SBS
SBS Tamil - SBS தமிழ்
Independent news and stories from SBS Audio, connecting you to life in Australia and Tamil-speaking Australians. - தமிழ் பேசும் ஆஸ்திரேலியர்களுடனும், ஆஸ்திரேலிய வாழ்க்கையுடனும் இணைய உங்களுக்கு உதவும் பக்கசார்பற்ற செய்திகள் மற்றும் கதைகள்.
Where to listen?
Podcasts in the app Replaio Radio Coming soonPodcasts are coming to the app soon. Install now and be the first to see a whole new take on podcasts
Episodes
இன்றைய செய்திகள்: 07 ஜனவரி 2026, புதன்கிழமை. 07.01.2026 4:06
SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (புதன்கிழமை 07/01/2026) செய்திகள். வாசித்தவர்: மகேஸ்வரன் பிரபாகரன்.
இலங்கை: மாகாண சபைத் தேர்தல் தாமதமாகிறது 06.01.2026 8:37
இலங்கையில் மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இந்நிலையில், மாகாண சபைத் தேர்தல்கள் எந்த முறைமையின் கீழ் நடத்தப்பட வேண்டும் என்பது குறித்து ஆராய்ந்து அறிக்கை அளிக்க நாடாளுமன்றத் தெரிவுக் குழுவொன்றை நியமிப்பதற்கான தீர்மானம் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.
2026இல் ஆஸ்திரேலியர்களின் விருப்பத்திற்குரிய விடுமுறைத்தலங்கள் எவை? 06.01.2026 2:59
2026 ஆம் ஆண்டில் ஆஸ்திரேலியர்கள் விடுமுறைக்காக எந்த நாடுகளை குறிவைக்கிறார்கள் என்பதை புதிய அறிக்கை ஒன்று வெளிப்படுத்தியுள்ளது. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.
Your first steps to engaging with Indigenous Australians - பூர்வீக குடிமக்களுடன் அர்த்தமுள்ள உறவை உருவாக்குவதற்கான முதல் படிகள் 06.01.2026 8:47
Connecting with Indigenous Australia can be daunting for a newcomer to the country. So, where do you start? We asked Yawuru woman Shannan Dodson, CEO of the Healing Foundation, about simple ways to engage with First Nations issues and people within your local community. - ஆஸ்திரேலியாவில் புதிதாக குடியேறியவர்கள், “Traditional Owners”, “Country”, அல்லது “First Nations” போன்ற சொற்களை அடிக்கடி கேட்கலா...
இன்றைய செய்திகள்: 06 ஜனவரி 2026 செவ்வாய்க்கிழமை 06.01.2026 4:20
SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (செவ்வாய்க்கிழமை 06/01/2026) செய்திகள். வாசித்தவர் : றேனுகா துரைசிங்கம்.
வெனிசுவேலாவில் நடந்தது என்ன? இனி என்ன நடக்கலாம்? 05.01.2026 18:03
வெனிசுவேலா நாட்டில் அதிபர் நிக்கோலஸ் மதுரோ அமெரிக்க படையால் கைது செய்யப்பட்டு அமெரிக்காவில் சிறை வைக்கப்பட்டுள்ளார். இந்த பின்னணியில் வெனிசுவேலாவில் நடந்தது என்ன என்பதையும், அமெரிக்க அரசியலில் அதிபர் டிரம்பின் செல்வாக்கு எப்படி உள்ளது என்பது குறித்தும், ஐ.நா என்ன செய்யக்கூடும் என்பது குறித்தும் அலசுகிறார் அமெரிக்காவின் Salisbury பல்கலைக்கழகத்தின் Conflict Analysis and Dispute Resolution பிரிவின் த...
தமிழ்ச் சூழலில் பெண்ணடிமைத்தனத்தையும் சாதியையும் பிரிக்க முடியாது- ஓவியா 05.01.2026 19:28
பெரியாரியப் பின்னணி கொண்ட சமூக செயற்பாட்டாளர் R ஓவியா அவர்கள் அண்மையில் ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார். பகுத்தறிவு, சமூக நீதி மற்றும் பெண்ணுரிமை உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் சிட்னி ஒலிப்பதிவுக் கூடத்தில் அவரை சந்தித்து உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.
விக்டோரியாவில் 18 வயதிற்குட்பட்டோருக்கு பொதுப் போக்குவரத்து இலவசம்! 05.01.2026 2:18
விக்டோரியாவில் அனைத்து குழந்தைகளுக்கும் இலவச பொதுப் போக்குவரத்து வசதியை வழங்கும் திட்டத்தை அம்மாநில அரசு நடைமுறைப்படுத்தியுள்ளது. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.
