Maalaimalar.com
Maalaimalar Tamil
LISTEN TO DAILY NEWS
Koniecznie odwiedź stronę podcastu i wesprzyj twórcę: hubhopper.com
Gdzie słuchać?
Podcasty w aplikacji Replaio Radio Już wkrótcePodcasty trafią do aplikacji już wkrótce. Zainstaluj teraz i jako pierwszy zobacz nowe podejście do podcastów
Odcinki
புதிய ஏ.சி. மின்சாரப் பஸ்கள் சேவையை தொடங்கிவைத்தார் முதலமைச்சர் விஜய் 25.08.2026 1:38
சென்னையில் சுற்றுச்சூழல் மாசுபாட்டைக் குறைக்கும் நோக்கில், சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்தின் சார்பில், முதற்கட்டமாக ரூ.697 கோடி மதிப்பீட்டில், 625 தாழ்தள மின்சாரப் பஸ்கள் மொத்த விலை ஒப்பந்தத்தின் அடிப்படையில் வியாசர்பாடி, பெரும்பாக்கம், பூந்தமல்லி, சென்ட்ரல் பணிமனை மற்றும் தண்டையார்பேட்டை-1 உள்ளிட்ட 5 பணிமனைகளில் இருந்து இயக்கப்பட்டு வருகிறது.
மல்லிகை தண்ணீர் குடித்தால் என்ன நடக்கும்? 25.08.2026 1:33
மல்லிகை தண்ணீர் குடிப்பதால் கிடைக்கக்கூடிய நன்மைகள் மற்றும் உடலில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.
உடற்பயிற்சி செய்பவர்கள் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டிய உணவுகள்! 25.08.2026 1:19
உடற்பயிற்சி செய்பவர்கள் தங்களின் உடல் ஆரோக்கியத்திற்கும் சக்திக்கும் ஏற்ற உணவுகளைத் தேர்வு செய்வது மிகவும் முக்கியம். புரதம், நார்ச்சத்து, நல்ல கொழுப்பு மற்றும் தேவையான ஊட்டச்சத்துகள் நிறைந்த உணவுகள் குறித்து இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.
தினமும் முருங்கை விதை சாப்பிட்டால் என்ன நடக்கும்? 24.08.2026 0:55
தினமும் முருங்கை விதைகளை சாப்பிடுவதால் உடலுக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கும்? முருங்கை விதையில் உள்ள ஊட்டச்சத்துக்கள் உடல்நலத்திற்கு எவ்வாறு உதவுகின்றன என்பதை தெரிந்துகொள்ளுங்கள்.
தலைக்கு எண்ணெய் தடவினால் என்னென்ன நன்மைகள்? 24.08.2026 1:22
தலைக்கு எண்ணெய் தடவுவது தலைமுடி மற்றும் உச்சந்தலையை பராமரிக்க உதவும் ஒரு எளிய வழியாகும். இது உச்சந்தலையின் வறட்சியைக் குறைத்து, தலைமுடியை மென்மையாகவும் ஈரப்பதமாகவும் வைத்திருக்க உதவும்.
சினிமா செய்திகள் (23-08-2026) 23.08.2026 1:21
நடிகர் ரவிமோகன் தனது பிறந்தநாளை முன்னிட்டு செப்.5ம் தேதி ரசிகர்களைச் சந்திக்கும் ரசிகர்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு அழைப்பு விடுத்துள்ளார். ரசிகர்கள் அனைவரும் தங்களது குடும்பத்துடன் இந்தச் சந்திப்பில் பங்கேற்க வேண்டும் என்றும் அன்போடு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மாலை செய்திகள் (23-08-2026) 23.08.2026 2:48
வேவு பார்க்கும் சேகர் பாபு - அமைச்சர் ரமேஷ் குற்றச்சாட்டு முன்னாள் அமைச்சர் சேகர் பாபு தன் மேல எந்த தப்பும் இல்லைன்னு தொடர்ச்சியாக சொல்லிக்கிட்டு இருக்காரு. ஆனா இந்து சமய அறநிலையத்துறையில என்ன நடக்குதுன்னு அவர் வேவு பார்த்துகிட்டு இருக்காரு. அவர் பயத்தின் காரணமா தான் அப்படி செய்யுறாருன்னு அமைச்சர் ரமேஷ் குற்றம்சாட்டியிருக்காரு.
