SBS
SBS Tamil - SBS தமிழ்
Independent news and stories from SBS Audio, connecting you to life in Australia and Tamil-speaking Australians. - தமிழ் பேசும் ஆஸ்திரேலியர்களுடனும், ஆஸ்திரேலிய வாழ்க்கையுடனும் இணைய உங்களுக்கு உதவும் பக்கசார்பற்ற செய்திகள் மற்றும் கதைகள்.
Where to listen?
Podcasts in the app Replaio Radio Coming soonPodcasts are coming to the app soon. Install now and be the first to see a whole new take on podcasts
Episodes
ஆட்சிக்கு வந்தால் Citizenship test-இல் புதிய கேள்விகள் சேர்க்கப்படும்: எதிர்க்கட்சி 19.03.2025 2:07
எதிர்வரும் பெடரல் தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சிக்கு வந்தால், ஆஸ்திரேலிய குடியுரிமை பெறுவதற்கான தேர்வில் சில புதிய கேள்விகள் சேர்க்கப்படும் என Coalition - எதிர்க்கட்சி கூட்டணி முன்மொழிந்துள்ளது. இதுகுறித்த செய்தியைத் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.
The AI Election: Will artificial intelligence influence how Australia votes? - SBS Examines : AI தேர்தல் : ஆஸ்திரேலிய வாக்குகளை செயற்கை நுண்ணறிவு பாதிக்குமா? 19.03.2025 7:44
Experts say AI could have significant impacts on democracy and trust. - ஜனநாயகம் மற்றும் அதன் மீதான நம்பிக்கையில் செயற்கை நுண்ணறிவு AI குறிப்பிடத்தக்க தாக்கங்களை ஏற்படுத்தக்கூடும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
பெரியாரின் எழுத்துக்கள் அரசுடைமையாவதற்கு ஏன் அனுமதி மறுக்கிறோம்? – கி. வீரமணி பதில் 19.03.2025 16:45
திராவிடர் கழகத் தலைவர் திரு. கி. வீரமணி அவர்கள் தற்போது ஆஸ்திரேலியா வருகை தந்துள்ளார். அவர் சிட்னியில் இருந்த போது, அவரை SBS ஒலிபரப்புக் கூடத்தில் சந்தித்து றைசலும் குலசேகரம் சஞ்சயனும் உரையாடியிருந்தார்கள். மூன்று பாகங்களாகப் பதிவேறும் அந்த உரையாடலின் இரண்டாம் பாகம் இது.
ஆஸ்திரேலியாவுக்கு நிரந்தர விசா என்று ஆசைகாட்டும் மோசடி முகவர்களை அடையாளம் காண்பது எப்படி? 19.03.2025 14:12
ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, கனடா போன்ற நாடுகளுக்கான குடியேற்ற விசா வாங்கித்தருகிறோம் என்று தமிழ்நாட்டில் ஆசைகாட்டும் மோசடி Migration Agents அதிகரித்துவருகின்றனர். இந்த பின்னணியில், இப்படியான மோசடி முகவர்களை அடையாளம் காண்பது எப்படி என்றும், மக்களை ஏமாற்ற அவர்கள் பயன்படுத்தும் யுக்திகள் என்ன என்பதையும், அனுபவங்களோடு விளக்குகிறார் பிரகாஷ் நடராஜன் அவர்கள். நியூசிலாந்து நாட்டிலிருந்துகொண்டு தனது பிரபல Y...
ஆண் நடனக் கலைஞர் இல்லையென்று யார் சொன்னது? 19.03.2025 8:04
ஆய்வுகள் காட்டுவது போல், நடனத்தில் பெண்களின் பங்கேற்பு ஆண்களை விட மிக அதிகம், சில அறிக்கைகள் ஆஸ்திரேலியாவில் நடனக் கலைஞர்களில் சுமார் 89% பெண்கள் என்று கூறுகின்றன. ஆஸ்திரேலியாவில் மட்டுமல்ல, உலகம் முழுவதும் தென்னிந்திய சமூகத்தினரிடையே புள்ளிவிவரங்கள் இன்னும் துருவப்படுத்தப்பட்டுள்ளன. பவஜன் குமார் ஒரு உணர்திறன் மிக்க பரதநாட்டிய நடனக் கலைஞர், வசீகரிக்கும் மேடை இருப்பு மற்றும் இயக்கத்தில் துல்லியம் க...
