 03.10.2026 0:52
மருதாணியை சரியான முறையில் பயன்படுத்தினால் தலைமுடிக்கு இயற்கையான பராமரிப்பு கிடைக்கும். முடிக்கு ஊட்டமளித்து, உலர்வை குறைக்க உதவும் வகையில் மருதாணியை பயன்படுத்தலாம்.
சென்னையில் குளிர்சாதனப் பேருந்துகளை தவிர அனைத்துப் பேருந்துகளிலும் பெண்கள் கட்டணமில்லாமல் பயணிக்கலாம்! 02.10.2026 0:47
சென்னை மாநகரப் போக்குவரத்து கழகத்தின் சார்பாக 3958 பேருந்துகள் இயக்கப்பட்டு வரும் நிலையில், மகளிர் கட்டணமில்லா பேருந்துப் பயணம் விரிவாக்க திட்டம் மூலம், இவற்றில் 355 குளிர்சாதனப் பேருந்துகள் தவிர மற்ற அனைத்து பேருந்துகளிலும் பெண்கள் கட்டணமில்லாமல் பயணம் செய்யலாம்.
மாலை செய்திகள் (02-10-2026) 02.10.2026 4:41
'வெற்றிப் பயணம்' திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் விஜய்
பூக்கள் அழகுக்கு மட்டுமல்ல... மருத்துவ குணங்களும் உண்டு! 02.10.2026 0:46
பூக்கள் வீட்டையும் தோட்டத்தையும் அழகுபடுத்துவதோடு, பல்வேறு மருத்துவ குணங்களையும் கொண்டுள்ளன.
காலை உணவை தவிர்க்காதீங்க... இதை சாப்பிடுங்க! 02.10.2026 1:11
காலை உணவை தவிர்ப்பது உடலுக்கு தேவையான ஆற்றலை பாதிக்கலாம். காலையில் சத்தான உணவுகளை எடுத்துக்கொள்வது நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருக்க உதவும்.
தவெகவுடன் பாமக கூட்டணியா?-திருமாவளவன் வீடியோ வெளியிட்டு விளக்கம் 01.10.2026 3:13
விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் முகநூல் வழியாக தனது கட்சி தொண்டர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
சினிமா செய்திகள் (01-10-2026) 01.10.2026 1:08
பாலாஜி தரணீதரன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, லிஜோமோல் ஜோல் ஆகியோர் நடிப்பில் உருவான பத்தா திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியானது. படத்தை முதல் ஆளாக பாராட்டியுள்ள இயக்குநர் சங்கர், தேசிய விருது பெறும் நடிப்பு என சிறுவன் சாய் பிரித்விராஜையும் புகழ்ந்துள்ளார்.
மாலை செய்திகள் (01-10-2026) 01.10.2026 4:18
மகளிருக்கான விரிவுப்படுத்தப்பட்ட கட்டணமில்லா வெற்றிப்பயண திட்டம்: நாளை தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் விஜய்
தினமும் வாழைப்பழம் சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா? 01.10.2026 0:42
தினமும் வாழைப்பழம் சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் முக்கிய நன்மைகள் என்னென்ன? பொட்டாசியம், நார்ச்சத்து நிறைந்த வாழைப்பழம் செரிமானம் மற்றும் உடல் ஆற்றலுக்கு உதவுகிறது.
Podobne podcasty
Replaio nie jest wydawcą podcastów; nazwy audycji, okładki i audio należą do ich autorów i są rozpowszechniane przez publiczne kanały RSS