SBS

SBS Tamil - SBS தமிழ்

Independent news and stories from SBS Audio, connecting you to life in Australia and Tamil-speaking Australians. - தமிழ் பேசும் ஆஸ்திரேலியர்களுடனும், ஆஸ்திரேலிய வாழ்க்கையுடனும் இணைய உங்களுக்கு உதவும் பக்கசார்பற்ற செய்திகள் மற்றும் கதைகள்.

Vizitează neapărat site-ul podcastului și susține-i creatorul: www.sbs.com.au

Autor

SBS

Categorie

News

Site-ul podcastului

www.sbs.com.au

Cel mai nou episod

11 iul. 2026

Unde asculți?

Podcasturi în aplicație Replaio Radio În curând

Podcasturile ajung în curând în aplicație. Instaleaz-o acum și fii primul care descoperă o abordare complet nouă a podcasturilor

Descarcă din Google Play Instalează gratuit Android aproape 10 mil. descărcări · nota 4,8 iOS în curând

Episoade

உலகக் கோப்பை தினசரி: சொந்த இரசிகர்களின் முன்னிலையில் Round of 16 சுற்றுக்குத் தகுதி பெற்றது மெக்ஸிக்கோ அணி 01.07.2026

உலகக் கோப்பை தினசரி: சொந்த இரசிகர்களின் முன்னிலையில் Round of 16 சுற்றுக்குத் தகுதி பெற்றது மெக்ஸிக்கோ அணி கால்பந்து உலகக்கோப்பைப் போட்டிகளை நடத்தும் நாடுகளில் ஒன்றான மெக்சிகோ, Round of 16 என்ற சுற்றுக்கு முன்னேறியது, அதே நேரத்தில் சூப்பர்ஸ்டார் முன்கள வீரர்களான Erling Haaland மற்றும் Kylian Mbappé இருவரும் ஆளுக்கு இரண்டு கோல்களை அடித்து நார்வே மற்றும் பிரான்ஸை அடுத்த சுற்றுக்கு எடுத்துச் செல்கின்...

கொழும்பு – மெல்பன் விமான சேவைகளை விரிவுபடுத்தும் SriLankan Airlines 01.07.2026

ஆகஸ்ட் 2 முதல் கொழும்பு – மெல்பன் இடையிலான விமானசேவைகளை அதிகரிக்கவுள்ளதாக SriLankan Airlines அறிவித்துள்ளது. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.

உறவுகளை சீரழிக்கும் நார்சிஸ்ட் உங்களை சுற்றி இருக்கிறாரா? அவரை அடையாளம் காண்பது எப்படி? 01.07.2026

Narcissistic Personality Disorder என்பது ஒருவருக்கு தன்னை மிக உயர்வாக எண்ணுதல், பிறரின் உணர்வுகளை புரிந்துகொள்ளும் கருணை குறைவு மற்றும் எப்போதும் பாராட்டை எதிர்பார்ப்பது போன்ற தன்மைகளால் வெளிப்படும் ஒரு மனநலக் கோளாறு என கூறப்படுகிறது. Narcissistic Personality Disorder (NPD) என்றால் என்ன? NPD உள்ளவர்களின் பண்புகள் என்ன ? அவர்களை கையாளும் சில யுத்திகள் குறித்து உரையாடுகிறார் சிட்னியில் உள்ள உளவியல்...

AI - செயற்கை நுண்ணறிவை பாதுகாப்பாக பயன்படுத்த ஆளுகை ஏன் அவசியம்? 01.07.2026

AI – செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் இன்று பல நிறுவனங்களின் அன்றாடப் பணிகளில் வேகமாக நுழைந்து வருகிறது. ஆனால் செயற்கை நுண்ணறிவு ஆளுகை இல்லாமல் பல நிறுவனங்கள் இயங்கும் பின்னணியில், AI-ஐ பாதுகாப்பாகவும் பொறுப்புடனும் பயன்படுத்த என்ன மாதிரியான ஆளுகை தேவை? AI முடிவுகள் தவறாக இருந்தால் யார் பொறுப்பு? உள்ளிட்ட பல முக்கியமான கேள்விகள் குறித்து விளக்குகின்றனர் முனைவர் சந்திரிகா சுப்ரமணியன் மற்றும் முனைவர்...