Alfred சூறாவளி & புதிய அமெரிக்க வரி பெடரல் பட்ஜெட்டில் பற்றாக்குறை ஏற்படுத்தும்! 18.03.2025 8:02
லேபர் அரசின் நான்காவது பெடரல் பட்ஜெட் அடுத்த வாரம் சமர்ப்பிக்கப்படவுள்ள நிலையில் அரசின் செலவுகள் குறித்து நேற்று Queensland Media Club-இல் கருவூலக்காப்பாளர் Jim Chalmers உரையாற்றினார். அப்போது எதிர்வரும் நிதிநிலை அறிக்கையில் பற்றாகுறை இருக்கும் என்று கூறினார். இது குறித்த செய்தியின் பின்னணியை வழங்குகிறார் செல்வி.
உக்ரைன் போர் நிறுத்ததிற்கு ரஷ்யா ஒப்புதல் - ஆனால் முழுமையாக தாக்குதலை நிறுத்த மாட்டோம்! 18.03.2025 4:29
SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (புதன்கிழமை 19/03/2025) செய்திகள். வாசித்தவர் : செல்வி.
அதிரடி மாற்றங்களுடன் அறிமுகமாகிறது ஆஸ்திரேலியாவின் புதிய $5 நோட்டு! 18.03.2025 2:31
ஆஸ்திரேலியாவின் $5 நாணயத்தாளின் வடிவமைப்பு மாற்றியமைக்கப்படுவதாகவும் அதிலிருக்கும் மகாராணியின் உருவப்படத்திற்கு பதிலாக, பூர்வீகக் குடிமக்கள் இந்த நாட்டுடன் கொண்டுள்ள உறவை கொண்டாடும் ஒரு புதிய வடிவமைப்பு இடம்பெறவுள்ளதாகவும் ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இதுகுறித்த செய்தியைத் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.
வெப்பம் அதிகரிப்பதால் இதயநோய் ஏற்படும் ஆபத்தும் அதிகரிக்கிறது- ஆஸ்திரேலிய ஆய்வு 18.03.2025 2:35
ஆஸ்திரேலியர்களுக்கு ஏற்படும் இதய நோய் பாதிப்புக்களில் 7.3 சதவீதத்திற்கு தீவிர வெப்ப அலைகள் காரணமாகின்றன என்று புதிய ஆராய்ச்சி கூறுகிறது.இதுகுறித்த செய்தியைத் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.
NSW-இல் கடந்த ஆண்டு மிகவும் அதிகமாக மொத்தம் 85 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்! 18.03.2025 4:20
SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (செவ்வாய்க்கிழமை 18/03/2025) செய்திகள். வாசித்தவர் : செல்வி.
கட்டுமானப் பணியில் ஈடுபடும் சிலருக்கு குணப்படுத்த முடியாத நுரையீரல் நோய் அபாயம் 17.03.2025 3:14
Engineered stone தயாரிப்பு பணியில் ஈடுபட்ட தொழிலாளர்களுக்கு சிலிகோசிஸ் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதனை தொடர்ந்து கடந்த ஆண்டு அதனை ஆஸ்திரேலியா தடை செய்தது. தற்போது சிட்னியில் சாலையில் சுரங்கப்பாதை அமைக்கும் பணியில் ஈடுபட்ட தொழிலாளர்களில் சுமார் 13 பேர் இந்த கொடிய நுரையீரல் நோயால் பாதிக்கப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது குறித்த செய்தியை தருகிறார் செல்வி.
'சிறு வயதிலேயே திராவிடர் கழக கொள்கைகளால் ஈர்க்கப்பட்டேன்' - கி. வீரமணி 17.03.2025 16:48
திராவிடர் கழகத் தலைவர் திரு. கி. வீரமணி அவர்கள் தற்போது ஆஸ்திரேலியா வருகை தந்துள்ளார். அவர் சிட்னியில் இருந்த போது, அவரை SBS ஒலிபரப்புக் கூடத்தில் சந்தித்து றைசலும் குலசேகரம் சஞ்சயனும் உரையாடியிருந்தார்கள். மூன்று பாகங்களாகப் பதிவேறும் அந்த உரையாடலின் முதல் பாகம் இது.
