SBS

SBS Tamil - SBS தமிழ்

News TA ↓ 2744 episodes

Independent news and stories from SBS Audio, connecting you to life in Australia and Tamil-speaking Australians. - தமிழ் பேசும் ஆஸ்திரேலியர்களுடனும், ஆஸ்திரேலிய வாழ்க்கையுடனும் இணைய உங்களுக்கு உதவும் பக்கசார்பற்ற செய்திகள் மற்றும் கதைகள்.

Be sure to visit the podcast's website and support the creator: www.sbs.com.au

Author

SBS

Category

News

Podcast website

www.sbs.com.au

Latest episode

Nov 20, 2026

Where to listen?

Podcasts in the app Replaio Radio Coming soon

Podcasts are coming to the app soon. Install now and be the first to see a whole new take on podcasts

Get it on Google Play Install for free Android 10M+ downloads · 4.7+ rating iOS soon

Episodes

இலங்கை: இந்த வார முக்கிய செய்திகள் 03.09.2026

இலங்கையின் கிழக்கு பகுதி உள்ளிட்ட பல பகுதிகளிலும் கடும் வறட்சியான காலநிலையினால் குடிநீருக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதுடன் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு; பல்வேறு தரப்பினரதும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் நீதித்துறையில் சீர்திருத்தங்களை மேற்கொள்ளும் 22 வது அரசியலமைப்பு திருத்தத்திற்கு அரசு தயாராகிவருகின்றது. இவை உள்ளிட்ட செய்திகளோடு “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சிக்காக விவரணமொன்றை முன்வைக்கி...

உலகளாவிய பேரழிவு வந்தால் எந்த நாடு தப்பிப் பிழைக்கும்? 03.09.2026

உலகளாவிய பேரழிவு ஒன்று ஏற்பட்டால், அதனைச் சமாளிக்கும் திறன் கொண்ட நாடுகளில் ஆஸ்திரேலியா முன்னிலையில் இருப்பதாக புதிய ஆய்வொன்று தெரிவிக்கிறது. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.

தமிழ் மொழிக் கற்றலை ஊக்குவிக்க ஆஸ்திரேலிய அரசு நிதியுதவி 03.09.2026

தங்கள் பாரம்பரிய மொழிகளைக் கற்றுக்கொள்வதற்கும், அவற்றைத் தொடர்ந்து பேணுவதற்கும் இளம் ஆஸ்திரேலியர்களுக்கு மேலும் வாய்ப்புகளை ஏற்படுத்தும் வகையில், அரசு நிதியுதவியை அறிவித்துள்ளது. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.

'நல்ல திரைப்படத்திற்கு நல்ல கதை முக்கியம்' - கார்த்திக் சுபராஜ் 03.09.2026

"பீட்சா" திரைப்படம் மூலம் சுமார் 10 ஆண்டுகளுக்கு முன் திரைத்துறையில் இயக்குனராக அறிமுகமான கார்த்திக் சுபராஜ் அவர்கள் தனது திரைப் பயணம் குறித்து நம்மோடு பகிர்ந்துக்கொள்கிறார். அவரோடு உரையாடுகிறார் செல்வி இன்பசேகரன். இந்நிகழ்ச்சி ஒரு மறுஒலிபரப்பு 'Good Script is important for a good movie' - Karthik Subbaraj

Camera கண்ணாடிகள்: உங்கள் தனியுரிமைக்கு அச்சுறுத்தலா? 03.09.2026

பார்ப்பதற்குச் சாதாரணக் கண்ணாடிதான். ஆனால், அதை அணிந்திருப்பவர் நீங்கள் அறியாமலேயே உங்களை இரகசியமாகப் படம்பிடிக்க முடியும். 'ஸ்மார்ட் கிளாஸஸ்' (smart glasses) என்றழைக்கப்படும் இந்தக் கண்ணாடிகள், இப்போது ஆஸ்திரேலியாவில் ஒரு பெரிய விவாதத்தைக் கிளப்பியிருக்கின்றன. இவை உங்கள் தனியுரிமைக்கு ஓர் அச்சுறுத்தல் என்றும் இவற்றை இறக்குமதி செய்வதைத் தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை இப்போது அதிகரிப்பதும் குறித்...