முதியோர் பராமரிப்பில் அறிமுகமாகியுள்ள Registered Supporter யார்? அவர்களின் பணி என்ன? 05.01.2026 10:30
Aged Care சட்டத்தின் கீழ் முதியவர்கள் தாங்களாகவே முடிவெடுக்கக்கூடியவாறு ஆதரவு வழங்கும் புதிய Registered Supporter திட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது. இது குறித்த பல கேள்விகளுக்கு பதில் தருகிறார் முதியோர் நல மருத்துவர் டாக்டர் பூரணி முருகானந்தன். அவரோடு உரையாடுகிறார் செல்வி.
செய்தியின் பின்னணி : 2026-இல் ஆஸ்திரேலிய விசா நடைமுறையில் வரும் மாற்றங்கள்! 05.01.2026 8:28
2026-இல் ஆஸ்திரேலியாவின் குடியேற்றக் கொள்கை ஒரு முக்கியமான மறுசீரமைப்பை எதிர்கொள்கிறது. Bondi கடற்கரை தாக்குதலுக்கு பிறகு இந்த சீரமைப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதன் குறித்த செய்தியின் பின்னணியை எடுத்து வருகிறார் செல்வி.
இன்றைய செய்திகள்: 05 ஜனவரி 2026 - திங்கட்கிழமை 05.01.2026 4:47
SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (திங்கட்கிழமை 05/01/2026) செய்திகள். வாசித்தவர் : றேனுகா துரைசிங்கம்.
இந்தியா & தமிழ்நாடு: கடந்தவார நிகழ்வுகளின் தொகுப்பு 04.01.2026 9:18
தர்மசாலா கல்லூரியில் பாலியல் வன்கொடுமையால் மாணவி மரணம்! கல்லூரி பேராசிரியர் மற்றும் மாணவிகள் மீது வழக்கு பதிவு; திருச்சியில் இருந்து மதுரைக்கு வைகோவின் சமத்துவ நடைபயணம்; பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி வரும் விஜய்யின் ‘ஜனநாயகன்’ திரைப்படம்; இவை உள்ளிட்ட செய்திகளோடு “செய்திகளின் பின்னணி” நிகழ்ச்சிக்காக இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்!
இந்த வார ஆஸ்திரேலிய செய்திகள் (28 டிசம்பர் 2025 – 3 ஜனவரி 2026) 03.01.2026 7:21
ஆஸ்திரேலியாவில் இந்த வாரம் (28 டிசம்பர் 2025 – 3 ஜனவரி 2026) நடந்த முக்கிய செய்திகளின் தொகுப்பு. வாசித்தவர்: றைசெல்.
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து விடைபெறுகிறார் Usman Khawaja! 02.01.2026 2:36
ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் Usman Khawaja, சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்துள்ளார். இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.
மேற்கு ஆஸ்திரேலிய மாநில உயர்தர பரீட்சையில் தமிழ் பாடத்தில் சாதித்த மாணவர்கள்! 02.01.2026 14:27
மேற்கு ஆஸ்திரேலிய மாநில பல்கலைக்கழகப் புகுமுகத் தேர்வான WACE பரீட்சையில் தமிழ் பாடத்தில் அதிகூடிய புள்ளிகளுடன் முதலாவது இடத்தைப் பெற்றுள்ள நிவேதிகா மனோகரன், இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ள அகநிலா சதீஸ்குமார், மூன்றாமிடத்தைப் பெற்றுள்ள அரசி கார்த்திகேயன் மற்றும் மேற்கு ஆஸ்திரேலியா தெற்கு தமிழ்ப்பள்ளி முகாமைத்துவ பணிப்பாளர் உமாகாந்தன் செல்வநாயகம் ஆகியோருடன் உரையாடுகிறார் செல்வி.
இன்றைய செய்திகள்: 02 ஜனவரி 2026 - வெள்ளிக்கிழமை 02.01.2026 4:49
SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வெள்ளிக்கிழமை 02/01/2026) செய்திகள். வாசித்தவர் : செல்வி.
இலங்கை: இந்த வார முக்கிய செய்திகள் 01.01.2026 8:21
சர்ச்சைக்குள்ளாகியிருக்கும் யாழ். தையிட்டி விகாரையில் புதிய கட்டுமானங்களை நிறுத்த விகாராதிபதி இணக்கம்; நாடு முழுவதும் புதுவருட கொண்டாட்டங்கள் இடம் பெறுகையில் மட்டக்களப்பில் கொண்டாட்டங்களுக்கு மாநகர சபை அனுமதி மறுப்பு உள்ளிட்ட செய்திகளோடு “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சிக்காக விவரணமொன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.
