SBS

SBS Tamil - SBS தமிழ்

Independent news and stories from SBS Audio, connecting you to life in Australia and Tamil-speaking Australians. - தமிழ் பேசும் ஆஸ்திரேலியர்களுடனும், ஆஸ்திரேலிய வாழ்க்கையுடனும் இணைய உங்களுக்கு உதவும் பக்கசார்பற்ற செய்திகள் மற்றும் கதைகள்.

Vizitează neapărat site-ul podcastului și susține-i creatorul: www.sbs.com.au

Autor

SBS

Categorie

News

Site-ul podcastului

www.sbs.com.au

Cel mai nou episod

20 nov. 2026

Unde asculți?

Podcasturi în aplicație Replaio Radio În curând

Podcasturile ajung în curând în aplicație. Instaleaz-o acum și fii primul care descoperă o abordare complet nouă a podcasturilor

Descarcă din Google Play Instalează gratuit Android 10 mil.+ descărcări · nota 4,7+ iOS în curând

Episoade

உலகிலேயே முதல்முறை - திமிங்கலம் குட்டி ஈன்ற காட்சி 31.07.2026

ஒரு அபூர்வமான, மனதைக் கொள்ளை கொள்ளும் காட்சி நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தின் வடக்குப் பகுதி கடற்கரையில் ஒரு drone மூலம் பதிவாகியிருக்கிறது. ஒரு கூன்முதுகுத் திமிங்கலம் (humpback whale) தன் குட்டியை ஈன்ற அரிய தருணம் வரலாற்றில் முதல்முறையாகப் பதிவாகியுள்ளது. இது குறித்த செய்தியை எடுத்து வருகிறார் குலசேகரம் சஞ்சயன்.

Census 2026: மோசடிகளைக் கண்டறிவது எப்படி? 31.07.2026

2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்திரேலிய மக்கள்தொகை கணக்கெடுப்பு (Census) நடைபெறவுள்ள நிலையில், அதைப் பயன்படுத்தி மோசடி செய்ய முயற்சிக்கும் நபர்களிடம் இருந்து பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று ஆஸ்திரேலிய புள்ளிவிபரப் பணியகம் (ABS) அறிவுறுத்தியுள்ளது. இது குறித்த செய்தியை எடுத்து வருகிறார் செல்வி இன்பசேகரன். Census 2026: How to identify scams?

ஐயாயிரம் ஆண்டுகள்: தமிழின் நீட்சி 31.07.2026

ஒரு மொழி ஐயாயிரம் ஆண்டுகள் எப்படி உயிர்வாழ்கிறது? தமிழ் அதைச் சரியாகச் செய்திருக்கிறது - உலகின் தொன்மையான உயிருள்ள மொழிகளில் ஒன்று; மதுரையிலிருந்து, மட்டக்களப்பு மட்டுமல்ல, இங்கு மெல்பன் வரை, கோடிக்கணக்கானோரால் இன்றும் பேசப்படும் மொழி. ஆனால், உயிர்வாழ்வது என்பது பாதுகாப்பாக இருப்பது அல்ல. ஆங்கிலமும், algorithmகளும், வேகமான பண்பாட்டு மாற்றங்களும் நிறைந்த இந்தக் காலகட்டத்தில் - ஒரு மொழியை, அதனுள் மட...

வீட்டுக் கடன் பெற்றோருக்கு நிம்மதி - வட்டியுயர்வு வாய்ப்புக் குறைகிறது 31.07.2026

நாட்டிலுள்ள வீட்டுக் கடன் பெற்றவர்கள், வணிகர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த பணவீக்கத் தரவுகள் வெளியாகியுள்ளன. அந்தத் தரவுகள் என்ன சொல்கின்றன? ஆகஸ்ட் மாதத்தில் ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை உயர்த்துமா? இதுபற்றிய செய்தியின் பின்னணியினை முன்வைக்கிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.

What are the rules for taking photos in Australia? - ஆஸ்திரேலியாவில் புகைப்படம் எடுப்பதற்கு முன் தெரிந்துகொள்ள வேண்டிய விதிமுறைகள் 31.07.2026

Whether you’re new to taking photographs, a social media content creator or a professional photographer, it’s important to be aware of where you can and can’t take photographs. Here’s what to consider before you take that perfect photograph, legally. - நீங்கள் சமூக ஊடகப் பதிவுகளை உருவாக்குபவராக இருந்தாலும், தொழில்முறை புகைப்படக் கலைஞராக இருந்தாலும் அல்லது புகைப்படம் எடுக்கத் தொடங்கியவராக இருந்தாலு...

