SBS

SBS Tamil - SBS தமிழ்

News TA ↓ 2746 episodios

Independent news and stories from SBS Audio, connecting you to life in Australia and Tamil-speaking Australians. - தமிழ் பேசும் ஆஸ்திரேலியர்களுடனும், ஆஸ்திரேலிய வாழ்க்கையுடனும் இணைய உங்களுக்கு உதவும் பக்கசார்பற்ற செய்திகள் மற்றும் கதைகள்.

No dejes de visitar la web del podcast y apoyar a su creador: www.sbs.com.au

Autor

SBS

Categoría

News

Web del podcast

www.sbs.com.au

Último episodio

20 de nov. de 2026

¿Dónde escuchar?

Podcasts en la app Replaio Radio Muy pronto

Los podcasts llegarán muy pronto a la app. Instálala ahora y sé el primero en descubrir una forma totalmente nueva de vivir los podcasts

Descárgala en Google Play Instálala gratis Android 10 M+ de descargas · valoración de 4,7+ iOS muy pronto

Episodios

இன்றைய செய்திகள்: 06 நவம்பர் 2026 - வெள்ளிக்கிழமை 05.11.2026

SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வெள்ளிக்கிழமை 06/11/2026) செய்திகள். வாசித்தவர் குலசேகரம் சஞ்சயன். #sbsaudiopodcast Today's highlights (06 November 2026 - Friday)

இலங்கையின் இந்த வார முக்கிய செய்திகளின் தொகுப்பு (அக்டோபர் 31– நவம்பர் 06, 2026) 05.11.2026

இலங்கையில் கடந்த சனி முதல் இன்று வெள்ளி வரை (அக்டோபர் 31 – நவம்பர் 06 ) என்று கடந்த 7 நாட்கள் இடம்பெற்ற செய்திகளின் தொகுப்பு. முன்வைக்கிறார் SBS தமிழ் ஒலிபரப்பின் இலங்கைச் செய்தியாளர் மதிவாணன். #sbsaudiopodcast Top news from Sri Lanka this week (October 31 – November 06, 2026)

உடல் எடை குறைப்பில் புதிய மாற்றம் – புதிய வடிவில் வெகோவி 05.11.2026

ஆஸ்திரேலியாவில் உடல் எடையைக் குறைப்பதற்குப் பயன்படுத்தப்படும் வெகோவி (Wegovy) மருந்து மாத்திரை வடிவில் கிடைப்பதற்கு Therapeutic Goods Administration (TGA) ஒப்புதல் வழங்கியுள்ளது. இது குறித்த செய்தியை எடுத்து வருகிறார் செல்வி இன்பசேகரன். #sbsaudiopodcast A new era in weight loss – Wegovy in a new form

வீழ்ச்சியில் David Jones - நடந்தது என்ன? ஊழியர்கள், Gift Cards வைத்திருப்போரின் நிலை? 05.11.2026

188 ஆண்டுகால வரலாற்றைக் கொண்ட ஆஸ்திரேலியாவின் பிரபல David Jones நிறுவனம் கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கி நிர்வாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. இதனால் சுமார் 6,000 ஊழியர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது. இதுபற்றிய செய்தியின் பின்னணியினை முன்வைக்கிறார் மகேஸ்வரன் பிரபாகரன். #sbsaudiopodcast David Jones in Crisis: Customers rush to spend gift cards as David Jones goes into adm...

உறவுகளின் நினைவுகளோடு… புதிய உறவுகளுடன் ஆஸ்திரேலியாவில் தீபாவளி 05.11.2026

இலங்கை, இந்தியா போன்ற நாடுகளில் வாழும் உறவினர்களைப் பிரிந்து, ஆஸ்திரேலியாவில் தீபாவளியைக் கொண்டாடும் அனுபவங்கள் எப்படிப்பட்டவை? சிட்னியில் North Kellyville-இல் வசிக்கும் தம்பதியனர் ஹரிஹரன் கிருஷ்ணமூர்த்தி மற்றும் ஜனனி ஹரிஹரன் இருவரும் தங்கள் உறவுகள் தொலைவில் இருந்தாலும் ஆஸ்திரேலியாவில் தாங்கள் தீபாவளியைக் கொண்டாடும் விதம், புதிய குடும்பப் பாரம்பரியங்களை உருவாக்கும் அனுபவங்கள் குறித்து செல்வி இன்பச...

