SBS

SBS Tamil - SBS தமிழ்

News TA ↓ 2198 episodes

Independent news and stories from SBS Audio, connecting you to life in Australia and Tamil-speaking Australians. - தமிழ் பேசும் ஆஸ்திரேலியர்களுடனும், ஆஸ்திரேலிய வாழ்க்கையுடனும் இணைய உங்களுக்கு உதவும் பக்கசார்பற்ற செய்திகள் மற்றும் கதைகள்.

Author

SBS

Category

News

Podcast website

www.sbs.com.au

Latest episode

Jul 11, 2026

Where to listen?

Podcasts in the app Replaio Radio Coming soon

Podcasts are coming to the app soon. Install now and be the first to see a whole new take on podcasts

Get it on Google Play Install for free Android 5M+ downloads · 4.8 rating iOS soon

Episodes

செய்தியின் பின்னணி: ஆஸ்திரேலிய மாணவர் விசா முறைகேடுகளைத் தடுக்க அரசு புதிய நடவடிக்கை 20.05.2026

ஆஸ்திரேலிய மாணவர் விசா முறையின் தவறான பயன்பாட்டை கட்டுப்படுத்தவும், தரமற்ற கல்லூரிகள் வெளிநாட்டு மாணவர்களைச் சுரண்டுவதைத் தடுக்கவும் அரசு புதிய நடவடிக்கையை எடுத்துள்ளது. இதுகுறித்த செய்தியின் பின்னணியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.

இலங்கை: 17 ஆவது ஆண்டு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு 20.05.2026

இறுதி யுத்தத்தில் உயிரிழந்த மக்களுக்கு அஞ்சலி செலுத்தும் நினைவேந்தல் நிகழ்வு இறுதி யுத்தம் இடம்பெற்ற முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளிவாய்க்கால் பகுதியில் இடம்பெற்றது. இது தொடர்பில் “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.

‘Temple of Desire’: பரதநாட்டியம், அடையாளம், விடுதலை 19.05.2026

Karma Dance வழங்கும் ‘Temple of Desire’ நிகழ்ச்சி தெற்காசிய Queer வரலாறு, பரதநாட்டியம், இந்து புராணக் கதைகள், மற்றும் புலம்பெயர் அடையாளம் குறித்த புதுமையான நடனத் தயாரிப்பு. மெல்பேர்ன் மற்றும் டொரொன்டோவில் வெற்றிகரமாக நடைபெற்ற இந்த நிகழ்ச்சி ஜூன் 4 மற்றும் 5ஆம் தேதிகளில் Sydney Opera House-ல் மேடையேறவுள்ளது. கலாச்சார இழப்பு, பாலியல் விடுதலை, Queer உரிமைகள், பெண்களின் உரிமைகள் மற்றும் trans அனுபவம்...

விக்டோரியாவில் ஆபத்தான வாகன ஓட்டிகளை கட்டுப்படுத்த அதிநவீன கேமராக்கள் அறிமுகம்! 19.05.2026

ஆபத்தான வாகன ஓட்டிகளை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக விக்டோரிய மாநில அரசு புதிய அதிநவீன சாலை பாதுகாப்பு கேமரா தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்துகிறது.இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.

இன்றைய செய்திகள்: 19 மே 2026 - செவ்வாய்க்கிழமை 19.05.2026

SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (செவ்வாய்க்கிழமை 19/05/2026) செய்திகள். வாசித்தவர் : செல்வி இன்பசேகரன்.

Budget – நிதிநிலை அறிக்கை பற்றி தமிழ் மக்கள் என்ன நினைக்கின்றனர்? 18.05.2026

லேபர் கட்சி தலைமையிலான அரசு கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் நிதிநிலை அறிக்கையை முன்வைத்தது. எதிர்கட்சியான லிபரல் கட்சியும் தனது பதிலை முன்வைத்தது. இவை குறித்து ஆஸ்திரேலிய தமிழ் மக்கள் சிலரின் கருத்துக்களை SBS தமிழ் நிகழ்ச்சிக்காக தொகுத்தளிக்கிறார் சுக்ருதி நாராயணன்.

