SBS
SBS Tamil - SBS தமிழ்
Independent news and stories from SBS Audio, connecting you to life in Australia and Tamil-speaking Australians. - தமிழ் பேசும் ஆஸ்திரேலியர்களுடனும், ஆஸ்திரேலிய வாழ்க்கையுடனும் இணைய உங்களுக்கு உதவும் பக்கசார்பற்ற செய்திகள் மற்றும் கதைகள்.
Where to listen?
Podcasts in the app Replaio Radio Coming soonPodcasts are coming to the app soon. Install now and be the first to see a whole new take on podcasts
Episodes
Helping young people overcome extremism: What works? - இளைஞர்கள் தீவிர வன்முறை சிந்தனை எண்ணங்களில் இருந்து மீள உதவுவது எப்படி? 24.10.2025 7:25
Addressing violent extremism has typically been seen as an issue for law enforcement. But experts say local communities could be the key to change. - வன்முறை செயற்பாடுகளை சமாளிப்பது பொதுவாக சட்ட அமலாக்க அதிகாரிகளின் பொறுப்பாகவே பார்க்கப்படுகிறது. ஆனால், உள்ளூர் சமூகங்கள் இதற்கு பெரிதும் பங்களிக்கலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
ஆஸ்திரேலியாவில் மனிதநேய, சுய மரியாதை, சமூக இணக்க மாநாடு! 24.10.2025 9:57
ஆஸ்திரேலியாவின் மெல்பன் நகரில் Glen Eira Town Hall, Caulfield எனுமிடத்தில் நான்காவது Humanists International Conference எதிர்வரும் நவம்பர் மாதம் 1 & 2 (சனி & ஞாயிறு) என்று இருநாட்கள் நடைபெறுகிறது. இம்மாநாடு குறித்து PATCA அமைப்பின் ராதிகா அவர்கள் விளக்குகிறார். அவரோடு உரையாடுகிறார் றைசெல்.
செய்தியின் பின்னணி: வீழ்ச்சியடைந்து வரும் தங்கத்தின் விலை - காரணங்கள் என்ன? 24.10.2025 6:54
சில மாதங்களுக்கு முன், தங்கத்தின் விலை சாதனை உச்சியைத் தொட்டது; ஆனால், இப்போது அதே தங்கம் தனது பிரகாசமான மதிப்பை மெல்லக் குறைத்து, விலைகளில் வீழ்ச்சியடைந்து முதலீட்டாளர்களிடையே கலவையான எதிர்வினைகளை உருவாக்கியுள்ளது. இதுபற்றிய செய்தியின் பின்னணியினைத் தருகிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.
இன்றைய செய்திகள்: 24 அக்டோபர் 2025 - வெள்ளிக்கிழமை 24.10.2025 4:39
SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வெள்ளிக்கிழமை 24/10/2025) செய்திகள். வாசித்தவர் : செல்வி.
இலங்கை: இந்த வார முக்கிய செய்திகள் 23.10.2025 8:31
வெலிகம பிரதேச சபைத் தலைவர் அவரது அலுவலகத்தில் வைத்து சுட்டுக் கொலை செய்யப்பட்டார் மற்றும் சீரற்ற காலநிலை காரணமாக 12 மாவட்டங்களில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு. இவை உள்ளிட்ட செய்திகளோடு “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சிக்காக விவரணமொன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.
உலகம்: இந்த வார செய்திகளின் தொகுப்பு 23.10.2025 7:39
காசா நிலவரம்; ஆப்கான்- பாகிஸ்தான் மோதல் நிலை; உக்ரைன் விவகாரம்: ரஷ்யாவுக்கு அழுத்தம் கொடுக்கும் அமெரிக்கா; வெனிசுலா- அமெரிக்கா மோதல்; அமெரிக்கா- ஆஸ்திரேலியா இடையே அரிய கனிமங்கள் ஒப்பந்தம்; சிரிய ராணுவத்துடன் இணைக்கப்படும் குர்து படைகள் உள்ளிட்ட உலகச்செய்திகளின் பின்னணியை முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் தமிழ்ப் பிரபாகரன்.
ஆஸ்திரேலியாவில் வீட்டு விலை நிலவரம் எவ்வாறு உள்ளது? 23.10.2025 3:31
ஆஸ்திரேலியாவில் வீட்டு விலைகள் கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வேகமாக உயர்ந்து வருகின்றன இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.