இலங்கை: ஊழல் மோசடி மற்றும் போதைப் பொருளுக்கு எதிராக மிக கடுமையான நடவடிக்கை 01.07.2026

ஊழல் மோசடி மற்றும் போதைப் பொருளுக்கு எதிராக மிக கடுமையான நடவடிக்கை எடுத்துவரும் அதிபர் அனுரகுமார திசநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கம். இது தொடர்பில் “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.

இன்றைய செய்திகள்: 01 ஜூலை 2026, புதன்கிழமை 01.07.2026

SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (புதன்கிழமை 01/07/2026) செய்திகள். வாசித்தவர்: மகேஸ்வரன் பிரபாகரன்.

சிட்னி, மெல்பன் நகரங்களில் வீட்டு விலை மிக வேகமாக குறைந்துள்ள பகுதிகள் எவை? 01.07.2026

சிட்னி மற்றும் மெல்பனின் செல்வச் செழிப்பான புறநகர்ப் பகுதிகளில் வீட்டு விலைகள் மிக வேகமாக சரிந்து வருகின்றன. இதுகுறித்த செய்தியின் பின்னணியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.

இளம் வயதினரிடையே அதிகரிக்கும் புற்றுநோய்: காரணம் என்ன? 01.07.2026

இளைஞர்களில் புற்றுநோய் அபாயம் அதிகரித்துள்ளமைக்கான காரணத்தை புதிய ஆய்வு ஒன்று வெளிப்படுத்தியுள்ளது. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.

இன்றைய செய்திகள்: 30 ஜூன் 2026 - செவ்வாய்க்கிழமை 30.06.2026

SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (செவ்வாய்க்கிழமை 30/06/2026) செய்திகள். வாசித்தவர் : செல்வி இன்பசேகரன்.

Tax Return காலத்தில் ATO எந்த அம்சங்களை கடுமையாக கண்காணிக்கவுள்ளது? 30.06.2026

ஆஸ்திரேலிய வரி அலுவலகம் (ATO), இந்த ஆண்டின் வருமான வரி தாக்கல் காலத்தில் இரண்டு முக்கிய அம்சங்கள் மீது கடுமையான கண்காணிப்பை மேற்கொள்ளவுள்ளதாக அறிவித்துள்ளது. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.

மூன்று மணி நேர இலவச மின்சாரம்: யார் தகுதி பெறுவர்? எப்படி செயல்படும்? 29.06.2026

Solar Sharer Offer (SSO) என்ற புதிய திட்டம் ஜூலை 1 முதல் நியூ சவுத் வேல்ஸ் தெற்கு ஆஸ்திரேலியா மற்றும் தென்-கிழக்கு குயின்ஸ்லாந்து பகுதிகளில் அறிமுகப்படுத்தப்படுகிறது. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.

உலகக் கோப்பை தினசரி: காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறிய முதல் அணியானது கனடா ! 29.06.2026

உலகக் கோப்பை போட்டிகளில், கூடுதல் நேரம் வழங்கப்பட்டதில் வரலாறு படைக்கப்பட்டது! கடைசி நிமிடத்தில் அடித்த வெற்றி கோல் மூலம் தென்னாபிரிக்காவின் கனவுகளை நொறுக்கிய கனடா, உலகக் கோப்பை வரலாற்றில் தனது முதல் நாக்-அவுட் சுற்று வெற்றியைப் பதிவு செய்தது. உலகக் கோப்பை தினசரித் தொகுப்பின் பதினெட்டாம் நாள் நிகழ்வுகளின் தொகுப்பை முன்வைக்கிறார் குலசேகரம் சஞ்சயன்.

புதிய கருத்துக் கணிப்பில் பின்னடைவைச் சந்தித்துள்ள Pauline Hanson 29.06.2026

ஒரு புதிய தேசியக் கருத்துக் கணிப்பின்படி One Nation கட்சித் தலைவர் Pauline Hanson பின்னடைவைச் சந்தித்துள்ளார் இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.

