SBS

SBS Tamil - SBS தமிழ்

News TA ↓ 2198 episodes

Independent news and stories from SBS Audio, connecting you to life in Australia and Tamil-speaking Australians. - தமிழ் பேசும் ஆஸ்திரேலியர்களுடனும், ஆஸ்திரேலிய வாழ்க்கையுடனும் இணைய உங்களுக்கு உதவும் பக்கசார்பற்ற செய்திகள் மற்றும் கதைகள்.

Author

SBS

Category

News

Podcast website

www.sbs.com.au

Latest episode

Jul 11, 2026

Where to listen?

Podcasts in the app Replaio Radio Coming soon

Podcasts are coming to the app soon. Install now and be the first to see a whole new take on podcasts

Get it on Google Play Install for free Android 5M+ downloads · 4.8 rating iOS soon

Episodes

இன்றைய செய்திகள்: 24 டிசம்பர் 2025 புதன்கிழமை 24.12.2025

SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (புதன்கிழமை 24/12/2025) செய்திகள். வாசித்தவர்: மகேஸ்வரன் பிரபாகரன்.

செய்தியின் பின்னணி: Christmas Shopping- ‘இப்போது வாங்குங்கள், பிறகு பணம் கொடுத்தால் போதும்’ - நமக்கு உதவுமா? 24.12.2025

ஆஸ்திரேலியாவில் நுகர்வோர் மத்தியில் மிகப்பிரபலமான ஒன்று 'Buy now, pay later' திட்டம். இதன்கீழ் பொருட்களை வாங்கும் ஒருவர் முழுத்தொகையையும் உடனே செலுத்தாமல் தவணைமுறையில் அதனைச் செலுத்த முடியும். இதில் மறைந்துள்ள ஆபத்துகள் குறித்த செய்தியின் பின்னணியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.

மதுபோதையில் வாகனம் ஓட்டிய கணவன்: மன்னிப்புக்கோரிய விக்டோரியா Premier 23.12.2025

தனது கணவன் மதுபோதையுடன் வாகனம் ஓட்டிய சம்பவம் குறித்து விக்டோரியா Premier Jacinta Allan மன்னிப்புகோரியுள்ளார். இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.

அடிலெய்டில் இந்தியப் பெண் கொலை, கணவன் கைது 23.12.2025

அடிலெய்டில் இந்தியப் பெண் ஒருவரை கொலை செய்த குற்றச்சாட்டில் அவரது கணவன் கைதுசெய்யப்பட்டுள்ளார்.இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.

இன்றைய செய்திகள்: 23 டிசம்பர் 2025 செவ்வாய்க்கிழமை 23.12.2025

SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (செவ்வாய்க்கிழமை 23/12/2025) செய்திகள். வாசித்தவர் : றேனுகா துரைசிங்கம்.

அரிதான வெள்ளைக் கங்காரு விற்பனைக்கு! 22.12.2025

தெற்கு ஆஸ்திரேலியாவில் அரிய வகை சாம்பல் மற்றும் வெள்ளை நிற கங்காருக்கள் விற்பனைக்கு உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.

உங்கள் Superannuation நிதியின் பயனாளியை நியமிப்பது ஏன் முக்கியம்? 22.12.2025

Superannuation Nomination என்பது, நீங்கள் இறந்தால் உங்கள் ஓய்வூதிய நிதியை யார் பெற வேண்டும் என்பதை பதிவு செய்து வைக்கும் செயல்முறையாகும். இது குறித்த பல கேள்விகளுக்கு பதில் தருகிறார் நிதிதுறையில் பல ஆண்டுகள் அனுபவம் கொண்ட பிரிஸ்பனை சேர்ந்த ராமநாதன் கருப்பையா அவர்கள். அவரோடு உரையாடுகிறார் செல்வி.

இன்றைய செய்திகள்: 22 டிசம்பர் 2025 - திங்கட்கிழமை 22.12.2025

SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (திங்கட்கிழமை 22/12/2025) செய்திகள். வாசித்தவர் : றேனுகா துரைசிங்கம்.

இந்தியா & தமிழ்நாடு: கடந்தவார நிகழ்வுகளின் தொகுப்பு 21.12.2025

தமிழ்நாடு வாக்காளர் பட்டியலிலிருந்து 97 லட்சம் பேர் நீக்கம்; செவிலியர்கள் போராட்டம்; 100 நாள் வேலைத்திட்டத்துக்கு மாற்றாக மோடி அரசின் புதிய திட்டம்; நேஷனல் ஹெரால்டு வழக்கு: சோனியா- ராகுல் காந்தி விடுதலையை எதிர்த்து அமலாக்கத்துறை மேல்முறையீடு உள்ளிட்ட தமிழக/இந்தியச் செய்திகளின் பின்னணியை முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் தமிழ்ப் பிரபாகரன்.

