SBS
SBS Tamil - SBS தமிழ்
Independent news and stories from SBS Audio, connecting you to life in Australia and Tamil-speaking Australians. - தமிழ் பேசும் ஆஸ்திரேலியர்களுடனும், ஆஸ்திரேலிய வாழ்க்கையுடனும் இணைய உங்களுக்கு உதவும் பக்கசார்பற்ற செய்திகள் மற்றும் கதைகள்.
Where to listen?
Podcasts in the app Replaio Radio Coming soonPodcasts are coming to the app soon. Install now and be the first to see a whole new take on podcasts
Episodes
ஆஸ்திரேலிய நுகர்வோரை Microsoft ஏமாற்றியதாக ACCC வழக்கு! 65 லட்சம் பேருக்கு இழப்பீடு கிடைக்குமா? 30.10.2025 7:19
ஆஸ்திரேலிய நுகர்வோர் நலன் பாதுகாப்பு நோக்கில் இயங்கும் அரசு அமைப்பான Australian Competition and Consumer Commission - ஆஸ்திரேலிய போட்டி மற்றும் நுகர்வோர் ஆணையம் உலக தொழில்நுட்பத்தின் மாபெரும் நிறுவனமான Microsoft மீது ஆஸ்திரேலிய Federal நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. இது குறித்த செய்தியின் பின்னணி நிகழச்சியை முன்வைக்கிறார் றைசெல்.
அடையாளத் திருட்டு - புகலிடக் கோரிக்கையாளர்களே உஷார் !!! 30.10.2025 8:28
அடையாள ஆவணத் திருட்டு என்பது ஒரு முக்கியமான குற்றமாக தற்பொழுது பெருகி வருகிறது. இதற்கு குறிப்பாக புகலிடக் கோரிக்கையாளர்கள் பலியாகின்றனர். தனக்கு இப்படியாக நடந்த ஒரு சம்பவத்தை நம்மோடு பகிர்ந்துக் கொள்கிறார் ஒரு புகலிடக் கோரிக்கையாளர். நிகழ்ச்சித் தயாரிப்பு செல்வி
“வாலி”பக் கவிஞர்! 30.10.2025 8:30
எழுத்துக்களை என்றென்றும் இளமை மாறாமல் வைத்திருந்த வாலிபக் கவிஞர் வாலியின் பிறந்தநாள் அக்டோபர் 29 ஆம் தேதி கொண்டாடப்பட்டது. அவர் குறித்த காலத்துளியை முன்வைக்கிறார் றைசெல்.
Thunderstorm ஆஸ்துமா தாக்குதலிலிருந்து எம்மைப் பாதுகாப்பது எப்படி? 30.10.2025 11:22
Thunderstorm ஆஸ்துமா தொடர்பிலான எச்சரிக்கைகள் விடுக்கப்படுவதை நாம் அவதானித்திருப்போம். Thunderstorm ஆஸ்துமா என்றால் என்ன? இதன் தாக்கத்திலிருந்து எப்படி தப்பித்துக்கொள்வது? இதன் அறிகுறிகள் என்னென்ன என்பது தொடர்பில் விளக்குகிறார் மெல்பனைச் சேர்ந்த மருத்துவர் சர்மிளா சுரேஷ்குமார் அவர்கள். அவரோடு உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்
How to navigate Australia’s ICT workforce as a skilled migrant - ஆஸ்திரேலியாவின் தகவல் தொடர்பு தொழில்நுட்ப துறையில் வேலைவாய்ப்பை பெறுவது எப்படி? 30.10.2025 24:54
Discover how skilled migrants navigate challenges in Australia’s ICT sector, from job hunting and local experience to networking and thriving in tech careers. - ஆஸ்திரேலியாவின் தகவல் தொடர்பு தொழில்நுட்ப (ICT) துறையில் பணியாற்றும் திறமை அடிப்படையில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் வேலை தேடல், உள்ளூர் அனுபவம் பெறல் மற்றும் நெட்வொர்க்கிங் செய்து தொழில்துறையில் முன்னேறுவது தொடர்பில் சந்திக்கும் சவால்களை எவ...
