SBS
SBS Tamil - SBS தமிழ்
Independent news and stories from SBS Audio, connecting you to life in Australia and Tamil-speaking Australians. - தமிழ் பேசும் ஆஸ்திரேலியர்களுடனும், ஆஸ்திரேலிய வாழ்க்கையுடனும் இணைய உங்களுக்கு உதவும் பக்கசார்பற்ற செய்திகள் மற்றும் கதைகள்.
Não deixe de visitar o site do podcast e apoiar quem o produz: www.sbs.com.au
Onde ouvir?
Podcasts no app Replaio Radio Em breveOs podcasts estão chegando ao app. Instale agora e seja o primeiro a descobrir um jeito totalmente novo de curtir podcasts
Episódios
ஆஸ்திரேலிய நாடாளுமன்றத் தேர்தல் மே 3 - அரசு வட்டாரம்! 27.03.2025 2:25
ஆஸ்திரேலிய நாடாளுமன்றத் தேர்தல் எப்போது நடைபெறும் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த செய்தியைத் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.
ஆஸ்திரேலியாவில் 485 TR விசாவுக்கு விண்ணப்பிப்பவர்களில் இந்தியர்கள் முதலிடம்! 27.03.2025 2:33
ஆஸ்திரேலியாவில் 485 Temporary Graduate விசாவுக்கு விண்ணப்பிப்பவர்களில் இந்தியர்கள் முதலிடத்தில் உள்ளனர். இதுகுறித்த செய்தியைத் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.
'ரயில்வே தண்டவாளங்களும் சில புறாக்களும்' - சிறுகதை 27.03.2025 16:05
தமிழக எழுத்தாளரும், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர் சங்க மாநில நிர்வாகியுமான நாறும்பூநாதன் அவர்கள் மார்ச் 16ஆம் தேதி காலமானார். அவருக்கு வயது 64. நாறும்பூநாதன் அவர்கள் 2017ஆம் ஆண்டு சிட்னி வந்திருந்த போது, அவரை குலசேகரம் சஞ்சயன் நேர்கண்டு உரையாடியிருந்தார். அந்த நேர்காணலின் போது, தனது சிறுகதை ஒன்றை அவரது குரலிலேயே அவர் வாசித்திருந்தார். அதனை ஒரு நிகழ்ச்சியாகத் தயாரித்து வழங்குகிறோம்.
2032 பிரிஸ்பன் புதிய ஒலிம்பிக் அரங்கம் - சர்ச்சையும், தீர்வும்! 27.03.2025 7:21
2032 பிரிஸ்பன் ஒலிம்பிக் போட்டிகளுக்கான மைதானங்கள், உட்கட்டமைப்பு மற்றும் போக்குவரத்து ஆகியவை குறித்த 100 நாள் சுயாதீன மதிப்பாய்வைத் தொடர்ந்து 2032 ஒலிம்பிக் விளையாட்டுகளை நடத்துவதற்கான திட்டங்களை கடந்த செவ்வாய்க்கிழமை குயின்ஸ்லாந்து மாநில பிரீமியர் David Crisafulli வெளியிட்டார். இது குறித்த செய்தியின் பின்னணியை தயாரித்து வழங்குகிறார் செல்வி.
வெற்றி பெற்றால் பெட்ரோல் விலையை குறைப்போம் - Peter Dutton 27.03.2025 4:17
SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வியாழக்கிழமை 27/03/2025) செய்திகள். வாசித்தவர் : செல்வி.
இந்த வார தமிழ்நாடு/இந்தியா: முக்கிய செய்திகளின் பின்னணி 26.03.2025 9:29
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்தார்; சென்னையில் தொடர் நகை கொள்ளை- என்கவுன்டர் பின்னணி; தமிழ்நாடு முழுவதும் சுங்கச்சாவடி கட்டணங்கள் உயர்வு; ஸ்டாண்ட் அப் காமெடியன் குணால் கம்ரா நகைச்சுவை பேச்சும் சிவசேனா, பாஜக கட்சிகளின் விமர்சனமும், ஜம்மு & காஷ்மீரில் பிரிவினைவாத செயல்பாட்டாளர்களின் வீடுகளில் சோதனை உள்ளிட்ட பல செய்திகளின் பின்னணியை முன்வைக்கிறார...
