SBS

SBS Tamil - SBS தமிழ்

Independent news and stories from SBS Audio, connecting you to life in Australia and Tamil-speaking Australians. - தமிழ் பேசும் ஆஸ்திரேலியர்களுடனும், ஆஸ்திரேலிய வாழ்க்கையுடனும் இணைய உங்களுக்கு உதவும் பக்கசார்பற்ற செய்திகள் மற்றும் கதைகள்.

Vizitează neapărat site-ul podcastului și susține-i creatorul: www.sbs.com.au

Autor

SBS

Categorie

News

Site-ul podcastului

www.sbs.com.au

Cel mai nou episod

20 nov. 2026

Unde asculți?

Podcasturi în aplicație Replaio Radio În curând

Podcasturile ajung în curând în aplicație. Instaleaz-o acum și fii primul care descoperă o abordare complet nouă a podcasturilor

Descarcă din Google Play Instalează gratuit Android 10 mil.+ descărcări · nota 4,7+ iOS în curând

Episoade

2026 Census: ஏன் தமிழ் அமைப்புகள் ஒரே குரலில் அழைப்பு விடுக்கின்றன? 06.08.2026

ஆஸ்திரேலியாவில் ஆகஸ்ட் 11 (செவ்வாய்க்கிழமை) Census - மக்கள்தொகைக் கணக்கெடுப்பு நடைபெறுகிறது. இது தொடர்பாக ஆஸ்திரேலிய தமிழ் சமூகத்தின் சமூகத் தலைவர்களில் ஒருவரான ஆறுமுகம் ராஜீவன் அவர்கள் நம்முடன் உரையாடுகிறார். நாடு முழுவதும் சுமார் 30 தமிழ் அமைப்புகள் இணைந்து முன்னெடுத்து வரும் 2026 மக்கள்தொகைக் கணக்கெடுப்பு விழிப்புணர்வு குறித்து ராஜீவனோடு உரையாடுகிறார் றைசெல். Rajeevan is a well-known Tamil comm...

இருள் விழுங்க இயலா இசையாளர் 06.08.2026

வைக்கம் விஜயலட்சுமி பிரபல திரைப்படப் பின்னணிப் பாடகியும் காயத்ரிவீணை எனும் அரியதோர் இசைக்கருவி இசைப்பதில் தேர்ந்தவரும் ஆவார். வைக்கம் விஜயலட்சுமி அவர்கள் 2017ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா வந்திருந்த வேளை தனது இசைப்பயணம் குறித்தும் தனிப்பட்ட வாழ்க்கை குறித்தும் குலசேகரம் சஞ்சயனுடன் மனம் திறந்து பேசியிருந்தார், அந்த நேர்காணலின் மறு ஒலிபரப்பு இது.

ஆரோக்கியமான உணவு பொருட்களை தெரிவு செய்ய சுலபமான வழி! 06.08.2026

கடைகளில் உணவு பொருட்கள் வாங்கும் போது நாம் கவனிக்க வேண்டிய விடயங்கள் மற்றும் பைகளில் அடைக்கப்பட்ட உணவு பொருட்களில் காணப்படும் Health Star Rating என்றால் என்ன? அதனை எப்படி நாம் பயன்படுத்தவேண்டும் என்பதனை விளக்குகிறார் உணவுமுறை நிபுணரான பிரியா ஐயர் அவர்கள். அவரோடு உரையாடுகிறார் செல்வி இன்பசேகரன். What is the purpose of the Health Star Rating on food packages?

ஆஸ்திரேலியாவின் குடிவரவுக் கொள்கையில் புதிய மாற்றம்! 06.08.2026

ஆஸ்திரேலியாவில் அதிகரித்து வரும் நிகர வெளிநாட்டு குடியேற்றத்தை கட்டுப்படுத்தும் வகையில், skilled visa விண்ணப்பங்களை பரிசீலிக்கும் நடைமுறையில் பெடரல் அரசு மாற்றங்களை கொண்டுவந்துள்ளது. இது குறித்த செய்தியின் பின்னணியை எடுத்து வருகிறார் செல்வி இன்பசேகரன். Australia introduces new immigration policy changes

இன்றைய செய்திகள்: 06 ஆகஸ்ட் 2026 - வியாழக்கிழமை 06.08.2026

SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வியாழக்கிழமை 06/08/2026) செய்திகள். வாசித்தவர் குலசேகரம் சஞ்சயன்.

