SBS
SBS Tamil - SBS தமிழ்
Independent news and stories from SBS Audio, connecting you to life in Australia and Tamil-speaking Australians. - தமிழ் பேசும் ஆஸ்திரேலியர்களுடனும், ஆஸ்திரேலிய வாழ்க்கையுடனும் இணைய உங்களுக்கு உதவும் பக்கசார்பற்ற செய்திகள் மற்றும் கதைகள்.
Where to listen?
Podcasts in the app Replaio Radio Coming soonPodcasts are coming to the app soon. Install now and be the first to see a whole new take on podcasts
Episodes
நிதிநிலை அறிக்கை 2026: அகதிகள் தொடர்பில் என்ன திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன? 13.05.2026 3:54
2026–27 பெடரல் நிதிநிலை அறிக்கையில் அகதிகள் மற்றும் புகலிடம்கோருவோர் தொடர்பில் என்னென்ன திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன என்ற செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்
State Nomination ஊடாக ஆஸ்திரேலியாவில் குடியேறுவது எப்படி? 13.05.2026 12:45
ஆஸ்திரேலியாவில் நிரந்தரமாக குடியேறுவதற்கான வழிமுறைகளில் ஒன்றான State Nomination குறித்து சிட்னியில் குடிவரவு முகவராகக் கடையாற்றும் திருவேங்கடம் ஆறுமுகம் அவர்களுடன் உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்
இலங்கை: மலையக மக்களுக்கு எதிரான வன்முறைக்கு தீர்வு கோரி போராட்டம் 13.05.2026 8:19
அண்மைக்காலமாக மலையக தோட்டத் தொழிலாளர்களுக்கு எதிரான வன்முறை அதிகரித்துவருகிறது. இது தொடர்பில் அரசு நடவடிக்கை எடுக்க பல்வேறு தரப்பிலிருந்தும் கோரிக்கை முன்வைக்கப்படுகிறது. இந்த சூழல் தொடர்பில் “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.
தமிழகத்தில் புதிய அரசின் செயல்பாடு & அதிமுகவில் பிளவு 13.05.2026 8:13
தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு பிந்தைய அரசியல் நிலவரம் பற்றிய செய்தியின் பின்னணியை முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் தமிழ்ப் பிரபாகரன்.
இன்றைய செய்திகள்: 13 மே 2026, புதன்கிழமை 12.05.2026 4:16
SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (புதன்கிழமை 13/05/2026) செய்திகள். வாசித்தவர்: மகேஸ்வரன் பிரபாகரன்.
நாட்டின் நிதி நிலை அறிக்கை “கடினமான சீர்திருத்தங்களின் பாதை” – லேபர் அரசு 12.05.2026 9:15
ஆஸ்திரேலியாவின் 2026-ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் - வரவு செலவுத் திட்டத்தை நாட்டின் கருவூலக காப்பாளர் Treasurer Jim Chalmers செவ்வாய்க்கிழமை (12 மே) நாடாளுமன்றத்தில் முன்வைத்தார். செய்தி விவரணத்தின் ஆங்கில மூலம் SBS இன் Deborah Groarke. தமிழில் றைசெல்.
850 பேருக்கு வேலைவாய்ப்பு உள்ளதாக Amazon ஆஸ்திரேலியா அறிவிப்பு! 12.05.2026 2:12
Amazon ஆஸ்திரேலியா நிறுவனம் 850 seasonal workers- குறிப்பிட்ட காலப்பகுதிக்கான பணியாளர்களுக்கு வேலை வாய்ப்பு உள்ளதாக அறிவித்துள்ளது. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.
போலி பாதுகாப்பு விசா விண்ணப்பங்கள் தொடர்பில் ஆஸ்திரேலிய அரசு எச்சரிக்கை 12.05.2026 2:42
போலியான பாதுகாப்பு (Protection) விசா கோரிக்கைகள் அதிகரித்து வருவது குறித்து ஆஸ்திரேலிய அரசு எச்சரித்துள்ளது. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.
இன்றைய செய்திகள்: 12 மே 2026 - செவ்வாய்க்கிழமை 12.05.2026 4:56
SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (செவ்வாய்க்கிழமை 12/05/2026) செய்திகள். வாசித்தவர் : செல்வி இன்பசேகரன்.
