SBS
SBS Tamil - SBS தமிழ்
Independent news and stories from SBS Audio, connecting you to life in Australia and Tamil-speaking Australians. - தமிழ் பேசும் ஆஸ்திரேலியர்களுடனும், ஆஸ்திரேலிய வாழ்க்கையுடனும் இணைய உங்களுக்கு உதவும் பக்கசார்பற்ற செய்திகள் மற்றும் கதைகள்.
Where to listen?
Podcasts in the app Replaio Radio Coming soonPodcasts are coming to the app soon. Install now and be the first to see a whole new take on podcasts
Episodes
செய்தியின் பின்னணி : மூன்று மணி நேரம் இலவச மின்சாரம் – யாருக்கு, எப்படி? 06.11.2025 8:41
Solar - சூரிய ஒளி ஆற்றலை மக்களிடம் நேரடியாக பகிர பெடரல் அரசு புதிய ‘Solar Sharer’ திட்டத்தை அறிவித்துள்ளது. இது குறித்த செய்தியின் பின்னணியை தயாரித்து வழங்குகிறார் செல்வி.
இன்றைய செய்திகள்: 06 நவம்பர் 2025 வியாழக்கிழமை 06.11.2025 4:21
SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வியாழக்கிழமை 06/11/2025) செய்திகள். வாசித்தவர் : செல்வி.
மெல்பனில் Lankan Fest ‘25 நிகழ்வு! 05.11.2025 7:15
மெல்பனில் Lankan Fest என்ற நிகழ்வு நவம்பர் 16ம் திகதி நடைபெறவுள்ளது. இதுதொடர்பில் இந்நிகழ்வின் ஏற்பாட்டாளர்களின் ஒருவரான தனேஷ்குமார் அவர்களுடன் உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.
தாள வாத்தியத்தில் பெண்கள் குறைவு – காரணம் சமூக மனப்பாங்கா? 05.11.2025 19:25
Shakti- Strings & Beats இசை நிகழ்வு சிட்னி,மெல்பன் மற்றும் பெர்த் நகரங்களில் நடைபெறவுள்ளது. இந்நிகழ்வில் பங்கேற்க வருகிறார் பிரபல கடம் வாத்திய கலைஞர் சுகன்யா ராம்கோபால் அவர்கள். அவரது இசைப்பயணம் தொடர்பிலும், ஆஸ்திரேலிய பயணம் தொடர்பிலும் சுகன்யா ராம்கோபால் அவர்களோடு உரையாடுகிறார் செல்வி.
செய்தியின் பின்னணி: மெல்பன் கப் போட்டியில் வரலாற்று சாதனை படைத்த பெண்! 05.11.2025 6:34
மெல்பன் கப் குதிரைப்பந்தயப் போட்டி நேற்று நடைபெற்ற நிலையில் இதில் பெண் குதிரையோட்டியான Jamie Melham சாதனை படைத்துள்ளார். இதுகுறித்த செய்தியின் பின்னணியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.
இன்றைய செய்திகள்: 05 நவம்பர் 2025 புதன்கிழமை 05.11.2025 3:07
SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (புதன்கிழமை 05/11/2025) செய்திகள். வாசித்தவர்: மகேஸ்வரன் பிரபாகரன்.
இலங்கை: யானை - மனித மோதலுக்கு தீர்வு என்ன? 04.11.2025 7:20
காட்டு யானைகள் மற்றும் மனித மோதல்கள் காரணமாக இருதரப்பிலும் நூற்றுக்கணக்கான உயிரிழப்புகளும் பாதிப்புக்களும் ஏற்பட்டு வருகின்றன. இதற்கு தீர்வு என்ன? இது தொடர்பில் செய்தியின் பின்னணி நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.
நாட்டின் வட்டி வீதம் குறித்த அறிவிப்பை வெளியிட்டது ரிசர்வ் வங்கி! 04.11.2025 2:09
ஆஸ்திரேலியாவின் அதிகாரபூர்வ வட்டி வீதம் குறித்த தனது முடிவினை ரிசர்வ் வங்கி இன்று அறிவித்தது. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.
ஆஸ்திரேலியாவின் முதல் 10 இளம் செல்வந்தர்களின் பட்டியல்! 04.11.2025 3:19
ஆஸ்திரேலியாவின் இளம் செல்வந்தர்களின் பட்டியலை The Australian Financial Review சஞ்சிகை வெளியிட்டுள்ளது. இதன்படி முதல் 10 இடங்களைப் பிடித்துள்ள இளம்செல்வந்தர்கள் யாரென்ற விவரங்களைத் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.
இன்றைய செய்திகள்: 04 நவம்பர் 2025 செவ்வாய்க்கிழமை 04.11.2025 4:18
SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (செவ்வாய்க்கிழமை 04/11/2025) செய்திகள். வாசித்தவர் : றேனுகா துரைசிங்கம்.