ரமலான் மாதத்தில் வேலை, வீடு மற்றும் நோன்பு எல்லாவற்றையும் இவர்கள் எவ்வாறு சமாளிக்கிறார்கள்! 26.03.2025 14:01
ரமலான் மாதத்தில் நோன்பு கடைப்பிடிப்பது இஸ்லாமியர்களின் முக்கிய கடமைகளில் ஒன்று. சூரிய உதயம் முதல் மறையும் வரை உணவு உண்ணாமல் தண்ணீர் அருந்தாமல் வேலை, வீடு, சமையல் மற்றும் வழிபாடு ஆகியவற்றை ரமலான் மாதத்தில் எவ்வாறு கையாள்கிறார்கள் என சிட்னி, பிரிஸ்பன் மற்றும் பெர்த் நகரங்களில் வசிக்கும் சிலரின் அனுபவ கருத்துகளுடன் விவரணம் ஒன்றை தயாரித்து வழங்குகிறார் செல்வி.
நிதிநிலை அறிக்கையில் ஒருவருக்கான புதிய வரிச்சலுகை அறிவிப்பு! 26.03.2025 4:38
SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (புதன்கிழமை 26/03/2025) செய்திகள். வாசித்தவர் : செல்வி.
நாட்டில் என்னென்ன விதமான மோசடிகள் நடக்கின்றன? 26.03.2025 18:28
நாட்டில் பல்வேறுவிதமான மோசடிகளில் சிக்கி ஏமாறுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்து வருகிறது. என்னென்ன விதமான மோசடிகள் நடக்கின்றன என்பது தொடர்பில் விளக்குகிறார் விக்டோரிய காவல்துறையைச் சேர்ந்த Acting Sergeant ராஜேஷ் சாம்பமூர்த்தி. அவரோடு உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.
நிதிநிலை அறிக்கை 2025: என்னென்ன சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன? 26.03.2025 9:46
2025-26 நிதியாண்டிற்கான பெடரல் அரசின் நிதிநிலை அறிக்கையை கருவூலக்காப்பாளர் Treasurer Jim Chalmers நேற்று செவ்வாய்க்கிழமை இரவு வெளியிட்டார். இது குறித்த செய்தியின் பின்னணியை முன்வைக்கிறார் றேனுகா துரைசிங்கம்.
'சட்டவிரோத குடியேறிகளை நாடு கடத்துவோம்' - One Nation கட்சி 25.03.2025 9:03
Pauline Hanson-இன் One Nation கட்சி வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் சுமார் 75,000 சட்டவிரோத குடியேற்றவாசிகள் நாடு கடத்தப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு குடியேற்றம் நாட்டில் நிலவும் வீடுகள் பற்றாக்குறைக்கு காரணம் என்றும் கூறப்பட்டுள்ளது. இது குறித்து SBS Examines -இற்காக Rachael Knowles, Jarrod Landells மற்றும் Cristina Freitas இணைந்து ஆங்கிலத்தில் எழுதிய விவரணத்தை தமிழில் தயாரித்து தர...
இன்றிரவு நிதிநிலை அறிக்கை; முன்னோட்டமாக சில தகவல்கள் வெளிவந்தன! 24.03.2025 4:33
SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (செவ்வாய்க்கிழமை 25/03/2025) செய்திகள். வாசித்தவர் : செல்வி.
பெர்த் விமான நிலைய ஊழியரைத் தாக்கிய இந்திய நபருக்கான தண்டனை அறிவிப்பு! 24.03.2025 2:22
பெர்த் விமான நிலைய ஊழியர் ஒருவரை தாக்கினார் என்ற குற்றச்சாட்டில், இந்தியர் ஒருவர் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளதுடன் பாதிக்கப்பட்ட விமானநிலைய ஊழியருக்கு 7500 டொலர்கள் இழப்பீடு வழங்க வேண்டுமெனவும் உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்த செய்தியைத் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.
