SBS
SBS Tamil - SBS தமிழ்
Independent news and stories from SBS Audio, connecting you to life in Australia and Tamil-speaking Australians. - தமிழ் பேசும் ஆஸ்திரேலியர்களுடனும், ஆஸ்திரேலிய வாழ்க்கையுடனும் இணைய உங்களுக்கு உதவும் பக்கசார்பற்ற செய்திகள் மற்றும் கதைகள்.
Não deixe de visitar o site do podcast e apoiar quem o produz: www.sbs.com.au
Onde ouvir?
Podcasts no app Replaio Radio Em breveOs podcasts estão chegando ao app. Instale agora e seja o primeiro a descobrir um jeito totalmente novo de curtir podcasts
Episódios
இந்த வார தமிழகம்/இந்தியா: செய்திகளின் பின்னணி 03.04.2025 9:32
இந்திய நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வக்ஃப் சட்டத்திருத்த மசோதா, திருப்பூரில் கல்லூரி மாணவி ஆணவப்படுகொலை, கச்சத்தீவை மீட்க கோரி தமிழக சட்டசபையில் தனித்தீர்மானம், மதுரையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய மாநாடு உள்ளிட்ட உள்ளிட்ட பல செய்திகளின் பின்னணியை முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் தமிழ்ப் பிரபாகரன்.
புகலிடக் கோரிக்கையாளர் இருவரின் முறையீடு தொடர்பாக உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது! 03.04.2025 7:50
இரு புகலிடக் கோரிக்கையாளர்கள் தங்களை அகதி என்று Adminstrative Appeal Tribunal (AAT ) ஏற்றுக்கொண்ட பிறகும் தாங்கள் குடிவரவு தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்தது சட்டவிரோதமானது என்று உயர் நீதிமன்றத்தில் அவர்கள் தொடுத்த வழக்குகள் நிராகரிக்கப்படுவதாக உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இது குறித்த செய்தியின் பின்னணியை தருகிறார் செல்வி.
ஆஸ்திரேலிய பொருட்களுக்கும் புதிய வரியை அமெரிக்க அதிபர் Donald Trump அறிவித்தார்! 03.04.2025 4:30
SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வியாழக்கிழமை 03/04/2025) செய்திகள். வாசித்தவர் : செல்வி.
மியான்மார் நிலநடுக்கம்: நடந்ததையும், நடக்கவேண்டியதையும் விவரிக்கிறார் பர்மிய தமிழர்! 02.04.2025 8:46
மியான்மார் (பர்மா) நாட்டில் கடந்த வாரம் நடந்த நிலநடுக்கத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் உயிர் இழந்தனர். மண்டலே பகுதியில் நடந்த இந்த நிலநடுக்கத்தையும், பாதிக்கப்பட்ட மக்களின் இன்றைய எதிர்பார்ப்பையும் விவரிக்கிறார் 74 வயது அப்பாவு அவர்கள். அவரோடு உரையாடுகிறார் றைசெல்.
அதீத இரத்தப்போக்கு: ஏன் ஏற்படுகிறது? எப்படித் தடுப்பது? 02.04.2025 16:52
Heavy menstrual bleeding எனப்படும் அதீத இரத்தப்போக்கு காரணமாக அவதிப்படும் பெண்கள் பலர் உள்ளனர். கர்ப்பம் தரிக்கக்கூடிய வயதிலுள்ள பெண்களில் நான்கில் ஒருவர் இத்தகைய நிலைமையினால் பாதிக்கப்படுவதாக புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. இது தொடர்பில் பெண்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் Women’s Health Road Australia Incorporated (WHRAI)இன் ஏற்பாட்டில் மே 11ஆம் திகதி International Heavy Menstrual...