இன்றைய செய்திகள்: 30 அக்டோபர் 2025 வியாழக்கிழமை 30.10.2025 4:35
SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வியாழக்கிழமை 30/10/2025) செய்திகள். வாசித்தவர்: றைசெல்.
சிட்னி மருத்துவமனையில் வாயு விநியோகத்தை துண்டித்த பெண்? நோயாளி மரணம் தொடர்பில் விசாரணை 29.10.2025 2:30
சிட்னியில் உள்ள Sutherland மருத்துவமனையில் ஆண் நோயாளி மரணமடைந்த சம்பவம் தொடர்பில் புதிய விசாரணை ஆரம்பிக்கப்படுகிறது. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.
வெளிநாட்டு மண்ணில் ஈழத்தமிழரின் வாழ்வியலும், அடையாளமும் 29.10.2025 10:58
Uprooted, Stories from the Sri Lankan Tamil Diaspora என்ற நூல், புலம்பெயர்ந்த ஈழத்தமிழர் வாழ்வியலை ஆழமாக ஆராய்ந்து, அதன் வேரூன்றிய உணர்ச்சியையும் வெளிநாட்டு மண்ணில் புதிய அடையாளங்களைக் கட்டியெழுப்பிய உறுதியையும் சித்தரிக்கும் ஒரு ஆய்வு நூல். அதனை எழுதியிருக்கும் ஆனா பரராஜசிங்கம் அவர்களிடம் அவரது பின்னணி குறித்தும் இந்த நூலை எழுதியதன் நோக்கம் குறித்தும் சிட்னி நகரில் நடைபெற இருக்கும் நூல் வெளியீட்ட...
'ஆணுக்கு இணையாக பெண் மிருதங்கம் வாசிப்பதை சிலரால் ஏற்றுக்கொள்ள முடிவதில்லை' 29.10.2025 21:55
Shakti- Strings & Beats இசை நிகழ்வு சிட்னி,மெல்பன் மற்றும் பெர்த் நகரங்களில் நடைபெறவுள்ளது. இந்நிகழ்வில் பங்கேற்க வருகிறார் பிரபல மிருதங்க வாத்திய கலைஞர் லஷ்மி ராஜசேகர் அவர்கள். அவரது இசைப்பயணம் தொடர்பிலும், ஆஸ்திரேலிய பயணம் தொடர்பிலும் லஷ்மி ராஜசேகர் அவர்களோடு உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.
இன்றைய செய்திகள்: 29 அக்டோபர் 2025 புதன்கிழமை 29.10.2025 3:21
SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (புதன்கிழமை 29/10/2025) செய்திகள். வாசித்தவர்: மகேஸ்வரன் பிரபாகரன்.
செய்தியின் பின்னணி: உங்கள் ஓய்வூதிய நிதி(super) தொடர்பில் நடைமுறைக்கு வரும் மாற்றங்கள் எவை? 29.10.2025 7:17
ஆஸ்திரேலியாவில் Superannuation பணத்தை திரும்பப்பெறுவதற்கான விதிகளில் நவம்பர் 2 முதல் மாற்றங்கள் நடைமுறைக்கு வருகின்றன. இதுகுறித்த செய்தியின் பின்னணியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.
இலங்கை: தெற்கில் காணாமலாக்கப்பட்டோருக்கு என்ன தீர்வு? 28.10.2025 7:50
வடக்கு, கிழக்கில் மாத்திரமல்ல தெற்கிலும் காணாமலாக்கப்பட்டோர் விவகாரம் தீர்வுகளின்றி தொடர்கின்றது. இந்நிலையில், காணாமலாக்கப்பட்டோரின் நினைவு நாள் நிகழ்வு கம்பஹாவில் இடம்பெற்றது. இது தொடர்பில் “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.
