SBS

SBS Tamil - SBS தமிழ்

News TA ↓ 2198 episodes

Independent news and stories from SBS Audio, connecting you to life in Australia and Tamil-speaking Australians. - தமிழ் பேசும் ஆஸ்திரேலியர்களுடனும், ஆஸ்திரேலிய வாழ்க்கையுடனும் இணைய உங்களுக்கு உதவும் பக்கசார்பற்ற செய்திகள் மற்றும் கதைகள்.

Author

SBS

Category

News

Podcast website

www.sbs.com.au

Latest episode

Jul 11, 2026

Where to listen?

Podcasts in the app Replaio Radio Coming soon

Podcasts are coming to the app soon. Install now and be the first to see a whole new take on podcasts

Get it on Google Play Install for free Android almost 10M downloads · 4.8 rating iOS soon

Episodes

நான்கு பணயக் கைதிகளின் உடல்களை ஹமாஸ் கையளித்ததையடுத்து, இஸ்ரேல் பாலஸ்தீன கைதிகளை விடுவித்தது. 27.02.2025

ஆஸ்திரேலியா மற்றும் உலகின் இன்றைய முக்கிய நிகழ்வுகள்: 28 பிப்ரவரி 2025 வெள்ளிக்கிழமை.

விசா கிடைக்கும் முன்பே மரணிக்கும் பெற்றோர் : கால தாமதம் ஏன்? அமைச்சர் விளக்கம் 27.02.2025

உள்துறை அமைச்சகத்தில் பரிசீலனைக்கும் காத்திருக்கும் பெற்றோர் விசா விண்ணப்பங்களின் எண்ணிக்கை இருமடங்காக அதிகரித்துள்ளன என்றும் சில விசா விண்ணப்பதாரர்கள் 30 முதல் 50 ஆண்டுகள் வரை காத்திருக்க வேண்டியிருக்கும் என பெடரல் அரசின் மதிப்பாய்வில் முன்னர் கண்டறியப்பட்டிருந்தது. பல தசாப்தங்களாக நிலுவையில் உள்ள பெற்றோர் விசாக்களுக்கு தீர்வு காணும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக பெடரல் அரசு கூறியுள்ளது. இது...

பிராந்திய பகுதிகளில் பணிபுரிபவர்களுக்கு நிரந்தர விசா ஏன் தாமதமாகிறது? 27.02.2025

494 அல்லது 491 துணைப்பிரிவு விசாவில் ஆஸ்திரேலியாவிற்கு பணிபுரிய வந்த பலர் நிரந்தரக் குடியுரிமைக்காக விண்ணப்பித்து காத்திருப்பதாக கூறப்படுகிறது. என்ன காரணம்? விளக்குகிறது இந்த விவரணம். SBS News -இற்காக Sunil Awasthi ஆங்கிலத்தில் தயாரித்த விவரணத்தை தமிழில் தயாரித்து வழங்குகிறார் செல்வி.

Vaishnavite scholar Swami Venkatesh explanation on importance of Tamil in worship - கருவறைக்குள் தமிழ் செல்லலாமா? வழிபாட்டுக்கு தமிழ் அவசியமா? –வெங்கடேஷ் சுவாமி பதில் 27.02.2025

Sri U Ve Thirukudanthai Dr. Venkatesh Swami is a renowned scholar and Upanyasam exponent in Sri Vaishnavism. Alongside his profound knowledge of Vedic scriptures and Divya Prabandham, he is also a medical practitioner by profession. His discourses, known for their clarity and depth, have inspired countless devotees across the world, making complex philosophical concepts accessible to all. In this...

அசத்தல் பெண் முனைவர் சந்திரபுஷ்பம் 27.02.2025

'கிராமத்துக் குயில்' முனைவர் சந்திரபுஷ்பம் அவர்கள் நாட்டுப்புறப் பாடல்களை எழுதி பாடுவது மட்டுமன்றி, சுற்றுச் சூழலைப் பாதுகாக்க வேண்டுமென்ற குரல் கொடுத்து வருபவர், எழுத்தாளர் என்று பன்முகம் கொண்டவர்.

