SBS

SBS Tamil - SBS தமிழ்

Independent news and stories from SBS Audio, connecting you to life in Australia and Tamil-speaking Australians. - தமிழ் பேசும் ஆஸ்திரேலியர்களுடனும், ஆஸ்திரேலிய வாழ்க்கையுடனும் இணைய உங்களுக்கு உதவும் பக்கசார்பற்ற செய்திகள் மற்றும் கதைகள்.

Vizitează neapărat site-ul podcastului și susține-i creatorul: www.sbs.com.au

Autor

SBS

Categorie

News

Site-ul podcastului

www.sbs.com.au

Cel mai nou episod

20 nov. 2026

Unde asculți?

Podcasturi în aplicație Replaio Radio În curând

Podcasturile ajung în curând în aplicație. Instaleaz-o acum și fii primul care descoperă o abordare complet nouă a podcasturilor

Descarcă din Google Play Instalează gratuit Android 10 mil.+ descărcări · nota 4,7+ iOS în curând

Episoade

சிட்னியில் உருவாகும் புதிய மிக உயரமான குடியிருப்பு கோபுரங்கள்! 16.07.2026

சிட்னி நகரின் வானளாவிய தோற்றத்தை மாற்றவுள்ள புதிய ஆடம்பர குடியிருப்பு திட்டத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இது குறித்த செய்தியை எடுத்து வருகிறார் செல்வி இன்பசேகரன்.

இன்றைய செய்திகள்: 16 ஜூலை 2026 - வியாழக்கிழமை 16.07.2026

SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வியாழக்கிழமை 16/07/2026) செய்திகள். வாசித்தவர் குலசேகரம் சஞ்சயன்.

கரிசல் மண்ணின் கதைசொல்லி பூமணி: ஓர் நினைவு நேர்காணல் 15.07.2026

தமிழ் இலக்கிய உலகின் முக்கியமான படைப்பாளிகளில் ஒருவரான எழுத்தாளர் பூமணி மறைந்தார். கரிசல் மண்ணின் மக்களையும், அவர்களின் வாழ்க்கையையும், சமூக உறவுகளையும் மிகுந்த யதார்த்தத்துடன் தனது படைப்புகளில் பதிவு செய்தவர் பூமணி. அவரது அஞ்ஞாடி நாவலுக்காக இந்தியாவின் உயரிய இலக்கிய விருதுகளில் ஒன்றான சாகித்ய அகாதமி விருது வழங்கப்பட்டது. அந்த விருது வழங்கப்பட்ட காலப்பகுதியில், 2014ஆம் ஆண்டு, எழுத்தாளர் பூமணியை நா...

குழந்தைகளின் மனநலம், பதட்டத்தின் காரணங்கள், அறிகுறிகள் மற்றும் தீர்வுகள். 15.07.2026

குழந்தைகளில் அதிகரித்து வரும் பதட்டம் (Anxiety) – குழந்தைகளின் மனநலம் குறித்து அதிக கவனம் செலுத்தப்பட்டு வரும் இந்த காலகட்டத்தில், குழந்தைகளில் பதட்டம் ஏன் அதிகரிக்கிறது, அதன் அறிகுறிகள் என்ன, பெற்றோர் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து, பன்முகக் கலாச்சாரப் பின்னணி மற்றும் மனஉளைச்சல் தொடர்பான ஆலோசனைகளை வழங்கும் குழந்தை உளவியலாளர் , தற்போது ஆஸ்திரேலியாவில் குடும்ப வன்முறைத் துறையில் பணியாற்றி வரும...

உலகக் கோப்பை தினசரி: ஃபிரான்ஸை 2-0 என்ற கணக்கில் வீழ்த்திய ஸ்பெயின் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது 15.07.2026

அரை இறுதிப் போட்டியில் ஃபிரான்ஸை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி, ஸ்பெயின் FIFA உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் தனது இடத்தை உறுதி செய்துள்ளது. இந்தத் தோல்வி, ஃபிரான்ஸின் Les Bleus அணி மூன்றாவது முறையாக உலகக் கோப்பையை வெல்லும் நம்பிக்கையை முடிவுக்குக் கொண்டுவந்துள்ளது. தற்போது அவர்களின் கவனம் சனிக்கிழமை நடைபெறும் மூன்றாவது இடத்திற்கான போட்டி மீது திரும்பியுள்ளது. உலகக் கோப்பை தினசரித் தொகுப்பின் மு...