Can nature help tackle loneliness? - தனிமையை எதிர்கொள்ள இயற்கை எவ்வாறு உதவுகிறது ? 29.06.2026

In a recent study of LGBTQIA+ asylum seekers and refugees, nature was used not just as a meeting place, but as an environment where participants felt safe without being questioned or judged. - சமீபத்தில் நடத்திய ஆய்வில் LGBTQIA+ அடைக்கலம் நாடுபவர்கள் மற்றும் அகதிகள் குறித்த ஒரு ஆய்வில், இயற்கை வெறும் சந்திப்பு இடமாக மட்டுமல்லாமல், பங்கேற்பாளர்கள் யாராலும் விமர்சிக்கப்படாமல், பாதுகாப்பான ஒரு சூழலாக...

Autism-ஐயும் தாண்டி: கோகுலின் வாழ்க்கைப் பயணம்! 29.06.2026

Autism உடன் வாழும் தனது வாழ்க்கைப் பயணத்தை கோகுல் ஷங்கர் அவர்கள் பகிர்ந்து கொள்கிறார். அவர் Logistics துறையில் Certificates III மற்றும் IV-ஐயும், Diploma-வையும் முடித்துள்ளார். அதேபோல், Business Administration துறையிலும் Certificates III மற்றும் IV-ஐயும், Diploma-வையும் முடித்துள்ளார். தான் யார் என்பதையும், வாழ்க்கையில் முன்னேற அவருக்கு உதவிய ஆதரவு குறித்தும் கோகுல் பகிர்ந்து கொள்கிறார். SBS ஒலிப்...

லேபர் அரசின் புதிய வரி சீர்திருத்த சட்டம் – முக்கிய அம்சங்கள் என்ன? 29.06.2026

லேபர் அரசின் புதிய வரி சீர்திருத்த சட்டமுன்வடிவு செனட்சபையில் கிரீன்ஸ் கட்சியின் ஆதரவுடன் கடந்த வாரம் வியாழக்கிழமை நிறைவேறியது. இது குறித்த செய்தியின் பின்னணியை எடுத்து வருகிறார் செல்வி இன்பசேகரன்.

இன்றைய செய்திகள்: 29 ஜூன் 2026 -திங்கட்கிழமை 29.06.2026

SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (திங்கட்கிழமை 29/06/2026) செய்திகள். வாசித்தவர் : சரண்யா பாலகிருஷ்ணன்

MiniPod: Hammered | Words we use - சிறு வலையொலி: Hammered | நாம் பயன்படுத்தும் சொற்கள் 29.06.2026

Learn a new phrase and make your English sound more natural and interesting. Words We Use is a bilingual series that helps you understand idioms like ‘hammered’. - ஒரு புதிய சொற் தொடரைக் கற்றுக்கொண்டு, உங்கள் ஆங்கில மொழித்திறனை மேலும் அதிகரித்து, இயல்பாகவும் சுவாரஸ்யமாகவும் பேச கற்றுக் கொள்ளுங்கள். ‘உங்கள் கவனம் பந்தின் மீது இருக்கட்டும்’ – hammered போன்ற மரபுத்தொடர்களைப் புரிந்துகொள்ள உங்களுக்கு...

உலகம்: கடந்த வார செய்திகளின் தொகுப்பு 28.06.2026

மீண்டும் அமெரிக்கா- ஈரான் இடையே மோதல்; பிரான்ஸ் உடனான உறவை முறித்த புர்கினா பாசோ; ருவாண்டா எதிராக காங்கோ சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு; துருக்கி-குர்து கிளர்ச்சிக்குழுவுக்கு இடையிலான உடன்பாட்டின் நிலை; வெனிசுலாவை நிர்மூலாக்கிய நிலநடுக்கம் உள்ளிட்ட உலகச்செய்திகளின் பின்னணியை முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் தமிழ்ப் பிரபாகரன்.

