SBS
SBS Tamil - SBS தமிழ்
Independent news and stories from SBS Audio, connecting you to life in Australia and Tamil-speaking Australians. - தமிழ் பேசும் ஆஸ்திரேலியர்களுடனும், ஆஸ்திரேலிய வாழ்க்கையுடனும் இணைய உங்களுக்கு உதவும் பக்கசார்பற்ற செய்திகள் மற்றும் கதைகள்.
Be sure to visit the podcast's website and support the creator: www.sbs.com.au
Where to listen?
Podcasts in the app Replaio Radio Coming soonPodcasts are coming to the app soon. Install now and be the first to see a whole new take on podcasts
Episodes
Vivid சிட்னி ஒளித்திருவிழா விரைவில் தொடங்குகிறது! 06.05.2026 2:34
சிட்னிவாசிகள் மற்றும் சுற்றுலாப் பயணிகளை மகிழ்வூட்டவென பலவண்ண ஒளியூட்டல்கள், இசை நிகழ்ச்சிகள், உணவுத் திருவிழாக்கள் ஆகியவற்றுடன் Vivid Sydney விரைவில் தொடங்கவுள்ளது. இதுகுறித்த செய்தியைத் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.
தமிழ் உட்பட பல ஆசிய மொழிக் கற்றலுக்கு ஆஸ்திரேலிய அரசு கூடுதல் நிதி உதவி 06.05.2026 2:38
ஆஸ்திரேலியாவில் ஆசிய மொழிக் கல்வியை வலுப்படுத்த ஏதுவாக தமிழ் உட்பட பல மொழிகளைக் கற்றுக் கொடுப்பதற்கு அரசு நிதியுதவியை அறிவித்துள்ளது. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.
தமிழ்நாடு 2026 சட்டப்பேரவை தேர்தல் முடிவு - இவர்கள் கூறுவது என்ன? 06.05.2026 14:41
தமிழ்நாடு 2026 சட்டப்பேரவை தேர்தலில் எதிர்பாராத அமோக வெற்றியை நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் பெற்று அட்சி அமைக்க உள்ளது. தவெகவிற்கு அடுத்தபடியாக திமுகவும் அதன் பின் அதிமுகவும் அதிக இடங்களை வென்றுள்ளன. முதல் முறையாக திராவிட கட்சி இல்லாத ஒரு ஆட்சி தமிழ்நாட்டில் அமைய போவதாகவும் கருதப்படுகிறது. தமிழ்நாடு 2026 சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் குறித்து நமது நேயர்கள் சிலர் பகிர்ந்துக்கொண்ட கருத்துகளை அ...
தமிழ் சுயாதீன இசைக்கு புதிய அடையாளம் தரும் Keys & Verses கௌஷிக் மற்றும் விஜய்! 06.05.2026 29:53
மெல்பனைத் தளமாகக் கொண்ட சுயாதீன இசைக் கலைஞர்கள் கௌஷிக் கணேசன் மற்றும் விஜய் ராகவன் ஆகியோர் Keys & Verses Collective என்ற இசைக் குழுவை நடத்தி வருகிறார்கள். 'தமிழா தமிழா' மற்றும் 'AI சந்தரி' உட்பட பல பிரபலமான பாடல்களை வெளியிட்டுள்ள இக்கலைஞர்களுடன் ஒரு சந்திப்பு. மெல்பன் கலையகத்தில் அவர்களை சந்தித்து உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.
செய்தியின் பின்னணி: ஆஸ்திரேலியாவில் குடிவரவு முகவர்கள் பலர் மீது கடும் நடவடிக்கை 06.05.2026 6:23
ஆஸ்திரேலியாவில் குடிவரவு ஆலோசனை வழங்குபவர்கள் மீது கண்காணிப்பு அதிகரித்துள்ள நிலையில் குடிவரவு முகவர்கள் பதிவு ஆணையத்தின் அலுவலகமான OMARA கடும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதுகுறித்த செய்தியின் பின்னணியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.
இன்றைய செய்திகள்: 06 மே 2026, புதன்கிழமை 06.05.2026 3:37
SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (புதன்கிழமை 06/05/2026) செய்திகள். வாசித்தவர்: மகேஸ்வரன் பிரபாகரன்.
இலங்கை: அதிகரிக்கும் யானை - மனித மோதல்களும், உயிரழப்புகளும் 06.05.2026 8:19
இலங்கையின் கிழக்கு பகுதியில் குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் யானைக்கும் – மனிதனுக்கும் இடையே மோதல்கள் காரணமாக உயிரிழப்புகளும் சேதங்களும் அதிகரித்து வருகின்றன. இது தொடர்பில் “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.
தமிழகத்தில் புதிய அரசு அமைக்க கூட்டணி உருவாகிறது! 05.05.2026 8:23
தமிழக சட்டசபைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை மிக மிக பரப்பரப்பான சூழலுக்கிடையில் நடந்து முடிந்த நிலையில், தவெக ஆட்சி அமைவதற்கான சாத்தியம் பற்றிய செய்தியின் பின்னணியை முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் தமிழ்ப் பிரபாகரன்.
தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் 2026: பிந்திய தகவல்கள் 05.05.2026 9:58
தமிழகத்தில் தனிக்கட்சி தொடங்கி, சந்தித்த முதல் தேர்த்தலிலேயே 108 தொகுதிகளில் வெற்றி பெற்று மாபெரும் சாதனையை படைத்துள்ளார் விஜய். விஜயின் தமிழக வெற்றி கழகத்திற்கு ஆதரவாக வீசிய அலை தமிழக அரசியலை புரட்டி போட்டு முக்கிய அரசியல் கட்சி தலைவர்கள் தோல்வியை தழுவியுள்ளனர். இதுகுறித்த செய்தியோடு இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.
ஆஸ்திரேலிய மாணவர் விசா பரிசீலனை கடுமை – இந்தியா, இலங்கை மாணவர்கள் பாதிப்பு! 05.05.2026 3:22
ஆஸ்திரேலியாவிற்குள் அனுமதிக்கப்படும் வெளிநாட்டு மாணவர்களுக்கான விசா மறுப்பு வீதம் கணிசமாக அதிகரித்துள்ளது. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.
இன்றைய செய்திகள்: 05 மே 2026 - செவ்வாய்க்கிழமை 05.05.2026 4:36
SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (செவ்வாய்க்கிழமை 05/05/2026) செய்திகள். வாசித்தவர் : செல்வி இன்பசேகரன்.
தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல்: தவெக அமோக வெற்றி 04.05.2026 5:56
தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகள் பெரும் ஆச்சரியங்களை ஏற்படுத்தி வருகிறது. விஜயின் தமிழக வெற்றிக் கழகம் (TVK) 113 தொகுதிகளில் (இந்திய நேரம் மதியம் 01:40 நிலவரப்படி) முன்னிலை வகித்து வருகிறது. திமுக கூட்டணி 64 தொகுதிகளிலும், அதிமுக கூட்டணி 58 தொகுதிகளிலும் முன்னிலை வகித்து வருகிறது. பல தொகுதிகளில் வாக்கு வித்தியாசம் குறைவாக இருப்பதால் தமிழக வெற்றிக் கழகம் மேலும் சில இடங்களில் முன்னிலை வகித்து தனித்த...
Tips to reduce petrol costs | Fuel in Focus - பெட்ரோல் செலவைக் குறைத்து பணத்தைச் சேமிப்பது எப்படி? 04.05.2026 7:38
Rising fuel prices are putting pressure on household budgets across Australia, and for many people, it’s changing the way they travel. So what can you do to reduce your fuel costs without giving up your daily routine? Here are some simple, practical ways to save money on petrol. - உயர்ந்து வரும் எரிபொருள் விலைகள் ஆஸ்திரேலியா முழுவதும் உள்ள குடும்பங்களின் நிதிநிலைமையில் அழுத்தத்தை ஏற்படுத்துகின்றன—...
செய்தியின் பின்னணி : Alice Springs சிறுமியின் மரணமும், தொடர்ந்த வன்முறையும் - நடந்தது என்ன? 04.05.2026 7:28
Alice Springs-இல் கடந்த வாரம் ஐந்து வயது பூர்வீகக்குடியின சிறுமி ஒருவர் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் காரணமாக அங்கு வன்முறைகள் இடம்பெற்றன. இது குறித்த செய்தியின் பின்னணியை எடுத்து வருகிறார் செல்வி இன்பசேகரன்.
‘AI தொழில்நுட்பம் குடியேற்றவாசிகள், பெண்களுக்கு எதிராக பாகுபாடு காட்டும்’ 04.05.2026 15:03
நக்சத்திரா சுரேஷ் அவர்கள் இணையம் தொடர்பான குற்றவியல் ஆய்வு நிபுணர் (cyber criminologist), மட்டுமல்ல, அவர் ஒரு தொழில்முனைவோர், கல்வியாளர் மற்றும் சர்வதேச பேச்சாளர். Privacy, cybersecurity, online harms, technology-facilitated violence மற்றும் AI உள்ளிட்ட நவீன தொழில்நுட்பம் கொண்டுவரும் ஆபத்துகள் குறித்து, சமூக அறிவியல் பார்வையில் ஆய்ந்து வருகிறார். Nakshathra அவர்களுடன் SBS தமிழ் நிகழ்ச்சிக்காக உரைய...
இன்றைய செய்திகள்: 04 மே 2026 - திங்கட்கிழமை 04.05.2026 4:55
SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (திங்கட்கிழமை 04/05/2026) செய்திகள். வாசித்தவர் : றேனுகா துரைசிங்கம்.
இந்த வார ஆஸ்திரேலிய செய்திகள் (26 ஏப்ரல் – 2 மே 2026) 02.05.2026 5:47
ஆஸ்திரேலியாவில் இந்த வாரம் (26 ஏப்ரல் – 2 மே 2026) நடந்த முக்கிய செய்திகளின் தொகுப்பு. வாசித்தவர்: றைசெல்.
