SBS

SBS Tamil - SBS தமிழ்

News TA ↓ 2198 episodes

Independent news and stories from SBS Audio, connecting you to life in Australia and Tamil-speaking Australians. - தமிழ் பேசும் ஆஸ்திரேலியர்களுடனும், ஆஸ்திரேலிய வாழ்க்கையுடனும் இணைய உங்களுக்கு உதவும் பக்கசார்பற்ற செய்திகள் மற்றும் கதைகள்.

Author

SBS

Category

News

Podcast website

www.sbs.com.au

Latest episode

Jul 11, 2026

Where to listen?

Podcasts in the app Replaio Radio Coming soon

Podcasts are coming to the app soon. Install now and be the first to see a whole new take on podcasts

Get it on Google Play Install for free Android almost 10M downloads · 4.8 rating iOS soon

Episodes

Right To Disconnect சட்டம் ரத்து செய்யப்படும் – எதிர்க்கட்சி: பின்னணி என்ன? 13.03.2025

எதிர்வரும் பெடரல் தேர்தலில் வெற்றி பெற்றால், தற்போதைய லேபர் அரசில் கடந்த ஆண்டு நிறைவேற்றப்பட்டு, தற்போது நடைமுறையிலிருக்கும் Right To Disconnect - தொழிலாளியை முதலாளி வேலை நேரம் முடிந்த பின்னர் தொடர்புகொள்ள உரிமை இல்லை எனும் சட்டம் ரத்து செய்யப்படும் என்று எதிர்க்கட்சியான Coalition மீண்டும் உறுதிபடுத்தியுள்ளது. இது குறித்த செய்தியின் பின்னணி நிகழ்ச்சியை முன்வைக்கிறார் றைசெல்.

மத அல்லது ஆன்மீக நம்பிக்கை தான் நன்னெறிக்கு வழியா? 13.03.2025

டாக்டர் சுப்ரமணியம் அனந்தராம் Curtin பல்கலைக்கழகத்தில் சர்வதேச வர்த்தகத்தில் மூத்த விரிவுரையாளர். "மத அல்லது ஆன்மீக நம்பிக்கையுள்ளவர்கள் நல்ல நெறிமுறையுடன் பணிபுரிய வழிசெய்கிறதா?" என்ற தலைப்பில் அவர் வெளியிட்ட கட்டுரை எமது கவனத்தை ஈர்த்துள்ளது. தனது பணி குறித்தும், இந்திய வேலைத்தளங்களில் நெறிமுறை குறித்தும் டாக்டர் சுப்ரமணியம் அனந்தராம், குலசேகரம் சஞ்சயனுடன் உரையாடுகிறார்.

கோவிட் பரவி ஐந்து ஆண்டுகள் - அடுத்த தொற்று பரவலை எதிர்கொள்ள நாம் தயாரா? 13.03.2025

கோவிட் ஒரு உலகளாவிய தொற்று பரவல் என்று அறிவித்து கடந்த மார்ச் 11-ஆம் தேதியோடு ஐந்தாண்டுகள் நிறைவடைந்துள்ளது. கோவிட் போன்று மற்றுமொரு தொற்று பரவல் தவிர்க்கமுடியாதது என்று கூறப்படும் நிலையில் அவ்வாறு வேறொரு தொற்று பரவல் ஏற்பட்டால் அதனை எதிர்கொள்ள நாம் தயாராக இருக்கிறோமா என்ற கேள்வியும் எழுப்பப்படுகிறது. இது குறித்து ஆங்கிலத்தில் Abbie O'Brien எழுதிய விவரணத்தை தமிழில் தருகிறார் செல்வி.

அமெரிக்க பொருட்களையல்ல, ஆஸ்திரேலிய பொருட்களையே வாங்குவோம் – பிரதமர் வேண்டுகோள் 13.03.2025

ஆஸ்திரேலியா மற்றும் உலகின் இன்றைய முக்கிய நிகழ்வுகள்: 13 மார்ச் 2025 வியாழக்கிழமை. வாசித்தவர்: றைசெல்.

நிரந்தர விசா விண்ணப்பத்தின் சிறிய பிழையினால் விசா நிராகரிக்கப்பட்ட பெர்த் பெண்! 12.03.2025

பெர்த் பெண் ஒருவரின் நிரந்தர விசா விண்ணப்பத்தில் இடம்பெற்ற ஒரு சிறிய பிழையினால் அவரின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளது. தற்போது அவர் 35 நாட்களுக்குள் நாட்டை விட்டு வெளியேறுமாறு கூறப்பட்டுள்ளது. இது குறித்த செய்தியை தருகிறார் செல்வி.

