Maalaimalar.com
Maalaimalar Tamil
LISTEN TO DAILY NEWS
No dejes de visitar la web del podcast y apoyar a su creador: hubhopper.com
Autor
Maalaimalar.com
Categoría
Web del podcast
Último episodio
26 de nov. de 2026
¿Dónde escuchar?
Podcasts en la app Replaio Radio Muy prontoLos podcasts llegarán muy pronto a la app. Instálala ahora y sé el primero en descubrir una forma totalmente nueva de vivir los podcasts
Episodios
சினிமா செய்திகள் (26-11-2026) 26.11.2026 1:29
இந்தியத் திரையுலகின் மிகப் பிரம்மாண்டப் படைப்பாக வெளியாகி உலகம் முழுவதும் வசூல் சாதனை படைத்து வரும் ‘ராமாயணா : பாகம் 1’ திரைப்படக் குழுவினர், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை புதுடெல்லியில் நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றனர்.
"கல்வித்துறையில் ஊழல் நடப்பதை எப்படி வேடிக்கை பார்க்க முடியும்?" - முதலமைச்சர் விஜய் ஆவேசம்! 26.11.2026 1:33
தமிழக வெற்றிக் கழகம் சார்பில் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தொகுதி வாரியாக முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவ-மாணவிகளுக்கு கல்வி விருது மற்றும் ஊக்கத்தொகை வழங்கும் 2-ஆம் கட்ட விழா சென்னை நீலாங்கரையில் இன்றும், நாளையும் நடைபெறுகிறது. இன்று கோவை, ஈரோடு, திருப்பூர், நீலகிரி, பெரம்பலூர் ஆகிய 5 மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சியில் தமிழக முதலமைச்சரும், த.வெ.க. தலைவரும...
மாலை செய்திகள் (26-11-2026) 26.11.2026 3:44
கல்வித்துறையில் ஊழல் நடப்பதை எப்படி வேடிக்கை பார்க்க முடியும்?- முதலமைச்சர் விஜய் பேச்சு
மாலை செய்திகள் (25-11-2026) 25.11.2026 3:19
திருப்பரங்குன்றம் விவகாரம்: மன்னிப்பு கோரிய மதுரை ஆட்சியர்.
5 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்தும் அருள் விக்னேஷை இன்னும் கைது செய்யாதது ஏன்? கனிமொழி கேள்வி 25.11.2026 0:52
பெண் ஆட்சியரால் ஜூலை மாதமே புகார் அளிக்கப்பட்ட கள்ளக்குறிச்சி தவெக சட்டமன்ற உறுப்பினர் அருள்விக்னேஷை, வழக்குப்பதிவு செய்த பின்னரும் இதுவரை காவல்துறை கைது செய்யாதது ஏன்? என திமுக துணைப்பொதுச்செயலாளரும், மக்களவை எம்.பி.யுமான கனிமொழி கேள்வி எழுப்பியுள்ளார்.
திருப்பரங்குன்றம் புறப்பட்ட நயினார்: நெல்லையில் தடுத்து நிறுத்தப்பட்டு கைது! 24.11.2026 1:14
திருப்பரங்குன்றம் மலைமீது உள்ள தூணில் கார்த்திகை தீபத்தை ஒட்டி, இன்று (நவ.24) ஒருநாள் மட்டும் தீபம் ஏற்ற அனுமதி அளித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கோயிலின் அங்கீகரிக்கப்பட்ட நபர்களும், அரசு அதிகாரிகளும் மட்டுமே தீபம் ஏற்றுவதற்காக மலை உச்சிக்குச் செல்லலாம் என்றும், பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மாலை செய்திகள் (24-11-2026) 24.11.2026 2:55
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் மலை உச்சியில் மகாதீபம் ஏற்றம்
திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றும் விவகாரம்: தமிழக அரசு முடிவு என்ன? 23.11.2026 1:49
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள கல் தூணில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பான விவகாரத்தில், நாளை (நவம்பர் 24) திருவிழா நடைபெறவுள்ள நிலையில் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு அமலில் உள்ளது. சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை வழங்கிய உத்தரவை இரு நீதிபதிகள் அமர்வு உறுதி செய்ததைத் தொடர்ந்து, இந்த ஆண்டு கார்த்திகை தீபத் திருநாளில் மட்டும் ஒருமுறை மலை உச்சிக் கல் தூணில் தீபம் ஏற்ற உச்ச நீதிமன்றம் கடந்த நவ...
