SBS
SBS Tamil - SBS தமிழ்
Independent news and stories from SBS Audio, connecting you to life in Australia and Tamil-speaking Australians. - தமிழ் பேசும் ஆஸ்திரேலியர்களுடனும், ஆஸ்திரேலிய வாழ்க்கையுடனும் இணைய உங்களுக்கு உதவும் பக்கசார்பற்ற செய்திகள் மற்றும் கதைகள்.
Where to listen?
Podcasts in the app Replaio Radio Coming soonPodcasts are coming to the app soon. Install now and be the first to see a whole new take on podcasts
Episodes
இன்றைய செய்திகள்: 31 டிசம்பர் 2025 புதன்கிழமை 31.12.2025 3:49
SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (புதன்கிழமை 31/12/2025) செய்திகள். வாசித்தவர்: மகேஸ்வரன் பிரபாகரன்.
இலங்கை: டக்ளஸ் தேவானந்தாவின் கைதும், பின்னணியும் 30.12.2025 8:31
இலங்கையில் முன்னாள் அமைச்சரும் ஈ.பி.டி.பி.யின் செயலாளருமான டக்ளஸ் தேவானந்தா கைது செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பில் “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.
சிட்னியில் பொது இடத்தில் துப்பாக்கிச் சூடு நடத்த சதி: இளைஞர் கைது 30.12.2025 2:39
சிட்னியின் தென் மேற்கு பகுதியில் பொது இடத்தில் துப்பாக்கிச் சூடு நடத்த சதித்திட்டம் தீட்டியமை தொடர்பில் நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.
மெல்பன் உட்பட பல நகரங்களுக்கு நீர் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் வாய்ப்பு! 30.12.2025 2:46
வறட்சி நிலை தீவிரமடைந்துள்ளதால், மெல்பன் உட்பட பல நகரங்களுக்கு நீர் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.
இன்றைய செய்திகள்: 30 டிசம்பர் 2025 செவ்வாய்க்கிழமை 30.12.2025 4:31
SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (செவ்வாய்க்கிழமை 30/12/2025) செய்திகள். வாசித்தவர் : றேனுகா துரைசிங்கம்.
விக்டோரியாவில் பொதுப் போக்குவரத்துக் கட்டணம் அதிகரிக்கப்படுகிறது! 29.12.2025 2:27
விக்டோரியாவில் பொதுப் போக்குவரத்துக் கட்டணம் ஜனவரி 1 முதல் உயர்கிறது. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.
செய்தியின் பின்னணி : 2026-இல் சர்வதேச விமான பயணத்தில் அறிமுகமாகும் மாற்றங்கள்! 29.12.2025 6:50
2026-இல் பல ஆஸ்திரேலிய விமான நிறுவனங்கள் புதிய சர்வதேச விமான வழிதடங்களை அறிமுகப்படுத்துகின்றன. ஆசியா மற்றும் பசிபிக் பிராந்தியங்களில் கூடுதல் விமான சேவைகள் சேர்க்கப்படுகின்றன. இது குறித்த செய்தியின் பின்னணியை தயாரித்து வழங்குகிறார் செல்வி.
இன்றைய செய்திகள்: 29 டிசம்பர் 2025 - திங்கட்கிழமை 29.12.2025 4:36
SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (திங்கட்கிழமை 29/12/2025) செய்திகள். வாசித்தவர் : றேனுகா துரைசிங்கம்.
இந்தியா 2025: ஒரு மீள்பார்வை 28.12.2025 7:42
2025ஆம் ஆண்டில் இந்தியாவில் இடம்பெற்ற முக்கிய சம்பவங்கள், நிகழ்வுகள் மற்றும் அதிகம் பேசப்பட்ட செய்திகளின் தொகுப்பை முன்வைக்கிறார் நமது செய்தியாளர் ராஜ்.
தமிழ்நாடு 2025: ஒரு மீள்பார்வை 28.12.2025 7:19
2025ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் இடம்பெற்ற முக்கிய சம்பவங்கள், நிகழ்வுகள் மற்றும் அதிகம் பேசப்பட்ட செய்திகளின் தொகுப்பை முன்வைக்கிறார் நமது செய்தியாளர் ராஜ்.
