SBS

SBS Tamil - SBS தமிழ்

News TA ↓ 2198 episodes

Independent news and stories from SBS Audio, connecting you to life in Australia and Tamil-speaking Australians. - தமிழ் பேசும் ஆஸ்திரேலியர்களுடனும், ஆஸ்திரேலிய வாழ்க்கையுடனும் இணைய உங்களுக்கு உதவும் பக்கசார்பற்ற செய்திகள் மற்றும் கதைகள்.

Author

SBS

Category

News

Podcast website

www.sbs.com.au

Latest episode

Jul 11, 2026

Where to listen?

Podcasts in the app Replaio Radio Coming soon

Podcasts are coming to the app soon. Install now and be the first to see a whole new take on podcasts

Get it on Google Play Install for free Android almost 10M downloads · 4.8 rating iOS soon

Episodes

இங்கிருந்து சில வெளிநாடுகளை விமர்சிப்பவர்களை அந்த நாடுகள் தீர்த்துக் கட்ட திட்டம் – ASIO 21.02.2025

ஆஸ்திரேலியாவில் பல்வேறு வழிகளில் பாதுகாப்பு சவால்கள் வெளிவருகின்றன என்றும் ஆஸ்திரேலியாவில் உள்ள மக்களை குறைந்தது மூன்று நாடுகள் குறிவைத்து, எதிர்ப்பாளர்களை கொல்லும் சதித்திட்டங்களை ASIO முறியடித்துள்ளது என்று ஆஸ்திரேலிய பாதுகாப்பு புலனாய்வு அமைப்பின் இயக்குனர் ஜெனரல் Mike Burgess தனது வருடாந்திர அச்சுறுத்தல் மதிப்பீட்டு உரையில் தெரிவித்துள்ளார். இது குறித்த செய்தியின் பின்னணியை தயாரித்து வழங்குகிற...

தேர்தல் வாக்குகளுக்காக லேபர் அரசு அவசரமாக குடியுரிமை வழங்குகிறது - Peter Dutton 21.02.2025

SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வெள்ளிக்கிழமை 21/02/2025) செய்திகள். வாசித்தவர் : செல்வி.

ஒலிபரப்பாளர் முதல் SLBC இயக்குனர் வரை 20.02.2025

திருமதி அருந்ததி ஶ்ரீரங்கநாதன் ஒரு கலைஞர். கர்நாடக சங்கீதம், வீணை, பரதநாட்டியம் என்று பல கலைகளைக் கற்றுத் தேர்ந்தவர். எவரும் துணியாத பல நிகழ்ச்சிகளைத் தனது முயற்சியால் மேடையேற்றி, இரசிகர்கள் மத்தியில் மட்டுமின்றி சக கலைஞர்களினதும் பேராதரவைப் பெற்றவர். இலங்கை அரசு வழங்கும் கலாசூரி தேசிய விருது முதல் பல விருதுகளை வென்றுள்ள இவர், பணித் துறையிலிருந்து ஓய்வு பெற்றிருந்தாலும் இறக்கும் வரை பணி செய்வதிலிர...

ஆஸ்திரேலியா அறிவோம் : உலக ஏழு அதிசயங்களில் ஒன்று பவளப்பாறை! 20.02.2025

உலகின் ஏழு இயற்கை அதிசயங்களில் ஒன்று என்றும், சீனப் பெருஞ்சுவரை விடவும் பெரியது என்றும், விண்வெளியிலிருந்து பார்த்தாலும் தெரியக்கூடிய அளவு பெரியதுமான “வாழும் அதிசயம்” என்று பல பெருமைகளுக்குரியது ஆஸ்திரேலியாவின், குயின்ஸ்லாந்து மாநிலத்திலுள்ள Great Barrier Reef எனப்படும் பேரரண் பவளப்பாறைத் திட்டு (Great Barrier Reef). இது குறித்த அரிய தகவல்களை “நம்ம ஆஸ்திரேலியா” நிகழ்ச்சி மூலம் முன்வைக்கிறார் கீதா...