வாழைப்பூ சாப்பிட்டால் ஆஸ்துமா பிரச்சினை குறையுமா? 23.08.2026 1:10
வாழைப்பூவில் உள்ள சில ஊட்டச்சத்துகள் உடல்நலத்திற்கு பயனுள்ளதாக இருக்கலாம். ஆனால் வாழைப்பூ சாப்பிடுவதால் ஆஸ்துமா பிரச்சினை குறையும் என்பதற்கு போதுமான மருத்துவ ஆதாரங்கள் இல்லை. ஆஸ்துமா அறிகுறிகள் இருந்தால் மருத்துவரின் ஆலோசனையுடன் சிகிச்சையைத் தொடர்வதே பாதுகாப்பானது.
புகை, மது பழக்கத்தை குறைக்க பேரிச்சம்பழம் உதவுமா? 23.08.2026 1:25
புகை மற்றும் மது பழக்கத்தை குறைக்க பேரிச்சம்பழம் உதவுமா? பேரிச்சம்பழத்தின் ஊட்டச்சத்துகள் உடலுக்கு நன்மை அளித்தாலும், புகை அல்லது மது பழக்கத்தை நிறுத்துவதற்கான நிரூபிக்கப்பட்ட சிகிச்சையாக அது கருதப்படவில்லை. இந்த பழக்கங்களை குறைக்க அல்லது கைவிட, மருத்துவர் அல்லது சுகாதார நிபுணரின் ஆலோசனையுடன் பாதுகாப்பான முறைகளை பின்பற்றுவது முக்கியம்.
சினிமா செய்திகள் (22-08-2026) 22.08.2026 1:26
தமிழக முதலமைச்சர் விஜய்யின் மகன், ஜேசன் சஞ்சய் எனது வாழ்க்கையின் பெரிய தூணே எனது அம்மாதான். 24 மணி நேரமும் என்னை பற்றியும், எனது சகோதரி பற்றியுமே நினைத்துக்கொண்டிருப்பார் உணர்ச்சிப்பொஙக் கூறியுள்ளார்.
Comeback கொடுப்பதில் நாம் Specialist! சிறப்பாகக் கொடுப்போம்! - செயற்குழு கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேச்சு 22.08.2026 1:27
* நாம் பார்க்காத வெற்றியும் இல்லை. நாம் பாரக்காத தோல்வியும் இல்லை. * தேர்தலில்தான் தோல்வி அடைந்திருக்கிறோமே தவிர, நிரந்தரமாக இல்லை. * இந்த தோல்வியானது எதிர்காலத்தை திட்டமிடுவதற்காக நமக்கு கால அவகாசம் என எடுத்துக் கொள்வோம். * கழக வரலாற்றில் இது மிக முக்கியமான செயற்குழுவாக அமையவிருக்கிறது. * Comeback கொடுப்பதில் நாம் Specialist! சிறப்பாகக் கொடுப்போம்! * Bore அடிக்கிறது என்பதற்காக நாம் அரசியலுக்க வந்...
மாலை செய்திகள் (21-08-2026) 22.08.2026 3:20
387-ல் அடியெடுத்து வைக்கும் நம்ம சென்னை
நெற்றியில் விபூதி பூசினால் என்ன நடக்கும்? 22.08.2026 1:09
நெற்றியில் விபூதி பூசுவதன் ஆன்மிக மற்றும் பாரம்பரிய முக்கியத்துவம் என்ன? விபூதி உடல் மற்றும் மனதிற்கு என்னென்ன நன்மைகளை தரும் என நம்பப்படுகிறது?
எலுமிச்சை + இஞ்சி... எடை குறைக்கும் ரகசியம்! 22.08.2026 1:02
எலுமிச்சை மற்றும் இஞ்சியை சேர்த்து குடிப்பதால் உடலுக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கும்? இது உண்மையில் எடை குறைக்க உதவுமா? அதன் பின்னணி என்ன என்பதை தெரிந்துகொள்ளுங்கள்.
சினிமா செய்திகள் (21-08-2026) 21.08.2026 1:32
நடிகை சௌகார் ஜானகி 1950, 60-களில் முன்னணி கதாநாயகியாக ஜொலித்த பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி உடல்நலக்குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இவரது மறைவுக்கு திரைத்துறையினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
59 தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுக்கு கார் வேண்டாம்: சட்டசபையில் உதயநிதி ஸ்டாலின் பேச்சு 21.08.2026 1:43
சட்டசபையில் எம்.எல். ஏ.க்கள் அனைவருக்கும் அரசு சார்பில் கார் வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் விஜய் கடந்த புதன்கிழமை அறிவித்தார்.
