SBS

SBS Tamil - SBS தமிழ்

Independent news and stories from SBS Audio, connecting you to life in Australia and Tamil-speaking Australians. - தமிழ் பேசும் ஆஸ்திரேலியர்களுடனும், ஆஸ்திரேலிய வாழ்க்கையுடனும் இணைய உங்களுக்கு உதவும் பக்கசார்பற்ற செய்திகள் மற்றும் கதைகள்.

Vizitează neapărat site-ul podcastului și susține-i creatorul: www.sbs.com.au

Autor

SBS

Categorie

News

Site-ul podcastului

www.sbs.com.au

Cel mai nou episod

19 nov. 2026

Unde asculți?

Podcasturi în aplicație Replaio Radio În curând

Podcasturile ajung în curând în aplicație. Instaleaz-o acum și fii primul care descoperă o abordare complet nouă a podcasturilor

Descarcă din Google Play Instalează gratuit Android 10 mil.+ descărcări · nota 4,7+ iOS în curând

Episoade

சிட்னியில் புதிய மெட்ரோ ரயில் சேவை மக்கள் பயன்பாட்டுக்கு திறப்பு! 30.10.2026

Bankstown முதல் Sydenham வரையிலான புதிய தென்மேற்கு மெட்ரோ ரயில் சேவை பொதுமக்களின் பயன்பாட்டுக்காக திறக்கப்பட்டுள்ளது. இது குறித்த செய்தியை எடுத்து வருகிறார் செல்வி இன்பசேகரன். #sbsaudiopodcast New Metro Train Service opens to the public in NSW!

Advance Care Planning, Residential Aged Care/ Home Care – முதியோருக்கான முன்திட்டமிடல் 30.10.2026

வயது முதிர்வும் நோயும் எப்போது வரும் என்பதை எவராலும் முன்கூட்டியே கணிக்க முடியாது. ஆனால், எதிர்காலத்தில் நமக்குத் தேவையான பராமரிப்பை இன்றே திட்டமிடுவதன் மூலம், நம்மையும் நம் குடும்பத்தினரையும் பல சிரமங்களிலிருந்து பாதுகாத்துக்கொள்ள முடியும். இந்த முக்கியமான விழிப்புணர்வுத் தலைப்பில், Blacktown மற்றும் Mount Druitt மருத்துவமனைகளின் அவசர சிகிச்சைப் பிரிவுகளின் துணை இயக்குநரும், Western Sydney பல்கலை...

இன்றைய செய்திகள்: 30 அக்டோபர் 2026 - வெள்ளிக்கிழமை 30.10.2026

SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வெள்ளிக்கிழமை 30/10/2026) செய்திகள். வாசித்தவர் : செல்வி இன்பசேகரன். #sbsaudiopodcast Today's highlights (30 October 2026 - Friday)

Deepfake அதிர்ச்சி: உங்கள் முகம், உங்கள் அனுமதியின்றி! என்ன செய்யலாம்? 29.10.2026

செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி ஒருவரின் புகைப்படங்களை ஆபாசமாக மாற்றி இணையத்தில் வெளியிட்ட இளைஞர் ஒருவருக்கு Adelaide நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது. டீப்ஃபேக்(deepfake) என்றால் என்ன, அதன் ஆபத்துகள் என்ன, இத்தகைய இணைய அச்சுறுத்தல்களிலிருந்து நம்மையும் நமது குடும்பத்தினரையும் எவ்வாறு பாதுகாத்துக்கொள்ளலாம்? இதுபற்றிய செய்தியின் பின்னணியினை முன்வைக்கிறார் மகேஸ்வரன் பிரபா...

இலங்கையின் இந்த வார முக்கிய செய்திகளின் தொகுப்பு (அக்டோபர் 24 – 30, 2026) 29.10.2026

இலங்கையில் கடந்த சனி முதல் இன்று வெள்ளி வரை (அக்டோபர் 24 – 30) என்று கடந்த 7 நாட்கள் இடம்பெற்ற செய்திகளின் தொகுப்பு. முன்வைக்கிறார் SBS தமிழ் ஒலிபரப்பின் இலங்கைச் செய்தியாளர் மதிவாணன். #sbsaudiopodcast Top news from Sri Lanka this week (October 24 – 30, 2026)

Blue Mountains: ஆஸ்திரேலியாவில் இயற்கை வடித்த உலகப் பாரம்பரிய அதிசயம் 29.10.2026

ஆஸ்திரேலியாவின் மிகச் சிறந்த இயற்கை அதிசயங்களில் ஒன்றான ப்ளூ மவுன்டன்ஸ், கோடிக்கணக்கான ஆண்டுகளாக நிலவமைப்பில் ஏற்பட்ட மாற்றங்களால் உருவானது. நீல நிறமாகத் தோன்றும் மலைத்தொடர்கள் உள்ளிட்ட தனித்துவமான இயற்கை அழகுடன் மிளிரும் இந்தப் பகுதி, UNESCO உலகப் பாரம்பரியப் பட்டியலிலும் இடம்பெற்றுள்ளது. ப்ளூ மவுன்டன்ஸ் குறித்த சிறப்புத் தகவல்களைத் தொகுத்து, “நம்ம ஆஸ்திரேலியா” நிகழ்ச்சி வழியாக விளக்குகிறார் கீதா...