உயர்தர பரீட்சையில் தமிழ் பாடத்தில் சாதித்தவர்கள் 28.12.2025 14:11
நியூசவுத்வேல்ஸ் மாநில பல்கலைக்கழகப் புகுமுகத் தேர்வான HSCயில், இவ்வருடம் தமிழ் மொழியை ஒரு பாடமாகத் தேர்ந்தெடுத்தவர்களில் முதல் ஐந்து இடங்களை முறையே பொன் விமலராகவன் விஜயன், சஞ்சனா கெளரீகரன், நிதுரா யசோதரன், மாதினி அருள்நந்தி மற்றும் தக்சன் சிவச்செல்வன் ஆகியோர் பெற்றுப் பெருமை சேர்த்துள்ளார்கள். தமிழ் மொழியில் சாதித்த அந்த ஐவருடனும் உரையாடுகிறார் மகேஸ்வரன் பிரபாகரன். In NSW, Tamil language is offere...
இந்த வார ஆஸ்திரேலிய செய்திகள் (21 – 27 டிசம்பர் 2025) 27.12.2025 4:33
ஆஸ்திரேலியாவில் இந்த வாரம் (21 – 27 டிசம்பர் 2025) நடந்த முக்கிய செய்திகளின் தொகுப்பு. வாசித்தவர்: றைசெல்.
இன்றைய செய்திகள்: 26 டிசம்பர் 2025 - வெள்ளிக்கிழமை 26.12.2025 4:45
SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வெள்ளிக்கிழமை 26/12/2025) செய்திகள். வாசித்தவர் : செல்வி.
விளையாட்டு 2025 - ஒரு மீள்பார்வை 25.12.2025 8:24
2025ம் ஆண்டில் அதிகம் பேசப்பட்ட, அதிக தாக்கத்தையோ அதிர்ச்சியையோ ஏற்படுத்திய விளையாட்டுகள் மற்றும் முடிவுகளில் சிலவற்றின் தொகுப்பு. முன்வைக்கிறார் மகேஸ்வரன் பிரபாகரன். Praba Maheswaran reviews major sporting events and stories that made headlines in 2025.
இலங்கை 2025: ஒரு மீள்பார்வை 25.12.2025 14:17
2025ஆம் ஆண்டில் இலங்கையில் இடம்பெற்ற முக்கிய சம்பவங்கள், நிகழ்வுகள் மற்றும் அதிகம் பேசப்பட்ட செய்திகளின் தொகுப்பை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.
உலகம் - 2025 25.12.2025 8:32
2025ம் ஆண்டு முடிவடைய இருக்கும் நிலையில் இந்தாண்டு உலகளவில் தாக்கத்தையும் கவனத்தையும் பெற்ற முக்கிய உலக நிகழ்வுகளின் தொகுப்பை முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் தமிழ்ப் பிரபாகரன்.
‘சமூக நீதி, ஏழைகளுக்காக குரல் கொடுத்தல், தரமான எழுத்துக்களை மக்களுக்குத் தருதல் என்று என் பயணம் தொடரும்’ 25.12.2025 12:20
கத்தோலிக்க கிறிஸ்தவ குருத்துவப் பணியில் 25 ஆண்டுகளை நிறைவு செய்யும் அருள்பணியாளர் பெஞ்சமின் டி சூசா அவர்கள் பன்முகத்தன்மை கொண்டவர். இதழியல் துறையில் முதுகலை பட்டம் பெற்றவர்; தமிழ்நாட்டின் பிரபல “ஞானதூதன்” எனும் கிறிஸ்தவ மாத இதழின் ஆசிரியர்; பிரபல வழக்கறிஞர்; குருக்களும், துறவியரும் சேர்ந்துள்ள ‘National Forum of Lawyers’ எனும் அமைப்பின் துணைத் தலைவர்; தூத்துக்குடி மறை மாவட்டத்தின் சமூக சேவை சங்கத்...
‘எனது 25 ஆண்டு குருத்துவப் பணியின் நிறைவான தருணம் இது’ அருட்திரு பெஞ்சமின் டி சூசா 25.12.2025 12:45
கத்தோலிக்க கிறிஸ்தவ குருத்துவப் பணியில் 25 ஆண்டுகளை நிறைவு செய்யும் அருள்பணியாளர் பெஞ்சமின் டி சூசா அவர்கள் பன்முகத்தன்மை கொண்டவர். இதழியல் துறையில் முதுகலை பட்டம் பெற்றவர்; தமிழ்நாட்டின் பிரபல “ஞானதூதன்” எனும் கிறிஸ்தவ மாத இதழின் ஆசிரியர்; பிரபல வழக்கறிஞர்; குருக்களும், துறவியரும் சேர்ந்துள்ள ‘National Forum of Lawyers’ எனும் அமைப்பின் துணைத் தலைவர்; தூத்துக்குடி மறை மாவட்டத்தின் சமூக சேவை சங்கத்...