Cabin Baggage விதிகளில் அதிரடி மாற்றம் அறிவித்துள்ள விமான நிறுவனம்! 06.08.2026

ஆஸ்திரேலியாவின் குறைந்த கட்டண விமான நிறுவனமான Jetstar, தனது விமானங்களில் பயணிகள் எடுத்துச் செல்லும் cabin baggage தொடர்பான விதிகளில் முக்கிய மாற்றத்தை அறிவித்துள்ளது. இது குறித்த செய்தியை எடுத்து வருகிறார் செல்வி இன்பசேகரன். Airline introduces new Cabin Baggage rules for passengers

இலக்கை அடைந்தார், உயிர் நீத்தார்! 05.08.2026

ஒரு அசாதாரணமான மனிதரின் கதை. 82 வயதில், ஆஸ்திரேலியா முழுவதும் சைக்கிளில் பயணித்து, ஒரு கொடிய நோயுடன் போராடுபவர்களுக்காகக் குரல் கொடுத்த Bob Montgomery அவர்களின் கதை. தைரியத்தின் கதை; தியாகத்தின் கதை; இறுதியில், இதயத்தைத் தொடும் ஒரு விடைபெறலின் கதையும் கூட. Bob Montgomery அவர்களின் பயணம் குறித்த கதையை எடுத்து வருகிறார் குலசேகரம் சஞ்சயன்.

வாய் துர்நாற்றத்தை தடுப்பது எப்படி? 05.08.2026

பல் சுகாதாரம் குறித்த விழிப்புணர்வு வாரம் ஆகஸ்ட் 3ஆம் தேதி முதல் 9ஆம் தேதி வரை கடைப்பிடிக்கப்படுகிறது. இந்தப் பின்னணியில் பல் சுகாதாரம் தொடர்பில் நமக்கு எழக்கூடிய சில முக்கியமான கேள்விகளுக்குப் பதிலளிக்கிறார் குயின்ஸ்லாந்தில் பல ஆண்டுகள் பல் மருத்துவராக பணியாற்றிவரும் ராஜி அவர்கள். அவரோடு உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.

2026 Census: உங்கள் அடையாளமும், உங்கள் மொழியும் ஏன் முக்கியம்? 05.08.2026

நாட்டில் ஆகஸ்ட் 11 – எதிர்வரும் செவ்வாய்க்கிழமை நடைபெறும் – Census - மக்கள்தொகைக் கணக்கெடுப்பு குறித்து கலந்துரையாடுகின்றனர் தமிழ் சமூகத் தலைவர்களான திருநந்தகுமார், அனகன் பாபு மற்றும் ஐஸ்வர்யா ஆனந்த் ஆகியோர். ஒவ்வொருவரும் மக்கள்தொகைக் கணக்கெடுப்பில் பங்கேற்பது ஏன் அவசியம் என்பதையும், வீட்டில் பேசப்படும் மொழியாக தமிழை பதிவு செய்வதன் முக்கியத்துவத்தையும் அவர்கள் விவாதிக்கின்றனர். அவர்களோடு உரையாடுகி...

பறவைக் காய்ச்சல்: கோவிட்-19 பெருந்தொற்று போன்ற இன்னொரு அபாயமா? 05.08.2026

தெற்கு ஆஸ்திரேலியாவில் பறவைகளிடையே பெரும் உயிரிழப்புச் சம்பவம் உறுதிசெய்யப்பட்டதைத் தொடர்ந்து, பறவைக் காய்ச்சல் பரவுவதைத் தடுக்க முடியாது என்றும், குறிப்பிடத்தக்க இழப்புகள் தவிர்க்க முடியாதவை என்றும் ஃபெடரல் அரசு எச்சரித்துள்ளது. காட்டுப் பறவைகளால் ஏற்படும் தொற்று அபாயத்தைக் குறைப்பதற்காக, திறந்தவெளி முட்டை மற்றும் கோழி உற்பத்தியாளர்கள் தங்கள் கோழிகளை அடைத்து வைக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இத...

இன்றைய செய்திகள்: 5 ஆகஸ்ட் 2026 புதன்கிழமை 05.08.2026

SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (புதன்கிழமை 05/07/2026) செய்திகள். வாசித்தவர்: றைசெல். Today's Top News (5 August 2026 – Wednesday)

Census கணக்கெடுப்பு -ஏன் இது எமது சமூகத்துக்கு மிகவும் அவசியமானது? 04.08.2026

2026 Census -ஆஸ்திரேலிய மக்கள் தொகைக் கணக்கெடுப்பு ஆகஸ்ட் 11, செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது. இந்தக் கணக்கெடுப்பு ஏன் எமது சமூகத்துக்கு மிகவும் முக்கியமானது என எமது நேயர்களில் சிலர் தமது கருத்துகளை எம்முடன் பகிர்ந்துகொண்டனர். நிகழ்ச்சியாக்கம் மகேஸ்வரன் பிரபாகரன்.