இன்றைய செய்திகள்: 18 மே 2026 - திங்கட்கிழமை 18.05.2026

SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (திங்கட்கிழமை18/05/2026) செய்திகள். வாசித்தவர் : சரண்யா பாலகிருஷ்ணன்

வீட்டு முதலீடுகளில் Negative gearing விதிமுறையில் அறிமுகமாகும் மாற்றம் என்ன? 18.05.2026

வீடுகளில் முதலீடு செய்கின்றவர்களுக்கான Negative gearing விதிமுறையில் அரசு மாற்றங்களை அறிமுகம் செய்துள்ளது. இது குறித்து விளக்குகிறார் NewGen Consulting Australasia நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி, ஆசியா மற்றும் ஆஸ்திரேலியாவில் இருபது ஆண்டுகளுக்கும் மேலான தொழில்துறை அனுபவம் கொண்ட எமில் ராஜா அவர்கள். அவர் ஒரு முன்னோடியான தொழில்முனைவோர் மற்றும் பொருளாதார எதிர்காலவியலாளர், நவீன தொழில்நுட்பம், நிதி...

செய்தியின் பின்னணி : Coles 'Down Down' விலைக் குறைப்பு வழக்கும் நீதிமன்ற தீர்ப்பும் 18.05.2026

Coles நிறுவனத்தின் ‘Down Down’ விலை குறைப்புகளில் உண்மையான தள்ளுபடி இல்லை என பெடரல் நீதிமன்றம் தீர்மானித்து தீர்ப்பளித்துள்ளது. இது குறித்த செய்தியின் பின்னணியை எடுத்து வருகிறார் செல்வி இன்பசேகரன்.

தமிழக தேர்தலில் வாக்களித்த 2 ஆஸ்திரேலியர் உட்பட 25 பேர் கைது 17.05.2026

தமிழக சட்டமன்றத் தேர்தலில், வெளிநாடு வாழ் இந்தியர்கள் சட்டவிரோதமாக வாக்களித்ததாக சுமார் 25 பேர் கைது செய்யப்பட்டிருப்பது குறித்த செய்தியின் பின்னணியை முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் தமிழ்ப் பிரபாகரன்.

வீட்டு முதலீட்டால் வரும் லாபம் தொடர்பான புதிய Tax மாற்றம் என்ன? 17.05.2026

வீடுகளில் முதலீடு செய்கின்றவர்கள் வீடுகளை விற்பனை செய்யும்போது கிடைக்கும் லாபத்தில் வரி செலுத்துவது தொடர்பாக அரசு மாற்றங்களை அறிமுகம் செய்துள்ளது. இது குறித்து விளக்குகிறார் வீடுகளில் முதலீடு செய்வதில் பல ஆண்டுகள் அனுபவம்கொண்ட மொகமது யூசுப் அவர்கள். அவரோடு உரையாடுகிறார் றைசெல்.

சிட்னியில் தமிழர் நினைவுச் சின்னம் திறப்பு 17.05.2026

சிட்னியில் தமிழர் நினைவுச் சின்னம் திறந்துவைக்கப்பட்டது குறித்த செய்தி. முன்வைப்பவர் றைசெல்.

இந்த வார ஆஸ்திரேலிய செய்திகள் (10 – 16 மே 2026) 16.05.2026

ஆஸ்திரேலியாவில் இந்த வாரம் (10 மே – 16 மே 2026) நடந்த முக்கிய செய்திகளின் தொகுப்பு. வாசித்தவர்: றைசெல்.