இரத்த தானம் செய்வதில் நமது நலமும் கலந்துள்ளது. எப்படி? 17.03.2025 13:15
குடியேற்றவாசிகள் இரத்த தானம் செய்ய எளிதாக முன்வருவதில்லை என்றும், இதற்கு அவர்களிடம் இருக்கும் தவறான புரிதல்களே காரணம் என்றும் கூறப்படுகிறது. இந்த பின்னணியில் இரத்த தானம் செய்வதில் ஒருவருக்கு கிடைக்கும் நன்மைகளையும், ஒருவரின் உடல் நலம் எப்படி இரத்த தானம் மூலம் மேம்படுகிறது என்றும் விளக்குகின்றனர் சிட்னியில் குடும்ப மருத்துவர்களாக பணியாற்றும் டாக்டர் நளாயினி சுகிர்தன் & டாக்டர் பரன் சிதம்பரகுமார் ஆக...
'தவறான சாக்குப்போக்குகளின்' கீழ் Labor கட்சி சில கட்டாய தண்டனைச் சட்டங்களை அவசரமாக இயற்றியதா? 17.03.2025 6:35
Duralலில் கண்டுபிடிக்கப்பட்ட வெடி பொருட்கள் நிறைந்த Carvan ஒரு குற்றவியல் மோசடி வேலை என்று விசாரணைகளின் பின்னர் கண்டு பிடிக்கப்பட்டது. இந்த சம்பவத்தைப் பயன்படுத்தி அரசு அதி தீவிர சட்டங்களை அறிமுகப்படுத்தியிருக்கிறது என்றும், அந்த சட்டங்கள் நீக்கப்பட வேண்டும் என்றும் Greens கட்சி கோரிக்கை முன்வைத்துள்ளது. இது குறித்த செய்தியின் பின்னணியை எடுத்து வருகிறார் குலசேகரம் சஞ்சயன்.
சூறாவளி Alfred பெடரல் பட்ஜெட்டில் $1.2 பில்லியன் பாதிப்பை ஏற்படுத்தும் - நிதியமைச்சர் 17.03.2025 4:39
SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (திங்கட்கிழமை 17/03/2025) செய்திகள். வாசித்தவர் : செல்வி.
ஆஸ்திரேலிய, உலக செய்திகளின் இந்த வார தொகுப்பு 14.03.2025 4:54
ஆஸ்திரேலியாவிலும், உலகிலும் இந்த வாரம் (9 – 15 மார்ச் 2025) நடந்த முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு. பதிவு செய்யப்படும் நாள்: 15 மார்ச் 2025 சனிக்கிழமை. வாசித்தவர்: றைசெல்.
First Nations languages: A tapestry of culture and identity - பூர்வீகக் குடி மக்கள் மொழிகளின் பன்முகத்தன்மை 14.03.2025 9:50
Anyone new to Australia can appreciate how important it is to keep your mother tongue alive. Language is integral to your culture and Australia's Indigenous languages are no different, connecting people to land and ancestral knowledge. They reflect the diversity of Australia’s First Nations peoples. More than 100 First Nations languages are currently spoken across Australia. Some are spoken by onl...
Wombat குட்டியை தாயிடமிருந்து பிரித்த சுற்றுலா பயணியின் விசா ரத்து செய்யப்படுமா? 14.03.2025 2:35
ஒரு wombat குட்டியை அதன் தாயிடமிருந்து பறிக்கும் வீடியோவை வெளியிட்ட அமெரிக்க சுற்றுலா பயணி ஒருவரின் விசாவை குடிவரவு அதிகாரிகள் மதிப்பாய்வு செய்து வருகின்றனர். இது குறித்த செய்தியை தருகிறார் செல்வி.
NSW-இல் Japanese encephalitis வைரஸ் தொற்றினால் மேலும் ஒரு நபர் பலி 14.03.2025 2:41
NSW மாநிலத்தில் கடந்த பெப்ரவரி மாதம் கொசுக்களினால் பரவும் Japanese encephalitis வைரஸினால் ஒருவர் இறந்ததை தொடர்ந்து இந்த ஆண்டு மற்றுமொருவர் Japanese encephalitis வைரஸினால் இறந்துள்ளார். இது குறித்த செய்தியை தருகிறார் செல்வி.