சிட்னி வருவோர் மறவாமல் செல்லும் Blue Mountains பின்னணி தெரியுமா? 12.03.2025

கோடிக்கணக்கான ஆண்டுகளாக ஆஸ்திரேலிய நிலவமைப்பில் உண்டான மாற்றங்களால் உருவானவை ப்ளூ மவுன்டன்ஸ். சுமார் பத்தாயிரம் சதுர கி.மீ. நிலப்பரப்பில் பரந்து கிடக்கும் ப்ளூ மவுன்டன்ஸ் பகுதி 2000-ஆம் ஆண்டு முதல் யுனெஸ்கோவின் உலகப் பாரம்பரியக் களங்களுள் ஒன்றெனும் சிறப்பைப் பெற்றுள்ளது. “நம்ம ஆஸ்திரேலியா” நிகழ்ச்சி மூலம் இந்த மலைத் தொடரின் சிறப்புகளை விளக்குகிறார் கீதா மதிவாணன் அவர்கள்.

Pakiboy²: பார்க்கின்சன் நோயுடன் போராடும் ஒரு இளம் கலைஞரின் படைப்பு 12.03.2025

பார்க்கின்சன் நோய் என்ற நரம்பியல் குறைபாட்டினால் பாதிக்கப்பட்டிருந்தாலும், 2000 ஆம் ஆண்டு இலண்டனில் அவர் உருவாக்கிய நடனப் படைப்புகளின் ஆவணங்களையும், இருபது வருடங்கள் முதிர்ந்து விட்ட, தற்போதைய உடல் இயக்கத்தில் உருவான அவரது மேடை நடன நிகழ்ச்சியையும் உள்ளடக்கிய ஒரு அரங்க நிகழ்வை Pakiboy² என்ற தலைப்பில் உருவாக்கியுள்ளார் ஜீவா பார்த்திபன். அவரை நேர்காணல் செய்கிறார் குலசேகரம் சஞ்சயன்.

ஆங்கிலம் தாய்மொழியாக இல்லாத பெண்களுக்கு ஏன் வேலை கிடைப்பது கடினம்? 12.03.2025

மொழி அடிப்படையிலான பாகுபாடு பெரும்பாலும் இனம் அல்லது மத அடிப்படையிலான பாகுபாட்டை விட குறைவாகவே பதிவாகிறது என்றும் ஆங்கிலம் தாய்மொழி அல்லாத பின்னணியைச் சேர்ந்த பெண்கள் ஆண்களை விடக் குறைவாகவே பணியில் அமர்த்தப்படுவதாக புதிய ஆய்வு ஒன்று கண்டறிந்துள்ளது. இது குறித்த செய்தியின் பின்னணியை தருகிறார் செல்வி.

மெல்பன் மருத்துவர்களின் கொண்டாட்டம் 12.03.2025

IMDA என்ற மருத்துவர், பல் மருத்துவர் மற்றும் வைத்தியம் சார்ந்த துறையை சார்ந்தவர்களின் அமைப்பு மெல்பனில், மார்ச் 15ஆம் தேதி மாலை ஐந்து மணியிலிருந்து இரவு பத்து மணி வரை நடைபெறவுள்ளது. இது பற்றிய தகவல்களைப் பகிர்ந்து கொள்கிறார் வைத்தியர் அனில் போத்தாப்பு அவர்கள். அவரோடு உரையாடுகிறார் குலசேகரம் சஞ்சயன்.

இன்று முதல் ஆஸ்திரேலிய அலுமினியம்/எஃகு மீது அமெரிக்கா 25% சதவீதம் வரி விதிக்கிறது! 12.03.2025

SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (புதன்கிழமை 12/03/2025) செய்திகள். வாசித்தவர் : செல்வி.

NSW-இல் பெண்களை பாலியல் வன்கொடுமை செய்த இந்திய பின்னணி கொண்டவருக்கு 40 ஆண்டு சிறை! 11.03.2025

NSW இந்திய சமூகத்தில் மிகவும் அறியப்பட்ட சமூக தலைவரான ஒருவருக்கு பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்திற்காக 40 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இது குறித்த செய்தியை தருகிறார் செல்வி.