உலகம்: இந்த வார முக்கிய செய்திகள் 01.01.2026 7:10
உக்ரைன்- ரஷ்யா போர் நிலவரம்; காசாவில் தொண்டு நிறுவனங்களுக்கு தடை; வெனிசுலாவுக்குள் அமெரிக்காவின் தாக்குதல்; சோமாலிலாந்தை அங்கீகரித்துள்ள இஸ்ரேல்; நியூயார்க் மேயராக மம்தானி உள்ளிட்ட உலகச்செய்திகளின் பின்னணியை முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் தமிழ்ப் பிரபாகரன்.
How to cope during a heatwave in Australia - கோடைகால வெப்ப அலையிலிருந்து நம்மைப் பாதுகாத்துக்கொள்வது எப்படி? 01.01.2026 10:46
Summer in Australia can be very hot, and as our climate continues to warm, heatwaves are expected to become more frequent and more intense. In this episode of Australia Explained, we cover what a heatwave is, why they pose such a significant risk to human health, who is at most risk, and how to best prepare to cope with a heatwave. - Heatwaves- வெப்ப அலைகள் ஏற்படுத்தும் அபாயங்களை நீங்கள் அறிந்திரு...
சுவையான மைசூர் பாகு செய்முறை! 01.01.2026 8:07
பண்டிகைக்காலத்தில் உண்டு மகிழக்கூடிய மைசூர் பாகு செய்முறையை பிரபல சமையல்கலை, அழகுக்கலை மற்றும் கேக் வடிவமைப்பு நிபுணர் சாந்தா ஜெயராஜ் அவர்கள் நம்முடன் பகிர்ந்து கொள்கிறார். அவரோடு உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.
செய்தியின் பின்னணி: திருப்புமுனையில் உலகம் - 2026-இன் சவால்கள் 31.12.2025 11:08
உலகம் எதிர்பார்ப்பதுபோன்று 2026 ஒரு சாதாரண ஆண்டாக அமையாது என்றே பல ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர். அரசியல், பொருளாதாரம், தொழில்நுட்பம், காலநிலை மாற்றம், சமூகம், சமயம் என்று பல அம்சங்களில் இன்றைய உலகம் பல துறைகளிலும் ஒரே நேரத்தில் கடும் அழுத்தத்தை எதிர்கொள்கிறது. இது குறித்த தகவல்களை தொகுத்தளிக்கிறார் றைசெல்.
2026இல் ஆஸ்திரேலியாவில் செய்ய விரும்பும் மாற்றங்கள் - நேயர்கள் சிலரின் பதில் 31.12.2025 12:45
உங்களுக்கு ஒரு மந்திர சக்தி கிடைத்தால் 2026இல் ஆஸ்திரேலியாவில் என்ன மாற்றம் செய்ய விரும்புகிறீர்கள் என்று எமது நேயர்கள் சிலரிடம் கேட்டோம். அவர்கள் வழங்கும் பதில்களை தொகுத்து வழங்குகிறார் செல்வி.
செய்தியின் பின்னணி: 2026 ஜனவரி 1 - நடைமுறைக்கு வரும் செலவுகள், சலுகைகள் மற்றும் விதிகள் 31.12.2025 9:08
2026 ஆம் ஆண்டு ஜனவரி 1 முதல், நாட்டில் பல முக்கிய அரச விதிமுறைகள் மற்றும் செலவுசார்ந்த மாற்றங்கள் நடைமுறைக்கு வருகின்றன. மருந்து விலைக் குறைப்பு, Centrelink கொடுப்பனவு உயர்வு, குழந்தைகள் பராமரிப்பு உதவி மாற்றங்கள் போன்ற நன்மைகளுடன், கடவுச்சீட்டுக்கான கட்டண உயர்வு, சாலை Toll கட்டண அதிகரிப்பு போன்ற செலவுகளும் இடம்பெறுகின்றன. இதுபற்றிய செய்தியின் பின்னணியினை முன்வைக்கிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.
செய்தியின் பின்னணி: 2026-இல் வீடுகளின் நிலவரம் எப்படி இருக்கும்? 31.12.2025 7:19
எதிர்வரும் 2026இலும் ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய பொருளாதார பிரச்சினைகளில் ஒன்றாக வீட்டு வசதி நெருக்கடி இருக்கும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். இது குறித்த செய்தியின் பின்னணியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.
2025-இல் உலகை வியக்க வைத்த அறிவியல் கண்டுபிடிப்புகள் 31.12.2025 12:44
கடந்து செல்லும் 2025 ஆண்டு அறிவியலிலும், தொழில்நுட்பத்திலும் பல விந்தைகளை ஏற்படுத்திய ஆண்டு. இவைகளை தொகுத்தளிக்கிறார் ஊடகத்துறையில் பல ஆண்டுகளாக பணியாற்றும் இரா.சத்தியநாதன் அவர்கள். நிகழ்ச்சியாக்கம்: றைசெல்.
Similar podcasts
Replaio is not a podcast publisher; show names, artwork and audio belong to their authors and are distributed through public RSS feeds.