மாலை செய்திகள் (23-11-2026) 23.11.2026 3:49
தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் விஜயுடன் டிஜிபி மகேஷ்குமார் அகர்வால் முக்கிய ஆலோசனை...
காவிரி படுகையில் கருகும் பயிர்களுக்கு உடனடியாக நிவாரணம் அறிவிக்க வேண்டும் - உதயநிதி ஸ்டாலின் 22.11.2026 0:39
காவிரி படுகையில் சம்பா சாகுபடிக்கு சரியான நேரத்தில் தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று, விவசாயிகள் மற்றும் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலுயுறுத்தியும், அதனை கேட்காமல் முன்கூட்டியே செப்டம்பர் 1 அன்று தமிழக அரசு தண்ணீர் திறந்துவிட்டதால், தற்போது டெல்டாவில் பயிர்கள் தண்ணீரின்றி கருகி வருவதாக, எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.
சினிமா செய்திகள் (22-11-2026) 22.11.2026 1:36
புதிய படப்பிடிப்புக்காக மதுரை விமான நிலையம் வந்த நடிகர்கள் தனுஷ் மற்றும் எஸ்.ஜே.சூர்யாவுக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். மாலை அணிவித்து கோஷம் எழுப்பிய ரசிகர்களுக்கு இருவரும் கையசைத்து நன்றி தெரிவித்தனர். தமிழரசன் பச்சமுத்து இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு மதுரை சுற்றுவட்டாரத்தில் நடைபெற உள்ளது. இப்படத்தில் நடிகர் வடிவேலு உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இதனால் விமான நிலையம் களைகட்டியது.
மாலை செய்திகள் (22-11-2026) 22.11.2026 3:40
சென்னை காசிமேடு மீனவர்கள் போராட்டம் வாபஸ்
திருப்பரங்குன்ற தூண் விவகாரம்: உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து அரசு மறு சீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும் - சிபிஎம் வலியுறுத்தல் 21.11.2026 0:52
திருப்பரங்குன்றத்தில் வழக்கத்திற்கு மாறாக தர்கா அருகில் உள்ள நில அளவை தூணில் இந்த ஆண்டு தீபம் ஏற்றிக் கொள்ளலாம் என்பது எந்த வகையிலும் சட்டத்தின் அடிபடையிலான தீர்ப்பு அல்ல என்று சிபிஎம் மாநில தலைவர் பெ. சண்முகம் தெரிவித்துள்ளார்.
மாலை செய்திகள் (21-11-2026) 21.11.2026 5:03
மீனவப் பெருமக்களின் நலன்களை பேணிப் பாதுகாப்போம்- முதலமைச்சர் விஜய்
திருப்பரங்குன்றம் தூண் விவகாரம்: உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து அரசு மறு சீராய்வு மனு தாக்கல் செய்ய சிபிஎம் வலியுறுத்தல் 20.11.2026 0:55
திருப்பரங்குன்றத்தில் வழக்கத்திற்கு மாறாக தர்கா அருகில் உள்ள நில அளவை தூணில் இந்த ஆண்டு தீபம் ஏற்றிக் கொள்ளலாம் என்பது எந்த வகையிலும் சட்டத்தின் அடிபடையிலான தீர்ப்பு அல்ல என்று சிபிஎம் மாநில தலைவர் பெ. சண்முகம் தெரிவித்துள்ளார்.
