SBS
SBS Tamil - SBS தமிழ்
Independent news and stories from SBS Audio, connecting you to life in Australia and Tamil-speaking Australians. - தமிழ் பேசும் ஆஸ்திரேலியர்களுடனும், ஆஸ்திரேலிய வாழ்க்கையுடனும் இணைய உங்களுக்கு உதவும் பக்கசார்பற்ற செய்திகள் மற்றும் கதைகள்.
Vizitează neapărat site-ul podcastului și susține-i creatorul: www.sbs.com.au
Unde asculți?
Podcasturi în aplicație Replaio Radio În curândPodcasturile ajung în curând în aplicație. Instaleaz-o acum și fii primul care descoperă o abordare complet nouă a podcasturilor
Episoade
இன்றைய செய்திகள்: 27 ஜூலை 2026 - திங்கட்கிழமை 27.07.2026 4:35
SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (திங்கட்கிழமை 27/07/2026) செய்திகள். வாசித்தவர் குலசேகரம் சஞ்சயன்.
இந்தியா & தமிழ்நாடு: கடந்த 7 நாட்கள் செய்திகளின் தொகுப்பு 27.07.2026 9:06
சென்னையில் நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி போராட்டம்; தவெக அரசை கவிழ்க்க சதி செய்த வழக்கு - செந்தில்பாலாஜி நேரில் ஆஜர்; தவெக கூட்டணியில் இணைகிறதா பாமக? உள்ளிட்ட செய்திகளோடு "செய்திகளின் பின்னணி" நிகழ்ச்சிக்காக இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ். India & Tamil Nadu: News highlights from the past 7 days
மருத்துவக் காப்பீடு (Health Insurance) எடுத்தாலும் ஆம்புலன்ஸ் செலவுக்கு உத்தரவாதமா? 26.07.2026 3:14
மருத்துவக் காப்பீடு எடுத்தாலும் ஆம்புலன்ஸ் செலவுகள் சில சூழ்நிலைகளில் காப்பீட்டின் கீழ் வராமல் போகக்கூடும். இது குறித்த செய்தியை எடுத்து வருகிறார் செல்வி இன்பசேகரன்.
ஆளும் லேபர் கட்சியின் தேசிய மாநாட்டில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் என்ன? 26.07.2026 10:30
ஆஸ்திரேலியாவின் ஆளும் கட்சியான Labor கட்சியின் தேசிய மாநாடு கடந்த வாரம் அடிலெய்டில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்திலிருந்து கலந்துகொண்ட 105 பிரதிநிதிகளில் ஒருவர் The Hills Shire Council கவுன்சிலர் இம்மானுவேல் செல்வராஜ் அவர்கள். இம்மாநாட்டில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் குறித்து அவர் விளக்குகிறார். அவரோடு உரையாடுகிறார் றைசெல். The Labor Party's National Conference was held in...
இந்த வார ஆஸ்திரேலிய செய்திகள் (19 – 25 ஜூலை 2026) 24.07.2026 5:44
ஆஸ்திரேலியாவின் இந்த வார (19 – 25 ஜூலை 2026) முக்கிய செய்திகளின் தொகுப்பு. வாசித்தவர்: றைசெல். Top news from Australia this week (19 -25 July 2026)
வயோதிப பெற்றோர் விசா: பரிசீலனை முறையில் மாற்றம் தேவை என வலுக்கும் கோரிக்கை 24.07.2026 9:04
Aged Parent (Subclass 804) விசாவிற்க்கான கூட்டு விண்ணப்பத்தின் முதன்மை விண்ணப்பதாரர் விண்ணப்பம் குறித்த முடிவு வருவதற்கு முன்பே உயிரிழந்தால், மீதமுள்ள விண்ணப்பதாரர் தனியாக அனைத்து தகுதிகளையும் பூர்த்தி செய்ய வேண்டும். இல்லையெனில் அவர்களின் விண்ணப்பம் நிராகரிக்கப்படுகிறது. ஆகவே இவ்வகையான விசா பரிசீலனை விதிமுறையில் மாற்றங்கள் தேவை என்று குரல் எழுப்பப்படுகிறது. இது குறித்த செய்தியின் பின்னணியை எடுத்த...