ஆஸ்திரேலியாவுடன் போர் தொடுத்த மிகச்சிறிய நாடு 05.11.2026

ஆஸ்திரேலியா ஒரு தீவு, ஒரு நாடு, ஒரு கண்டம் என்பதை நீங்கள் அறிவீர்கள். ஆஸ்திரேலிய பூர்வீக மக்கள் வாழ்ந்த நாடுகளைக் கணக்கில் எடுக்காமல், இந்தக் கண்டத்தில் எத்தனை நாடுகள் இருக்கின்றன என்று கேட்டால், "அது தானே நீங்களே சொல்லிவிட்டிர்களே, ஆஸ்திரேலியா தான் இந்தக் கண்டத்திலுள்ள நாடு," என்று கேட்பீர்கள் இல்லையா... . பல, micronation என்று சொல்லப்படும் மிகச்சிறிய நாடுகள் உலகில் இருக்கின்றன. அதில் பாதிக்கு மே...

இஞ்சியின் மருத்துவ குணங்கள் 05.11.2026

நாம் அன்றாடம் சமைக்கும் உணவு வகைகளில் நாம் பயன்படுத்தும் பொருட்களில் பல மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன. அவை பற்றி தெரிந்துக்கொள்ளும் முயற்சியே இந்த நிகழ்ச்சி. அந்த வகையில் இன்று 'இஞ்சி' பற்றி அறிந்துக்கொள்வோம். இஞ்சியின் மருத்துவ குணங்கள், அன்றாடம் நாம் எப்படி இலகுவாக இஞ்சியை உட்கொள்ளலாம் என்பதை சித்த வைத்தியர் டாக்டர் செல்வி மணி அவர்களிடமிருந்து அறிந்துக்கொள்வோம். நிகழ்ச்சித் தயாரிப்பு செல்வி இன்...

235 மில்லியன் டொலர் மோசடி செய்ததாக ஐவர் மீது குற்றச்சாட்டு ! 05.11.2026

மாற்றுத்திறனாளிகளுக்கான NDIS நிதி, Centrelink கொடுப்பனவுகள், மூத்த படைவீரர் உதவி, குழந்தைப் பராமரிப்பு மானியம் - இவை அனைத்தும் வரி செலுத்தும் மக்களின் பணம். அந்தப் பணத்தில் சுமார் 235 மில்லியன் டொலர் மோசடி செய்யப்பட்டதாக, அல்லது மோசடி அபாயத்தில் இருந்ததாக, ஆஸ்திரேலிய ஃபெடரல் காவல்துறை (AFP) நேற்று அறிவித்துள்ளது. அத்துடன், நாடு தழுவிய சோதனைகளைத் தொடர்ந்து ஐந்து பேர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது....

இன்றைய செய்திகள்: 05 நவம்பர் 2026 - வியாழக்கிழமை 04.11.2026

SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வியாழக்கிழமை 05/11/2026) செய்திகள். வாசித்தவர் குலசேகரம் சஞ்சயன். #sbsaudiopodcast Today's highlights (05 November 2026 - Thursday)

'The most lonely feeling': Why the 'Sandwich Generation' is shouldering a growing care burden - பெற்றோரையும் பிள்ளைகளையும் ஒருசேரப் பராமரிக்கும் தலைமுறை 04.11.2026

With the rising cost of living, an ageing population, and support services under strain, more Australians are bearing the brunt of caring responsibilities for both their children and parents. - வளர்ந்து வரும் தங்கள் பிள்ளைகளையும், வயதாகிவரும் பெற்றோரையும் ஒரே நேரத்தில் பராமரிக்கும் பொறுப்பைச் சுமக்கும் நடுத்தர வயதினர் Sandwich தலைமுறையினர் என்று அழைக்கப்படுகின்றனர். இது குறித்து SBS Examines-இற்கா...

விலைவாசி முதல் வட்டிவீத உயர்வு வரை: என்ன நடக்கிறது ஆஸ்திரேலியாவில்? 04.11.2026

ஆஸ்திரேலியாவில் பணவீக்கம் மீண்டும் அதிகரித்து வருவதுடன், வாழ்க்கைச் செலவுகளும் தொடர்ந்து உயர்ந்து வருகின்றன. இதற்கிடையில் ரிசர்வ் வங்கி வட்டி விகிதங்களை உயர்த்தி வரும் நிலையில் வீட்டுக் கடன் வைத்திருக்கும் குடும்பங்களும் வணிக நிறுவனங்களும் கூடுதல் பொருளாதாரச் சுமையைச் சந்திக்கின்றன.இந்தப் பொருளாதாரச் சூழலுக்குப் பின்னால் உள்ள காரணங்கள் என்ன? பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கியின் நடவடிக்கைக...