விக்டோரியா மாநிலத்தில் மூவாயிரம் அரசு ஊழியர்களை குறைக்க அரசு திட்டம்! 20.02.2025

ஆஸ்திரேலியா மற்றும் உலகின் இன்றைய முக்கிய நிகழ்வுகள்: 20 பெப்ரவரி 2025 வியாழக்கிழமை. வாசித்தவர்: றைசெல்.

சிட்னியில் பேட்டரியால் ஏற்பட்ட தீ விபத்தில் சர்வதேச மாணவன் பலி! 19.02.2025

சிட்னியில் வாழ்ந்து வந்த ஒரு இளம் சர்வதேச மாணவர், மின்-பைக் பேட்டரியால் ஏற்பட்ட தீ விபத்தில் பலியானார். இது குறித்த செய்தியை தருகிறார் செல்வி.

'பாஸ்மதி அரிசி' – பெயர் யாருக்கு சொந்தம்? இந்தியா–பாகிஸ்தான் மோதல் வலுக்கிறது! 19.02.2025

உலகில் உணவு பொருளின் பெயர்களுக்கு நாடுகள் உரிமை கோருவது அதிகரித்து வருகிறது. அந்த வரிசையில் இப்போது “பாஸ்மதி அரிசி” பெயர் யாருக்கு சொந்தம் என்ற சட்ட ரீதியான போட்டியில் இந்தியாவும் பாகிஸ்தானும் இறங்கியுள்ளன. இது குறித்த “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சியை முன்வைக்கிறார்: றைசெல்.

From Australia to Kollywood - ஆஸ்திரேலியத் தமிழர் '2K Love Story' படத்தின் கதாநாயகனானது எப்படி? 19.02.2025

Jagaveer, the lead actor of 2K Love Story, took an unconventional path, leaving Australia to pursue his passion for cinema in the Tamil film industry in Chennai. In this interview, he shares his journey into films, the challenges of reverse migration, and his future in the industry with RaySel. - தமிழ்நாட்டில் பிரபல இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி, கடந்த வாரம் வெளியான “2K லவ் ஸ்டோரி” திர...

விண்ணிலிருந்து வந்துகொண்டிருக்கும் விண்கல் மோதினால் உலகம் அழிந்துவிடுமா? 19.02.2025

விண்வெளியிலிருந்து பாய்ந்துவரும் Asteroid 2024 Y-R-4 விண்கல் பூமி மீது மோதும் வாய்ப்பு அதிகரித்துள்ளது. இதனால் உலகம் அழிந்துவிடும் வாய்ப்பு உண்டா என்று எழுகின்ற கேள்விகளோடு தயாரிக்கப்பட்ட விவரணம். ஆங்கில மூலம் SBS-Newsக்காக Sam Dover. SBS – தமிழுக்காக தயாரித்தவர்: றைசெல்.

ரிசர்வ் வங்கியின் வட்டி வீதக் குறைப்பு - நமக்கு நன்மை தருமா? பாதிக்குமா? 19.02.2025

கடந்த செவ்வாய்க்கிழமை ரிசர்வ் வங்கி பண விகிதத்தை 0.25 சதவீதம் குறைப்பதாக அறிவித்தது. இதன் பின்னணி காரணம் மற்றும் இதனால் வீட்டுச் சந்தையில் ஏற்படவுள்ள மாற்றங்கள் குறித்து விரிவாக அலசுகிறார் நியூஜென் கன்சல்டிங் ஆஸ்திரேலேசியாவின் தலைமை நிர்வாக அதிகாரி, பொருளாதாரம், நிதி மற்றும் விற்பனை ஆகிய துறைகளில் இருபது ஆண்டுகளுக்கும் மேற்பட்ட அனுபவம் கொண்ட இமானுவேல் எமில்ராஜா அவர்கள். அவரோடு உரையாடுகிறார் செல்வி...

சத்குரு சாயின் வரலாற்றை மேடையேற்றும் பரதநாட்டிய நிகழ்வு! 19.02.2025

AusTam Fine Arts எதிர்வரும் மார்ச் மாதம் முதலாம் தேதி "சத்குரு சாய்" என்ற பரதநாட்டிய நடன நிகழ்ச்சி ஒன்றை அரேங்கேற்றவுள்ளது. இந்நிகழ்வு குறித்த தகவலை எமது ஒலிப்பதிவுக்கூடம் வரை வந்து பகிர்ந்து கொள்கிறார் AusTam Fine Arts-இன் அஸ்விதா செந்தில்குமரன். அவரோடு உரையாடுகிறார் செல்வி.