Superannuation வைத்திருப்பவர்கள் மேலும் பணக்காரர்களாக மாறுவர் – ஆய்வு முடிவு 27.02.2025

இந்நாட்டில் ஓய்வு பெறப் போகின்றவர்கள் , உலகின் மிகப் பெரிய பணக்காரர்களாக மாறும் வாய்ப்புள்ளது என்று புதிய ஆராய்ச்சி தெரிவிக்கிறது. Superannuation என்ற ஓய்வூதிய நிதி பெறுபவர்கள், 2031ஆம் ஆண்டுக்குள் உலகின் பணக்கார மூத்த குடிமக்கள் குழுக்களில் ஒன்றாக மாறக்கூடும் என்று Super Members Council of Australia என்ற அமைப்பு வெளியிட்டுள்ள அண்மைய அறிக்கை சுட்டிக் காட்டுகிறது.

ஏப்ரல் முதல் Health Insurance – நலக் காப்பீடு கட்டணம் உயர்கிறது! 27.02.2025

ஆஸ்திரேலியா மற்றும் உலகின் இன்றைய முக்கிய நிகழ்வுகள்: 27 பெப்ரவரி 2025 வியாழக்கிழமை. வாசித்தவர்: றைசெல்.

Finding affordable and inclusive after-school activities - பாடசாலை நேரத்திற்குப் பின்னர் மலிவு விலையில் அனைவரையும் உள்ளடக்கிய செயல்பாடுகளை எப்படிக் கண்டறியலாம்? 26.02.2025

After-school activities offer children and teenagers many benefits, but the costs can quickly add up. Fortunately, Australia has many affordable and inclusive options, you just need to know where to look. - பாடசாலை நேரத்திற்குப் பின்னர், குழந்தைகள் மற்றும் பதின்ம வயதினர் எப்படியான செயல்பாடுகளில் ஈடுபடுகிறார்கள் என்பது புதிய திறன்களைக் கற்றுக்கொள்வது முதல் புதிய நண்பர்களை உருவாக்குவது வரை பல நன்மைக...

India and America to be linked by the world's longest undersea cable! - உலகின் மிக நீளமான கடலுக்கடி கேபிள் மூலம் அமெரிக்காவையும் இந்தியாவையும் இணைக்க திட்டம்! 26.02.2025

Meta, the company that owns platforms like Facebook and WhatsApp, has announced a plan to connect the United States and India with the world's longest undersea cable, spanning 50,000 km. This information is presented by RaySel. - உலகின் மிக நீளமான 50,000 கிமீ தொலைவு கடலுக்கடி கேபிள் மூலம் அமெரிக்காவையும் இந்தியாவையும் இணைக்கும் ஒரு தொலைநோக்கு திட்டத்தை Facebook, WhatsApp போன்ற தளங்களை கொண்டிருக்கு...

இந்த வார இந்திய & தமிழக பேசுபொருள்! 26.02.2025

இந்தியாவின் மகா கும்பமேளா மற்றும் தமிழக மீனவர்கள் வேலை நிறுத்தப் போராட்டம் பற்றிய செய்திகளின் பின்னணியை முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் தமிழ்ப் பிரபாகரன்.

Medicare-க்கு கூடுதல் நிதி ஒதுக்க அரசு ஊழியர்களின் எண்ணிக்கையை குறைப்போம்-Peter Dutton 25.02.2025

SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (புதன்கிழமை 26/02/2025) செய்திகள். வாசித்தவர் : செல்வி.

நாட்டில் பெட்ரோல் விலை 3 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைந்துள்ளது! 25.02.2025

நாட்டில் பெட்ரோல் விலை மூன்று ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைந்துள்ளது என்று ஆஸ்திரேலிய போட்டி மற்றும் நுகர்வோர் ஆணையம் (ACCC) கண்டறிந்துள்ளது. இது குறித்த செய்தியை தருகிறார் செல்வி.