செய்தியின் பின்னணி : உணவு பொருட்களின் விலை மேலும் உயரக்கூடும் - காரணம் என்ன? 11.05.2026 8:31
அமெரிக்கா–ஈரான் இடையிலான போர் மற்றும் அதனுடன் தொடர்புடைய மத்திய கிழக்கு அரசியல் குழப்பங்கள் காரணமாக ஏற்பட்டுள்ள பாதிப்பு எரிபொருள் விலைகளில் மட்டுமல்லாமல், உணவு உற்பத்தி மற்றும் விநியோகச் சங்கிலியின் ஒவ்வொரு கட்டத்திலும் பரவி இருப்பதாக கூறப்படுகிறது. இது குறித்த செய்தியின் பின்னணியை எடுத்து வருகிறார் செல்வி இன்பசேகரன்.
ஆபத்தான Golden Staph பாக்டீரியாவை கண்டறிய புதிய பரிசோதனை முறை கண்டுபிடிப்பு! 11.05.2026 12:25
RMIT பல்கலைக் கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், Golden staph என்ற ஆபத்தான பாக்டீரியா கிருமியை கண்டறிய புதிய நிறம் மாறும் சோதனை ஒன்றை உருவாக்கியுள்ளனர். இந்த கண்டுபிடிப்பு குறித்து விரிவாக விளக்குகிறார் இந்த ஆராய்ச்சியில் ஈடுபட்ட பேராசிரியர் ராஜேஷ் ராமநாதன். அவரோடு உரையாடுகிறார் செல்வி இன்பசேகரன்.
இன்றைய செய்திகள்: 11 மே 2026 - திங்கட்கிழமை 11.05.2026 4:30
SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (திங்கட்கிழமை 11/05/2026) செய்திகள். வாசித்தவர் குலசேகரம் சஞ்சயன்.
ஆஸ்திரேலிய பள்ளிக் குழந்தைகள் & பல்கலை மாணவர்களின் தகவல் திருட்டு: நாம் அறிய வேண்டியது என்ன? 10.05.2026 11:14
ஆஸ்திரேலியாவின் பல கல்வி நிறுவனங்கள் பயன்படுத்தும் Canvas நிறுவனத்தின் தகவல் களவாடப்பட்டுள்ளது (data breach). இது பள்ளிகள், TAFE மற்றும் பல்கலைக்கழகங்களில் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இதன் உண்மையான ஆபத்து என்ன? உடனடியாக நாம் செய்ய வேண்டியது என்ன என்று விளக்குகிறார் பிரிஸ்பேனில் வாழும் தொழில்நுட்பத் துறை Test Manager நதியா சந்திரசேகரன் அவர்கள். தொழில்நுட்ப துறையில் Test Manager ஆக பணியாற்றும் நதியா,...
தமிழகத்தின் முதலமைச்சராக பதவியேற்றார் தவெக தலைவர் விஜய்! 10.05.2026 8:18
தமிழகத்தின் 13-ஆவது முதல்வராக தவெக தலைவர் சி ஜோசப் விஜய் ஞாயிற்றுக்கிழமை காலை இந்திய நேரம் 10.15 மணியளவில் பதவியேற்றார். தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் விஜய்க்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். முதலமைச்சர் விஜயை தொடர்ந்து 9 பேர் அமைச்சர்களாகப் பதவியேற்றுக் கொண்டனர். கூடுதல் விவரங்களுடன் இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்
குடியேற்றத்தை வெகுவாகக் குறைக்கக் கோரும் One Nation கட்சி தேர்தலில் அமோக வெற்றி! 10.05.2026 3:28
New South Wales மாநிலத்தின் நாடாளுமன்ற தொகுதியான Farrer தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் One Nation கட்சி வெற்றி பெற்றுள்ளது. இந்த கட்சி பெற்றிருக்கும் வெற்றி ஆஸ்திரேலிய அரசியலில் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியாக பார்க்கப்படுகிறது.
இன்று தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவி ஏற்கிறார் நடிகர் விஜய் 09.05.2026 8:55
தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்கத் தேவையான பெரும்பான்மை எண்ணிக்கையுடன் ஆளுநர் ராஜேந்திர அர்லேகரை, தவெக தலைவர் விஜய் நேற்று (சனிக்கிழமை) மாலை சந்தித்ததை அடுத்து, ஆளுநர் அவரை ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்துள்ளார். இந்த அழைப்பை அடுத்து இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு (இந்திய நேரப்படி) சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் விஜய் தமிழகத்தின் புதிய முதலமைச்சராக பதவியேற்பது உறுதியாகியுள்ளது. கூடுதல் விவரங்களு...
இந்த வார ஆஸ்திரேலிய செய்திகள் (3 மே – 9 மே 2026) 09.05.2026 5:32
ஆஸ்திரேலியாவில் இந்த வாரம் (3 மே – 9 மே 2026) நடந்த முக்கிய செய்திகளின் தொகுப்பு. வாசித்தவர்: றைசெல்.