இன்றைய செய்திகள்: 31 ஜூலை 2026 - வெள்ளிக்கிழமை 31.07.2026

SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வெள்ளிக்கிழமை 31/07/2026) செய்திகள். வாசித்தவர் : சரண்யா பாலகிருஷ்ணன்

இலங்கை: இந்த வார முக்கிய செய்திகள் 30.07.2026

எதிர்கட்சிகள் மற்றும் சட்டத்தரணிகளின் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதை அதிகரிக்க அரசு எடுத்துள்ள தீர்மானம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது ; ஒன்றிணைந்து செயற்படும் முயற்சியில் எதிர்கட்சிகள் பேச்சுவார்த்தை உள்ளிட்ட செய்திகளோடு “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சிக்காக விவரணமொன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன். Top news from Sri Lanka this week

பச்சிளங்குழந்தைக்கு சரியான முறையில் பாலூட்டுவது எப்படி? 30.07.2026

உலகம் முழுவதும் ஒவ்வோர் ஆண்டும் ஆகஸ்ட் 1 முதல் 7ஆம் தேதி வரை 'தாய்ப்பாலூட்டல் தொடர்பிலான விழிப்புணர்வு வாரம்’ கடைபிடிக்கப் படுகிறது. இந்தப்பின்னணியில் குழந்தைகளுக்கு பாலூட்டுவது தொடர்பில் தாய்மாருக்கான சில ஆலோசனைகளை வழங்குகிறார் புதிதாகப் பிறந்த குழந்தைகள் தொடர்பில் சிறப்பு நிபுணத்துவம் பெற்றவரும் குழந்தைகள் நல மருத்துவருமான Consultant Neonatologist & Paediatrician Dr லலிதா கிருஷ்ணன். அவரோடு உரையா...

தமிழ் சினிமா பாடல்கள் தான் அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்தியதா? 30.07.2026

அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்த, தமிழ்த் திரைப்படங்களில் பாடல்கள் எப்படிப் பயன்படுத்தப்பட்டன என்பது குறித்து ஒரு காணொலித் தொடர் 2022ஆம் ஆண்டு வெளியாகியது. பல பரிமாணங்களில் வெளியான பாடல்களை ஏழு பாகங்களாக, “Activism in Tamil Cinema Music” – தமிழ்த் திரைப் பாடல்களில் எழுச்சிப் போக்குகள் என்ற தலைப்பில் திரை இசை குறித்த ஒரு கலைக்களஞ்சியம் என்று அறியப்படும் சுபஶ்ரீ தணிகாசலம் அவர்களுடன் இணைந்து, தொகுத்து...

தனது மனைவிக்காக வேறொருவருக்கு சிறுநீரகம் தந்த கணவன் 30.07.2026

DonateLife வாரம் ஜூலை 26 முதல் ஆகஸ்ட் 2 வரை உறுப்பு மற்றும் திசு தானம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த ஆண்டுதோறும் கடைபிடிக்கப்படுகிறது. சிறுநீரகத்தை வேறொரு நபரிடமிருந்து பெற்றுக்கொண்ட மனைவி - அவருக்காக வழங்கியவரின் உறவினருக்கு தனது சிறுநீரகத்தை வழங்கிய கணவன் - இவர்களின் கதையை எடுத்து வருகிறார் செல்வி இன்பசேகரன். DonateLife Week ( July 26 - August 2 2026)

பிரபல பின்னணிப் பாடகர்கள் ரஞ்சித் கோவிந்த் மற்றும் சரண்யா ஸ்ரீனிவாஸ் – சிறப்பு நேர்காணல் 30.07.2026

Curative Vibes இசை நிகழ்ச்சிக்காக மெல்பன் வந்துள்ள பின்னணிப் பாடகர்கள் ரஞ்சித் கோவிந்த் மற்றும் சரண்யா ஸ்ரீனிவாஸ் ஆகியோருடன், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் தர்ஷினி பெனாய்ட் ஆகியோர் SBS மெல்பேர்ன் ஒலிப்பதிவுக் கூடத்திற்கு வருகை தந்து, தங்களின் இசைப் பயணம், அனுபவங்கள் மற்றும் Curative Vibes நடத்தும் இசை நிகழ்ச்சி குறித்து மனம் திறந்து உரையாடியுள்ளனர். அவர்களோடு உரையாடுகிறார் சரண்யா பாலகிருஷ்ணன்.