செய்தியின் பின்னணி: சிட்னியிலிருந்து ஹோபார்ட் வரையான படகோட்டப் போட்டி வரலாறு 24.12.2025 8:24
ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 26-ஆம் திகதி பொதுவாக “Boxing Day” என்று அழைக்கப்படுகிறது. ஆனால் கடல் தொடர்பிலான விளையாட்டை நேசிக்கும் மக்களுக்கு, அந்த நாள் Sydney to Hobart Yacht Race என அழைக்கப்படுகிறது. இதுபற்றிய செய்தியின் பின்னணியினை முன்வைக்கிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.
செய்தியின் பின்னணி: உலகில் No 1 மகிழ்ச்சியான நாடு டென்மார்க்; ஏன் ஆஸ்திரேலியா முதல் 10 இடத்தில் இல்லை? 24.12.2025 7:37
உலகின் மிகவும் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில், டென்மார்க் பல ஆண்டுகளாக முன்னணியில் இருந்து வருகிறது. தற்போது வெளிவந்துள்ள புள்ளி விவரத்திலும் டென்மார்க் No 1 இடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளது. ஆனால் ஆஸ்திரேலியா 11 ஆம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. இதற்கான விளக்கத்தை முன்வைக்கும் நிகழ்ச்சியை SBS-Newsக்காக ஆங்கிலத்தில் Jennifer Scherer எழுதிய விவரணத்தோடு SBS – தமிழுக்காக தயாரித்தவர்: றைசெல்.
கிறிஸ்துமஸ் சிறப்பு நாடகம்! 24.12.2025 7:02
Grace of Christmas எனும் தலைப்பில் சில நாட்களுக்கு முன்பு கனடா நாட்டில் மேடையில் அரங்கேறிய நாடகத்தை SBS தமிழ் ஒலிபரப்புக்காக தயாரித்து முன்வைக்கிறார் றைசெல். இந்த நாடகத்தில் நடித்தவர்கள்: Joseph Benher Dhason & Mary Sharmila Joseph Benher ஆகியோர். எழுத்தும், இயக்கமும்: Mathew Albert அவர்கள்.
வாகன ஓட்டிகளுக்கு ஓர் எச்சரிக்கை! 24.12.2025 3:19
கிறிஸ்மஸ் புதுவருட விடுமுறைக் காலத்தையொட்டி ACT, மேற்கு ஆஸ்திரேலியா மற்றும் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் சாலை விதிமுறைகளை மீறுவோருக்கான தண்டனை அதிகரிக்கப்படுகிறது. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.
ஆஸ்திரேலியா 2025: ஒரு மீள்பார்வை 24.12.2025 12:54
கடந்து செல்லும் 2025ஆம் ஆண்டில் ஆஸ்திரேலியாவில் அதிகம் பேசப்பட்ட, அதிக தாக்கத்தையோ அதிர்ச்சியையோ ஏற்படுத்திய சம்பவங்கள் குறித்த செய்திகளின் தொகுப்பை முன்வைக்கிறார் செல்வி.
இலங்கை: மீண்டும் தையிட்டி பௌத்த விகாரைக்கு எதிராக போராட்டம் 24.12.2025 8:36
யாழ். தையிட்டி பௌத்த விகாரைக்கு எதிரான போராட்டத்தில் அமைதியின்மை ஏற்பட்டதில் போராட்டத்தில் கலந்து கொண்ட சிலர் கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டனர். இது தொடர்பில் “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.
All you need to know about Boxing Day in Australia - Boxing Day பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை 24.12.2025 8:43
Australian Boxing Day is a unique blend of cultural and commercial significance. While it doesn't have a solid religious connotation here, it's a day when Australians extend their Christmas festivities. It's often a time for family barbecues, cricket matches, and watching the iconic Sydney to Hobart yacht race. On the other hand, many Australians look forward to this day to sweep the stores for th...
Similar podcasts
Replaio is not a podcast publisher; show names, artwork and audio belong to their authors and are distributed through public RSS feeds.