எங்கும் எதிலும் செயற்கை நுண்ணறிவு: AIஐ புத்திசாலித்தனமாக பயன்படுத்துவது எப்படி? 24.03.2025 16:40
நாம் பயன்படுத்தும் பொருட்களில் நமக்கு தெரியாமலேயே ஒளிந்திருக்கிறது செயற்கை நுண்ணறிவு என்கிறார் AI நிபுணர் சுகன்யா அவர்கள். உலகில் நீக்கமற நிறைந்திருக்கும் AIஐ எப்படி புத்திசாலித்தனமாக பயன்படுத்துவது, அதில் நாம் எப்படி எச்சரிக்கையாக இருப்பது என்று விளக்குகிறார் பிரிஸ்பேன் 4EB தமிழ் ஒலி வானொலியின் நிகழ்ச்சி தயாரிப்பாளர் சுகன்யா அவர்கள். அவரோடு உரையாடுகிறார் றைசெல். இதில் தரப்படும் ஆலோசனைகள் அல்லது த...
மருந்து விலையை ஆஸ்திரேலிய அரசு குறைப்பதை அமெரிக்கா ஏன் எதிர்க்கிறது? 24.03.2025 9:03
ஆஸ்திரேலிய மருந்துகளுக்கு வரி விதிக்குமாறு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மீது அமெரிக்க மருந்து தயாரிப்பாளர்கள் குழு வலியுறுத்தியுள்ளது. Pharmaceutical Benefits Scheme (PBS) என்ற எமது நாட்டின் மருந்துகளை மலிவாக விற்க மானியங்கள் வழங்கும் திட்டம், அமெரிக்க நிறுவனங்களுக்கு நிதி இழப்புகளை ஏற்படுத்தியுள்ளன என்று அவை வாதிடுகின்றனர். ஆஸ்திரேலிய நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னதாக PBS திட்டத்தின் கீழ் மருந்...
காசாவில் இறந்தவர்களின் எண்ணிக்கை 50,000 ஐத் தாண்டியது: காசா சுகாதார அமைச்சு 24.03.2025 4:42
ஆஸ்திரேலியா மற்றும் உலகின் இன்றைய முக்கிய நிகழ்வுகள்: 24 மார்ச் 2025 திங்கட்கிழமை. வாசித்தவர். றேனுகா துரைசிங்கம்.
விண்வெளியில் ஒன்பது மாதங்களாக சிக்கியவர்கள் மீண்டு வந்தது எப்படி? 23.03.2025 9:51
விண்வெளியில் இருந்து பூமிக்குத் திரும்பமுடியாத நிலையில் கடந்த ஒன்பது மாதகாலமாக சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தில் (International Space Station) தங்கியிருந்த அமெரிக்காவின் இரு விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் கடந்த வாரம் பாதுகாப்பாக பூமிக்கு திரும்பியிருப்பது குறித்த பின்னணி நிகழ்ச்சி. விளக்குகிறார் ஊடகத்துறையில் பல ஆண்டுகளாக பணியாற்றும் இரா.சத்தியநாதன் அவர்...
ஆஸ்திரேலியாவின் மக்கள் தொகை வளர்ச்சிவீதம் வீழ்ச்சி- காரணம் என்ன? 22.03.2025 2:29
ஆஸ்திரேலியாவின் மக்கள் தொகை வளர்ச்சி இரண்டாண்டுகளில் மிகவும் குறைந்த நிலைக்கு வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதுகுறித்த செய்தியைத் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.
புகலிடக்கோரிக்கையாளர்கள் தொடர்பில் பிரதமர் மற்றும் எதிர்கட்சித் தலைவருக்கு கடிதம் 22.03.2025 2:42
ஆஸ்திரேலிய பெடரல் தேர்தல் பிரச்சாரங்களில் அகதிகள் மற்றும் புகலிடக்கோரிக்கையாளர்கள் விடயமும் பேசுபொருளாகியுள்ள பின்னணியில், இதுதொடர்பில் அகதிகள் மற்றும் மனித உரிமை அமைப்புகளின் கூட்டணி அரசியல் தலைவர்களுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது. இதுகுறித்த செய்தியைத் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.