அதிகமான பெண்களிடம் ஓய்வு காலத்தில் போதுமான பணம் இருக்காது - புதிய ஆய்வு 10.03.2025

SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (செவ்வாய்க்கிழமை 11/03/2025) செய்திகள். வாசித்தவர் : செல்வி.

Understanding mortgage brokers - வீட்டுக்கடன்பெற Mortgage Broker தேவையா? நமது தகவலை அவர்கள் தவறாக பயன்படுத்துவார்களா? 10.03.2025

Jayaprakash Arumugam from Hardee Mortgage Solutions is a qualified mortgage broker based in Sydney, specializing in assisting first-time homebuyers, property investors, self-managed super funds, and clients seeking land and construction loans or refinancing. In this episode, he discusses the benefits of working with a mortgage broker, the importance of maintaining a good credit score, and addresse...

'Periyar is the reason why Tamil Nadu has progressed so much!' - 'தமிழ்நாடு இவ்வளவு முன்னேறுவதற்கு பெரியார் தான் காரணம்!' 10.03.2025

The Sahitya Akademi Award for Tamil, one of the prestigious literary honours given for English and 20 Indian languages, has been awarded to historian A. R. Venkatachalapathy in 2024.. - ஆங்கிலம் மற்றும் 20 இந்திய மொழிகளுக்காக வழங்கப்படும் சாகித்ய அகாடமி விருதுகளில் தமிழ் மொழிக்கான 2024ஆம் ஆண்டு விருதுக்கு வரலாற்று ஆய்வாளர் ஆ. இரா. வேங்கடாசலபதி அவர்களுக்கு வழங்கப்படுகிறது. இந்த விருது ‘திருநெல்வேலி...

மேற்கு ஆஸ்திரேலிய மாநில தேர்தலில் Labor கட்சி மீண்டும் பெரு வெற்றி ! 10.03.2025

மேற்கு ஆஸ்திரேலிய மாநில தேர்தலில் Premier Roger Cook தலைமையிலான Labor கட்சி மீண்டும் எதிர்பாராத அளவு வெற்றி பெற்றுள்ளது. இது குறித்த செய்தியின் பின்னணியை எடுத்து வருகிறார் குலசேகரம் சஞ்சயன்.

Alfred சூறாவளி பாதிப்பினால் சுமார் 3,000 Insurance (காப்பீடு) விண்ணப்பங்கள் தாக்கல்! 10.03.2025

SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (திங்கட்கிழமை 10/03/2025) செய்திகள். வாசித்தவர் : செல்வி.

ஆஸ்திரேலிய, உலக செய்திகளின் இந்த வார தொகுப்பு 07.03.2025

ஆஸ்திரேலியாவிலும், உலகிலும் இந்த வாரம் (2 – 8 மார்ச் 2025) நடந்த முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு. பதிவு செய்யப்படும் நாள்: 8 மார்ச் 2025 சனிக்கிழமை. வாசித்தவர்: றைசெல்.

Alfred சூறாவளி - Gold Coast கடற்கரைக்கு சென்றால் $16,000 அபராதம் விதிக்கப்படலாம்! 07.03.2025

Alfred சூறாவளி நாளை சனிக்கிழமை கரையை கடக்கும் என்று கணிக்கப்பட்டுள்ள நிலையில குயின்ஸ்லாந்தில் Gold Coast கடற்கரைக்கு அலைகளை பார்க்க செல்பவர்கள் மற்றும் கடலில் அலைகளில் surfboard கொண்டு சறுக்கி விளையாடும் surfers-களுக்கு $16,000 அபராதம் விதிக்கப்படும் என்று Gold Coast city council எச்சரித்துள்ளது. இது குறித்த செய்தியை தருகிறார் செல்வி.

இலங்கையின் இந்த வார முக்கிய நிகழ்வுகள் 07.03.2025

இலங்கையில் உள்ளூராட்சி மன்ற தேர்தல் தொடர்பான அறிவிப்பு வெளிவந்துள்ளது; வடக்கு கிழக்கில் போதைப்பொருள் பாவனை அதிகரிப்பை சுட்டிக்காட்டி நடவடிக்கை கூறிய தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் - இவை உள்ளிட்ட செய்திகளோடு “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சிக்காக விவரணமொன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.