நீங்கள் எப்போதாவது ஆணாக பிறந்திருக்கலாம் என்று எண்ணியது உண்டா? 29.10.2026

நீங்கள் எப்போதாவது ஆணாக பிறந்திருக்கலாம் என்று எண்ணியது உண்டா? என்று சில பெண்களிடம் கேட்டபோது அவர்கள் வழங்கிய பதில்களை தொகுத்து தயாரித்து வழங்குகிறார் செல்வி இன்பசேகரன். இந்நிகழ்ச்சி ஒரு மறுஒலிபரப்பு. #sbsaudiopodcast Have you ever wished you were born a man?

Centrelink: மீண்டும் தொடங்கப்பட்ட அபராதங்கள் உங்களை எப்படிப் பாதிக்கும்? 29.10.2026

கிட்டத்தட்ட ஆயிரம் வேலைதேடுவோருக்கு நடந்தது சட்டத்துக்கு முரணானது என்கிறார், அரசுத் துறைகளைக் கண்காணிக்கும் Commonwealth Ombudsman. இப்போது, ஐம்பதாயிரத்துக்கும் அதிகமானோரை இழப்பீடு கோர விண்ணப்பிக்குமாறு ஃபெடரல் அரசு அழைத்திருக்கிறது. இது குறித்த செய்தியின் பின்னணியை எடுத்து வருகிறார் குலசேகரம் சஞ்சயன். #sbsaudiopodcast Centrelink: Mutual obligation requirements and compliance penalties restarted

Blue Mountains: ஆஸ்திரேலியாவில் இயற்கை வடித்த உலகப் பாரம்பரிய அதிசயம் 29.10.2026

ஆஸ்திரேலியாவின் மிகச் சிறந்த இயற்கை அதிசயங்களில் ஒன்றான ப்ளூ மவுன்டன்ஸ், கோடிக்கணக்கான ஆண்டுகளாக நிலவமைப்பில் ஏற்பட்ட மாற்றங்களால் உருவானது. நீல நிறமாகத் தோன்றும் மலைத்தொடர்கள் உள்ளிட்ட தனித்துவமான இயற்கை அழகுடன் மிளிரும் இந்தப் பகுதி, UNESCO உலகப் பாரம்பரியப் பட்டியலிலும் இடம்பெற்றுள்ளது. ப்ளூ மவுன்டன்ஸ் குறித்த சிறப்புத் தகவல்களைத் தொகுத்து, “நம்ம ஆஸ்திரேலியா” நிகழ்ச்சி வழியாக விளக்குகிறார் கீதா...

இன்றைய செய்திகள்: 29 அக்டோபர் 2026 - வியாழக்கிழமை 28.10.2026

SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வியாழக்கிழமை 29/10/2026) செய்திகள். வாசித்தவர் குலசேகரம் சஞ்சயன். #sbsaudiopodcast Today's highlights (29 October 2026 - Thursday)

ஆஸ்திரேலியாவில் எங்கள் தீபாவளி: ஒரு பிரிஸ்பேன் குடும்பத்தின் அனுபவம் 28.10.2026

ஆஸ்திரேலியாவில் தீபாவளியைக் கொண்டாடுவது எப்படி வித்தியாசமானது? இந்தக் கேள்வியுடன், அக்டோபர் 5ஆம் தேதி பிரிஸ்பேனில் Eat Street எனுமிடத்தில் நடைபெற்ற தீபாவளி விழாவில் சிவகுமார், அனிதா, டிலன், அமித் ஆகிய குடும்ப உறுப்பினர்களைச் சந்தித்தோம். SBS கலந்துகொண்ட இந்த விழாவில், அவர்கள் தீபாவளியைக் கொண்டாடும் விதம் குறித்து உரையாடுகின்றனர். நிகழ்ச்சி தயாரிப்பு - றைசெல். #sbsaudiopodcast

மனம் விட்டுப் பேச ஓர் இடம்: சிட்னியில் Tamil Safe Space 28.10.2026

சிட்னியின் Toongabbie பகுதியில் இயங்கும் Tamil Safe Space எனும் முன்னெடுப்பு, உளவியல் அதிர்ச்சி அல்லது மனநலச் சவால்களை எதிர்கொள்பவர்களுக்கு ஆதரவளிக்கும் ஒரு சமூக முயற்சி. இந்தச் சேவை வழங்கும் உதவிகள் என்ன? எவ்வாறு உதவி பெறலாம்? என்று விளக்குகிறார், Tamil Safe Space ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான சாந்தி சேனாதி அவர்கள். அக்டோபர் மாத மனநல மாதத்தையொட்டி, விழிப்புணர்வை ஏற்படுத்த ஏற்பாடு செய்யப்படும் “உங...