இளம் தாய், 'ஜானா' கொலை! இந்தியர் கைது!! 15.07.2026

குயின்ஸ்லாந்து மாநிலத்தில் ஒரு சமூகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கும் ஒரு சோகச் செய்தி நான்கு மாதக் குழந்தையின் தாயான, முப்பது வயதுடைய ஜானா ஆம்ஸ்ட்ராங் (Jana Armstrong), டூவூம்பா (Toowoomba) நகரில் காணாமல் போய், நாட்களாகத் தேடப்பட்ட நிலையில், அவரது உடல் காட்டுப் பகுதியில் கண்டெடுக்கப்பட்டிருக்கிறது. இந்த வழக்கில், அவரது முன்னாள் வாழ்க்கைத் துணையும், அக்குழந்தையின் தந்தையுமான, இந்தியர் ஒருவர் க...

சிட்னி முருகன் கோவில் கலாச்சார மண்டபம்: கருத்து வேறுபாடுகளைக் கடந்து அடுத்த கட்டம் என்ன? 15.07.2026

சிட்னி முருகன் கோவில் வளாகத்தில் Sydney Cultural Community Centre ஒன்றை உருவாக்கும் திட்டம் தொடர்பாக சைவ மன்றத்துக்குள் சில கருத்து வேறுபாடுகள் இருந்தன. அண்மையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உறுப்பினர்களின் ஒப்புதலுடன் இந்த திட்டத்தை முன்னெடுத்துச் செல்ல முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த பின்னணியில் இந்தத் திட்டம் தொடர்பாக நம்முடன் பேசுகிறார் சிட்னி முருகன் கோவிலை நிர்வகிக்கும் சைவ மன்றத்தின் தலைவர் அ...

இந்நாட்டில் மூன்றில் இரண்டு ஊழியர்கள் பணியிடத்தில் இனப்பாகுபாட்டை அனுபவிக்கிறார்கள் 15.07.2026

AIHS, The Australian Institute of Health and Safety என்ற ஆஸ்திரேலிய சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு நிறுவனம் நடத்திய புதிய ஆய்வின்படி, இந்நாட்டில் மூன்றில் இரண்டு பங்கு ஊழியர்கள், பணியிடத்தில் இனப்பாகுபாட்டை நேரடியாக அனுபவித்திருக்கிறார்கள், அல்லது அது நடப்பதைக் கண்ணால் கண்டிருக்கிறார்கள். இது குறித்த செய்தியின் பின்னணியை எடுத்து வருகிறார் குலசேகரம் சஞ்சயன்.

இன்றைய செய்திகள்: 15 ஜூலை 2026, புதன்கிழமை 15.07.2026

SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (புதன்கிழமை 15/07/2026) செய்திகள். வாசித்தவர்: மகேஸ்வரன் பிரபாகரன்.

இலங்கையின் தமிழ், முஸ்லீம் கட்சிகள் ஒன்றிணைந்து செயற்படத் தீர்மானம் 14.07.2026

வரலாற்றில் முதற்தடவையாக வடக்கு, கிழக்கு மற்றும் மலையக தமிழ், முஸ்லிம் கட்சிகள் தாம் சார்ந்த மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு ஒன்றிணைந்து செயற்படுவதற்கு தீர்மானித்துள்ளனர். இது தொடர்பில் “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.

ஆஸ்திரேலிய சர்வதேச விமான நிலையங்களில் டிஜிட்டல் பயணிகள் அட்டை அறிமுகம்! 14.07.2026

ஆஸ்திரேலிய சர்வதேச விமான நிலையங்களில் Passenger Arrival Card காகித வருகைப் படிவங்களுக்கு பதிலாக டிஜிட்டல் பயணிகள் அட்டைகள் அறிமுகமாகிறது. இது குறித்த செய்தியை எடுத்து வருகிறார் செல்வி இன்பசேகரன்.

Centrelink பயனாளர்களே உஷார்! புதிய மின்னஞ்சல் மோசடி! 14.07.2026

Centrelink வாடிக்கையாளர்களை ஏமாற்றும் நோக்கில் புதிய வகை மோசடி மின்னஞ்சல்கள் அனுப்பப்பட்டு வருவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்த செய்தியை எடுத்து வருகிறார் செல்வி இன்பசேகரன்.