மேலும் 10 மருத்துவத் துறைப் படிப்புகளுக்கு வாரம் $338: அரசின் புதிய உதவித்திட்டம்! 24.07.2026 3:12
Practical placement/prac பயிற்சியில் ஈடுபடும் Allied health மருத்துவதுறை மாணவர்களுக்கு வாரத்திற்கு $338 உதவிதொகை வழங்கும் திட்டத்தை பிரதமர் Anthony Albanese அறிவித்தார். இது குறித்த செய்தியை எடுத்து வருகிறார் செல்வி இன்பசேகரன். Here's who will get $338 weekly payments under prac payment expansion
நீரில் மூழ்கி உயிரிழப்பு தடுப்பு தினம் : மகளை இழந்த தந்தை மனம் திறக்கிறார் 24.07.2026 10:16
World Drowning Prevention Day - நீர் பாதுகாப்பு, கண்காணிப்பு மற்றும் நீச்சல் திறன்களின் முக்கியத்துவத்தையும் வலியுறுத்த ஆண்டுதோறும் ஜூலை 25ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு தனது மகளை நீச்சல் குள விபத்தில் இழந்த சிட்னியில் வசிக்கும் தேவா அவர்கள், தனது குடும்பத்தின் துயரமான அனுபவத்தைப் பகிர்ந்து கொள்கிறார். இதுபோன்ற உயிரிழப்புகளைத் தடுக்க விழிப்புணர்வு ஏற்படுத்துவது ஏன் அவசியம் எ...
2026 Census: What you need to know to ensure you’re counted - 2026 Census கணக்கெடுப்பில் இடம்பெற நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியவை 24.07.2026 12:46
The 2026 Census is on Tuesday 11 August and every person in Australia on this night must be counted. Census data is used to understand where we live, the languages we use at home (including Auslan), the support we need and how Australia is changing as a nation. Being counted helps ensure your community, culture and beliefs are represented. Here’s what you need to know about completing the Census f...
இன்றைய செய்திகள்: 24 ஜூலை 2026 - வெள்ளிக்கிழமை 24.07.2026 4:02
SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வெள்ளிக்கிழமை 24/07/2026) செய்திகள். வாசித்தவர் : சரண்யா பாலகிருஷ்ணன்
இலங்கை: இந்த வார முக்கிய செய்திகள் 24.07.2026 8:21
யாழ்.செம்மணி மனித புதைகுழி அகழ்வுப் பணிகள் தொடரும் நிலையில் இதுவரையில் 450க்கும் மேற்பட்ட மனித என்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், ஐரோப்பிய ஒன்றிய விசேட குழு செம்மணிக்கு வருகை தந்தனர்; பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கக்கோரி எதிரணியினர் வலியுறுத்தி வருகின்ற நிலையில் வாக்குறுதி அளித்தபடி பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதாக நீதி அமைச்சர் அறிவித்துள்ளார். இவை...
கிளாஸ்கோ கொமன்வெல்த் தொடக்க விழா: ஆஸ்திரேலிய அணிக்கு இரட்டை கௌரவம் 23.07.2026 8:45
2026 பொதுநலவாய நாடுகளின் விளையாட்டு விழா இன்று ஸ்கொட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் ஆரம்பமாகிறது. தொடக்க விழாவில் ஆஸ்திரேலியாவின் தேசியக் கொடியை ஒலிம்பிக் வீராங்கனை Nina Kennedyயும், King's batonஐ பாராலிம்பிக் வீரர் Tim Hodgeம் ஏந்திச் செல்லும் பெருமையைப் பெற்றுள்ளனர். இதுபற்றிய செய்தியின் பின்னணியினை முன்வைக்கிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.
ஆஸ்திரேலியாவில் இந்திய விசா, Passport, OCI சேவைகள் மீண்டும் தொடக்கம் 23.07.2026 3:05
ஆஸ்திரேலியாவில் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்த விசா, Passport, OCI சேவைகள்மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இந்த தகவலை முன்வைக்கிறார் றைசெல். Indian Visa, Passport and OCI services resume in Australia
புதிய கண்டுபிடிப்பிற்கு விருது பெற்ற தமிழர் 23.07.2026 14:28
பேராசிரியர் ஜே சஞ்சயன் என்பவர், Swinbourne பல்கலைக்கழகத்தின் Sustainable Infrastructure என்ற துறைக்குப் பொறுப்பாக கடமையாற்றும் Concrete Structures குறித்த பேராசிரியர். அவரது தொழில்சார் கண்டுபிடிப்புகளுக்காக, 2018ஆம் ஆண்டு Concrete Institute of Australia அவருக்கு விருது வழங்கி மரியாதை செய்தது. பேராசிரியர் சஞ்சயனை 2018ஆம் ஆண்டு நேர்கண்டு உரையாடியவர் குலசேகரம் சஞ்சயன். இது ஒரு மறு ஒலிபரப்பு.