ஒரு நாளை எப்படி அமைத்துக்கொள்ளவேண்டும்? எவ்வளவு சாப்பிட வேண்டும்? – சித்தா மருத்துவர் பதில் 14.03.2025 15:01
Dr. Y.R.மானக்சா M.D. (சித்தா) அவர்கள் தமிழக அரசின் சித்த மருத்துவ துறையின் கீழ் பாளையங்கோட்டையில் இயங்கும் அரசினர் சித்த மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் இணைப் பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர் சிறந்த சித்த மருத்துவ நிபுணர் மட்டுமல்லாது சித்த மருத்துவ நூல் எழுத்தாளர் மற்றும் பேச்சாளரும் ஆவார். ஆஸ்திரேலியாவுக்கு வருகை தந்திருந்த அவர், நமது SBS ஒலிப்பதிவு கூடத்தில் வைத்து உரையாடினார...
இலங்கையின் இந்த வார முக்கிய நிகழ்வுகள் 14.03.2025 8:34
உள்ளூராட்சி அமைப்புக்களுக்கான தேர்தலுக்கு கட்டுப்பணம் செலுத்தும் பணியில் தமிழ் கட்சிகள் தீவிரம்; வடக்கு, கிழக்கு மாகாணங்களில் படையினர் வசமுள்ள காணிகளை விடுவிக்குமாறு நாடாளுமன்றத்தில் கோரிக்கை; அனுராதபுரத்தில் பெண் வைத்தியர் பாலியல் வன்கொடுமை .இலங்கை முழுவதும் வைத்தியர்கள் ஒரு நாள் பணி புறக்கணிப்பு போராட்டம். இவை உள்ளிட்ட செய்திகளோடு “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சிக்காக விவரணமொன்றை முன்வைக்கிறார் நம...
அமெரிக்காவின் போர் நிறுத்த முன்மொழிவுகளுடன் உடன்படும் ரஷ்ய அதிபர் மேலதிக விவரங்களை கோருகிறார் 13.03.2025 5:18
ஆஸ்திரேலியா மற்றும் உலகின் இன்றைய முக்கிய நிகழ்வுகள்: 14 மார்ச் 2025 வெள்ளிக்கிழமை வாசித்தவர் குலசேகரம் சஞ்சயன்.
மின்சார விலை சில மாநிலங்களில் ஏன் ஜூலை 1 முதல் உயர்கிறது? 13.03.2025 6:32
எரிசக்தி ஒழுங்குமுறை ஆணையம் 2025-26 -ஆம் ஆண்டிற்கான safety net 'பாதுகாப்பு நிகர' விலைகளின் வரைவை வெளியிட்டுள்ள நிலையில் ஜூலை 1 முதல் எரிசக்தி விலை உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்த செய்தியின் பின்னணியை தயாரித்து வழங்குகிறார் செல்வி.
அமெரிக்காவின் 25 சத வரிவிதிப்பும், ஆஸ்திரேலியாவில் அது ஏற்படுத்தப்போகும் தாக்கமும்! 13.03.2025 8:56
ஆஸ்திரேலிய அலுமினியம்/எஃகு மீது அமெரிக்கா 25% சதவீதம் வரி விதித்திருப்பதன பின்னணி என்ன, அதனால் ஆஸ்திரேலியாவுக்கு ஏற்படும் பாதிப்புகள் என்ன என்று விளக்குகிறார் ஊடகத்துறையில் பல ஆண்டுகளாக பணியாற்றும் இரா.சத்தியநாதன் அவர்கள். அவரோடு உரையாடுகிறார்: றைசெல்.
இந்த வார இந்தியா & தமிழ்நாட்டின் முக்கிய செய்திகள் 13.03.2025 9:57
இந்தியாவில் தொடரும் மும்மொழி கொள்கை சர்ச்சை- தமிழ்நாடு முதல் நாடாளுமன்றம் வரை; ஹோலி- நமாஸ் பற்றிய பாஜகவினரின் சர்ச்சை பேச்சுகள்; தெலுங்கானா ஆணவப்படுகொலை குற்றவாளிக்கு தூக்கு; உயர் நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் சமூகநீதியை கடைப்பிடிக்க கோரி வழக்கறிஞர்கள் போராட்டம்; ஏர்டெல்லை தொடர்ந்து ஜியோவுடன் கைக்கோர்த்து ஸ்டார்லிங் சேவை உள்ளிட்ட பல செய்திகளின் பின்னணியை முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் தமி...
Similar podcasts
Replaio is not a podcast publisher; show names, artwork and audio belong to their authors and are distributed through public RSS feeds.