இன்றைய செய்திகள்: 30 ஜூலை 2026 - வியாழக்கிழமை 30.07.2026

SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வியாழக்கிழமை 30/07/2026) செய்திகள். வாசித்தவர் குலசேகரம் சஞ்சயன்.

விக்டோரியாவில் திடீர் திருப்பம்: Jacinta Allan ஏன் விலகினார்? Ben Carroll எப்படி Premier ஆனார்? 29.07.2026

Victoria மாநில அரசியலில் எதிர்பாராத தலைமை மாற்றம் ஏற்பட்டது குறித்தும், Premier Jacinta Allan பதவி விலகி, துணை Ben Carroll இந்த வாரம் Premier ஆக மாறிய அரசியல் நிகழ்வுகளையும் "செய்தியின் பின்னணி" நிகழ்ச்சி வழி விளக்குகிறார் றைசெல். Victoria’s leadership shake-up: Why did Jacinta Allan resign and how did Ben Carroll become Premier?

வங்கிகளின் Offset Account குறைபாடு: தெரியாமலே அதிக வட்டி கட்டிய வாடிக்கையாளர்கள் 29.07.2026

வீட்டுக்கடன் வட்டியை குறைக்க உதவும் ‘Offset Account’ சேவையில் குறைபாடுகள் காரணமாக, சில ஆஸ்திரேலியர்கள் தங்களுக்கே தெரியாமல் ஆயிரக்கணக்கான டொலர்களை கூடுதல் வட்டியாக செலுத்தியிருப்பதாக ASIC வெளியிட்டுள்ள புதிய அறிக்கை தெரிவித்துள்ளது. இது குறித்த செய்தியை எடுத்து வருகிறார் செல்வி இன்பசேகரன். Offset account errors leave home loan borrowers paying more interest

உலகக்கோப்பை கனவுகளுடன் வலம்வரும் நம்மவர் Jude Antony 29.07.2026

தனது வாழ்க்கையில் எதிர்பாராத திருப்பங்களை சந்தித்தபிறகு அதை ஒரு முடிவாக அல்ல, புதிய தொடக்கமாகக் கருதி, விடாமுயற்சியுடன் பயிற்சிகளை மேற்கொண்டு, தன்னம்பிக்கையுடன் கார் ஓட்டி, வீல்சேர் கால்பந்தில் தனது திறமையை வெளிப்படுத்தி, "உலகக் கோப்பை கனவுக்கு என் சக்கர நாற்காலி ஒரு தடையல்ல" என்று கூறும் ஜூட் லேண்ட் ஆண்டனி அவர்களுடன் ஓர் உரையாடல். அவரோடு உரையாடுகிறார் சரண்யா பாலகிருஷ்ணன்.

இசையால் தமிழர்களை இணைக்கும் கீதவாணி விருதுகள் 2026 29.07.2026

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் சிட்னி கிளை ஏற்பாடு செய்துள்ள “கீதவாணி விருதுகள் 2026”, ஆகஸ்ட் முதலாம் தேதி Sir Ian & Nancy Turbott Auditorium, Western Sydney University, Victoria Road, Parramatta NSW 2116 என்ற இடத்தில் நடைபெறவுள்ளது. ஆஸ்திரேலியா மற்றும் இலங்கையைச் சேர்ந்த பாடகர்கள், இசைக்கலைஞர்கள் பலர் இதில் பங்கேற்கின்றனர். இந்நிகழ்ச்சி குறித்து விளக்குகிறார் இச் சங்கத்தின் நி...

இன்றைய செய்திகள்: 29 ஜூலை 2026, புதன்கிழமை 29.07.2026

SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (புதன்கிழமை 29/07/2026) செய்திகள். வாசித்தவர்: மகேஸ்வரன் பிரபாகரன்.

மக்கள்தொகைக் கணக்கெடுப்பு 2026: தமிழர்கள் அறிய வேண்டியவை 28.07.2026

ஆஸ்திரேலியா முழுவதும், ஒரே ஓர் இரவில், வரும் ஆகஸ்ட் 11ஆம் தேதி, செவ்வாய்க்கிழமை, ஒவ்வொரு மனிதரும் – பச்சிளங்குழந்தை முதல் முதியவர் வரை - கணக்கிடப்படுவார்கள். இது வெறுமனே, ஃபெடரல் அரசு நிரப்பச் சொல்லும் ஒரு படிவம் அல்ல. அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு நமது பாடசாலைகள் எங்கே கட்டப்படும், மருத்துவமனைகளுக்கு எவ்வளவு நிதி செலவழிக்கப்படும், நமது தாய்மொழிச் சேவைகள் தொடருமா என்பதையெல்லாம் தீர்மானிக்கப் போவது இந்...