விசா நிராகரிக்கப்பட்டவர்கள் மீண்டும் விண்ணப்பித்தால் ART எவ்வாறு பரிசீலிக்கும்? 03.11.2025 14:13
புதிதாக அமைக்கப்பட்டு இயங்கி வரும் ART Administrative Review Tribunal நிர்வாக மீளாய்வு நியாயசபை என்றால் என்ன? அதன் நடைமுறை என்ன? போன்ற பல கேள்விகளுக்கு விளக்கமாக பதிலளிக்கிறார் Adelaide நகரில் Arctic Tern Migration Solutions நிறுவனத்தின் நிறுவனரும் குடிவரவு முகவருமான கோவிந்தராஜ் ராஜு அவர்கள். அவரோடு உரையாடுகிறார் செல்வி.
தமிழ்நாட்டில் தமிழ் வாழுமா? 03.11.2025 21:35
தமிழ் நாட்டில் தமிழ் மொழியின் இன்றைய நிலை, தமிழ் மொழி எதிர்கொள்ளும் சவால்கள், தமிழ் இலக்கியம் என்று பல அம்சங்கள் குறித்து உரையாடுகிறார் இலக்கிய சொற்பொழிவாளர் முத்து சிதம்பரபாரதி அவர்கள். சிட்னி வந்திருக்கும் அவரை SBS ஒலிப்பதிவு கூடத்தில் வைத்து சந்தித்து உரையாடியவர் றைசெல்.
செய்தியின் பின்னணி: பெட்ரோல் விலை மீண்டும் உயருமா? சந்தையில் அச்சம்! 03.11.2025 6:29
அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ரஷ்ய எண்ணெய் நிறுவனங்கள் மீது விதித்துள்ள புதிய தடைகள் உலகளாவிய சந்தைகளில் அதிர்வுகளை ஏற்படுத்தி, எரிபொருள் விலைகளை உயர்த்தும் அபாயம் நிலவுவதாக நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். இது குறித்த செய்தியின் பின்னணியை தயாரித்து வழங்குகிறார் செல்வி.
இன்றைய செய்திகள்: 03 நவம்பர் 2025 - திங்கட்கிழமை 03.11.2025 4:35
SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (திங்கட்கிழமை 03/11/2025) செய்திகள். வாசித்தவர் : றேனுகா துரைசிங்கம்.
இந்தியா & தமிழ்நாடு: கடந்தவார நிகழ்வுகளின் தொகுப்பு 02.11.2025 9:56
இந்திய அரசியலில் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தும் பீகார் மாநில சட்டமன்றத் தேர்தல்; வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கைக்கு திமுக உள்ளிட்ட தமிழக அரசியல் கட்சிகள் எதிர்ப்பு; அதிமுகவில் இருந்து செங்கோட்டையன் நீக்கம் - எடப்பாடி பழனிசாமி அதிரடி; இவை உள்ளிட்ட செய்திகளோடு “செய்திகளின் பின்னணி” நிகழ்ச்சிக்காக இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்!
SBS வழங்கும் இலவச காணொளி stream சேவை! 02.11.2025 9:07
SBS On Demand என்பது SBS வழங்கும் காணொளிகளை இலவசமாக stream செய்யும் ஒரு சேவை. இந்த சேவை குறித்து விளக்குகிறார் ஊடகத்துறையில் பல ஆண்டுகளாக பணியாற்றும் இரா.சத்தியநாதன் அவர்கள். அவரோடு உரையாடுகிறார்: றைசெல். SBS On Demand is a free online streaming service operated by Australia’s SBS. It allows viewers to watch TV shows, movies, documentaries, news programs, and international content anytime over the...
இந்த வார ஆஸ்திரேலிய செய்திகள் (26 அக்டோபர் – 1 நவம்பர் 2025) 01.11.2025 4:36
ஆஸ்திரேலியாவில் இந்த வாரம் (26 அக்டோபர் – 1 நவம்பர் 2025) நடந்த முக்கிய செய்திகளின் தொகுப்பு. வாசித்தவர்: றைசெல்.
பூர்வீகக் குடிமக்களுடன் ஒப்பந்தம்: ஆஸ்திரேலியாவில் வரலாறு படைக்கிறது விக்டோரிய மாநிலம் 31.10.2025 2:29
பூர்வீகக்குடிமக்களுடன் முறையான Treaty- ஒப்பந்தம் ஒன்றை விக்டோரிய மாநில அரசு உருவாக்குகிறது.இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.