குழந்தைகளுக்கு முத்தம் கொடுப்பது ஏன் முக்கியம்? 21.08.2026 1:09
குழந்தைகளுக்கு முத்தம் கொடுப்பது அன்பையும் பாதுகாப்பு உணர்வையும் வெளிப்படுத்தும் ஒரு முக்கிய வழியாகும். பெற்றோரின் அன்பான அரவணைப்பும் முத்தமும் குழந்தைகளின் உணர்ச்சி வளர்ச்சிக்கு உதவக்கூடும்.
இஞ்சி கசாயம் குடித்தால் என்ன நடக்கும்? 21.08.2026 1:09
இஞ்சி கசாயம் குடிப்பதால் செரிமானம் சீராக உதவுவதோடு, தொண்டை அசௌகரியம் மற்றும் குமட்டல் போன்றவற்றிலும் ஓரளவு நிவாரணம் கிடைக்கலாம். இஞ்சியில் உள்ள இயற்கை சேர்மங்கள் உடலுக்கு பல்வேறு நன்மைகளை வழங்கக்கூடும்.
சினிமா செய்திகள் (20-08-2026) 20.08.2026 1:42
நடிகரும் இயக்குனருமான சசிகுமார் கடந்த 2018-ம் ஆண்டு ஏரிச்சாலையில் உள்ள மகாத்மா காந்தி சிறுவர் பூங்காவுக்கு வந்தார். சுப்பிரமணியபுரம் படப்பிடிப்பின்போது சக நடிகர், நடிகைகள் மற்றும் படக்குழுவினருடன் வந்து பல்வேறு இடங்களை பார்வையிட்டு இங்குள்ள பூங்காவில் மரக்கன்றுகளை நட்டு வைத்தார். 8 ஆண்டுக்குப் பிறகு மீண்டும் அதே இடத்திற்கு வந்த நடிகர் சசிகுமார், தான் நட்டு வைத்த மரங்கள் வேகமாக வளர்ந்து, அதிகளவு ப...
மாலை செய்திகள் (20-08-2026) 20.08.2026 3:58
காவிரி முதல் நீட் வரை... தென் மாநில முதல்-மந்திரிகள் மாநாட்டில் பேசிய முதலமைச்சர் விஜய்... மாமல்லபுரத்த அடுத்துள்ள கோவளத்துல தென் மாநில முதலமைச்சர்கள் மாநாடு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமைல இன்னைக்கு நடந்துச்சு.
தென்மண்டல கவுன்சிலின் துணைத் தலைவராக முதலமைச்சர் விஜய் நியமனம்! 20.08.2026 1:03
தென்மண்டல கவுன்சிலின் துணைத் தலைவராக முதலமைச்சர் விஜய் நியமனம் செய்யப்பட்டுள்ளார். கவுன்சிலின் செயலாளராக தமிழ்நாடு தலைமைச் செயலாளர் சாய் குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார். கவுன்சிலின் தலைவராக உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளார்.
உண்மையான காதல் 30 வயதுக்கு பிறகுதானா? 20.08.2026 1:05
30 வயதுக்கு பிறகுதான் உண்மையான காதல் மலருமா? காதலுக்கும் வயதுக்கும் உண்மையில் தொடர்பு இருக்கிறதா என்பதைப் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
இனிப்பு சாப்பிடும் முன் இதை தெரிந்துகொள்ளுங்கள்! 20.08.2026 1:04
இனிப்புகளை சாப்பிடுவதற்கு முன் சில முக்கியமான விஷயங்களை தெரிந்துகொள்வது அவசியம்.
சினிமா செய்திகள் (19-08-2026) 19.08.2026 0:49
மஹோகனி யூத் லீக் தொடரில் மகன் ஆத்விக் அணி வெற்றி. புகைப்படங்களை பகிர்ந்து பெருமிதம் அடைந்த நடிகை ஷாலினி அஜித்குமார்.
வாரத்தில் எந்த நாளில் நகம் வெட்டினால் நல்லது? 19.08.2026 0:53
வாரத்தில் எந்த நாளில் நகம் வெட்டினால் நல்லது? இதுகுறித்து நம் முன்னோர்கள் கூறியுள்ள நம்பிக்கைகள் என்ன? நகம் வெட்டுவதற்கு ஏற்ற நாள், நேரம் குறித்து பல்வேறு பாரம்பரிய கருத்துகள் உள்ளன. அதேநேரம், சுகாதார ரீதியாக நகங்களை முறையாக வெட்டி சுத்தமாக வைத்திருப்பதே முக்கியம்.
Podobne podcasty
Replaio nie jest wydawcą podcastów; nazwy audycji, okładki i audio należą do ich autorów i są rozpowszechniane przez publiczne kanały RSS