கறுப்பு ஜூலை தொடர்பாக இலங்கை நாடாளுமன்றத்தில் பேசப்பட்டது என்ன? 28.07.2026

கறுப்பு ஜூலை எனப்படும் 1983ம் ஆண்டு இலங்கை தலைநகர் கொழும்பு உட்பட தென் பகுதிகளிலும் மலையகப் பகுதிகளிலும் தமிழர்களுக்கு எதிராக இடம்பெற்ற வன்முறைகள் தொடர்பில் கடந்த வார நாடாளுமன்ற அமர்வில் சிறப்பு விவாதம் இடம்பெற்றது. இதில் ஆளுந்தரப்பினரும் எதிரணியினரும் பல்வேறு கருத்துக்களை முன்வைத்து உரையாற்றியதோடு தங்களது அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டார்கள். இது தொடர்பில் “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சி ஒன்றை முன...

சூதாட்ட நிறுவனங்களில் ஆஸ்திரேலியர்களின் ஓய்வூதிய பணம்: அதிர்ச்சியளிக்கும் புதிய தகவல்! 28.07.2026

சூதாட்ட நிறுவனங்களில் ஆஸ்திரேலியர்களின் ஓய்வூதிய பணம் முதலீடு செய்யப்படுவதாக புதிய அறிக்கை ஒன்று கூறுகிறது. இது குறித்த செய்தியை எடுத்து வருகிறார் செல்வி இன்பசேகரன். Australians’ retirement savings invested in gambling companies: Shocking new findings!

விக்டோரியா பிரீமியர் பதவியிலிருந்து Jacinta Allan விலகினார்! 28.07.2026

விக்டோரியா மாநில பிரீமியர் Jacinta Allan இன்று (ஜூலை 28) தனது பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்தார். இது குறித்த செய்தியை எடுத்து வருகிறார் செல்வி இன்பசேகரன். Jacinta Allan steps down as Victorian Premier!

இன்றைய செய்திகள்: 28 ஜூலை 2026 - செவ்வாய்க்கிழமை 28.07.2026

SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (செவ்வாய்க்கிழமை 28/07/2026) செய்திகள். வாசித்தவர் : செல்வி இன்பசேகரன். Today's highlights ( 28 July 2026 - Tuesday)

AusAlert சோதனை: உங்களுக்கு எச்சரிக்கை ஒலி வரவில்லை என்றால் என்ன செய்வது? 27.07.2026

ஆஸ்திரேலியா முழுவதும் ஒரே நேரத்தில் ஒலித்த AusAlert அவசர எச்சரிக்கை ஒலி. இது குறித்த செய்தியை எடுத்து வருகிறார் செல்வி இன்பசேகரன். AusAlert test: What should you do if you didn't receive the alert sound?

"If You Understood It, I've Failed" – IFFM 2026 opening movie director, R. Gowtham - “புரிந்தால் நான் தோற்றுவிட்டேன்” – மெல்பன் திரைப்பட விழாவிற்கு வரும் இயக்குனர் கௌதம் 27.07.2026

Ramalingam Gowtham's debut feature ‘Members of the Problematic Family,’ was screened at the Berlin International Film Festival, Berlinale. The movie opens the Indian Film Festival of Melbourne this August. The director and lead actor Karuththadaiyaan will attend the Australian premiere on 14 August. R. Gowtham speaks about his unflinching portrait of a funeral and a fractured family, and about the...

மேற்கு சிட்னி விமான நிலையத்தில் சரக்கு விமான போக்குவரத்து ஆரம்பம் 27.07.2026

Qantas-இன் முதல் சரக்கு விமானம் இன்று மேற்கு சிட்னி விமான நிலையத்தில் சேவையைத் தொடங்கியது. இது குறித்த செய்தியை எடுத்து வருகிறார் செல்வி இன்பசேகரன். Cargo flight services commence at Western Sydney Airport today

Ascultă podcastul SBS Tamil - SBS தமிழ் în Replaio

Radio și podcasturi într-o singură aplicație - gratuit și fără înregistrare. Instaleaz-o azi și nu rata lansarea

Descarcă din Google Play

Replaio nu este editorul podcasturilor; numele emisiunilor, coperțile și materialul audio aparțin autorilor lor și sunt distribuite prin fluxuri RSS publice