ஆஸ்திரேலிய விசா ரத்து செய்யப்பட்டவர்களை நவுருவுக்கு நாடுகடத்தும் நடவடிக்கை ஆரம்பம் 28.10.2025 2:53
ஆஸ்திரேலியாவிலிருந்து நாடுகடத்தப்பட்ட முதல் குழுவை நவுரு ஏற்றுக்கொண்டுள்ளது. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.
NSW மாநில சுரங்க வெடிப்பு சம்பவத்தில் இருவர் பலி! 28.10.2025 2:40
நியூ சவுத் வேல்ஸ் மாநில சுரங்க விபத்தில் இருவர் பலியாகினர். இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.
இன்றைய செய்திகள்: 28 அக்டோபர் 2025 செவ்வாய்க்கிழமை 28.10.2025 4:46
SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (செவ்வாய்க்கிழமை 28/10/2025) செய்திகள். வாசித்தவர் : றேனுகா துரைசிங்கம்.
ஏன் திராவிட கட்சிகள் இஸ்லாமிய, கிறிஸ்தவ சமயங்களை விமர்சிப்பதில்லை? -வழக்கறிஞர் அருள்மொழி பதில் 27.10.2025 21:10
தமிழ்நாட்டில் மிக முக்கிய சமூக இயக்கமாக பார்க்கப்படும் திராவிடர் கழகத்தின் கொள்கை பரப்பு செயலாளர் வழக்கறிஞர் அருள்மொழி அவர்கள். திராவிட அரசியல் சார்ந்த களத்திலும், தமிழக ஊடக தளங்களிலும் மிகவும் பிரபலமாக வலம் வரும் அருள்மொழி அவர்கள் ஆஸ்திரேலியாவுக்கு வருகை தந்திருந்தபோது அவரை SBS ஒலிப்பதிவு கூடத்தில் வைத்து சந்தித்து உரையாடியவர்கள்: குலசேகரம் சஞ்சயன் & றைசெல் ஆகியோர். இரண்டு பாகங்களாக பதிவேற்றப்பட்...
திராவிட கட்சிகள் சாதியத்தை, வாரிசு அரசியலை வளர்க்கின்றனவா? -வழக்கறிஞர் அருள்மொழி பதில் 27.10.2025 21:09
தமிழ்நாட்டில் மிக முக்கிய சமூக இயக்கமாக பார்க்கப்படும் திராவிடர் கழகத்தின் கொள்கை பரப்பு செயலாளர் வழக்கறிஞர் அருள்மொழி அவர்கள். திராவிட அரசியல் சார்ந்த களத்திலும், தமிழக ஊடக தளங்களிலும் மிகவும் பிரபலமாக வலம் வரும் அருள்மொழி அவர்கள் ஆஸ்திரேலியாவுக்கு வருகை தந்திருந்தபோது அவரை SBS ஒலிப்பதிவு கூடத்தில் வைத்து சந்தித்து உரையாடியவர்கள்: குலசேகரம் சஞ்சயன் மற்றும் றைசெல் ஆகியோர். இரண்டு பாகங்களாக பதிவேற்...
செய்தியின் பின்னணி : வீட்டிலிருந்து வேலை செய்வது தொடர்பான தீர்ப்பு என்ன சொல்கிறது? 27.10.2025 7:01
Work From Home WFH - வீட்டிலிருந்து வேலை செய்வது குறித்து Fair Work Commission வழங்கியுள்ள சமீபத்திய தீர்பபு ஒன்று வீட்டிலிருந்து வேலை செய்வது குறித்த விவாதத்திற்கு புதிய திருப்புமுனையாக அமைந்துள்ளது. இது குறித்த செய்தியின் பின்னணியை தயாரித்து வழங்குகிறார் செல்வி.