Australian makes history by living with a Titanium heart - உலோக இதயத்துடன் வாழ வைத்து உலக வரலாறு படைத்தது ஆஸ்திரேலியா! 02.04.2025 16:38
Total artificial heart was implanted by an Australian doctor on a patient who made history to be the first person in the world to leave hospital with a titanium heart. The patient lived with the device for more than 100 days before receiving a donor heart transplant. - உலகிலேயே முதல் தடவையாக, ஆஸ்திரேலிய மருத்துவர் ஒருவரால் முழு செயற்கை இதயம் பொருத்தப்பட்டு, டைட்டேனிய உலோகத்தாலான இதயத்துடன் ஒருவர்...
ஆஸ்திரேலியாவில் தொங்கு நாடாளுமன்றம் அமையுமா? 02.04.2025 6:55
நாடாளுமன்ற தேர்தலுக்கான நாள் நெருங்கிவரும் நிலையில் இதையொட்டி பல கருத்துக்கணிப்புகள் வெளிவந்தவண்ணம் உள்ளன. இவற்றில் முக்கியமான ஒரு கருத்துக்கணிப்பின்படி நாட்டில் தொங்கு நாடாளுமன்றம் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த செய்தியின் பின்னணியை முன்வைக்கிறார் றேனுகா துரைசிங்கம்.
அமெரிக்க அதிபர் Donald Trump கூடுதல் வர்த்தக வரிகளை அறிவிக்கவுள்ளார்! 02.04.2025 4:30
SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (புதன்கிழமை 02/04/2025) செய்திகள். வாசித்தவர் : செல்வி.
நாட்டின் வட்டி வீதம் குறித்த அறிவிப்பை வெளியிட்டது ரிசர்வ் வங்கி! 01.04.2025 2:05
ஆஸ்திரேலியாவின் அதிகாரபூர்வ வட்டி வீதம் குறித்த தனது முடிவினை ரிசர்வ் வங்கி இன்று அறிவித்தது. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் நான் றேனுகா துரைசிங்கம்.
குயின்ஸ்லாந்தில் சாலை விதிமீறல்களுக்கான அபராதம் அதிகரிப்பு! 01.04.2025 2:18
குயின்ஸ்லாந்து மாநிலத்தில் சாலை விதிமீறல்களில் ஈடுபடுபவர்களுக்கான அபராதங்கள் விரைவில் அதிகரிக்கப்படவுள்ளது. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.
நாட்டில் மீண்டும் வீடுகளின் விலை அதிகரிப்பு! 31.03.2025 4:51
SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (செவ்வாய்க்கிழமை 01/04/2025) செய்திகள். வாசித்தவர் : செல்வி.
Why are we debating Welcome to Country? - SBS Examines : 'Welcome to Country' குறித்து நாம் இப்போது விவாதிப்பது ஏன்? 31.03.2025 7:16
The government's Welcome to Country spending has been heavily criticised but some believe the cultural protocol is being used as a "political football". - Welcome to Country பூர்வீகக்குடியின சடங்கு விழாவிற்கு அரசு செலவளித்துள்ள பணத்தொகை தற்போது பொதுவெளியில் பகிரங்கப்படுத்தப்பட்ட பிறகு Welcome to Country விழா சமீபத்தில் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.
தேர்தல் பிரச்சாரங்கள் தொடங்கின ! 31.03.2025 9:34
நாடாளுமன்றத் தேர்தல் மே 3ஆம் தேதி நடக்க இருக்கும் பின்னணியில், அரசியல் கட்சிகள் தேர்தல் பிரச்சாரங்களில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. தேர்தல் பிரச்சாரங்கள் குறித்த செய்திகளின் பின்னணியைத் தொகுத்து வழங்குகிறார் குலசேகரம் சஞ்சயன்.
நாட்டில் லேபர்கட்சியின் செல்வாக்கு சற்று அதிகரிப்பு: கருத்துக்கணிப்பு முடிவு 31.03.2025 3:46
ஆஸ்திரேலியா மற்றும் உலகின் இன்றைய முக்கிய நிகழ்வுகள்: 31 மார்ச் 2025 திங்கட்கிழமை. வாசித்தவர். றேனுகா துரைசிங்கம்.