Bridging விசாவில் உள்ள புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு தீர்வு வழங்க 100 ஆண்டுகள் ஆகலாம் - Greens 25.02.2025

பாதுகாப்பு கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்ட சுமார் 7000 புகலிடக் கோரிக்கையாளர்கள் குடிவரவு அமைச்சரின் தனிப்பட்ட ரீதியிலான பரிசீலனைக்காக கடந்த ஜூலை மற்றும் நவம்பர் 2024 -இக்கு இடையில் சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்களில் வெறும் 24 விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலிக்கப்பட்டுள்ளன. இந்த வேகத்தில் போனால் அனைத்தையும் பரிசீலிக்க 100 ஆண்டுகள் ஆகும் என்று Greens செனட்டர் David Shoebridge விமர்சித்துள்ளார். இது குறித்...

3.3 மில்லியன் முதல் பரிசு வென்ற அதிஷ்டசாலியை தேடுகிறது Saturday Lotto! 25.02.2025

NSW-ஐ சேர்ந்த ஒருவர் கடந்த வாரயிறுதியில் நடைபெற்ற Saturday Lotto அதிஷ்டலாபச் சீட்டு குலுக்கலில் முதல் பரிசாக சுமார் $3.3 மில்லியன் டாலர்கள் வென்றுள்ளார். இவரை Lotto தொடர்புக்கொள்ள தேடி வருகிறது. இது குறித்த செய்தியை தருகிறார் செல்வி.

புதிய கருத்துக்கணிப்பு முடிவுகளிலும் ஆளும் லேபர் கட்சி தொடர்ந்து பின்னடைவு! 25.02.2025

SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (செவ்வாய்க்கிழமை 25/02/2025) செய்திகள். வாசித்தவர் : செல்வி.

வெளிநாட்டு ஓட்டுநர் உரிமம் வைத்திருப்பவர்கள் NSW-இல் வாகனம் ஓட்டலாமா? 24.02.2025

ஆஸ்திரேலியாவின் மற்றைய மாநிலம் அல்லது வெளிநாட்டு ஓட்டுநர் உரிமம் வைத்திருப்பவர்கள் NSW மாநிலத்தில் வாகனம் ஓட்ட விரும்பினால் NSW சாலை விதிகளைப் பின்பற்றும் பட்சத்தில் முதல் 3 அல்லது 6 மாதங்களுக்கு NSW மாநிலத்தில் வாகனம் ஓட்டலாம். இது குறித்த செய்தியை தருகிறார் செல்வி.

Can breast cancer be prevented? - மார்பக புற்றுநோய் வராமல் தடுக்க முடியுமா? 24.02.2025

How often should you self-check your breasts? And what should you look for? Is breast cancer preventable? Sydney Chris O'Brien Lifehouse’s Breast Surgeon Associate Prof Sanjay Warrier spoke with Selvi on SBS Tamil program about breast cancer awareness and preventive measures. - மார்பகப் புற்றுநோய் வரும் ஆபத்தை குறைக்கும் வழிமுறைகள் மற்றும் குறிப்பாக தெற்காசிய பெண்கள் மார்பகப் புற்றுநோய் குறித்து வ...

இந்தியா & தமிழ்நாடு: கடந்தவார நிகழ்வுகளின் தொகுப்பு 24.02.2025

தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தும் மத்திய அரசின் மும்மொழி கொள்கை, சீமானின் நாம் தமிழர் கட்சியில் இருந்து முக்கிய நிர்வாகியான காளியம்மாள் விலகல் மற்றும் நடிகர் விஜய்யுடன் கூட்டணி வைக்கிறாரா புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி? போன்ற செய்திகளின் பின்னணியுடன் இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்

Medicare Bulk billing-க்கு $8.5 பில்லியன் கூடுதல் நிதி ஒதுக்குவோம் - லேபர் 24.02.2025

SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (திங்கட்கிழமை 24/02/2025) செய்திகள். வாசித்தவர் : செல்வி.

'ஆயிரக்கணக்கானோருக்கு அவசரமாக ஆஸ்திரேலிய குடியுரிமை': எதிர்கட்சியின் குற்றச்சாட்டும், அரசின் பதிலும் 23.02.2025

ஆயிரக்கணக்கானோருக்கு அரசு அவசரமாக ஆஸ்திரேலிய குடியுரிமை தருகிறது என்று எதிர்கட்சி முனவைக்கும் குற்றச்சாட்டு தொடர்பாக எழுந்திருக்கும் அரசியல் சர்ச்சை குறித்த “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சி. முன்வைப்பவர் றைசெல்.