குழந்தைகளின் எலும்பு முறிவு – பெற்றோர் அறிந்துகொள்ள வேண்டியவை 03.09.2026

சிறுவர்களில் அடிக்கடி எலும்பு முறிவு ஏற்படுவதுண்டு. இந்த நிகழ்ச்சியில் சிறுவர்களில் ஏற்படும் எலும்பு முறிவு பற்றியும் இதைத் தடுக்கலாமா என்பது பற்றியும் விளக்கமளிக்கிறார் எலும்பு முறிவு சத்திரசிகிச்சை நிபுணர் கனகரட்ணம் காண்டீபன் அவர்கள். அவருடன் உரையாடுபவர் றேனுகா துரைசிங்கம்

அப்பா எனும் அரவணைப்பு 03.09.2026

செப்டம்பர் 6ஆம் திகதி “தந்தையர் தினம்” கொண்டாடப்படுகிறது. தனது குழந்தையின் தந்தையான தனது கணவன் எப்படி ஒரு நல்ல அப்பாவாக இருக்கிறார் என்பது தொடர்பில் அப்சாநிகாத், அபிராமி, கோபிகா, கலைமதி ஆகியோர் பகிர்ந்துகொள்கின்றனர். நிகழ்ச்சி தயாரிப்பு: றைசெல். (இந்த பதிவு முதலில் 2019ஆம் ஆண்டு ஒலிபரப்பானது)

இன்றைய செய்திகள்: 03 செப்டம்பர் 2026 - வியாழக்கிழமை 03.09.2026

SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வியாழக்கிழமை 03/09/2026) செய்திகள். வாசித்தவர் குலசேகரம் சஞ்சயன்.

Pineapple - அன்னாசிப் பழத்துக்கும் அரசியலுக்கும் என்ன தொடர்பு? 03.09.2026

ஆப்பிரிக்க நாடான Burkina Fasoவில் அன்னாசிப் பழத்துக்கும் அரசியலுக்கும் தொடர்பு இருக்கும் தகவலை முன்வைக்கிறார் றைசெல். Pineapples and Politics: What’s the connection?

நேபாளத்தில் சில நிமிடங்களில் 900 உயிர்கள் காப்பாற்றப்பட்டது எப்படி? 03.09.2026

நேபாளத்தில் பள்ளியின் தலைமை ஆசிரியரின் முடிவினால் சில நிமிடங்களில் 900 உயிர்கள் காப்பாற்றப்பட்டன. இந்த தகவலை முன்வைக்கிறார் றைசெல். How 900 students’ lives were saved in minutes in Nepal

வசந்த காலம் தொடக்கம் – பருவகால ஒவ்வாமையால் பாதிக்கப்படுவோருக்கு எச்சரிக்கை 02.09.2026

ஆஸ்திரேலியாவில் வசந்த காலம் தொடங்கியுள்ள நிலையில், Hay fever எனப்படும் பருவகால ஒவ்வாமையால் பாதிக்கப்படுவோருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.

Australia Post கடித விநியோக சேவையை கைவிடும் அபாயம் உள்ளதா? 02.09.2026

கடித சேவையின் எதிர்காலம் மாறிக்கொண்டிருக்கிறது. ஆனால், வீடுகளுக்கு நேரடியாகக் கடிதம் கொண்டுவரும் சேவை தொடரும் என்றும் ஒரு கடிதத்தை அனுப்ப நீங்கள் இன்று செலுத்தும் கட்டணம், வரும் காலத்தில் இரண்டு டொலர்களை எட்டலாம் என்றும் Australia Post நிறுவனத்தின் தலைமை நிர்வாகி Paul Graham, SBS செய்திப்பிரிவினருக்கு அளித்த பேட்டியில் ஓர் எச்சரிக்கையை விடுத்திருக்கிறார். இது குறித்த செய்தியின் பின்னணியை எடுத்து வ...

