SBS

SBS Tamil - SBS தமிழ்

News TA ↓ 2198 episodes

Independent news and stories from SBS Audio, connecting you to life in Australia and Tamil-speaking Australians. - தமிழ் பேசும் ஆஸ்திரேலியர்களுடனும், ஆஸ்திரேலிய வாழ்க்கையுடனும் இணைய உங்களுக்கு உதவும் பக்கசார்பற்ற செய்திகள் மற்றும் கதைகள்.

Author

SBS

Category

News

Podcast website

www.sbs.com.au

Latest episode

Jul 11, 2026

Where to listen?

Podcasts in the app Replaio Radio Coming soon

Podcasts are coming to the app soon. Install now and be the first to see a whole new take on podcasts

Get it on Google Play Install for free Android 5M+ downloads · 4.8 rating iOS soon

Episodes

இந்தியா & தமிழ்நாடு: கடந்தவார நிகழ்வுகளின் தொகுப்பு 19.10.2025

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில் முதலமைச்சரை தவிர அனைத்து அமைச்சர்களும் திடீர் ராஜினாமா - புதிய அமைச்சர்கள் பதவியேற்பு; தமிழகத்தில் விஜய் தலைமையில் புதிய கூட்டணி அமையுமா?; நீதிமன்றத்தை அவமதித்து பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது சென்னை காவல்துறை வழக்கு பதிவு; இவை உள்ளிட்ட செய்திகளோடு “செய்திகளின் பின்னணி” நிகழ்ச்சிக்காக இணைகிறார் நமது தமிழக ச...

இந்த வார ஆஸ்திரேலிய செய்திகள் (12 அக்டோபர் – 18 அக்டோபர் 2025) 17.10.2025

ஆஸ்திரேலியாவில் இந்த வாரம் (12 அக்டோபர் – 18 அக்டோபர் 2025) நடந்த முக்கிய செய்திகளின் தொகுப்பு. பதிவு செய்யப்படும் நாள்: 18 அக்டோபர் 2025 சனிக்கிழமை. வாசித்தவர்: செல்வி.

ஆஸ்திரேலியாவில் கட்டாய திருமணம் மற்றும் ஆட்கடத்தல் சம்பவங்கள் அதிகரிப்பு! 17.10.2025

ஆஸ்திரேலியாவில் ஆட்கடத்தல், கட்டாய திருமணம் மற்றும் நவீன அடிமைத்தனம் குறித்த முறைப்பாடுகள் இரட்டிப்பாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.

மகனை மடியில் வைத்துக்கொண்டு கார் ஓட்டிய மெல்பன் Maribyrnong மேயருக்கு அபராதம் 17.10.2025

தனது மகனை மடியில் வைத்துக்கொண்டு கார் ஓட்டிய குற்றச்சாட்டில் மெல்பன் Maribyrnong மேயருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.

How extremist groups are targeting and recruiting young people - தீவிர வன்முறை சிந்தனைக் குழுக்கள் இளைஞர்களை எவ்வாறு குறிவைத்து சேர்த்துக்கொள்கின்றன? 17.10.2025

Violent extremist recruiters are targeting and radicalising young people looking for belonging and connection — and it's not only happening in the dark corners of the internet. - வெறுப்பை புரிந்துக்கொள்ளுதல் தொடரின் இந்த அத்தியாயத்தில், இளைஞர்கள் தீவிர வன்முறை சிந்தனைக் குழுக்கள் பக்கம் திரும்பும் மனப்போக்கைப் பற்றி ஆராய்கிறோம். SBS Examines-இற்காக ஆங்கிலத்தில் Nick Zoumboulis தயாரித்த விவரணத்தை த...

உங்களின் சொத்துகளை பிள்ளைகளுக்கு எப்படி வழங்கலாம்? 17.10.2025

நாம் வாழ்நாள் முழுவதும் உழைத்து ஈட்டும் சொத்துகளை நமது பிள்ளைகளுக்கு வழங்குவது என்பது வெறும் பரிசு அல்ல - அது ஒரு நிதி மற்றும் சட்டத் தீர்மானம். உங்களின் சொத்துகளை பிள்ளைகளுக்கோ அல்லது மற்றவர்களுக்கோ வழங்கும் வழிமுறைகளை அடுத்ததாக ஒலிக்கும் இந்த விவரணம் அலசுகிறது. தயாரித்து வழங்குகிறார் செல்வி.