இன்றைய செய்திகள்: 27 அக்டோபர் 2025 - திங்கட்கிழமை 27.10.2025 4:32
SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (திங்கட்கிழமை 27/10/2025) செய்திகள். வாசித்தவர் : றேனுகா துரைசிங்கம்.
இந்தியா & தமிழ்நாடு: கடந்தவார நிகழ்வுகளின் தொகுப்பு 26.10.2025 9:39
ஆந்திரா பஸ் விபத்தில் 20 பேர் பலி; பாமகவின் செயல் தலைவராக தனது மூத்த மகள் காந்திமதியை நியமித்து ராமதாஸ் அறிவிப்பு; தமிழகத்தில் நெல் கொள்முதலில் குளறுபடி என்று எதிர்கட்சிகளின் குற்றச்சாட்டும் திமுகவின் விளக்கமும்; இவை உள்ளிட்ட செய்திகளோடு “செய்திகளின் பின்னணி” நிகழ்ச்சிக்காக இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்!
இந்த வார ஆஸ்திரேலிய செய்திகள் (19–25 அக்டோபர் 2025) 24.10.2025 5:35
ஆஸ்திரேலியாவில் இந்த வாரம் (19–25 அக்டோபர் 2025) நடந்த முக்கிய செய்திகளின் தொகுப்பு. வாசித்தவர்: றைசெல்.
இந்தியர்களுக்கு வழங்கப்படவுள்ள 3,000 வேலை விசாக்கள்: விண்ணப்பிப்பது எப்படி? 24.10.2025 2:55
MATES என்று சுருக்கமாக அழைக்கப்படும் Mobility Arrangement for Talented Early professionals Scheme விரைவில் ஆரம்பிக்கவுள்ளது. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.
Understanding treaty in Australia: What First Nations people want you to know - பூர்வீகக் குடிமக்களுடனான Treaty-ஒப்பந்தம் என்றால் என்ன? 24.10.2025 7:32
Australia is home to the world’s oldest living cultures, yet remains one of the few countries without a national treaty recognising its First Peoples. This means there has never been a broad agreement about sharing the land, resources, or decision-making power - a gap many see as unfinished business. Find out what treaty really means — how it differs from land rights and native title, and why it m...
உங்கள் ஓய்வூதிய(Super) நிதிக்கு அரசின் புதிய வரித் திட்டம் – நன்மையா, இழப்பா? 24.10.2025 8:02
அரசு புதிய Superannuation Tax - ஓய்வூதிய வரியில் மாற்றுத் திட்டம் ஒன்றினை அறிமுகப்படுத்தவுள்ளது. அரசு அறிமுகப்படுத்தவுள்ள புதிய சூப்பர் வரி (Super Tax) திட்டம் பற்றி சிட்னியில் நிதி தொடர்பிலான உயர் பதவி வகித்துவரும் ரவி பானுதேவன் அவர்களுடன் உரையாடுகிறார் மகேஸ்வரன் பிரபாகரன். Jim Chalmers’ controversial superannuation reforms have been dramatically scaled back, with experts revealing who wins and l...
சிறுவர்களின் கண் ஆரோக்கியத்தைப் பேணுவது எப்படி? 24.10.2025 10:43
குழந்தைகளில் ஏற்படும் கண் பிரச்சினைகளை ஆரம்பத்திலேயே கண்டறிந்து சிகிச்சை பெறுவதன் மூலம் பிற்காலத்தில் பாரதூரமான விளைவுகளைத் தவிர்க்கலாம். அந்தவகையில் சிறுவர்களில் ஏற்படும் பொதுவான கண் பிரச்சினைகள் தொடர்பிலும் அவற்றை எப்படி தடுக்கலாம் என்பது பற்றியும் விளக்குகிறார் மெல்பனைச் சேர்ந்த கண் மருத்துவ நிபுணர் ராஜ் பத்மராஜ் அவர்கள். அவரோடு உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்
Similar podcasts
Replaio is not a podcast publisher; show names, artwork and audio belong to their authors and are distributed through public RSS feeds.