இன்றைய செய்திகள்: 14 ஜூலை 2026 - செவ்வாய்க்கிழமை 14.07.2026

SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (செவ்வாய்க்கிழமை 14/07/2026) செய்திகள். வாசித்தவர் : செல்வி இன்பசேகரன்.

சொந்த மொபைல் போனை வேலைக்குப் பயன்படுத்தினால் வரிச்சலுகை கோர முடியுமா? 13.07.2026

உங்கள் மொபைலை நீங்கள் வேலைக்கு அதிகம் பயன்படுத்தினால் அதற்கு ஆகும் செலவின் ஒரு பகுதியை வருமான வரி அறிக்கை தாக்கல் செய்யும் போது வரிச்சலுகையாக கோரலாம். இது குறித்த செய்தியை எடுத்து வருகிறார் செல்வி இன்பசேகரன்.

உலகக் கோப்பை தினசரி: ஃபிரான்ஸ், ஸ்பெயின், ஆர்ஜென்டீனா, இங்கிலாந்து அணிகள் அரையிறுதியை எப்படி எட்டின? 13.07.2026

தொடக்கத்தில் போட்டியிட்ட சாதனை அளவிலான 48 அணிகளில், தற்போது நான்கு அணிகள் மட்டுமே எஞ்சியுள்ளன. ஃபிரான்ஸ், ஸ்பெயின், ஆர்ஜென்டீனா மற்றும் இங்கிலாந்து ஆகிய நான்கு அணிகளும் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் ஒரு இடத்தைப் பிடிக்கக் காத்திருக்கின்றன. உலகக் கோப்பை தினசரித் தொகுப்பின் முப்பத்திரண்டாம் நாள் நிகழ்வுகளின் தொகுப்பை முன்வைக்கிறார் குலசேகரம் சஞ்சயன்.

E-OCI அட்டை அறிமுகம்: வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு மேலும் எளிய நடைமுறை! 13.07.2026

வெளிநாடுகளில் வசிக்கும் இந்திய வம்சாவளியினருக்காக இந்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ள E-OCI (Electronic Overseas Citizen of India) கார்டு, OCI விண்ணப்ப செயல்முறையை முழுமையாக டிஜிட்டல் வடிவில் எளிதாக்கியுள்ளது. இது குறித்த செய்தியை எடுத்து வருகிறார் செல்வி இன்பசேகரன்.

இசைக்குயில் ஓய்ந்தது - எஸ். ஜானகிக்கு ஓர் இசை அஞ்சலி 13.07.2026

இரசிகர்கள் மனதில் நிரந்தர இடம் பிடித்திருக்கும் பாடகி, S. ஜானகி அவர்கள் நேற்று முந்தினம், ஜூலை பதினோராம் தேதி, மைசூரில், தனது எண்பத்தெட்டாவது வயதில் இயற்கை எய்தினார். அவர் குறித்த ஒரு நினைவுப்பகிர்வை முன்வைக்கிறார் குலசேகரம் சஞ்சயன்.

குழந்தைகளின் online உலகம்: பெற்றோரின் கவலைக்கு அரசின் பதில் 13.07.2026

ஆஸ்திரேலியாவில் 16 வயதுக்கு குறைவான குழந்தைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவது குறித்து அரசு ஏற்கனவே அறிவித்திருக்கும் கடுமையான நடவடிக்கைகளோடு மேலும் பல மாற்றங்களையும் தற்போது அறிவித்துள்ளது. இந்த மாற்றங்கள் குறித்தும், அவை ஏற்படுத்தும் புதிய சவால்கள் குறித்தும் எளிதாக விளக்குகிறார் பிரிஸ்பேன் 4EB தமிழ் ஒலி வானொலியின் நிகழ்ச்சி தயாரிப்பாளர் சுகன்யா அவர்கள். அவரோடு உரையாடுகிறார் றைசெல்.

இன்றைய செய்திகள்: 13 ஜூலை 2026 - திங்கட்கிழமை 13.07.2026

SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (திங்கட்கிழமை 13/07/2026) செய்திகள். வாசித்தவர் குலசேகரம் சஞ்சயன்.