செய்தியின் பின்னணி: அமெரிக்க-சீன வர்த்தகப்போரில் ஆஸ்திரேலியா எப்படிப் பயனடையும்? 17.10.2025

இன்று உலகப் பொருளாதாரம் “Critical Minerals” என்று அழைக்கப்படும் ஒரு புதிய துறையில் வேகமாக மாறிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில், ஆஸ்திரேலியா மிக முக்கிய பங்கு வகிக்க முடியும் நாடாக மாறியுள்ளது. இதுபற்றிய செய்தியின் பின்னணியினை எடுத்துவருகிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.

இன்றைய செய்திகள்: 17 அக்டோபர் 2025 - வெள்ளிக்கிழமை 17.10.2025

SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வெள்ளிக்கிழமை 17/10/2025) செய்திகள். வாசித்தவர் : செல்வி.

ஆஸ்திரேலியாவிற்கான skilled migration நடைமுறையில் அரசு மாற்றம் கொண்டுவருகிறது 17.10.2025

திறமை அடிப்படையில் ஆஸ்திரேலியாவுக்கு குடிபெயர்பவர்கள் தங்கள் துறைகளில் உடனடியாக வேலை செய்யக்கூடிய வகையில், அரசு புதிய மாற்றங்களை பரிசீலித்து வருகிறது. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.

இலங்கை: இந்த வார முக்கிய செய்திகள் 16.10.2025

மாகாண சபைத் தேர்தல் குறித்து யாழில் தமிழ் கட்சிகள் கலந்துரையாடல்; இடமாற்றம் கோரி வடக்கில் அரச பணியாளர்கள் போராட்டம் மற்றும் குருந்தூர் மலை விவகாரத்தில் தொல்லியல் திணைக்களத்தின் செயற்பாட்டிற்கு கண்டனம் உள்ளிட்ட செய்திகளோடு “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சிக்காக விவரணமொன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.

உலகம்: இந்த வார செய்திகளின் தொகுப்பு 16.10.2025

காசாவில் ஹமாஸ்- இஸ்ரேலிய ஆதரவு குழுக்களிடையிலான பகைமை; பாகிஸ்தான் - ஆப்கான் பதற்றம்; வெனிசுலா அதிபரைக் குறிவைக்கும் அமெரிக்காவின் சிஐஏ; மடகாஸ்கரில் ஆட்சிக் கவிழ்ப்பு; மாஸ்கோவில் ரஷ்ய அதிபருடன் சிரிய அதிபர் சந்திப்பு உள்ளிட்ட உலகச்செய்திகளின் பின்னணியை முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் தமிழ்ப் பிரபாகரன்.

உலகின் சக்திவாய்ந்த கடவுச்சீட்டுகளில் ஆஸ்திரேலியாவுக்கு எந்த இடம்? 16.10.2025

புதிய தரவரிசைப்படி, ஆஸ்திரேலிய கடவுச்சீட்டு உலகின் மிகவும் சக்திவாய்ந்த கடவுச்சீட்டுகளில் ஒன்றாகத் தொடர்கிறது.இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.

சுகாதாரமான உணவு ஆரோக்கியமான வாழ்வு 16.10.2025

நமது உடல் ஆரோக்கியம் நாம் சாப்பிடும் உணவில் ஆரம்பமாகிறது ஆகவே உணவு தயாரிக்கும் முறைகள் சுகாதாரமானதாக இருப்பது அவசியம். உணவு பாதுகாப்பு குறித்த விவரணம், தயாரித்து வழங்குகிறார் செல்வி

உலக சுகாதார நிறுவனம் உருவாக கல் நட்டவன்! 16.10.2025

ஆற்காடு ராமசாமி அவர்கள் தமிழ் மக்கள் மறக்கக் கூடாத ஒருவர். தமிழ் நாட்டில் பிற்படுத்தப் பட்ட மக்கள் இன்று அரசியல் உரிமை பெறும் போராட்டத்தின் விதை தூவியவர்களில் ஒருவர் ராமசாமி அவர்கள். அவர் குறித்த காலத்துளியை முன்வைக்கிறார் றைசெல்.