இலங்கை: தமிழ், முஸ்லிம் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு வேண்டி பேச்சுவார்த்தை 04.08.2026

இலங்கையில் தமிழ், முஸ்லிம் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வு வேண்டி ஆறு கட்சிகளின் பிரதிநிதிகள், அதிபர் அநுர குமார திசாநாயக்க மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ ஆகியோரைச் சந்தித்து பேச்சுக்களை மேற்கொண்டார்கள். இது தொடர்பில் “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன். Sri Lanka: Talks sought to resolve the issues of Tamil and Muslim p...

தொழிற்சாலையில் தயாராகும் வீடுகள்: நாட்டின் வீட்டு நெருக்கடிக்கு புதிய தீர்வா? 04.08.2026

ஆஸ்திரேலியாவின் நீடித்து வரும் வீட்டு நெருக்கடிக்கு தீர்வு காண்பதுடன், நாட்டின் உற்பத்தித் துறையையும் மீண்டும் வலுப்படுத்த தொழிற்சாலையில் தயாரிக்கப்படும் வீடுகள் உதவக்கூடும் என புதிய ஆய்வறிக்கை ஒன்று தெரிவிக்கிறது. இது குறித்த செய்தியை எடுத்து வருகிறார் செல்வி இன்பசேகரன். Factory-Built homes: A new solution to Australia’s housing crisis?

இன்றைய செய்திகள்: 04 ஆகஸ்ட் 2026 - செவ்வாய்க்கிழமை 04.08.2026

SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (செவ்வாய்க்கிழமை 04/08/2026) செய்திகள். வாசித்தவர் : செல்வி இன்பசேகரன். Today's highlights ( 04 August 2026 - Tuesday)

விசா இல்லாமல் உலகை வலம் வரலாம்… எந்த நாட்டின் கடவுச்சீட்டு சக்தி வாய்ந்தது? 04.08.2026

விசா இல்லாமல் எத்தனை நாடுகளுக்குப் பயணம் செய்யலாம் என்பதன் அடிப்படையில் உலகின் சக்திவாய்ந்த கடவுச்சீட்டுகள் எவை என்ற புதிய பட்டியலை Henley & Partners நிறுவனம் வெளியிட்டுள்ளது.இதுகுறித்த செய்தியை எடுத்து வருகிறார் செல்வி இன்பசேகரன். Travel the world without a visa: Which country has the most powerful passport?

முடிவுக்கு வந்த வரிச் சலுகை... பெட்ரோல் விலை மீண்டும் உயருமா? 03.08.2026

ஆஸ்திரேலியாவில் வாகன ஓட்டிகளுக்கு வழங்கப்பட்டு வந்த எரிபொருள் வரிச் சலுகை (fuel excise cut) ஆகஸ்ட் 2 நள்ளிரவுடன் முடிவுக்கு வந்துள்ளது. இதனால் வரும் நாட்களில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் மீண்டும் அதிகரிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்த செய்தியை எடுத்து வருகிறார் செல்வி இன்பசேகரன். Fuel excise cut ends: What it means for petrol prices?

ஆஸ்திரேலியாவில் லாட்டரியில் அதிக பரிசுகளை வென்ற மாநிலம் எது தெரியுமா? 03.08.2026

ஆஸ்திரேலியாவில் கடந்த நிதியாண்டில் லாட்டரி அதிஷ்டலாபச் சீட்டு மூலம் கோடீஸ்வரர்களாக மாறியவர்களின் எண்ணிக்கையும், அதில் Divison One முதல் பிரிவு பரிசுகளை வென்ற பகுதிகளும் வெளியாகியுள்ளன. இது குறித்த செய்தியை எடுத்து வருகிறார் செல்வி இன்பசேகரன்.