சரிவை நோக்கி நகரும் ஆஸ்திரேலிய வீட்டு விலைகள் 08.05.2026 2:47
ஆஸ்திரேலியாவின் வீட்டுச் சந்தை சரிவை நோக்கி நகரத் தொடங்கியுள்ளதாக புதிய தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.
இலங்கை: ஆஸ்திரேலியா உட்பட 40 நாட்டவர்களுக்கு இலவச விசா 08.05.2026 2:23
ஆஸ்திரலியா உட்பட 40 நாடுகளிலிருந்து வரும் பயணிகளுக்கு இலவச விசா வழங்க இலங்கை அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதுகுறித்த செய்தி விவரணத்தை முன்வைக்கிறார் றேனுகா துரைசிங்கம்.
‘ஊரில் நடக்கும் திருவிழா சிட்னிக்கு வந்தது போன்ற உணர்வு வந்தது’ 08.05.2026 11:44
TACA - தமிழ் கலை மற்றும் பண்பாட்டுக் கழகம் கடந்த ஞாயிறு (3 May) சிட்னி பெருநகரின் Stanhope Gardens எனுமிடத்திலுள்ள Blacktown Leisure Centreயில் வைத்து நடத்திய ‘சிட்னியில் சித்திரை திருவிழா’ நிகழ்வின்போது நம்மிடம் கலந்துரைடியவர்களின் ஒலித் தொகுப்பு. தொகுத்தவர்: றைசெல்.
குயின்ஸ்லாந்து தமிழ் சமூகத்திற்கான பணியில் 40 ஆண்டுகள்! 08.05.2026 5:29
குயின்ஸ்லாந்து தமிழ்ச் சங்கம் (Queensland Tamil Association) தனது 40 ஆண்டுகால சமூக சேவையை, கலைப் பணியை இந்த வாரம் பெருமையுடன் கொண்டாடுகிறது. இந்த மைல்கல் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, தமிழர் பாரம்பரியத்தின் செழுமையை வெளிப்படுத்தும் வகையில் தமிழ் நாட்டுப்புறக் கலை நிகழ்ச்சிகள், பறை இசை மற்றும் கரகாட்டம் போன்ற வண்ணமயமான நிகழ்ச்சிகள் இடம்பெறவுள்ளன. இது குறித்து நம்முடன் உரையாடுகிறார் குயின்ஸ்லாந்து த...
Women’s legal services in Australia: Understanding your options - ஆஸ்திரேலியாவில் பெண்களுக்கான என்னென்ன சட்ட உதவி சேவைகள் உள்ளன? 08.05.2026 10:37
Workplace discrimination, gender-based violence and financial inequality—these are just some of the reasons why women need dedicated legal services. You don’t have to navigate the legal system alone. In Australia, free legal services exist to advocate for vulnerable women in ways that are safe, confidential and culturally appropriate. - ஆஸ்திரேலியாவில் பெண்களுக்காகப் பாதுகாப்பான, ரகசியமான மற்றும்...
இன்றைய செய்திகள்: 08 மே 2026 - வெள்ளிக்கிழமை 08.05.2026 4:37
SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வெள்ளிக்கிழமை 08/05/2026) செய்திகள். வாசித்தவர் : செல்வி இன்பசேகரன்.
தமிழகத்தில் புதிய அரசு அமைக்க கூட்டணி உருவாகிறதா? 08.05.2026 9:09
தமிழக சட்டசபைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை மிக மிக பரப்பரப்பான சூழலுக்கிடையில் நடந்து முடிந்த நிலையில், தவெக ஆட்சி அமைவதற்கான சாத்தியம் பற்றிய செய்தியின் பின்னணியை முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.
செய்தியின் பின்னணி: ஆஸ்திரேலியா வந்திறங்கிய ISIS தொடர்பு குடும்பங்கள் கைது 07.05.2026 7:41
சிரியாவில் பல ஆண்டுகளாக அகதி முகாம்களில் தங்கவைக்கப்பட்டிருந்த, ஐ.எஸ். தொடர்புடையதாகக் கருதப்படும் சில ஆஸ்திரேலிய பெண்களும் குழந்தைகளும் ஆஸ்திரேலியாவிற்கு நாடுதிரும்பியுள்ளனர். அதில் சிலர் கைதாகியுள்ளனர். இந்த வருகை தேசிய பாதுகாப்பு, மனிதாபிமானம் மற்றும் சமூக ஒருங்கிணைப்பு குறித்து ஆஸ்திரேலியாவில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுபற்றிய செய்தியின் பின்னணியினை முன்வைக்கிறார் மகேஸ்வரன் பிரபாகர...
Similar podcasts
Replaio is not a podcast publisher; show names, artwork and audio belong to their authors and are distributed through public RSS feeds.