திருப்தியான தருணங்களும், சவால்களும், ஏமாற்றங்களும் - K. Arkesh, முன்னாள் IGP 21.12.2025

இந்தியாவின் கர்நாடகா மாநிலத்தின் முன்னாள் காவல் துறை உயரதிகாரி (Inspector General of Police) கே. ஆர்கேஷ் அவர்கள். மிகவும் கடினமான, சவாலான பகுதிகளில் முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக சேவை செய்துள்ளார். வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் காஷ்மீர் கிளர்ச்சி ஒழிப்பு நடவடிக்கைகளுக்கு தலைமையேற்று செயல்பட்டவர். சந்தனக் கடத்தல் வீரப்பனை தேடும் நடவடிக்கையில் முக்கிய பங்காற்றியவர். அவர் ஒரு கல்வியாளரும் கூட. மனிதவியல...

மெல்பனில் தமிழ் அகதி ஒருவர் மரணம்: அவரது மகள் விடுக்கும் வேண்டுகோள்! 20.12.2025

மெல்பனில் தமிழ் அகதி ஒருவர் மரணமடைந்துள்ளார். இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.

இந்த வார ஆஸ்திரேலிய செய்திகள் (15 – 20 டிசம்பர் 2025) 20.12.2025

ஆஸ்திரேலியாவில் இந்த வாரம் (15 – 20 டிசம்பர் 2025) நடந்த முக்கிய செய்திகளின் தொகுப்பு. வாசித்தவர்: றைசெல்.

இந்தோனேசிய - தமிழ் இசை உலகங்களை இணைக்கும் ரோஹன்! 19.12.2025

இந்தோனேசியாவின் புகழ்பெற்ற gamelan இசை பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். Gamelan மட்டுமல்ல tuba, baritone, euphonium என பல வாத்தியங்களை வாசிக்கும் திறமை கொண்டவர் மெல்பனைச் சேர்ந்த ரோஹன் ஐயர். அவரது இசைப் பயணம் தொடர்பிலும் அவரது பின்னணி தொடர்பிலும் அவர் நம்முடன் பகிர்ந்துகொள்கிறார். மெல்பன் கலையகத்தில் அவரை சந்தித்து உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.

MiniPod: To be stuffed | Words we use - MiniPod: To be stuffed | Words we use 19.12.2025

Learn a new phrase and make your English sound more natural and interesting. Words We Use is a bilingual series that helps you understand idioms like 'to be stuffed'. - ஒரு புதிய சொற்றொடரை கற்று, உங்கள் ஆங்கிலம் மேலும் இயல்பாகவும் புதுமையாகவும் ஒலிக்கச் செய்யுங்கள். ‘Words We Use’ என்பது 'to be stuffed' போன்ற சொற்பிரயோகங்களை நீங்கள் எளிதில் புரிந்துகொள்ள உதவும் இருமொழி தொடர் நிகழ்ச்சியாகும்.

Dating or matchmaking: How to find a partner in Australia - ஆஸ்திரேலியாவில் காதல் துணையை தேடுவது எப்படி? 19.12.2025

Many newly arrived migrants in Australia seek relationships not only for romance but to regain a sense of belonging. Separation from loved ones often drives this need for connection. This episode explores how dating in Australia differs from more collectivist cultures and how newcomers can find partners. From social events and dating apps to professional matchmaking, it highlights how migrants can...

இன்றைய செய்திகள்: 19 டிசம்பர் 2025 - வெள்ளிக்கிழமை 19.12.2025

SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வெள்ளிக்கிழமை 19/12/2025) செய்திகள். வாசித்தவர் : செல்வி.

இலங்கை: இந்த வார முக்கிய செய்திகள் 18.12.2025

தம்மை பாதுகாப்பான இடங்களில் மீளவும் குடியேற்ற கோரி மக்கள் போராட்டம் மற்றும் அண்மைய அனர்த்தம் குறித்து விவாதிக்க விசேட நாடாளுமன்ற அமர்வு. இவைகள் தொடர்பில் “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.