ஆஸ்திரேலியாவிலிருந்து 15 இந்தியர்கள் நாடுகடத்தல் 01.05.2026 2:20
ஆஸ்திரேலியாவிலிருந்து 15 இந்தியர்கள் நாடுகடத்தப்பட்டுள்ளனர். இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.
சிட்னியில் சித்திரைத் திருவிழாவில் பங்கேற்க வருகிறார் பத்மஶ்ரீ வேலு ஆசான் 01.05.2026 9:22
தமிழ்க் கலை பற்றும் பண்பாட்டுக் கழகம் 14ஆவது ஆண்டாக நடத்துகின்ற ‘சிட்னியில் சித்திரை திருவிழா’ நிகழ்வில் பங்கேற்க இந்தியாவிலிருந்து வருகை தருகிறார் பறையிசைக் கலைஞர் பத்மஶ்ரீ வேலு ஆசான். அவருடைய கலைப் பயணம் மற்றும் சித்திரை திருவிழா குறித்து அவரோடு உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.
செய்தியின் பின்னணி: ஆஸ்திரேலிய குடியேற்றத்தில் மாற்றம் - இந்தியா முதலிடம் 01.05.2026 6:42
ஆஸ்திரேலியாவில் குடியேற்றத்தின் புதிய மாற்றங்கள் தற்போது பெரும் கவனத்தை ஈர்த்து வருகின்றன. பல ஆண்டுகளுக்குப் பிறகு, இங்கிலாந்தை முந்தி இந்தியா முக்கிய குடியேற்ற நாடாக முன்னிலை பெற்றுள்ளது. இந்த மாற்றம், நாட்டின் பல்சமூக அடையாளத்தையும் எதிர்கால வளர்ச்சியையும் பிரதிபலிக்கிறது. இதுபற்றிய செய்தியின் பின்ணணியினை முன்வைக்கிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.
இன்றைய செய்திகள்: 01 மே 2026 - வெள்ளிக்கிழமை 01.05.2026 4:16
SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வெள்ளிக்கிழமை 01/05/2026) செய்திகள். வாசித்தவர் : செல்வி இன்பசேகரன்.
சிட்னியில் சித்திரைத் திருவிழா: தமிழரின் கலை, பண்பாட்டுக் கொண்டாட்டம்! 30.04.2026 10:28
தமிழ் கலை மற்றும் பண்பாட்டுக் கழகம் (TACA) நடத்தும் “சிட்னியில் சித்திரை திருவிழா” NSW மாநிலத்தின் சிட்னி பெருநகரின் Stanhope Gardens எனுமிடத்திலுள்ள Blacktown Leisure Centreயில் வைத்து காலை 10 மணி முதல் மாலை 6 மணிவரை நடைபெறுகிறது. 14வது ஆண்டாக நடைபெறும் இந்த விழாவின் வளர்ச்சி, இளம் தலைமுறைக்கான முக்கியத்துவம், மற்றும் இந்த ஆண்டு மக்கள் எதிர்பார்க்கக்கூடிய சிறப்பு அம்சங்கள் குறித்து நாம் உரையாடுகி...
வெளிநாட்டில் பிறந்த ஆஸ்திரேலியர்களில் இந்தியர்கள் முதலிடம் 30.04.2026 2:49
ஆஸ்திரேலிய மக்கள்தொகையில் வெளிநாடொன்றில் பிறந்தவர்களின் எண்ணிக்கையில் இந்தியர்கள் புதிய சாதனை படைத்துள்ளனர். இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.
வாழைப் பட்டு நூல் தயாரிக்கும் தமிழர்! 30.04.2026 11:45
வாழைமரத்திலிருந்து பட்டு நூல் தயாரிக்கும் தொழில்நுட்பத்தில் பல கண்டுபிடிப்புகளை செய்துள்ள தமிழ்நாடு தூத்துக்குடியை சேர்ந்த திரு முருகன் தனது கண்டுபிடிப்பு பற்றியும் அதில் தான் எதிர்க்கொண்ட சவால்ககள் பற்றியும் நம்மோடு பகிர்ந்துக் கொள்கிறார். அவரோடு உரையாடுகிறார் செல்வி இன்பசேகரன்.
வர்மக்கலையில் என்னென்ன வகைகள் உள்ளன? 30.04.2026 6:18
வர்மக்கலை என்பது தமிழ் மரபில் தோன்றிய ஒரு கலையாகும். வர்ம சூத்திரம் எனப்படும் தமிழ் மருத்துவ விஞ்ஞானத்தை அடிப்படையாக வைத்து தொடங்கப்பட்டுப் பின்னர் ஒரு தற்காப்புக்கலையாக இது வளர்த்தெடுக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. இது தொடர்பில் தமிழகத்தில் கடந்த பல வருடங்களாக வர்மக்கலையை கற்பித்துவரும் வர்ம ஆசான் சு.ராஜேந்திரனுடன் உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.
Similar podcasts
Replaio is not a podcast publisher; show names, artwork and audio belong to their authors and are distributed through public RSS feeds.