இந்தியா & தமிழ்நாடு: கடந்த 7 நாட்கள் செய்திகளின் தொகுப்பு 12.07.2026

வியட்நாம் சுற்றுலா படகு கவிழ்ந்த விபத்தில் 10 தமிழர்கள் பலி; பழம்பெரும் பின்னணி பாடகி எஸ். ஜானகி மறைவு; தமிழகத்தில் நடைபெற இருந்த ஐந்து தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அறிவிக்க உயர்நீதிமன்றத்தின் தடை உத்தரவு உள்ளிட்ட செய்திகளோடு "செய்திகளின் பின்னணி" நிகழ்ச்சிக்காக இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.

இந்த வார ஆஸ்திரேலிய செய்திகள் (5 – 11 ஜூலை 2026) 11.07.2026

ஆஸ்திரேலியாவின் இந்த வார (5 – 11 ஜூலை 2026) முக்கிய செய்திகளின் தொகுப்பு. வாசித்தவர்: றைசெல்.

இந்தியப் பிரதமரின் ஆஸ்திரேலியப் பயணம்: இருதரப்பு உறவை புதிய கட்டத்திற்கு கொண்டு செல்லுமா? 10.07.2026

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் மூன்று நாள் ஆஸ்திரேலியா பயணம் ஆஸ்திரேலியா இந்திய உறவு எந்த திசையில் நகர்கிறது என்பதை அளவிடும் முக்கிய தருணமாக பார்க்கப்படுகிறது. யுரேனியம் ஏற்றுமதி உட்பட பல அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. இந்திய பிரதமர் மோடியின் ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் குறித்த செய்தியின் பின்னணியை எடுத்து வருகிறார் செல்வி இன்பசேகரன்.

உலகக் கோப்பை தினசரி: அரையிறுதிக்கு சுற்றுக்கு பிரான்ஸ் முன்னேறியது 10.07.2026

ஃபிஃபா உலகக் கோப்பையின் 29-வது நாளில், மொராக்கோவை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியதன் மூலம் பிரான்ஸ் உலகக் கோப்பை அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. Kylian Mbappé எட்டு கோல்களுடன் Lionel Messi [[lee-oh-NEL MESS-ee]] அடித்த கோல்களுடன் சமநிலையை எட்டிய அதே வேளை, Ousmane Dembélé பிரான்ஸின் வெற்றியை உறுதி செய்தார். உலகக் கோப்பை தினசரித் தொகுப்பின் இருபத்தொன்பதாம் நாள் நிகழ்வுகளின் தொகுப்பை முன்வைக்கிறார் க...

Qantas இழப்பீடு தொடர்பான SMS: மோசடி என்று நினைத்து தவறவிடாதீர்கள்! 10.07.2026

Qantas கோவிட் Flight Credit வழக்கில் இழப்பீடு பெறத் தகுதியுள்ள வாடிக்கையாளர்களுக்கு Qantas நிறுவனம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இது குறித்த செய்தியை எடுத்து வருகிறார் செல்வி இன்பசேகரன்.

தமிழுக்கு தனி அடையாளம் தந்த தனித்தமிழின் தந்தை 10.07.2026

தமிழ்மொழி அதன் சொந்தச் செழுமையோடும் தனித்தன்மையோடும் வளர வேண்டும் என்று வலியுறுத்திய முக்கிய அறிஞர்களில் ஒருவர் மறைமலை அடிகள். எழுத்தாளர், சைவ சிந்தனையாளர், சமூக சீர்திருத்தவாதி, தனித்தமிழ் இயக்கத்தின் முன்னோடி என பல தளங்களில் அவர் நினைவுகூரப்படுகிறார். மறைமலை அடிகள் குறித்த காலத்துளி நிகழ்ச்சியை முன்வைக்கிறார் றைசெல்.

Ascultă podcastul SBS Tamil - SBS தமிழ் în Replaio

Radio și podcasturi într-o singură aplicație - gratuit și fără înregistrare. Instaleaz-o azi și nu rata lansarea

Descarcă din Google Play

Replaio nu este editorul podcasturilor; numele emisiunilor, coperțile și materialul audio aparțin autorilor lor și sunt distribuite prin fluxuri RSS publice