How to choose the right tutor for your child - உங்கள் குழந்தைக்குப் பொருத்தமான தனியார் பயிற்சியாளரைத் தேர்வு செய்வது எப்படி? 22.03.2025 11:00
Tutoring is a booming industry in Australia, with over 80,000 tutors nationwide. Migrant families often spend big on tutoring, seeing education as the key to success. However, choosing the right tutor is essential to ensure a positive experience and real benefits for your child. - தனியார் பயிற்சி என்பது இந் நாட்டில் ஒரு பெரிய, மற்றும் வளர்ந்து வரும் துறையாகும், நாடு முழுவதும் 80,000ற்கும் மேற்பட்ட...
ஆஸ்திரேலிய, உலக செய்திகளின் இந்த வார தொகுப்பு 21.03.2025 5:42
ஆஸ்திரேலியாவிலும், உலகிலும் இந்த வாரம் (16 – 22 மார்ச் 2025) நடந்த முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு. பதிவு செய்யப்படும் நாள்: 22 மார்ச் 2025 சனிக்கிழமை. வாசித்தவர்: றைசெல்.
தமிழை காட்டுமிராண்டிகளின் மொழி என்று ஏன் பெரியார் கூறினார்? – கி. வீரமணி பதில் 21.03.2025 16:14
திராவிடர் கழகத் தலைவர் திரு. கி. வீரமணி அவர்கள் தற்போது ஆஸ்திரேலியா வருகை தந்துள்ளார். அவர் சிட்னியில் இருந்த போது, அவரை SBS ஒலிபரப்புக் கூடத்தில் சந்தித்து றைசலும் குலசேகரம் சஞ்சயனும் உரையாடியிருந்தார்கள். மூன்று பாகங்களாகப் பதிவேறும் அந்த உரையாடலின் நிறைவுப்பாகம் இது.
ஆஸ்திரேலியாவில் வாடகை வீட்டைப் பெறுவதற்கு $130,000 வருமானம் தேவை - ஆய்வு 21.03.2025 2:45
ஆஸ்திரேலியாவில் ஒருவர் நிதி அழுத்தத்திற்கு ஆளாகாமல் தனக்கான வாடகை வீட்டை பெற்றுக்கொள்ள வேண்டுமெனில், அவர் ஆண்டுக்கு 130,000 டொலர்கள் வருமானம் ஈட்டுபவராக இருக்க வேண்டும் என்று புதிய அறிக்கை தெரிவிக்கிறது. இதுகுறித்த செய்தியைத் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.
ஆஸ்திரேலியாவிலிருந்து பல்லிகளை கடத்த முயன்ற வெளிநாட்டு மாணவருக்கு சிறை! 21.03.2025 2:39
ஆஸ்திரேலியாவில் படிக்கும் வெளிநாட்டு மாணவர் ஒருவருக்கு பல்லிகளைக் கடத்திய குற்றச்சாட்டில் 18 மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த செய்தியைத் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.
மெல்பனில் இறந்தவரின் விரல்களை விற்க முயன்ற பெண் தொடர்பான வழக்கில் நீதிமன்றம் தீர்ப்பளித்தது! 21.03.2025 6:06
விக்டோரியா மாநிலத்தில் விலங்குகள் காப்பகம் ஒன்றில் பணிபுரியும் பெண் ஒருவர் இறந்த ஆண் ஒருவரின் கால் விரல்களை இணையத்தில் விற்க முயற்சி செய்ததை அடுத்து கைது செய்யப்பட்டு பின்னர் மயிரிழையில் சிறை தண்டனையிலிருந்து தப்பித்துள்ளார். இது குறித்த செய்தியின் பின்னணியை வழங்குகிறார் செல்வி.
Podcasts parecidos
O Replaio não é o publicador dos podcasts; os nomes dos programas, as capas e o áudio pertencem aos seus autores e são distribuídos por feeds RSS públicos