செய்தியின் பின்னணி: Coalition கூட்டணி One Nation கட்சி கொள்கைகளைப் பின்பற்றுகிறதா? 15.05.2026

Coalition கூட்டணித் தலைவர் Angus Taylor தனது முதல் நிதிநிலை அறிக்கை பதிலுரையை வழங்கியுள்ளார். அதில், குடியேற்றத்தின் அளவைக் கடுமையாகக் கட்டுப்படுத்துவதாகவும், குடியுரிமை பெறாதவர்கள் நலத்திட்ட உதவிகளைப் பெறுவதைத் தடை செய்வதாகவும் உறுதியளித்துள்ளார். குடிவந்தவர்களால்தான் நாட்டில் பொருளாதாரச் சிக்கல்கள் ஏற்படுகின்றன என்று Coalition கூட்டணி குறை கூறுவதாக விமர்சகர்கள் கூறுகின்றனர். அதே நேரத்தில், எதிர்...

செய்தியின் பின்னணி: Skilled Migrantsக்குப் புதிய கதவுகளைத் திறக்கும் ஆஸ்திரேலியா - குடிவரவில் மாற்றங்கள் 15.05.2026

ஆஸ்திரேலியாவில் திறன் அடிப்படையிலான குடியேற்றம் (Skilled Migration), வேலைவாய்ப்பு சந்தை மற்றும் பொருளாதார வளர்ச்சி குறித்து தற்போது முக்கியமான மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அரசின் நிதிநிலை அறிக்கையில் (Federal Budget 2026) வெளியிடப்பட்டுள்ள புதிய சீர்திருத்தங்கள், வெளிநாட்டு திறமையாளர்கள் விரைவாக வேலைவாய்ப்பில் இணைய வழிவகுக்கும் என அரசு தெரிவிக்கிறது. இது பற்றிய செய்தியின் பின்னணியினை முன்வைக்கி...

இன்றைய செய்திகள்: 15 மே 2026 - வெள்ளிக்கிழமை 15.05.2026

SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வெள்ளிக்கிழமை 15/05/2026) செய்திகள். வாசித்தவர் குலசேகரம் சஞ்சயன்.

ஆஸ்திரேலிய நாடாளுமன்ற வளாகத்தில் தமிழர் இனப்பிரச்சனை தொடர்பான கண்காட்சி 15.05.2026

ஆஸ்திரேலிய நாடாளுமன்ற வளாகத்தில் தமிழ் அகதிகள் பேரவை (Tamil Refugee Council) ஏற்பாடு செய்த ‘Tamil Genocide Truth Telling Exhibition’ எனும் கண்காட்சி கடந்த புதன்கிழமை (13 மே) நடைபெற்றது. இலங்கையில் தமிழர்கள் எதிர்கொண்டதாக கூறப்படும் வன்முறை, இடப்பெயர்வு, மனித உரிமை மீறல், அது தொடர்பான நீதி கோரிக்கைகள் என்று பல ஆவணங்கள் இந்தக் கண்காட்சியில் இடம் பெற்றிருந்தன. இந்த நிகழ்வின் நோக்கம், இப்படியான செயற்ப...

‘ஜோசப் விஜய் எனும் நான்’: ஆஸ்திரேலிய தமிழ் மக்கள் என்ன நினைக்கின்றனர்? 14.05.2026

தமிழ்நாட்டில் “ஜோசப் விஜய் எனும் நான்” என்று கூறி முதலமைச்சராக பதவி ஏற்றார் பிரபல நடிகர் விஜய். அவர் குறித்தும், அவர் ஆட்சி குறித்த எதிர்பார்ப்பு குறித்தும் ஆஸ்திரேலிய தமிழ் மக்கள் சிலரின் கருத்துக்களை SBS தமிழ் நிகழ்ச்சிக்காக தொகுத்தளிக்கிறார் சுக்ருதி நாராயணன்.

உலகம்: இந்த வார செய்திகளின் தொகுப்பு 14.05.2026

சீனாவில் அமெரிக்க அதிபர்; இஸ்ரேல்- லெபனான் பேச்சுவார்த்தை நிலை; கியூபாவுக்கு உதவுவதாகக் கூறும் அமெரிக்கா; இஸ்ரேல்- யுஏஇ இடையே ரகசிய சந்திப்பு; பிரிட்டன் பிரதமருக்கு நெருக்கடி உள்ளிட்ட உலகச்செய்திகளின் பின்னணியை முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் தமிழ்ப் பிரபாகரன்.