மறைந்தார் K பாக்யராஜ்: SBS தமிழுக்கு அவர் வழங்கிய நேர்முகம் பாகம் 2 27.06.2026

நடிகர், இயக்குநர், வசன கர்த்தா,இசையமைப்பாளர் எனப் பல பரிமாணங்களைக் கொண்ட பாக்யராஜ் அவர்கள் தனது 73வது வயதில் காலமானார். உடல் நலக் குறைவு காரணமாக சென்னையில் தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் காலமானதாக தெரிவிக்கப்படுகிறது. சமீபத்தில் மறைந்த முதுபெரும் இயக்குநர் பாரதிராஜாவின் சீடராக இருந்த பாக்யராஜ், பாரதி ராஜாவின் இயக்கத்தில் 16 வயதினிலே படத்தில் உதவி இயக்...

மறைந்தார் K பாக்யராஜ்: SBS தமிழுக்கு அவர் வழங்கிய நேர்முகம் பாகம் 1 27.06.2026

நடிகர், இயக்குநர், வசன கர்த்தா,இசையமைப்பாளர் எனப் பல பரிமாணங்களைக் கொண்ட பாக்யராஜ் அவர்கள் தனது 73வது வயதில் காலமானார். உடல் நலக் குறைவு காரணமாக சென்னையில் தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் காலமானதாக தெரிவிக்கப்படுகிறது. சமீபத்தில் மறைந்த முதுபெரும் இயக்குநர் பாரதிராஜாவின் சீடராக இருந்த பாக்யராஜ், பாரதி ராஜாவின் இயக்கத்தில் 16 வயதினிலே படத்தில் உதவி இயக்...

இந்த வார ஆஸ்திரேலிய செய்திகள் (21 – 27 ஜூன் 2026) 27.06.2026

ஆஸ்திரேலியாவின் இந்த வார (21 - 27 ஜூன் 2026) முக்கிய செய்திகளின் தொகுப்பு. வாசித்தவர்: றைசெல்.

உலகக் கோப்பை தினசரி: ஆஸ்திரேலிய அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது 26.06.2026

2026 ஃபிஃபா உலகக் கோப்பையின் 15-வது நாளில், கட்டுக்கோப்பாக விளையாடிய பராகுவே அணிக்கு எதிராக ஆஸ்திரேலியா ஒரு முக்கியப் புள்ளியைப் பெற்றது. முதலிடத்தில் இருந்த ஜெர்மனியை அதிர்ச்சிக்குள்ளாக்கிய Ecuador, மூன்றாவது இடத்திலிருந்து நாக்-அவுட் சுற்றுக்குத் தகுதி பெற்றது. அதே நேரத்தில், Ivory Coast, நெதர்லாந்து, ஜப்பான் மற்றும் ஸ்வீடன் ஆகிய அணிகளும் 32 பேர் கொண்ட சுற்றுக்கு முன்னேறின. உலகக் கோப்பை தினசரித்...

செய்தியின் பின்னணி: பறவைக் காய்ச்சல் தடுப்பூசிகள் எவ்வளவு பயனுள்ளவை? 26.06.2026

பறவைக் காய்ச்சல் உலகளவில் வேகமாகப் பரவி வரும் நிலையில், H5N1 வைரஸ் மீண்டும் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த ஆபத்தான நோயை கட்டுப்படுத்த தடுப்பூசிகள் பயனுள்ளதாக இருக்குமா? இது பற்றிய செய்தியின் பின்னணியினை முன்வைக்கிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.

இன்றைய செய்திகள்: 26 ஜூன் 2026 - வெள்ளிக்கிழமை 26.06.2026

SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வெள்ளிக்கிழமை (26/06/2026) செய்திகள். வாசித்தவர் : செல்வி இன்பசேகரன்.

Ascultă podcastul SBS Tamil - SBS தமிழ் în Replaio

Radio și podcasturi într-o singură aplicație - gratuit și fără înregistrare. Instaleaz-o azi și nu rata lansarea

Descarcă din Google Play

Replaio nu este editorul podcasturilor; numele emisiunilor, coperțile și materialul audio aparțin autorilor lor și sunt distribuite prin fluxuri RSS publice