இந்த வார தமிழ்நாட்டின் பேசுபொருள்! 19.02.2025

தமிழ்நாட்டில் மீண்டும் இந்தி திணிப்பு என்ற குற்றச்சாட்டு மற்றும் மணிப்பூரில் ஜனாதிபதி ஆட்சி பற்றிய செய்திகளின் பின்னணியை முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் தமிழ்ப் பிரபாகரன்.

நாட்டின் முக்கிய வங்கிகள் 8 நாட்களில் வட்டி வீதத்தை குறைக்கின்றன! 19.02.2025

SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய ( புதன்கிழமை 19/02/2025) செய்திகள். வாசித்தவர் : செல்வி.

உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பினால் சமூகத்தில் வாழ அனுமதிக்கப்பட்ட மூவர் நவ்ரூவிற்கு நாடு கடத்தல் 18.02.2025

காலவரையற்ற குடிவரவு தடுப்பு காவலை சட்ட விரோதமாக உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்ததை அடுத்து சமூகத்தில் விடுவிக்கப்பட்ட சுமார் 200-இற்கு அதிகமானவர்களில் மூவருக்கு நீண்டகால மீள்குடியேற்ற விசா வழங்க நவ்ரூ ஒப்புக்கொண்டதாக கடந்த ஞாயிற்றுக்கிழமை உள்துறை அமைச்சர் Tony Burke அறிவித்தார். இது குறித்த செய்தியின் பின்னணியை தயாரித்து வழங்குகிறார் செல்வி.

ஐந்து ஆண்டுகளில் முதல் முறையாக நாட்டில் வட்டி வீதக் குறைப்பை ரிசர்வ் வங்கி அறிவித்தது! 18.02.2025

2020 -ஆம் ஆண்டிற்கு பிறகு ஐந்து ஆண்டுகளில் RBA நாட்டின் முதல் வட்டி விகிதக் குறைப்பை அறிவித்துள்ளது. இது குறித்த செய்தியை தருகிறார் செல்வி.

NSW பொதுவெளியில் இனவெறிக் கருத்து கூறினால் சிறை - சட்டத்திருத்தம் முன்மொழிவு! 17.02.2025

SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய ( செவ்வாய்க்கிழமை 18/02/2025) செய்திகள். வாசித்தவர் : செல்வி.

'உலகம் புகழும்' கலைஞர், அவரை நாமும் புகழ்வோம் வாரீர்! 17.02.2025

புகழ்பெற்ற நட்டுவனார், குரு, கே. என். தண்டாயுதபாணி பிள்ளையின் காலத்தால் அழியாத மரபுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வான, 'உலகம் புகழும்,' அவருடைய நேசத்துக்குரிய மற்றும் அரிதாகவே காணப்பட்ட படைப்புகளை மேடைக்கு எடுத்து வருகிறது. சிதம்பரம் ஆர். சுரேஷ் மற்றும் ஷோபனா சுரேஷ் ஆகியோரின் பிரமிக்க வைக்கும் நடன அமைப்புடன் மறு வடிவமைப்பு செய்யப்பட்ட இந்த நிகழ்ச்சியில், ஷோபனா சுரேஷ் மற்றும் சமர்ப்பனா நடன நிறுவனத்தின...

NSW-இல் அதிவேகமாக வாகனம் ஓட்டி அதிகம் கமராவால் பிடிபட்ட இடம் எது தெரியுமா? 17.02.2025

NSW சாலைகளில் வேகமாக பயணிக்கும் வாகனத்தை படம்பிடிக்கும் கமராக்களால் படம் பிடிக்கப்பட்ட முதல் 10 வேகமாக பயணித்த வாகனங்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. இது குறித்த செய்தியை தருகிறார் செல்வி.