நிதிநிலை அறிக்கை 2026: முதியோர் ஓய்வூதியம் பெறுபவர்களுக்கான புதிய சலுகை 14.05.2026

2026 பெடரல் நிதிநிலை அறிக்கையில், முதியோர் ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு முக்கிய மாற்றம் ஒன்றை அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.

Palliative care இறுதிக்கால சிகிச்சை என்றால் என்ன? அதனை எவ்வாறு திட்டமிடுவது? 14.05.2026

Palliative care விழிப்புணர்வு வாரம் இந்த ஆண்டு மே 10 ஆம் தேதி முதல் 16 ஆம் தேதி வரை கடைபிடிக்கப்படுகிறது. Palliative care இறுதிக்கால சிகிச்சை என்றால் என்ன? இந்த சேவையை யாரெல்லாம் எங்கிருந்து பெற்றுக்கொள்ளலாம்? அதற்கான நடைமுறை என்ன? போன்று Palliative care குறித்து பல கேள்விகளுக்கு பதில் தருகிறார் முதியோர் நல வைத்தியர் Dr பூரணி முருகானந்தம் அவர்கள். அவருடன் உரையாடுகிறார் செல்வி இன்பசேகரன்.

மர்மங்கள்- ஒரு தொடர்கதை: The Great Train Robbery 14.05.2026

வாழ்க்கையின் நிகழ்வுகள், குற்றச்செயல்கள்- அது தொடர்பான வழக்குகள், காணாமல் போன நபர்கள் மற்றும் அது தொடர்பான சூழ்நிலைகள், விநோதமான சம்பவங்கள், விளக்கமில்லாத -யார் செய்தார் - எப்படி நிகழ்ந்தது என்று இதுவரை அறியப்படாத மரணங்கள், யூகங்கள், தர்க்கத்திற்கு அப்பாற்பட்ட புதிர்கள்- என்று, தீர்வு அல்லது விளக்கம் இல்லாமல் உலகில் இன்றும் பல மர்மங்கள் தொடர்கின்றன. அப்படியான unresolved mysteries - விடை காணப்படாத...

செய்தியின் பின்னணி: 2026 நிதிநிலை அறிக்கை வீட்டுவசதியை முன்னேற்றுமா? 14.05.2026

கடந்த செவ்வாய்க்கிழமை இரவு ஆஸ்திரேலியா நாடாளுமன்றத்தில், கருவூலக்காப்பாளர் Treasurer Jim Chalmers தனது ஐந்தாவது வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பித்தார். நாட்டின் வீட்டுவசதி நெருக்கடியை எதிர்கொள்ள இரண்டு பெரிய வரி சீர்திருத்தங்கள் அதில் அறிவிக்கப்பட்டுள்ளன. "Negative Gearing" எனும் எதிர்மறை வரிச்சலுகை, மற்றும் மூலதன ஆதாய வரி (Capital Gains Tax) இரண்டிலும் கொண்டுவரப்படவிருக்கும் மாற்றங்கள், கடந்த இரண்...

அஸ்பாரகஸை ஏன் சாப்பிட வேண்டும்? 14.05.2026

அஸ்பாரகஸைச் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் பற்றியும் அதை எவ்வாறு உண்ணலாம் என்பது பற்றியும் விளக்குகிறார் பிரபல சமையல்கலை மற்றும் கேக் வடிவமைப்பு நிபுணர் சாந்தா ஜெயராஜ் அவர்கள். அவரோடு உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.

இன்றைய செய்திகள்: 14 மே 2026 - வியாழக்கிழமை 14.05.2026

SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வியாழக்கிழமை 14/05/2026) செய்திகள். வாசித்தவர் : செல்வி இன்பசேகரன்.

Listen to the SBS Tamil - SBS தமிழ் podcast in Replaio

Radio and podcasts in one app - free, with no sign-up. Install today and do not miss the launch

Get it on Google Play

Replaio is not a podcast publisher; show names, artwork and audio belong to their authors and are distributed through public RSS feeds.