Alfred சூறாவளி இன்றும் நாளையும் ஏற்படுத்தவுள்ள தாக்கம் என்ன? 07.03.2025

1974-ஆம் ஆண்டுற்கு பிறகு நாட்டின் தென்கிழக்கு கடற்கரை பகுதிகளை தாக்கும் முதல் சூறாவளியான Alfred சூறாவளி நாளை சனிக்கிழமை அதிகாலை Noosa மற்றும் Coolangatta இடையே கரையை கடக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. Alfred சூறாவளியின் வேகம் தற்போது சற்று குறைந்துள்ள போதிலும், அதன் தாக்கம் உயிருக்கு ஆபத்தானதாகவே இருக்கும் என அஞ்சப்படுகிறது. இது குறித்த பிந்தைய செய்தியின் பின்னணியை தயாரித்து வழங்குகிறார் செல்வி.

வாகனம் மோதி பெண் மரணம் - இலங்கையர் கைது! 07.03.2025

விக்டோரியா மாநிலத்தில் Wonthaggi புறநகரில் நடைபாதையில் நடந்து சென்றுக்கொண்டிருந்த ஒரு பெண்மணி மற்றும் அவர் கூட்டிவந்த நாய் மீதும் கார் ஒன்று மோதியதில் மரணம் அடைந்துள்ளனர். இது குறித்த செய்தியை தருகிறார் செல்வி.

ஆல்ஃபிரட் சூறாவளி: மின்சாரம் இல்லாமல் ஆயிரக்கணக்கானோர்; உதவிக்கு அழைப்புகள் 06.03.2025

ஆஸ்திரேலியா மற்றும் உலகின் இன்றைய முக்கிய நிகழ்வுகள்: 07 மார்ச் 2025 வெள்ளிக்கிழமை.

Alfred சூறாவளி: 'சந்திக்கத் தயார், ஆனால் இதுவும் கடந்து போகும்' 06.03.2025

Brisbane மற்றும் Sunshine Coast இடையே கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படும் Alfred சூறாவளி, கனமழை மற்றும் மணிக்கு சுமார் 130 கிலோமீட்டர் வேகத்தில் அழிவுகரமான பலத்த காற்றையும் கொண்டுவரும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. Alfred சூறாவளி வருவதற்கு முன்னர் தம்மை எப்படித் தயார்ப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் என்று, எமது நேயர்களில் இருவர் – பிரிஸ்பன் நகரில் வசிப்பவரும், அங்கு ஒலிக்கும் Radio...

ஆஸ்திரேலியாவின் எரிசக்தி விலை, அணுசக்தி, குடியேற்றவாசிகளை உள்வாங்கல்: அமைச்சர் Chris Bowen பதில் 06.03.2025

நாட்டில் உயர்ந்துள்ள எரிசக்தி விலை உயர்வு, renewable energy திட்டங்களுக்கு சமூக எதிர்ப்பு, அணுசக்தி தொடர்பான அரசின் நிலைப்பாடு போன்ற கேள்விகளுக்கு ஆஸ்திரேலியாவின் Minister for Energy and Climate Change (எரிசக்தி மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர்) Chris Bowen அவர்கள் பதிலளிக்கிறார். அவரோடு உரையாடியவர் றைசெல். இந்த நேர்முகம் ஆங்கிலத்தில் அமைகிறது.

லிபரல் ஆட்சியில் Work From Home முறை முடிவுக்கு வரும் – Dutton; என்ன நன்மை? பாதிப்பு? 06.03.2025

எதிர்கட்சியான Coalition நடைபெறவிருக்கும் பெடரல் தேர்தலில் வெற்றி பெற்றால், Public Servants எனப்படும் அரசு ஊழியர்கள் Work From Home எனப்படும் வீட்டிலிருந்து வேலை செய்யும் பணி முறையை முடிவுக்கு கொண்டு வருவோம் என்று எதிர்கட்சித் தலைவர் பீட்டர் Dutton அறிவித்துள்ளார். இது குறித்த செய்தியின் பின்னணி. முன்வைப்பவர்: றைசெல்.

Listen to the SBS Tamil - SBS தமிழ் podcast in Replaio

Radio and podcasts in one app - free, with no sign-up. Install today and do not miss the launch

Get it on Google Play

Replaio is not a podcast publisher; show names, artwork and audio belong to their authors and are distributed through public RSS feeds.