செய்தியின் பின்னணி: Bondi தாக்குதலால் நாட்டில் கடுமையாக்கப்படும் சட்டங்கள் 18.12.2025

Bondi கடற்கரைத் தாக்குதல் சம்பவத்துக்குப் பிறகு, பிரதமர் Anthony Albanese, இனவெறுப்பினைத் தூண்டும் பேச்சு, இனவன்மம், மதவன்மம் மற்றும் வன்முறையை தூண்டும் கருத்துக்களை எதிர்க்கும் வகையில், நாட்டின் சட்டங்களை மேலும் கடுமையாக்கும் புதிய நடவடிக்கைகளை அறிவித்துள்ளார். இதுபற்றிய செய்தியின் பின்னணியினை முன்வைக்கிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.

உலகம்: இந்த வார செய்திகளின் தொகுப்பு 18.12.2025

அமெரிக்கா- வெனிசுலா இடையே முற்றும் மோதல் போக்கு; காசா: போர் நிறுத்த மீறல்கள்; அமெரிக்கா- ரஷ்யா அதிகாரிகளிடையே பேச்சுவார்த்தை; எகிப்து- இஸ்ரேல் இடையே இயற்கை எரிவாயு ஏற்றுமதி ஒப்பந்தம்; தைவானுக்கு 11 பில்லியன் டாலர்கள் மதிப்பிலான ஆயுத விற்பனை: அமெரிக்காவின் அறிவிப்பு; கம்போடியா- தாய்லாந்து இடையில் மீண்டும் மோதல்; சிரியாவில் அமெரிக்க படையினர் மீது ஐஎஸ் தாக்குதல் உள்ளிட்ட உலகச்செய்திகளின் பின்னணியை மு...

Bondi தாக்குதல்: சர்ச்சைக்குள்ளாகும் சஜித் அக்ரமின் இந்தியப் பின்னணி! 18.12.2025

Bondi கடற்கரை தாக்குதலில் தனது தந்தையுடன் இணைந்து ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்ட நவீத் அக்ரமுக்கு எதிராக குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் தந்தை மகன் தொடர்பிலான விவரங்களை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.

Port Arthur படுகொலைகள்: இன்று 30ஆம் ஆண்டு நினைவு 18.12.2025

30 ஆண்டுகளுக்கு முன் தஸ்மேனிய மாநிலத்தில் இடம்பெற்ற Port Arthur படுகொலைகள் தொடர்பான நினைவு தினம் இன்று (28 April 2026) அனுசரிக்கப்படுகிறது. இந்த சம்பவம் பற்றிய விரிவான விளக்கத்தை முன்வைக்கிறார் ஊடகத்துறையில் பல ஆண்டுகளாக பணியாற்றும் மூத்த ஒலிபரப்பாளர் இரா.சத்தியநாதன் அவர்கள். அவரோடு உரையாடுகிறார்: றைசெல்.

முதியோர் எதிர்கொள்ளும் வருமான சுரண்டல் : தடுப்பது எப்படி? 18.12.2025

Elders Financial Abuse - முதியோர் வருமான சுரண்டல் என்றால் என்ன? இதற்கான சட்ட உதவிகளை எங்கு பெற்றுக்கொள்ளலாம்? இது போன்ற பல கேள்விகளுக்கு விடையளிக்கிறது இந்த விவரணம். தயாரித்து முன் வைக்கிறார் செல்வி.

கண் தொடர்பான பிரச்சினைகளாலும் தலைவலி வரக்கூடுமா? 18.12.2025

நம்மில் பலர் தலைவலியால் அடிக்கடி அவதிப்படுவோம். கண் தொடர்பான பிரச்சினைகளாலும் தலைவலி வரக்கூடுமா? விளக்கமளிக்கிறார் மெல்பனைச் சேர்ந்த கண் மருத்துவ நிபுணர் ராஜ் பத்மராஜ் அவர்கள். அவரோடு உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்

இன்றைய செய்திகள்: 18 அக்டோபர் 2025 வியாழக்கிழமை 18.12.2025

SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வியாழக்கிழமை 18/12/2025) செய்திகள். வாசித்தவர்: றைசெல்.

NSW-இல் துப்பாக்கி உரிமம் பெற்றவர்கள் எத்தனை பேர் உள்ளனர்? 17.12.2025

Bondi கடற்கரை துப்பாக்கிச்சூட்டுத் தாக்குதலையடுத்து NSW மாநிலத்தில் சட்டபூர்வமாக துப்பாக்கி வைத்திருப்பவர்களின் எண்ணிக்கை குறித்து தீவிரமான விவாதம் எழுந்துள்ளது. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.

Listen to the SBS Tamil - SBS தமிழ் podcast in Replaio

Radio and podcasts in one app - free, with no sign-up. Install today and do not miss the launch

Get it on Google Play

Replaio is not a podcast publisher; show names, artwork and audio belong to their authors and are distributed through public RSS feeds.