பெரும் சர்ச்சையினை ஏற்படுத்தியுள்ள செம்மணி அறிக்கை 28.10.2026

யாழ்ப்பாணம் செம்மணி மனித புதைகுழி தொடர்பில் தற்போது வெளிவந்துள்ள நான்காவது இடைக்கால அறிக்கை பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பில் பல்வேறு தரப்பினராலும் சந்தேகங்கள் எழுப்பப்பட்டுள்ளன. இது தொடர்பில் “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.

உலுறு மலையை பூர்வீக மக்களிடம் ஆஸ்திரேலிய அரசு மீள் கையளித்தது 1985ம் ஆண்டு, அக்டோபர் 26ம் நாள் 28.10.2026

பழைய உலக நிகழ்வுகள், தடம் பதித்த சம்பவங்கள், ஆஸ்திரேலியாவின் வரலாறு, தமிழர் தொடர்பான பதிவுகள். இவைகள் இடம் பெறும் காலத்துளி நிகழ்ச்சியில் இந்த வார ஆஸ்திரேலிய நிகழ்வுகள் குறித்து நிகழ்ச்சி படைத்தவர், எமது நிகழ்ச்சித் தயாரிப்பாளர், குலசேகரம் சஞ்சயன். இந்த நிகழ்ச்சியில் ஆஸ்திரேலியாவில் நிகழ்ந்தவை, குறிப்பாக ஆஸ்திரேலிய அரசு உலுறு மலையை, அதன் உரிமையாளர்களான பூர்வீக மக்களிடம் மீள் கையளித்தது குறித்து.

அடுத்ததாக என்ன நடக்கும் என்பது குறித்து மக்களிடையே நம்பிக்கை குறைகிறது 28.10.2026

Australian Unity Wellbeing Index - நல்வாழ்வுக் குறியீடு என்ற பெயரில், மக்கள் தங்கள் சொந்த வாழ்க்கை குறித்தும், இந்த நாட்டில் வாழ்வது குறித்தும் எவ்வளவு திருப்தியாக இருக்கிறார்கள் என்பதை, Deakin பல்கலைக்கழகமும் Australian Unity நிறுவனமும் இணைந்து, கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக அளந்து வருகிறார்கள். அவர்கள் அந்த அறிக்கையை அண்மையில் வெளியிட்டுள்ளார்கள். இது குறித்த செய்தியின் பின்னணியை எடுத்து வருகிறா...

இன்றைய செய்திகள்: 28 அக்டோபர் 2026, புதன்கிழமை 28.10.2026

SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (புதன்கிழமை 28/10/2026) செய்திகள். வாசித்தவர்: மகேஸ்வரன் பிரபாகரன்.

ஆஸ்திரேலியாவில் உணவுக்காகச் சிரமப்படுவோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிப்பு 27.10.2026

ஆஸ்திரேலியாவில் வாழ்க்கைச் செலவு அதிகரித்து வரும் நிலையில், உணவுப் பற்றாக்குறையால் பாதிக்கப்படும் குடும்பங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக புதிய அறிக்கை தெரிவிக்கிறது. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம். #sbsaudiopodcast

இன்றைய செய்திகள்: 27 அக்டோபர் 2026 - செவ்வாய்க்கிழமை 27.10.2026

SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (செவ்வாய்க்கிழமை 27/10/2026) செய்திகள். வாசித்தவர் றேனுகா துரைசிங்கம். #sbsaudiopodcast

How people shape change, and why your voice matters - மக்கள் எவ்வாறு மாற்றத்தை உருவாக்குகிறார்கள், உங்கள் குரல் ஏன் முக்கியமானது 26.10.2026

Can a small group change a local council decision? Through Julie’s community campaign, Padma’s reflections and practical examples including voting, petitions and contacting representatives, this episode explores how everyday actions can make people’s voices heard. - ஒரு சிறிய குழுவால் உள்ளூராட்சி மன்றத்தின் முடிவை மாற்ற முடியுமா? ஜூலியின் சமூகப் பிரச்சாரம்; வாக்குப்பதிவு, மனுக்கள் சமர்ப்பித்தல், ம...