சிட்னியில் அனைத்துலக திருக்குறள் மாநாடு! 02.09.2026

“அனைத்துலக திருக்குறள் மாநாடு” செப்டம்பர் மாதம் 4ஆம் தேதி சிட்னி Blacktownஇல் உள்ள ஆஸ்திரேலிய கத்தோலிக்க பல்கலைக்கழகத்தில் நடைபெறவுள்ளது. இம்மாநாடு குறித்து தமிழ் வளர்ச்சி மன்றத்தின் தலைவர் முனைவர் சந்திரிகா சுப்பிரமணியன் மற்றும் International Thirukkural Foundation Mauritiusஇன் செயலாளர் பேராசிரியர் பஞ்ச் ராமலிங்கம் ஆகியோர் நம்முடன் உரையாடுகின்றனர். அவர்களோடு உரையாடியவர்: றேனுகா துரைசிங்கம்

இன்றைய செய்திகள்: 02 செப்டம்பர் 2026 - புதன்கிழமை 02.09.2026

SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (புதன்கிழமை 02/098/2026) செய்திகள். வாசித்தவர் குலசேகரம் சஞ்சயன்.

‘நீதிக்கான நீள் பயணம்’- யாழ்ப்பாணத்தில் சர்வதேச மாநாடு 01.09.2026

"நீதிக்கான நீள் பயணம்" என்ற தொனிப்பொருளில் வடக்கு , கிழக்கு காணாமலாக்கப்பட்டோர் உறவினர் சங்கத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்தில் சர்வதேச மாநாடும் பேரணியும் இடம்பெற்றுள்ளது. இது தொடர்பில் “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.

நேபாள பெருவெள்ளத்தில் காணாமல்போன சிட்னி தம்பதி – மகன் பகிரும் தகவல்கள் 01.09.2026

நேபாளம் -திபெத் எல்லையில் பேரழிவை ஏற்படுத்திய திடீர் பெருவெள்ளத்தில் சிக்கி காணாமல்போனவர்களில் சிட்னியிலிருந்து சென்ற வெங்கட்ராமன் -சித்ரா தம்பதியரும் அடங்குகின்றனர். தமது பெற்றோர் தொடர்பில் நல்லதொரு தகவல் கிடைக்கவேண்டுமென சிட்னியில் அவர்களது இரு மகன்களும் காத்திருக்கின்றனர். தமது பெற்றோர் காணாமல்போனமை தொடர்பில் பிந்திய தகவல்களை நம்முடன் பகிர்ந்துகொள்கிறார் வெங்கட்ராமன் தம்பதியரின் மூத்த மகன் ஆகாஷ...

சிட்னியில் குப்பைத் தொட்டியிலிருந்து பச்சிளம் குழந்தையின் உடல் மீட்பு! 01.09.2026

சிட்னியில் குப்பைத் தொட்டி ஒன்றிலிருந்து பிறந்து சில நாட்களேயான ஆண் சிசுவின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.

இன்றைய செய்திகள்: 01 செப்டம்பர் 2026 - செவ்வாய்க்கிழமை 01.09.2026

SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (செவ்வாய்க்கிழமை 01/09/2026) செய்திகள். வாசித்தவர் றேனுகா துரைசிங்கம்.