அறிவியல் துறையில் அதி உயர் விருது பெற தேர்வாகியுள்ள தமிழர் 03.08.2026

ஆஸ்திரேலியாவின் முதன்மையான அறிவியல் விருதுகளில் ஒன்று, யூரேகா பரிசு. 19 பிரிவுகளில் ஆஸ்திரேலிய அருங்காட்சியகம் வழங்கும் யூரேகா பரிசுகளுக்கான இறுதிப் போட்டியில் 58 போட்டியாளர்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளனர். ஆஸ்திரேலிய அருங்காட்சியகத்தின் யூரேகா பரிசுகளின் வெற்றியாளர்கள் செப்டம்பர் 3ஆம் தேதி, வியாழக்கிழமை அன்று சிட்னி நகர மண்டபத்தில் நடைபெறும் விழாவில் அறிவிக்கப்படுவார்கள். இறுதிச் சுற்றிலுள்ள போட்டிய...

பூர்வீகக்குடி மக்களின் கலாச்சாரத் திருவிழா, Garma, என்றால் என்ன? 03.08.2026

ஒவ்வொரு ஆண்டும் ஆஸ்திரேலியாவின் வடக்கே அமைந்துள்ள Arnhem Land பகுதியில் நடைபெறும் Garma திருவிழா ஆஸ்திரேலியாவின் மிகப் பெரிய பூர்வீகக் குடிமக்களின் கலாச்சாரக் கூடமைப்பாகும். இந்த விழா Yolŋu மக்களின் வாழ்க்கை மற்றும் கலாச்சாரத்தை நான்கு நாட்கள் கொண்டாடும் முக்கிய நிகழ்வாக விளங்குகிறது. மேலும், பூர்வீகக் குடி மக்களைப் பாதிக்கும் சமூக, அரசியல் மற்றும் சுற்றுச்சூழல் பிரச்சினைகள் குறித்த உரையாடல்களுக்க...

இன்றைய செய்திகள்: 03 ஆகஸ்ட் 2026 - திங்கட்கிழமை 03.08.2026

SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (திங்கட்கிழமை 03/08/2026) செய்திகள். வாசித்தவர் குலசேகரம் சஞ்சயன்.

Stem cell : மருத்துவத்தின் எதிர்காலமா? தெரிந்துகொள்ள வேண்டிய உண்மைகள்! 02.08.2026

Stem cell (குருத்தணு) என்றால் என்ன, அதன் வகைகள், பயன்பாடுகள் மற்றும் குருத்தணு தானம் குறித்து விரிவாக உரையாடுகிறார் Royal North Shore மருத்துவமனையில் Haematologist-ஆக பணியாற்றும் டாக்டர் பூமகள் குமார் அவர்கள். அவரோடு உரையாடுகிறார் செல்வி இன்பசேகரன்.

இந்தியா & தமிழ்நாடு: கடந்த 7 நாட்கள் செய்திகளின் தொகுப்பு 02.08.2026

தமிழகத்தில் மீண்டும் பெரும் பிரச்சனையாக மாறும் மேகதாது அணை விவகாரம்; “தொகுதி மறுசீரமைப்பை ஆதரிப்பவர்கள் தமிழ்நாட்டின் எட்டப்பர்கள்” என்ற ராகுல் காந்தியின் விமர்சனம்; திருச்சி கிழக்கு உள்ளிட்ட 5 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலுக்கு ஆக.24 வரை தடை நீட்டிப்பு உள்ளிட்ட செய்திகளோடு "செய்திகளின் பின்னணி" நிகழ்ச்சிக்காக இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ். India & Tamil Nadu: News highlights from the pas...

இலங்கையில் இரு உயர் அதிகாரிகளுக்கு மரண தண்டனை தீர்ப்பு! 02.08.2026

இலங்கையில் உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் தடுக்கத் தவறிய குற்றச்சாட்டிற்காக முன்னாள் காவல்துறை மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோருக்கு கடந்த வெள்ளிக்கிழமை மரண தண்டனை விதிக்கப்பட்டது. இது தொடர்பில் “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.  Two senior officials sentenced to death...

இந்த வார ஆஸ்திரேலிய செய்திகள் (26 ஜூலை – 1 ஆகஸ்ட் 2026) 01.08.2026

ஆஸ்திரேலியாவின் இந்த வார (26 ஜூலை – 1 ஆகஸ்ட் 2026) முக்கிய செய்திகளின் தொகுப்பு. வாசித்தவர்: றைசெல். Top news from Australia this week (26 July – 1 August 2026)

Ascultă podcastul SBS Tamil - SBS தமிழ் în Replaio

Radio și podcasturi într-o singură aplicație - gratuit și fără înregistrare. Instaleaz-o azi și nu rata lansarea

Descarcă din Google Play

Replaio nu este editorul podcasturilor; numele emisiunilor, coperțile și materialul audio aparțin autorilor lor și sunt distribuite prin fluxuri RSS publice