சத்திரசிகிச்சையின்போது பயன்படுத்தப்படும் மயக்க மருந்துகளால் பக்கவிளைவுகள் ஏற்படுமா? 16.10.2025

நமக்கு சத்திரசிசிக்சை ஏதேனும் மேற்கொள்ளப்படவேண்டியிருந்தால் அதில் Anesthetist-மயக்கவியல் மருத்துவ நிபுணரின் பங்கு அளப்பரியது. சத்திரசிகிச்சையொன்றின்போது நமக்கு வலி தெரியாமல் இருக்க என்னென்ன முறைகள் பின்பற்றப்படுகின்றன? இதன் பக்கவிளைவுகள் எவை? என்பது உட்பட பல விடயங்கள் தொடர்பில் விளக்குகிறார் கடந்த 35 ஆண்டுகளாக மயக்கவியல் மருத்துவ நிபுணராக பணியாற்றும் Dr பால்வண்ணன் சிவலிங்கம் அவர்கள். அவரோடு உரையாட...

செய்தியின் பின்னணி : பிரதமரின் மொபைல் எண் இணையத்தில் வெளியானது எப்படி? 16.10.2025

பிரதமர் Anthony Albanese, எதிர்க்கட்சித் தலைவர் Sussan Ley, நியூ சவுத் வேல்ஸ் பிரீமியர் கிரிஸ் மின்ஸ் உள்ளிட்ட பல பிரபல ஆஸ்திரேலிய அரசியல் மற்றும் சமூகத் தலைவர்களின் மொபைல் எண்கள், அமெரிக்காவை தளமாகக் கொண்ட ஒரு இணையதளத்தில் வெளிப்படையாகப் பதிவிடப்பட்டுள்ளன. இது குறித்த செய்தியின் பின்னணியை தயாரித்து வழங்குகிறார் செல்வி.

தீபாவளித் திருநாள்: பேராசிரியர் ஞானசம்பந்தன் தரும் விளக்கம் 16.10.2025

தமிழுலகம் நன்கறிந்தவர் பேராசிரியர் கு. ஞானசம்பந்தன் அவர்கள். தமிழ்த் துறைப் பேராசிரியர், நகைச்சுவைப் பேச்சாளர், எழுத்தாளர், நடிகர் என்று பன்முகம் கொண்டவர். SBS தமிழ் ஒலிபரப்புக்கு அவர் வழங்கிய நேர்முகத்தில் தீபவாலி குறித்து இப்படி விளக்குகிறார்.

How you can work as an engineer in Australia: accreditation, jobs and networking - ஆஸ்திரேலியாவில் பொறியாளராக வேலை செய்வது எப்படி: அங்கீகாரம், வேலை வாய்ப்புகள் மற்றும் தொடர்புகள் 16.10.2025

Australia faces an engineering shortage, yet many migrant engineers are underemployed. Learn about qualification recognition, job search tips, CV advice, and networking strategies. - ஆஸ்திரேலியாவில் பொறியியல் துறையில் பணியாளர் பற்றாக்குறை நிலவுகிறது, ஆனால் பல புலம்பெயர்ந்த பொறியாளர்கள் தகுந்த வேலை வாய்ப்புகளை பெற முடியாமல் உள்ளனர். இந்தப்பின்னணியில் பொறியியல் பணிக்கான தகுதிச் சான்றிதழ் அங்கீகாரம்,...

இன்றைய செய்திகள்: 16 அக்டோபர் 2025 வியாழக்கிழமை 16.10.2025

SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வியாழக்கிழமை 16/10/2025) செய்திகள். வாசித்தவர்: செல்வி.