செக்ஸ்: கொஞ்சம் அறிதல், நிறைய புரிதல் – சுய இன்பம் 30.03.2025 13:17
டாக்டர் நிவேதிதா மனோகரன் அவர்கள் பாலியல் நலம் மற்றும் எச்.ஐ.வி பராமரிப்பில் 15 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவமுள்ள மருத்துவர். அவர் ஒரு TEDx பேச்சாளர், பாலியல் கல்வியாளர் மற்றும் குடும்ப வன்முறைக்கு எதிராக இயங்கும் சமூக ஆர்வலர். Untaboos எனும் அமைப்பின் நிறுவனராக இயங்கி, சமூகத்திற்கான கல்வி, ஆலோசனை மற்றும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் பணியில் ஈடுபட்டிருப்பவர். பாலியல் நலம் குறித்து அவர் வழங்கும் “செக்ஸ்...
ரமலான் தரும் செய்தியும், இஸ்லாமியர்களின் தற்போதைய சவால்களும்! 30.03.2025 18:48
ரமலான் குறித்த சிறப்பு கலந்துரையாடல். ரமலான் உலகுக்கு தரும் செய்தி, ரமலான் வாழ்க்கை முறையில் ஏற்படுத்திய மாற்றங்கள், தமிழ்-முஸ்லீம் அடையாளம், நோன்பு நாட்களில் முஸ்லீம்கள் வேலைத் தளங்களில் எதிர்கொள்ளும் சவால், Islamophobia எனப்படும் இஸ்லாமிய சமயத்தைச் சார்ந்தவர்களுக்கு எதிராக நாட்டில் அதிகரிக்கும் போக்கு என்று பல அம்சங்கள் குறித்த கலந்துரையாடல். இதில் கலந்துகொள்கின்றவர்கள்: ஹாலித் முஹம்மது, ஷாபாத்...
How far can you legally go to protect yourself from robbery in Australia? - கொள்ளை மற்றும் திருட்டிலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்வது எப்படி? 30.03.2025 10:41
In Australia, robbery isn't just theft; it has specific legal definitions and consequences. This episode of Australia Explained podcast explores the types of crimes, including stealing. What does it mean legally? How can you protect yourself? And what support is available if it happens to you? - கொள்ளை மற்றும் திருட்டிலிருந்து நம்மை எப்படி பாதுகாத்துக் கொள்ளலாம் என்பது தொடர்பிலும், இதனால் பாதிக்கப...
ஆஸ்திரேலிய, உலக செய்திகளின் இந்த வார தொகுப்பு 28.03.2025 6:35
ஆஸ்திரேலியாவிலும், உலகிலும் இந்த வாரம் (23 – 29 மார்ச் 2025) நடந்த முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு. பதிவு செய்யப்படும் நாள்: 29 மார்ச் 2025 சனிக்கிழமை. வாசித்தவர்: றைசெல்.
அகதி தஞ்ச கோரிக்கை நிராகரிப்பு:ART முடிவுக்காக காத்திருப்போர் எண்ணிக்கை 43 ஆயிரத்தை தாண்டியது 28.03.2025 2:12
ஆஸ்திரேலியாவில் அகதி தஞ்ச விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து மேன்முறையீடு செய்யும் புகலிடக் கோரிக்கையாளர்களின் எண்ணிக்கை தொடர்பிலான புள்ளிவிவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இதுகுறித்த செய்தியை முன்வைக்கிறார் றேனுகா துரைசிங்கம்.