இணையத்தில் பொருட்கள் வாங்கும் முன் தெரிந்திருக்க வேண்டிய முக்கிய குறிப்புகள்! 23.07.2026 12:14
கோவிட் காலத்திற்கு பிறகு இணையத்தில் பொருட்கள் கொள்முதல் செய்யப்படுவது அதிகரித்துள்ளது என்பதை நாம் அறிவோம் . இணையத்தில் பொருட்கள் கொள்முதல் செய்வது குறித்து நேயர்கள் சிலரின் கருத்துக்களுடன் நுகர்வோர் பாதுகாப்புத்துறையில் பல ஆண்டுகள் பணிபுரிந்து வரும் சிவகாமி தயாநிதி அவர்களுடனான நேர்க்காணல். நிகழ்ச்சித் தயாரிப்பு செல்வி இன்பசேகரன்.
விண்வெளியில் புதிய இலக்கு: ஆஸ்திரேலியா உலகளாவிய ராக்கெட் ஏவுதள மையமாக மாறுமா? 23.07.2026 9:39
ராக்கெட்டுகள் மற்றும் செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தும் உலகளாவிய மையமாக ஆஸ்திரேலியாவை மாற்றுவதற்கான முயற்சியை ஃபெடரல் அரசு தற்போது தீவிரப்படுத்தியுள்ளது. இதன் பின்னணியில் ஆஸ்திரேலியாவின் விண்வெளித் திட்டம் என்ன? ஆஸ்திரேலியாவிலிருந்து ராக்கெட்டுகளை ஏவுவதற்கு என்ன அனுகூலங்கள் உள்ளன? விண்வெளி வர்த்தகம் பெருகினால் சாதாரண மக்களுக்கு என்ன பயன் கிடைக்கும்? செய்தியின் பின்னணி நிகழ்ச்சி வழி விளக்குகிறார...
இன்றைய செய்திகள்: 23 ஜூலை 2026 - வியாழக்கிழமை 23.07.2026 4:24
SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வியாழக்கிழமை 23/07/2026) செய்திகள். வாசித்தவர் குலசேகரம் சஞ்சயன்.
வீடுகளில் உருவாகும் பூஞ்சை உடல்நலத்திற்கு தீங்கு விளைவிக்குமா? 22.07.2026 12:10
Mould எனப்படும் ஒருவகை பூஞ்சை அல்லது பூஞ்சணம் சூடான, ஈரமான சூழலில், குறிப்பாக சராசரிக்கு மேல் ஈரப்பதம் உள்ள பகுதிகளில் வளரக்கூடியது என்பதால், வீடுகளில் பூஞ்சை ஏற்படுவது பொதுவானது. பூஞ்சை காரணமாக ஏற்படக்கூடிய சுகாதாரப் பிரச்சினைகள் தொடர்பிலும், இதை எப்படித் தடுக்கலாம் என்பது தொடர்பிலும் பதிலளிக்கிறார் குயின்ஸ்லாந்தில் குடும்ப மருத்துவராகப் பணியாற்றும் Dr ஜனனி திருமுருகன் அவர்கள். அவரோடு உரையாடுகிறா...
ஜூலை 27 – திங்கள்: உங்கள் கைபேசியில் அவசர எச்சரிக்கை செய்திவரும், பயந்துவிடாதீர்கள்! 22.07.2026 3:02
ஜூலை 27ஆம் தேதி திங்கட்கிழமை, உங்கள் கைபேசி திடீரென அதிர்ந்து, உரத்த எச்சரிக்கை ஒலி எழுப்பினால் பயப்பட வேண்டாம். ஏன்? விளக்குகிறார் றைசெல். On Monday, 27 July, mobile phones across Australia will suddenly vibrate and emit a loud emergency alert sound. There is no need to be alarmed—RaySel explains why the alert is being sent and what you need to know.