Parramatta Powerhouse அருங்காட்சியகம் - மேற்கு சிட்னியின் புதிய கலாச்சார அடையாளம்! 04.11.2026

மேற்கு சிட்னியின் வரலாற்றில் ஒரு முக்கிய மைல்கல்லாக, பாரமட்டா பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பவர்ஹவுஸ் அருங்காட்சியகம் நவம்பர் 7ஆம் தேதி பொதுமக்களுக்காகத் திறக்கப்படுகிறது. இது குறித்த செய்தியை எடுத்து வருகிறார் செல்வி இன்பசேகரன். #sbsaudiopodcast A new cultural landmark for Western Sydney – Powerhouse Parramatta Museum opens

வீடு வாங்க வசதி இல்லையா? ஒருவேளை அது உங்களுக்குச் சாதகமான ஒன்றாக இருக்கலாம் 04.11.2026

நீங்கள் விரும்பும் இடத்தில் வீடு வாங்குவதற்குப் போதிய வசதி இல்லாததால், வாடகை வீட்டில் வசிக்கும் இலட்சக்கணக்கான ஆஸ்திரேலியர்களில் ஒருவராக நீங்களும் இருக்கலாம். இத்தகைய சூழலில், வேகமெடுத்துக்கொண்டே இருக்கும் ஒரு பந்தயத்தில் நீங்கள் பின்தங்கியிருப்பதாக உணரக்கூடும். ஆனால், முற்றிலும் மாறியுள்ள தற்போதைய பொருளாதாரச் சூழலில், நம் வாழ்வின் சில கட்டங்களில், வீடு வாங்குவதை விட வாடகை வீட்டில் வசிப்பதே நிதிப்...

குழந்தை வளர்ப்பில் பெற்றோரின் சவால்கள் என்ன? எப்படிச் சமாளிப்பது? 04.11.2026

இன்றைய காலகட்டத்தில் குழந்தைகளின் வாழ்க்கையில் தொழில்நுட்பமும் சமூக ஊடகங்களும் தவிர்க்க முடியாத ஒன்றாக மாறியுள்ளன. குழந்தைகள் எதிர்கொள்ளும் மனரீதியான சவால்களைப் பெற்றோர் எவ்வாறு அடையாளம் காணலாம் என்று குழந்தை வளர்ப்பு தொடர்பாக விளக்குகிறார் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இணையவழி ஆலோசனை சேவைகளை வழங்கி வருகின்ற Mind Matterz Counselling mind-matterz-counselling.netlify.app நிறுவனர் இளவரசி ராஜா அவர்கள். A...

இன்றைய செய்திகள்: 04 நவம்பர் 2026, புதன்கிழமை 04.11.2026

SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (புதன்கிழமை 04/11/2026) செய்திகள். வாசித்தவர்: மகேஸ்வரன் பிரபாகரன். #sbsaudiopodcast Today's highlights (04 November 2026 - Wednesday)

மட்டக்களப்பில் கால்நடைகளுக்காக போராடும் பண்ணையாளர்கள் 03.11.2026

மட்டக்களப்பு மயிலத்தமடு மற்றும் மாதவனைகால்நடைகளின் மேய்ச்சல் தரை நிலங்களில்இருந்து சட்டவிரோத குடியேற்றவாசிகளைவெளியேற்றுமாறும் நீதிமன்ற தீர்ப்பைஅமுல்படுத்த கோரியும் மட்டக்களப்பில் பண்ணையாளர்கள் போராட்டம். இது தொடர்பில் “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சிஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச்செய்தியாளர் மதிவாணன்.

ஆஸ்திரேலியாவில் இந்துக் கல்வி மற்றும் கலாசார மையத்திற்காக 'உள்-அகம்' 03.11.2026

Shivam School of Danceஇன் புதிய கலைப் படைப்பாக்க முயற்சியே Shivam Dance Creative(SDC) ஆகும். இம்மாதம் 7ஆம் திகதி, SDC தனது முதலாவது கூட்டு நடனப் படைப்பான 'உள்ளகம்' எனும் தனித்துவமான கருப்பொருள் சார்ந்த நடன நிகழ்ச்சியை மேடையேற்றவுள்ளது. இந்நிகழ்ச்சியின் சிறப்பம்சமாக, கலாசேத்ரா நிறுவனத்தின் முன்னாள் மாணவியும், இந்தியாவில் இயங்கி வரும் Dakshina Dance Ensemble நடனக் குழுவின் கலை இயக்குநருமான திவ்யா நா...