BBC 'ஆனந்தி அக்கா' SBS தமிழுக்கு வழங்கிய நேர்முகம்! 23.02.2025

“ஆனந்தி அக்கா” என்று அன்புடன் அழைக்கப்பட்ட பிபிசி தமிழோசையின் முன்னாள் ஊடகவியலாளர் திருமதி. ஆனந்தேஸ்வரி சூரியப்பிரகாசம் அவர்கள் லண்டனில் காலமானார். பிபிசி தமிழோசை வானொலியில் அறிவிப்பாளராக சுமார் 30 ஆண்டுகளுக்கும் மேல் பணியாற்றிய அவர் 2005 ஆம் ஆண்டு பணி ஓய்வு பெற்றார். அவ்வேளையில், சுமார் இருபது ஆண்டுகளுக்கு முன்பு, ஆனந்தி அவர்களை SBS தமிழ் ஒலிபரப்புக்காக நேர்முகம் கண்டவர் றைசெல்.

ஆஸ்திரேலிய, உலக செய்திகளின் இந்த வார தொகுப்பு 21.02.2025

ஆஸ்திரேலியாவிலும், உலகிலும் இந்த வாரம் (16 – 22 பெப்ரவரி 2025) நடந்த முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு. பதிவு செய்யப்படும் நாள்: 22 பெப்ரவரி 2025 சனிக்கிழமை. வாசித்தவர்: றைசெல்.

மார்ச் முதல் சுமார் 50 லட்சம் பேருக்கு Centrelink கொடுப்பனவு அதிகரிப்பு 21.02.2025

ஓய்வூதியம் பெறுபவர்கள், வாடகை வீடுகளில் வசிப்பவர்கள் மற்றும் மாணவர்கள் ஆகியோருக்கு அடுத்த மாதம் அவர்களின் Centrelink கொடுப்பனவு அதிகரிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த செய்தியை தருகிறார் செல்வி.

சர்வதேச தாய்மொழி தினம் கொண்டாடும் ஈஸ்ட்வூட் தமிழ் பாடசாலை மாணவர்கள் 21.02.2025

இன்று சர்வதேச தாய்மொழி தினம் கொண்டாடப்படுகிறது. அதனை கொண்டாடும் முகமாக சனிக்கிழமை தோறும் நடைபெறும் ஈஸ்ட்வூட் தமிழ் பாடசாலைக்கு சென்று அங்கு படிக்கும் மாணவர்கள் தமிழ் கற்கும் அனுபவங்களை பதிவுசெய்தோம். ஈஸ்ட்வூட் தமிழ் பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர் வழங்கும் தமிழ் மொழி கற்றல் மற்றும் கற்பிக்கும் அனுபவ பகிர்வுடன் விவரணம் ஒன்றை தயாரித்து முன் வைக்கிறார் செல்வி.

இலங்கையின் இந்த வார முக்கிய நிகழ்வுகள் 21.02.2025

இலங்கையின் ஆளும் கட்சியான தேசிய மக்கள் சக்தி தலைமையிலான அரசின் முதலாவது வரவு செலவுத் திட்டம் நாடாளுமன்றத்தில சமர்ப்பிக்கப்பட்டுள்ளது; கொழும்பில் நீதிமன்றத்தினுள் துப்பாக்கிச்சூடு நடந்துள்ளது; உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான செயற்பாடுகளில் அரசு கவனம் செலுத்தியுள்ளது உள்ளிட்டசெய்திகளோடு “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சிக்காக விவரணமொன்றை முன்வைக்கிறார் நமதுஇலங்கைச் செய்தியாளர் மதிவாணன்

Listen to the SBS Tamil - SBS தமிழ் podcast in Replaio

Radio and podcasts in one app - free, with no sign-up. Install today and do not miss the launch

Get it on Google Play

Replaio is not a podcast publisher; show names, artwork and audio belong to their authors and are distributed through public RSS feeds.