சட்டம்: சமூக பாதுகாப்பில் இளைஞர்கள் காவல்துறையுடன் எப்படி இணைந்து செயற்படலாம்? 15.10.2025

நாட்டின் சட்டம், ஒழுங்கு பற்றி நாம் தெரிந்துகொள்ள வேண்டிய பல விடயங்கள் தொடர்பில் விக்டோரிய காவல்துறையுடன் இணைந்து நாம் வழங்கும் நிகழ்ச்சித் தொடரில், இளைஞர்களுக்கு காவல்துறையிடமிருந்து கிடைக்கும் உதவிகள் மற்றும் ஆதரவுத்திட்டங்கள் குறித்து காவல்துறை அதிகாரிகள் ராஜேஷ் சாம்பமூர்த்தி மற்றும் Alex Kwarkernaak ஆகியோருடன் உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம். பாகம் 2

சட்டம்: இளைஞர்களுக்கு காவல்துறையிடமிருந்து கிடைக்கும் உதவிகள் எவை? 15.10.2025

நாட்டின் சட்டம், ஒழுங்கு பற்றி நாம் தெரிந்துகொள்ள வேண்டிய பல விடயங்கள் தொடர்பில் விக்டோரிய காவல்துறையுடன் இணைந்து நாம் வழங்கும் நிகழ்ச்சித் தொடரில், இளைஞர்களுக்கு காவல்துறையிடமிருந்து கிடைக்கும் உதவிகள் மற்றும் ஆதரவுத்திட்டங்கள் குறித்து காவல்துறை அதிகாரிகள் ராஜேஷ் சாம்பமூர்த்தி மற்றும் Alex Kwarkernaak ஆகியோருடன் உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம். பாகம் 1

செய்தியின் பின்னணி: பூர்வீகக்குடிமக்களுடன் விக்டோரியா செய்துகொள்ளவிருக்கும் உடன்படிக்கையில் என்ன உள்ளது? 15.10.2025

பூர்வீகக்குடிமக்களுடன் முறையான Treaty- உடன்படிக்கை ஒன்றை உருவாக்குவது தொடர்பில் விக்டோரிய மாநில அரசு பேச்சு நடத்திவருகிறது. இதுகுறித்த செய்தியின் பின்னணியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம். ஆங்கில மூலம்: SBS Newsயின் Sydney Lang.

இன்றைய செய்திகள்: 15 அக்டோபர் 2025 புதன்கிழமை 15.10.2025

SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (புதன்கிழமை 15/10/2025) செய்திகள். வாசித்தவர்: மகேஸ்வரன் பிரபாகரன்.

மலையக மக்கள் ஏமாற்றப்படுகிறார்களா? 14.10.2025

இலங்கையில் வேலைக்கேற்ற ஊதியம் இல்லை. இருப்பிடம் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகள் இல்லாத நிலையில் மலையக மக்கள் வாழகின்றனர் என்றும், அவர்களின் வாழ்வு முன்னேற்றத்திற்காக ஒவ்வொரு அரசும் வழங்கும் தேர்தல் கால வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாமல் காலம் நகர்வதாகவும் விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. இது தொடர்பில் “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.

நடிகர் விஜயின் கரூர் கூட்ட துயரமும், விசாரணையும், கூட்டணியும் 14.10.2025

நடிகர் விஜயின் கரூர் கூட்ட துயரத்தைத் தொடர்ந்து விசாரணையும், கூடவே கூட்டணி பேச்சுக்களும் எழுந்துள்ளன. விஜயின் தமிழக வெற்றிக்கழகத்தை கூட்டணிக்கு அழைக்கிறது அதிமுக. இது பற்றிய விவரணத்தை முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் தமிழ்ப் பிரபாகரன்.

Listen to the SBS Tamil - SBS தமிழ் podcast in Replaio

Radio and podcasts in one app - free, with no sign-up. Install today and do not miss the launch

Get it on Google Play

Replaio is not a podcast publisher; show names, artwork and audio belong to their authors and are distributed through public RSS feeds.