Stem cell (குருத்தணு) பெறுவதில் ஆஸ்திரேலிய தமிழர் எதிர்கொள்ளும் சிரமங்கள் என்ன? 28.03.2025 12:40
கடந்த வருட இறுதியில், இலங்கைத் தமிழ் பின்னணி கொண்ட 28 வயதான நிமலன் சுந்தரம் என்பவருக்கு T-cell Acute Lymphoblastic Leukemia எனும் அரிய வகை இரத்தப் புற்றுநோய் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. திடகாத்திரத்துடன் வாழ்ந்து வந்த அவருக்கு இந்தப் புற்று நோய் வந்திருந்தது கண்டு பிடிக்கப்பட்டது அவரையும் அவரது குடும்பத்தவரையும் உலுக்கியிருந்தது. இருந்தாலும், அவரது நோயைக் குணப்படுத்த குருத்தணு என்று அறியப்படும...
Stem cell (குருத்தணு) தானம் செய்ய ஏன் பலர் முன்வருவதில்லை? 28.03.2025 16:05
சிலரது நோயைக் குணப்படுத்த குருத்தணு என்று அறியப்படும் stem cell சிகிச்சை தேவைப்படலாம். அதற்கு அவருக்கு ஒத்த மரபணு உள்ள ஒருவர் அதனைத் தானம் செய்ய வேண்டும். ஆனால், இலங்கை, இந்திய பின்னணி கொண்டவர்கள், அதிலும் குறிப்பாக தமிழ் பின்னணி கொண்டவர்கள் குருத்தணு தானம் செய்யும் பதிவேட்டில் அதிகளவில் இல்லை என்று தரவுகள் சுட்டிக் காட்டுகின்றன. இது குறித்து, ஆஸ்திரேலியாவில் நாற்பது வருடங்களுக்கு மேல் ஒரு இரத்தவி...
இலங்கையின் இந்த வார முக்கிய நிகழ்வுகள் 28.03.2025 8:16
கருணா, பிள்ளையான் மற்றும் வியாழேந்திரன் இணைந்து புதிய அரசியல் கூட்டணியை அமைந்துள்ளார்கள்; வவுனியாவில் இந்தியா - இலங்கை மீனவர்கள் பேச்சுவார்த்தை இடம்பெற்றது; இலங்கையின் முன்னாள் படைத்தளபதிகளுக்கு பிரிட்டன் பயணத்தடை விதித்துள்ளது – இவை உள்ளிட்ட செய்திகளோடு “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சிக்காக விவரணமொன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.
தேர்தல் அறிவித்தலின் பின் ஆளுநர் Sam Mostyn நாடாளுமன்றத்தைக் கலைத்தார் 27.03.2025 5:01
ஆஸ்திரேலியா மற்றும் உலகின் இன்றைய முக்கிய நிகழ்வுகள்: 28 மார்ச் 2025 வெள்ளிக்கிழமை வாசித்தவர் குலசேகரம் சஞ்சயன்.
ஆஸ்திரேலிய நாடாளுமன்றத் தேர்தல் மே 3 சனிக்கிழமை! 27.03.2025 2:13
ஆஸ்திரேலிய நாடாளுமன்றத் தேர்தல் மே 3 சனிக்கிழமை நடைபெறவுள்ளது. இதுகுறித்த செய்தியைத் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.
எதிர்கட்சியின் பதில் நிதிநிலை அறிக்கையில் என்ன அம்சங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன? 27.03.2025 8:40
நேற்றிரவு பெடரல் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி தலைவர் Peter Dutton 2025-26 நிதியாண்டிற்கான பதில் நிதிநிலை அறிக்கையை சமர்ப்பித்துள்ளார். வாழ்க்கைச் செலவை சமாளிக்கும் திட்டங்கள், குடிவரவு எண்ணிக்கை குறித்த திட்டம் மற்றும் நலத்துறை மேம்பாடு என பல அம்சங்களை அறிவித்துள்ளார். இது குறித்த செய்தியின் பின்னணியை தயாரித்து வழங்குகிறார் செல்வி.
Podcasts parecidos
O Replaio não é o publicador dos podcasts; os nomes dos programas, as capas e o áudio pertencem aos seus autores e são distribuídos por feeds RSS públicos