How to donate blood in Australia - ஆஸ்திரேலியாவில் இரத்த தானம் செய்வது எப்படி? 31.10.2025 9:24
Each time you donate blood, you can save up to three lives. In Australia, we rely on strangers to donate blood voluntarily, so it’s a truly generous and selfless act. This ensures that it’s free when you need it—but it also means we need people from all backgrounds to donate whenever they can. Here’s how you can help boost Australia’s precious blood supply. - ஆஸ்திரேலியாவில் இரத்ததானம் ஏன் மிகவும்...
செய்தியின் பின்னணி: ஆஸ்திரேலியாவில் குழந்தை வளர்ப்பு, ஒரு பொருளாதாரப் போராட்டம் 31.10.2025 7:19
ஆஸ்திரேலியாவில் ஒரு குழந்தையை வளர்ப்பது இன்று பல குடும்பங்களுக்கு ஒரு மிகப்பெரிய நிதிச் சவாலாக மாறியுள்ளது. வீட்டு விலை உயர்வு, உணவு, கல்வி, மருத்துவம் மற்றும் குழந்தை பராமரிப்பு செலவுகள் அனைத்தும் கடந்த பத்தாண்டுகளில் கடுமையாக உயர்ந்துள்ளன. சமீபத்திய அறிக்கைகள் படி, ஒரு குழந்தையை பிறப்பிலிருந்து 18 ஆண்டுகள் வரை வளர்ப்பதற்கான சராசரி செலவு பத்து லட்சம் டாலர்களை தாண்டுகிறது. இது பற்றிய செய்தியின் பி...
Australia posts record-breaking flu numbers as vaccination rates stall - காய்ச்சல் தொற்று புதிய உச்சம் - ஊசி இல்லாத் தடுப்பு மருந்து அறிமுகம் 31.10.2025 12:11
GPs are sounding the alarm on Australia’s influenza vaccination rates, following a record flu season in which more than 410,000 lab-confirmed cases have been reported so far in 2025. Speaking about this issue, Dr. Yalini Devasangar, a General Practitioner (GP) from Griffith, shared her insights with us. Segment produced by Praba Maheswaran. - நாட்டில் காய்ச்சல்(Influenza) தடுப்பூசி விகிதம் குறைந்த...
இன்றைய செய்திகள்: 31 அக்டோபர் 2025 - வெள்ளிக்கிழமை 31.10.2025 4:37
SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வெள்ளிக்கிழமை 31/10/2025) செய்திகள். வாசித்தவர் : செல்வி.
இலங்கை: இந்த வார முக்கிய செய்திகள் 30.10.2025 8:16
நாடு முழுவதும் போதைப்பொருளை ஒழிக்கும் தேசிய வேலைத்திட்டம் அதிபர் அநுரகுமார திசாநாயக்க தலைமையில் ஆரம்பம். 2026ஆம் ஆண்டில் உலகில் சென்று பார்க்க வேண்டிய சிறந்த சுற்றுலா தலங்களில் ஒன்றாக யாழ்ப்பாணம் தெரிவு உள்ளிட்ட செய்திகளோடு “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சிக்காக விவரணமொன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.
உலகம்: இந்த வார செய்திகளின் தொகுப்பு 30.10.2025 8:01
காசா மீது மீண்டும் தாக்குதல்; சீன அதிபருடன் அமெரிக்க அதிபர் சந்திப்பு; ரஷ்யாவின் அணு ஆயுதச்சோதனை, அணு ஆயுதச்சோதனைக்கு தயாராகும் அமெரிக்கா; ஆப்கான்- பாகிஸ்தான் இடையிலான பேச்சுவார்த்தை தோல்வி; சூடானில் துணை ராணுவப்படையின் ஆதிக்கம்; மெலிசா சூறாவளி உள்ளிட்ட உலகச்செய்திகளின் பின்னணியை முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் தமிழ்ப் பிரபாகரன்.
ஏன் பிரதமர் Albanese அணிந்த T Shirt விமர்சனத்திற்கு உள்ளாகிறது? 30.10.2025 5:22
பிரதமர் Anthony Albanese வெளிநாட்டிலிருந்து ஆஸ்திரேலியா திரும்பியபோது அவர் Joy division என்ற ஆங்கில இசைக்குழுவின் பெயரும் அவர்கள் முதன் முதலில் வெளியிட்ட ஆல்பத்தின் பெயர் படம் இடம்பெற்றிருந்த t shirt ஒன்றை அணிந்திருந்தார். இதுபற்றி நாடாளுமன்றத்தில் அவர் விமர்சனத்திற்கு உள்ளாகிவருகிறார். ஏன் இந்த T Shirt விமர்சனத்திற்கு உள்ளாகிறது என்று விளக்குகிறார் ஊடகத்துறையில் பல ஆண்டுகளாக பணியாற்றும் இரா.சத்தி...
Similar podcasts
Replaio is not a podcast publisher; show names, artwork and audio belong to their authors and are distributed through public RSS feeds.