NSW நாடாளுமன்றத்தில் பொங்கல் விழா! 17.02.2025

தமிழ்க் கலை மற்றும் பண்பாட்டுக் கழகம் NSW மாநில நாடாளுமன்றத்தில் நடத்திய 9-வது ஆண்டு பொங்கல் விழா கடந்த வியாழக்கிழமை பிப்ரவரி 13-ஆம் தேதி நடைப்பெற்றது. SBS தமிழ் சார்பில் நாமும் அந்த நிகழ்வில் கலந்துக்கொண்டோம். NSW மாநில நாடாளுமன்றத்தில் நடந்த பொங்கல் விழா நிகழ்வின் தொகுப்பு. தயாரித்து வழங்குகிறார் செல்வி.

இந்தியா & தமிழ்நாடு: கடந்தவார நிகழ்வுகளின் தொகுப்பு 17.02.2025

இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமெரிக்கா அதிபர் டொனால்ட் ட்ரம்பின் சந்திப்பு, டெல்லி ரயில் நிலையத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 18 பேர் பலி, மத்திய பட்ஜெட் மீது திமுக கடுமையான விமர்சனம் மற்றும் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை கடுமையான வார்த்தை மோதல் போன்ற செய்திகளின் பின்னணியுடன் இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்

ஐஸ்கிரீம் உங்களுக்கு நல்லது என்று சில ஆய்வுகள் சொல்கின்றன. ஏன்? 17.02.2025

சில ஆண்டுகளாக, ஐஸ்கிரீம் எமது உடலுக்கு நல்லது என்று பல்வேறு ஆராய்ச்சியாளர்கள் கூறி வருகிறார்கள். இது குறித்து, சமூக ஊடகங்கள் மட்டுமின்றி பல பிரதான ஊடகங்களும் செய்திகள் வெளியிடுகின்றன.

ஆஸ்திரேலியாவில் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் வீடு வாங்க தடை! 17.02.2025

SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய ( திங்கட்கிழமை 17/02/2025) செய்திகள். வாசித்தவர் : செல்வி.

கோடிக்கணக்கில் பெருகியிருக்கும் இந்த மீன்களை எப்படி அழிப்பது? 16.02.2025

European carp என்ற மீன் இனம் ஆஸ்திரேலியாவில் அழிக்கப்படவேண்டிய pest அல்லது தீங்குயிரி என்று சொல்லப்படுகிறது. இந்த வகை மீன்களை கட்டுப்படுத்துவது அல்லது கொல்வது என்பது சவாலாக மாறியுள்ளது. இந்த மீனின் பின்னணி கதையையும், சவாலையும் விளக்குகிறார் ஊடகத்துறையில் பல ஆண்டுகளாக பணியாற்றும் இரா.சத்தியநாதன் அவர்கள். அவரோடு உரையாடுகிறார்: றைசெல்.

ஆஸ்திரேலிய, உலக செய்திகளின் இந்த வார தொகுப்பு 15.02.2025

ஆஸ்திரேலியாவிலும், உலகிலும் இந்த வாரம் (9 – 15 பெப்ரவரி 2025) நடந்த முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு. பதிவு செய்யப்படும் நாள்: 15 பெப்ரவரி 2025 சனிக்கிழமை. வாசித்தவர்: றைசெல்.

Cultural burning: using fire to protect from fire and revive Country - தீ கொண்டு காட்டுத்தீயைக் கட்டுப்படுத்தல்: பூர்வீகக் குடிமக்களின் வியத்தகு அறிவு 14.02.2025

Did you know that Indigenous Australians have been using fire to care for the land for tens of thousands of years? Evidence show that cultural burning practices not only help reduces the intensity and frequency of wildfires but also plays a vital role in maintaining healthy ecosystems. Experts share insights on the latest evidence behind this ancient practice. - பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக, பூர்வீ...

Listen to the SBS Tamil - SBS தமிழ் podcast in Replaio

Radio and podcasts in one app - free, with no sign-up. Install today and do not miss the launch

Get it on Google Play

Replaio is not a podcast publisher; show names, artwork and audio belong to their authors and are distributed through public RSS feeds.