மாலை செய்திகள் (20-11-2026) 20.11.2026 3:06
திருப்பரங்குன்றம் தூண் விவகாரம்: உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து அரசு மறு சீராய்வு மனு தாக்கல் செய்ய சிபிஎம் வலியுறுத்தல்
சினிமா செய்திகள் (20-11-2026) 20.11.2026 1:09
கோவை ஈஷா யோகா மையத்தில் நடிகை சமந்தா மற்றும் தயாரிப்பாளர் ராஜ் நிடிமொரு, கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்ட நிலையில், இந்த தம்பதியினருக்கு நேற்று ஆண்குழந்தை பிறந்துள்ளது. இதையடுத்து தங்கள் மகனுக்கு தேவ் நிடிமொரு என பெயர் வைத்துள்ளதாக சமந்தா தெரிவித்துள்ளார்.
சினிமா செய்திகள் (19-11-2026) 19.11.2026 1:03
நடிகை ஐஸ்வர்யா அர்ஜூன் குறித்த அவதூறுகளுக்கு அவரது தந்தையும், நடிகருமான அர்ஜூன் கண்டனம் தெரிவித்துள்ளார். தனது மகள்மீதான அவதூறுகள் தொடர்பாக காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளதாகவும், ஐஸ்வர்யா விரும்பினால், அவரது தரப்பு விளக்கத்தை அவரே தெரிவிப்பார் என விவாகரத்து தொடர்பான சர்ச்சைகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
கொளத்தூர் தொகுதி தவெக எம்.எல்.ஏ., வி.எஸ்.பாபு காலமானார்! 19.11.2026 0:59
இரண்டு மாதங்களுக்கும் மேலாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த, கொளத்தூர் தொகுதி தவெக சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ். பாபு காலமானார்.
மாலை செய்திகள் (19-11-2026) 19.11.2026 3:32
கொளத்தூர் தொகுதி தவெக எம்.எல்.ஏ., வி.எஸ்.பாபு காலமானார்!
கோவில்களின் வரவு, செலவு விவரங்களை இணையதளத்தில் பதிவேற்ற வேண்டும்: அறநிலையத்துறைக்கு ஐகோர்ட் உத்தரவு 18.11.2026 1:24
தமிழகத்தில் உள்ள அனைத்து கோவில்களின் நிதி நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்தும் வகையில் வரவு, செலவு மற்றும் நிதி நிர்வாகம் தொடர்பான தணிக்கை அறிக்கைகளை இணையதளத்தில் வெளியிட உத்தரவிடக்கோரி, டி.ஆர்.ரமேஷ் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார்.
மாலை செய்திகள் (18-11-2026) 18.11.2026 4:39
செஞ்சி சிறுமி மாயமான விவகாரம்: தமிழக டிஜிபி விளக்கம்.
50 கோடி மதிப்பிலான நகைகள் மீட்பு - மதுரை கமிஷனர் பேட்டி! 17.11.2026 1:25
மதுரை பைபாஸ் சாலையில் உள்ள பிரபல தனிஷ்க் நகைக் கடையில் அரங்கேறிய பல கோடி ரூபாய் மதிப்பிலான மெகா கொள்ளைச் சம்பவத்தின் முழுப் பின்னணி குறித்து மதுரை மாநகரக் காவல் ஆணையர் எஸ்.ராஜேந்திரன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார்.
மாலை செய்திகள் (17-11-2026) 17.11.2026 3:12
மேகதாதுவில் ஒரு செங்கல் கூட கர்நாடகாவால் வைக்க முடியாது - அமைச்சர் நிர்மல்குமார்
சினிமா செய்திகள் (16-11-2026) 16.11.2026 1:47
நிதேஷ் திவாரி இயக்கத்தில் ரன்பீர் கபூர், சாய் பல்லவி மற்றும் யஷ் நடிப்பில் வெளியான ராமாயணம் திரைப்படம் பாக்ஸ் ஆபீஸில் தொடர்ந்து வசூல் சாதனை படைத்து வருகிறது. இந்தியா, தமிழ், மலையாளம், கன்னடம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் உருவானது. கடந்த 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம், 11 நாட்கள் முடிவில் உலகளவில் ரூ.1,384.50 கோடி வசூல் செய்துள்ளதாக வர்த்தக வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Podcasts similares
Replaio no es editor de podcasts; los nombres de los programas, las portadas y el audio pertenecen a sus autores y se distribuyen a través de canales RSS públicos