நமது பண்டைய மரபுகளை அறிந்து கொள்ள அலட்சியம் காட்டாதீர் 23.10.2025 12:15
வெள் உவன் , இவர் நம் பண்டை தமிழர்களின் பண்பாடு, மரபு குறித்து ஆய்வுகள் மற்றும் கட்டுரைகள் எழுதி வருபவர் சிறந்த சிந்தனையாளர் . அவரை பற்றியும் அவரின் எழுத்துகள் பற்றியும் அவரோடு உரையாடி நிகழ்ச்சிப் படைக்கிறார் செல்வி
Alice Springs: ‘பூர்வீக குடிமக்களோடு பணியாற்றுவது எனக்குக் கிடைத்த பாக்கியம்’ 23.10.2025 12:06
Northern Territoryயின் முக்கிய நகரமான Alice Springs நகரில் நடைபெற்ற தீபாவளி திருவிழாவின்போது நாம் மருத்துவர் அலமேலு கணேசன் அவர்களை சந்தித்து உரையாடினோம். பூர்வீக குடிமக்களுக்கு மருத்துவ சேவை வழங்கும் அவரை சந்தித்து உரையாடுகிறார் றைசெல்.
செய்தியின் பின்னணி : தாய்ப்பாலூட்டுவது மார்பக புற்றுநோயை தடுக்குமா? 23.10.2025 6:50
கர்ப்பகாலம் மற்றும் தாய்ப்பாலூட்டல் காலத்தில் பெண்களின் மார்பக திசுக்களில் சிறப்பு வகை நோய் எதிர்ப்பு செல்கள் பெருகி, அங்கே நீண்டகாலம் தங்கி இருக்கும் என புதிய ஆய்வு ஒன்றில் கண்டறியப்பட்டுள்ளது. இது குறித்த செய்தியின் பின்னணியை தயாரித்து வழங்குகிறார் செல்வி.
இன்றைய செய்திகள்: 23 அக்டோபர் 2025 வியாழக்கிழமை 23.10.2025 3:57
SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வியாழக்கிழமை 23/10/2025) செய்திகள். வாசித்தவர்: செல்வி.
உலகின் சிறந்த பல்கலைக்கழகங்களின் பட்டியலில் இடம்பிடித்துள்ள ஆஸ்திரேலிய பல்கலைக்கழகங்கள் 22.10.2025 2:30
பல்கலைக்கழகங்கள் தொடர்பில் புதிதாக வெளியாகியுள்ள உலகளாவிய ரீதியிலான தரப்படுத்தலில் ஆஸ்திரேலிய பல்கலைக்கழகங்கள் எந்த இடங்களில் உள்ளன என்ற செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.
சிட்னியின் மிகவும் தூய்மையான 10 கடற்கரைகள் எவை? 22.10.2025 2:11
சிட்னி நகரின் மிகத் தூய்மையான கடற்கரைகள் குறித்து புதிய அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதுபற்றிய செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.
வீட்டு கடனில் வட்டி சுமையை குறைக்கும் ரகசியம் – Offset account விளக்கம்! 22.10.2025 13:11
வீட்டு கடன் பெறும்போது அதனை வங்கியில் பல வகையான கணக்குகளில் பராமரிக்கலாம். அதில் ஒரு வகையான Mortgage offset account வகை குறித்து விரிவாக விளக்குகிறார் கடந்த 4 ஆண்டுகளாக வாடிக்கையாளர்களுக்கு நிதி துறையில் வழிகாட்டி வரும் Hardee Mortgage Solutions எனும் நிறுவனத்தைச் சார்ந்த Mortgage ஆலோசகர் ஜெயப்பிரகாஷ் ஆறுமுகம் அவர்கள். அவரோடு உரையாடுகிறார் செல்வி.
இலங்கை: நிலவிடுவிப்பும் மீள்குடியேற்றமும் 22.10.2025 7:30
யுத்தம் முடிவடைந்து 16 வருடங்கள் நிறைவடைந்துள்ள நிலையில் இன்னும் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகளில் நில விடுவிப்பு மற்றும் மீள்குடியேற்றம் போன்ற முக்கிய பிரச்சினைகளுக்கு முழுமையான தீர்வுகள் இதுவரையில் கிடைக்கவில்லை என்று கூறி பொதுமக்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். இது தொடர்பில் “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.
இன்றைய செய்திகள்: 22 அக்டோபர் 2025 புதன்கிழமை 22.10.2025 3:12
SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (புதன்கிழமை 22/10/2025) செய்திகள். வாசித்தவர்: மகேஸ்வரன் பிரபாகரன்.
தீபாவளின்னா எங்களுக்கு இதுதான்! 21.10.2025 13:35
ஆஸ்திரேலியாவில் தீபாவளி திருநாள் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளிலிருந்து குடிபெயர்ந்த மக்களால் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஆனால் ஆஸ்திரேலியாவில் பிறந்து வளர்ந்த இளைய தலைமுறைக்கு தீபாவளி தரும் அர்த்தம் என்ன? இந்த கேள்வியோடு சில இளைஞர்களை சந்தித்து உரையாடுகிறார் ஜனனி.