Australia's changing languages shape new SBS review - ஆஸ்திரேலியாவில் பிறமொழி பேசுவோர் அதிகரிப்பு: SBS சேவை மீளாய்வு 26.10.2026

Many bilingual and migrant families have their own personal connection and memories of listening to SBS's language programs on the radio. - நவீன ஆஸ்திரேலியாவின் மாறிவரும் சமூகங்களையும் அவற்றின் தேவைகளையும் பிரதிபலிக்கும் வகையில், SBS தனது மொழிச் சேவைகள் மீளாய்வை மேற்கொண்டுவருகிறது. இதற்கான பொதுமக்கள் கருத்துக் கேட்புக் காலம் அக்டோபர் 5ஆம் திகதி முதல் நவம்பர் 13ஆம் திகதி வரை நடைபெறுகிறது. இதுகுறித்...

போலியோ இல்லா உலகை நோக்கி… சிட்னியில் ஒரு விழிப்புணர்வுப் பயணம்! 26.10.2026

போலியோ ஒழிப்பு தினத்தை முன்னிட்டு, Rotary Club-ன் அனுசரணையுடன் உலக நாடுகளில் போலியோவை ஒழிப்பதற்கான விழிப்புணர்வு ரயில் பயணம் கடந்த வெள்ளிக்கிழமை சிட்னியில் நடைபெற்றது. இந்தப் பயணத்தை முன்னெடுத்து நடத்தி வரும் மார்க் மற்றும் அவருடன் பயணித்த ரெங்கராஜன் ஆகிய இருவருடன் இந்த விழிப்புணர்வு பயணம் குறித்து உரையாடுகிறார் செல்வி இன்பசேகரன். #sbsaudiopodcast Sydney train travel challenge raises awareness to...

மறைந்தார் செஃப் தாமு : SBS தமிழுக்கு அவர் வழங்கிய நேர்முகம் 26.10.2026

தமிழகத்தின் புகழ் மிக்க சமையல்கலைஞர் செஃப் தாமு என்றழைக்கப்படும் கோதண்டராமன் தாமோதரன், 72 வயதில் உடல்நலக் குறைவு காரணமாக அக்டோபர் 25 ஆம் தேதி கடந்த ஞாயிற்றுக்கிழமை காலமானார். சமையல் துறையில் முனைவர் பட்டம் பெற்றுள்ள செஃப் தாமு அவர்கள் சமையல் துறையில் தனது பயணம் மற்றும் சவால்கள் குறித்து கடந்த 2022 ஆம் ஆண்டு அவரின் ஆஸ்திரேலிய பயணத்தின் போது எமக்கு வழங்கிய நேர்காணலின் மறு ஒலிபரப்பு. அவரோடு உரையாடியவ...

Superannuation பணத்தை முன்கூட்டியே எடுப்பது ஏன் அதிகரிக்கிறது? 26.10.2026

ஆஸ்திரேலியாவில் மருத்துவச் செலவுகளைச் சமாளிப்பதற்காக, மக்கள் தங்களது Superannuation ஓய்வூதியச் சேமிப்பு நிதியிலிருந்து முன்கூட்டியே பணத்தைப் பெறுவது அதிகரித்து வருகிறது என எச்சரிக்கப்படுகிறது. இது குறித்த செய்தியின் பின்னணியை எடுத்து வருகிறார் செல்வி இன்பசேகரன். #sbsaudiopodcast Why is the early withdrawal of superannuation increasing?

இன்றைய செய்திகள்: 26 அக்டோபர் 2026 - திங்கட்கிழமை 25.10.2026

SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (திங்கட்கிழமை 26/10/2026) செய்திகள். வாசித்தவர் குலசேகரம் சஞ்சயன்.

இந்தியா & தமிழ்நாடு: கடந்த 7 நாட்கள் செய்திகளின் தொகுப்பு 25.10.2026

தமிழக அரசியலில் களமிறங்கும் நடிகர் தனுஷ்! ; கின்னஸ் சாதனை படைத்த பிரபல சமையல் கலைஞர் செஃப் தாமு மறைவு; திருமாவளவனை முதலமைச்சராக்க முயற்சிகள் நடைபெற்றதாக டி.டி.வி. தினகரன் வெளியிட்ட பரபரப்புத் தகவல்; உள்ளிட்ட செய்திகளோடு "செய்திகளின் பின்னணி" நிகழ்ச்சிக்காக இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ். #sbsaudiopodcast

Ascultă podcastul SBS Tamil - SBS தமிழ் în Replaio

Radio și podcasturi într-o singură aplicație - gratuit și fără înregistrare. Instaleaz-o azi și nu rata lansarea

Descarcă din Google Play

Replaio nu este editorul podcasturilor; numele emisiunilor, coperțile și materialul audio aparțin autorilor lor și sunt distribuite prin fluxuri RSS publice