மின்கட்டணத்தை குறைக்கும் எளிய வழிமுறைகள்: பல்லின சமூகத்திற்கான விழிப்புணர்வு திட்டம்! 22.07.2026 4:19
NSW அரசு, மக்களுக்கு மின்சாரக் கட்டணத்தைப் புரிந்துகொள்ளவும், குடும்பச் செலவைக் குறைக்கவும் உதவும் சமூக அமைப்புகளுக்கு 2 மில்லியன் டொலர் நிதி ஒதுக்கியுள்ளது. இது குறித்த செய்தியை எடுத்து வருகிறார் செல்வி இன்பசேகரன்.
அதிசயப்பிறப்புகள் - ஒன்றரை கோடியில் ஒன்று ! 22.07.2026 6:50
ஒரே பிரசவத்தில், ஒரே மாதிரியான நான்கு பெண் குழந்தைகள் - இது ஒன்றரை கோடி, (அதாவது 15 மில்லியன்) பிரசவங்களில் ஒரு முறை மட்டுமே நிகழக்கூடிய ஓர் அரிய நிகழ்வு. ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில், இந்த மாதம் 14ஆம் தேதி, இப்படியொரு அதிசயம் நடந்தேறியுள்ளது. மருத்துவர்களையே வியப்பில் ஆழ்த்திய இந்தச் செய்தியை எடுத்து வருகிறார் குலசேகரம் சஞ்சயன்.
மௌனத்தை உடைப்போம் – குடும்ப வன்முறையை தடுப்போம். 22.07.2026 15:07
குடும்ப வன்முறை என்பது ஒரு தனிநபரின் பிரச்சினை மட்டுமல்ல, அது குடும்பத்தையும் சமூகத்தையும் ஆழமாகப் பாதிக்கும் ஒரு முக்கியமான சமூகச் சவாலாகும். இதைப் பற்றி திறந்த மனதுடன் பேசுவதும், சரியான தகவல்களைப் பகிர்வதும், பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவளிப்பதும் மாற்றத்திற்கான முதல் படியாகும். அந்த நோக்கில், குடும்ப வன்முறை, Trauma-informed Counselling மற்றும் Couple Counselling துறைகளில் 32 ஆண்டுகளுக்கும் மேலா...
‘வெள்ளை ஆஸ்திரேலியா’ - வரலாற்றின் இருண்ட அத்தியாயம் மீண்டும் தலைதூக்குகிறதா? 22.07.2026 8:44
பல தசாப்தங்களுக்கு முன்பு நம் நாடு கைவிட்ட 'வெள்ளை ஆஸ்திரேலியா' என்ற கொள்கை, இன்று மீண்டும் இந்நாட்டின் அரசியலில் பேசுபொருளாக மாறியிருக்கிறது. குடிவரவு குறித்த கொள்கைகளில் மாற்றம் வேண்டும் என்ற குரல் ஓங்குகிறது. அந்தக் கொள்கை உண்மையில் என்னவாக இருந்தது? ஏன் அது இப்போது மீண்டும் தலைதூக்குகிறது? இது குறித்த செய்தியின் பின்னணியை எடுத்து வருகிறார் குலசேகரம் சஞ்சயன்.
மகிழ்ச்சியான நாய் – மகிழ்ச்சியான குடும்பம் 22.07.2026 15:57
வீட்டின் செல்லப் பிராணியாக நாய் ஒன்றினை வளர்ப்பதால் எமக்கு ஏற்படும் நன்மைகள், நாய்களை வளர்க்கும் போது நாம் கவனிக்கவேண்டியவை போன்ற பல விடயங்களை எம்முடன் பகிர்ந்துகொள்கிறார் மெல்பனிலுள்ள கால்நடை வைத்தியர் கஜன் சின்னத்தம்பி (Emergency and critical care veterinarian) அவர்கள். அவருடன் உரையாடியவர் மகேஸ்வரன் பிரபாகரன்.
இன்றைய செய்திகள்: 22 ஜூலை 2026, புதன்கிழமை 22.07.2026 3:20
SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (புதன்கிழமை 22/07/2026) செய்திகள். வாசித்தவர்: மகேஸ்வரன் பிரபாகரன்.
Podcasturi asemănătoare
Replaio nu este editorul podcasturilor; numele emisiunilor, coperțile și materialul audio aparțin autorilor lor și sunt distribuite prin fluxuri RSS publice