செய்தியின் பின்னணி: அதிபர் Trump-பிரதமர் Albanese சந்திப்பு எதை சாதித்தது? 21.10.2025 8:10
அமெரிக்க அதிபர் Donald Trump க்கும் ஆஸ்திரேலிய பிரதமர் Anthony Albaneseக்கும் இடையே அமெரிக்காவில் நடைபெற்ற சந்திப்பில் என்ன பேசப்பட்டது, எதை சாதித்தது என்ற விவரணத்தை செய்தியின் பின்னணி நிகழ்சிக்காக முன்வைக்கிறார் றைசெல்.
Louvre அருங்காட்சியகத்திலிருந்து பிரெஞ்சு அரச நகைகள் திருடப்பட்டது எப்படி? 21.10.2025 3:40
பாரிஸின் லூவர் (Louvre) அருங்காட்சியகத்திலிருந்து கொள்ளையடிக்கப்பட்ட பிரெஞ்சு அரச நகைகள் மீண்டும் கிடைக்காமல் போகலாம் என்று அந்நாட்டுச் சட்ட அமலாக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இக்கொள்ளை குறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.
இன்றைய செய்திகள்: 21 அக்டோபர் 2025 செவ்வாய்க்கிழமை 21.10.2025 4:27
SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (செவ்வாய்க்கிழமை 21/10/2025) செய்திகள். வாசித்தவர் : றேனுகா துரைசிங்கம்.
Springtime hay fever and asthma: how to manage seasonal allergies - வசந்தகால ஒவ்வாமைகளால் அவதிப்படுகிறீர்களா? 20.10.2025 11:04
Springtime in Australia brings warmth, blossoms, and longer days—but also the peak of pollen season. For millions of Australians, this means the onset of hay fever and allergy-induced asthma. - வசந்த காலத்தில் ஒவ்வாமை மற்றும் ஆஸ்துமாவால் பாதிக்கப்படும் கோடிக்கணக்கான மக்கள் சிரமங்களை எதிர்கொள்கின்றனர். மகரந்தங்களால் ஏற்படக்கூடிய ஒவ்வாமைகளை எவ்வாறு நிர்வகிப்பது என்பது தொடர்பில் Phil Tucak ஆங்கிலத்தி...
தனது மாமாவை 'ஆணவக்கொலை' செய்த பிரிஸ்பன் நபருக்கு ஆயுள் தண்டனை 20.10.2025 3:14
குடும்ப உறவு தொடர்பான தவறான புரிதல் மற்றும் மத நம்பிக்கை காரணமாக தனது மாமாவை கொலை செய்த குற்றச்சாட்டில் பிரிஸ்பன் நபருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.
தீபாவளிக்கு என்ன சாப்பிடுவோம்? அங்கு அப்படி, இங்கு இப்படி! 20.10.2025 14:51
தீபாவளி விழாவின் மிக முக்கிய அம்சம் உணவு. குறிப்பாக, தமிழ்நாட்டின் பல பகுதிகளில் தீபாவளி திருவிழாவின்போது பல சமூகங்கள் அசைவ உணவு உண்பது அவர்களின் பண்பாட்டு கூறுகளில் ஒன்றாக உள்ளது. இந்த பின்னணியில், ஆஸ்திரேலியாவில் வாழும் ஐந்து தமிழர்கள் தாங்கள் பிறந்த ஊர்களில் எப்படி தீவாளியைக் கொண்டாடினோம், இங்கு எப்படிக் கொண்டாடுகிறோம் எனும் தங்களின் அனுபவங்களைப் பகிர்ந்துகொள்கின்றனர். அனுபவப் பகிர்வு: பிரியா (...
செய்தியின் பின்னணி: மாயமாகும் வங்கி கிளைகளும், ATMகளும்! இனி பணம் எடுப்பது சவாலாகுமா? 20.10.2025 7:08
நாட்டில் வங்கி கிளைகள், ATMகள் குறைவது குறிப்பாக கிராம்புற மக்களுக்கு பாதிப்புகளை ஏற்படுத்துவதாக தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை அத்தியாவசிய பொருட்களை விற்கும் கடைகள் பணத்தை ஏற்க வேண்டும் என்பதற்கான அரசின் சட்டத்திருத்த விதிமுறைகளின் வரைவு வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்த செய்தியின் பின்னணியை தயாரித்து வழங்குகிறார் செல்வி.
இன்றைய செய்திகள்: 20 அக்டோபர் 2025 - திங்கட்கிழமை 20.10.2025 4:29
SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (திங்கட்கிழமை 20/10/2025) செய்திகள். வாசித்தவர் : றேனுகா துரைசிங்கம்.
Similar podcasts
Replaio is not a podcast publisher; show names, artwork and audio belong to their authors and are distributed through public RSS feeds.