ஆஸ்திரேலியாவில் தொழில் ஒன்றை வாங்கும் முன் கவனிக்க வேண்டிய முக்கிய விடயங்கள் 31.08.2026

ஆஸ்திரேலியாவில் ஏற்கனவே இயங்கி வரும் ஒரு தொழிலை வாங்கும்போது கவனிக்க வேண்டிய முக்கிய அம்சங்கள் குறித்து விரிவாக விளக்குகிறார் CA & FCPA எனும் தகுதிகள் கொண்ட ABC Money Solutionsஇன் ஜெகா நடராஜா அவர்கள். அவரோடு உரையாடுகிறார் செல்வி இன்பசேகரன். Key things to consider before buying a business in Australia

தஞ்சாவூர் ஓவியம்: பாரம்பரியமும் எதிர்காலமும் 31.08.2026

பல நூற்றாண்டுகளைக் கடந்து வந்த தஞ்சாவூர் ஓவியக் கலை, புதிய தலைமுறையையும் சென்றடைகிறதா? AI வளர்ந்து வரும் காலத்தில் இந்தக் கலை வளர்கிறதா, மறைகிறதா என்பதை குறித்து Melbourne வாழ் தஞ்சாவூர் ஓவியக் கலைஞர்களுடன் உரையாடுகிறார் சரண்யா பாலகிருஷ்ணன்.

நேபாள பெருவெள்ளம்: காணாமல் போன 43 ஆஸ்திரேலியர்களில் 11 பேர் தமிழர்கள்! 31.08.2026

நேபாளம் மற்றும் திபெத்தில் பேரழிவை ஏற்படுத்திய திடீர் பெருவெள்ளத்தைத் தொடர்ந்து 43 ஆஸ்திரேலியர்கள் காணாமல்போயுள்ளனர். இவர்களில் 11 பேர் தமிழர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த விவரணமொன்றை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.

சீனி கலந்த பானங்களுக்கு வரி : ஆரோக்கியமும் வருவாயும் அதிகரிக்குமா? 31.08.2026

ஆஸ்திரேலியாவில் சர்க்கரை அல்லது சீனி கலந்த குளிர்பானங்களுக்கு வரி விதிப்பது குறித்த விவாதம் மீண்டும் சூடுபிடித்துள்ளது. இந்த வரி உடல்நலத்தை மேம்படுத்துவதுடன் அரசுக்கு கணிசமான வருவாயையும் பெற்றுத்தரலாம் என புதிய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. இது குறித்த செய்தியின் பின்னணியை முன் வைக்கிறார் செல்வி இன்பசேகரன். Sugary drinks tax: Will it improve health and boost revenue?

இன்றைய செய்திகள்: 31 ஆகஸ்ட் 2026 - திங்கட்கிழமை 31.08.2026

SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (திங்கட்கிழமை 31/08/2026) செய்திகள். வாசித்தவர் குலசேகரம் சஞ்சயன்.

இந்தியா & தமிழ்நாடு: கடந்த 7 நாட்கள் செய்திகளின் தொகுப்பு 30.08.2026

நேபாளத்தில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் சிக்கிய தமிழக மக்களை மீட்க தீவிர முயற்சி; பரந்தூர் விமான நிலைய திட்டம் ரத்து - முதலமைச்சர் விஜய் அறிவிப்பு; ஜல்லிக்கட்டு தொடர்பாக த.வெ.க. சட்டமன்ற உறுப்பினரின் பேச்சுக்கு தலைவர்கள் கண்டனம்; உள்ளிட்ட செய்திகளோடு "செய்திகளின் பின்னணி" நிகழ்ச்சிக்காக இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ். India & Tamil Nadu: News highlights from the past 7 days

இந்த வார ஆஸ்திரேலிய செய்திகள் (23 - 29 ஆகஸ்ட் 2026) 29.08.2026

ஆஸ்திரேலியாவின் இந்த வார (23 - 29 ஆகஸ்ட் 2026) முக்கிய செய்திகளின் தொகுப்பு. வாசித்தவர்: றைசெல். Top news from Australia this week (23- 29 August 2026)

Listen to the SBS Tamil - SBS தமிழ் podcast in Replaio

Radio and podcasts in one app - free, with no sign-up. Install today and do not miss the launch

Get it on Google Play

Replaio is not a podcast publisher; show names, artwork and audio belong to their authors and are distributed through public RSS feeds.