மெல்பன் கப் 2026 : அரச குடும்பத்தின் முன்னாள் குதிரை வென்றது! 03.11.2026

ஆஸ்திரேலியாவின் புகழ்பெற்ற குதிரைப் பந்தயப் போட்டியான 2026ஆம் ஆண்டுக்கான மெல்பன் கப், இன்று (நவம்பர் 3) மெல்பனில் உள்ள ஃபிளெமிங்டன் குதிரைப் பந்தய மைதானத்தில் கோலாகலமாக நடைபெற்றது. இது குறித்த செய்தியை எடுத்து வருகிறார் செல்வி இன்பசேகரன். #sbsaudiopodcast Melbourne Cup 2026: Former royal family horse takes first place

வட்டி விகிதம் மீண்டும் உயர்ந்தது ! 03.11.2026

ஆஸ்திரேலிய ரிசர்வ் வங்கி (RBA) அதிகாரப்பூர்வ வட்டி விகிதத்தை நான்கு புள்ளி எட்டு ஐந்து சதவீதமாக உயர்த்தி உள்ளது. இது குறித்த செய்தியை எடுத்துவருகிறார் குலசேகரம் சஞ்சயன். #sbsaudiopodcast Interest rates hit an 18-year high with the RBA's fifth rise of 2026

எந்த நாட்டினருக்கு ஆஸ்திரேலியாவில் இனி ஓட்டுநர் தேர்வு கட்டாயமில்லை 03.11.2026

வெளிநாட்டு ஓட்டுநர் உரிமம் வைத்திருக்கும் சில நாடுகளை சேர்ந்தவர்களுக்கு ஆஸ்திரேலியாவின் இரு மாநிலங்களில் இந்த மாதம் முதல் புதிய விதிமுறை நடைமுறைக்கு வந்துள்ளது. இது குறித்த செய்தியை எடுத்து வருகிறார் செல்வி இன்பசேகரன். #sbsaudiopodcast Drivers from which countries can exchange their licence without a test in Australia?

இன்றைய செய்திகள்: 03 நவம்பர் 2026 - புதன்கிழமை 03.11.2026

SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (செவ்வாய்க்கிழமை 03/11/2026) செய்திகள். வாசித்தவர் குலசேகரம் சஞ்சயன். #sbsaudiopodcast Today's highlights (03 November 2026 - Wednesday)

முன்னுரிமை மொழிகள் பட்டியலில் தமிழ் மொழியின் நிலை என்ன? 02.11.2026

எந்த ஆசிய மொழிகளுக்கு ஆஸ்திரேலியா முதலிடம் கொடுக்க வேண்டும் என்ற கேள்விக்குப் பதிலளித்துள்ள ஒரு நாடாளுமன்றக் குழு, நான்கு மொழிகளை மட்டுமே "முன்னுரிமை மொழிகள்" என்ற பட்டியலில் வகைப்படுத்தியுள்ளது. இது குறித்த ஒரு விவரணத்தை எடுத்து வருகிறார் குலசேகரம் சஞ்சயன். #sbsaudiopodcast Why was Tamil left off Australia's priority language list?

இன்றைய செய்திகள்: 02 நவம்பர் 2026 - திங்கட்கிழமை 01.11.2026

SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (திங்கட்கிழமை 02/11/2026) செய்திகள். வாசித்தவர் குலசேகரம் சஞ்சயன். #sbsaudiopodcast Today's highlights (02 November 2026 - Monday)

இந்தியா & தமிழ்நாடு: கடந்த 7 நாட்கள் செய்திகளின் தொகுப்பு 01.11.2026

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக கோரி தலைநகர் டெல்லியில் பெரும் ஆர்ப்பாட்டம் - பங்கேற்ற தமிழக தலைவர்கள்; கைதிகள் தப்பியோட்டம் - சிறைத்துறை அதிகாரிகளுக்கு முதலமைச்சர் விஜய் எச்சரிக்கை; இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கைது; உள்ளிட்ட செய்திகளோடு "செய்திகளின் பின்னணி" நிகழ்ச்சிக்காக இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ். #sbsaudiopodcast India & Tamil Nadu: News highlights from...

திறந்தது Western Sydney Airport! பயணிக்க விரும்புவோர் அறிய வேண்டியது என்ன? 31.10.2026

சிட்னியின் இரண்டாவது சர்வதேச விமான நிலையமான Western Sydney International Airport கடந்த ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 25) பயணிகள் சேவையைத் தொடங்கியது. பல தசாப்தங்களாக எதிர்பார்க்கப்பட்ட இந்தப் புதிய விமான நிலையத்தால் விமானக் கட்டணங்கள் குறையுமா? மேற்கு சிட்னி மக்களுக்கும் ஆஸ்திரேலியப் பொருளாதாரத்திற்கும் இதனால் ஏற்படக்கூடிய நன்மைகள் என்ன? உள்ளிட்ட பல தகவல்களை SBS Newsஇன் Caroline Riches தயாரித்த விவரணத...

Escucha el podcast SBS Tamil - SBS தமிழ் en Replaio

Radio y podcasts en una sola app - gratis y sin registro. Instálala hoy y no te pierdas el estreno

Descárgala en Google Play

Replaio no es editor de podcasts; los nombres de los programas, las portadas y el audio pertenecen a sus autores y se distribuyen a través de canales RSS públicos