SBS
SBS Tamil - SBS தமிழ்
Independent news and stories from SBS Audio, connecting you to life in Australia and Tamil-speaking Australians. - தமிழ் பேசும் ஆஸ்திரேலியர்களுடனும், ஆஸ்திரேலிய வாழ்க்கையுடனும் இணைய உங்களுக்கு உதவும் பக்கசார்பற்ற செய்திகள் மற்றும் கதைகள்.
Não deixe de visitar o site do podcast e apoiar quem o produz: www.sbs.com.au
Onde ouvir?
Podcasts no app Replaio Radio Em breveOs podcasts estão chegando ao app. Instale agora e seja o primeiro a descobrir um jeito totalmente novo de curtir podcasts
Episódios
ஆஸ்திரேலிய தலைவர்கள் அறிவோம்: பிரதமர் Anthony Albanese 09.04.2025 5:40
'ஆஸ்திரேலிய தலைவர்கள் அறிவோம்' தொடரில் பிரதமர் Anthony Albanese பற்றி அறிந்துகொள்வோம். முன்வைப்பவர் றேனுகா துரைசிங்கம். நிகழ்ச்சித் தயாரிப்பு றைசல்.
இந்த வார தமிழகம்/இந்தியா: செய்திகளின் பின்னணி 09.04.2025 8:34
தமிழக ஆளுநர் தமிழக அரசின் சட்டங்களுக்கு ஒப்புதல் தராமல் நிறுத்தி வைத்தது சட்டவிரோதம் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது; மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு புதிய தலைமை; மத்திய பிரதேசத்தில் பாதிரியர்கள் மீது தாக்குதல்; தொடரும் வக்பு வாரிய மசோதா விவாதம், மணிப்பூர் நிலவரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் நள்ளிரவு விவாதம்; சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு உள்ளிட்ட செய்திகளின் பின்னணியை முன்வைக்கிறார் நமத...
சிட்னியில் சித்திரைத் திருவிழாவில் பாட வருகிறார் தேவக்கோட்டை அபிராமி! 09.04.2025 6:55
தமிழ்க் கலை மற்றும் பண்பாட்டுக் கழகம் எதிர்வரும் மே 4 சிட்னியில் சித்திரைத் திருவிழாவை கோலாகலமாக கொண்டாடுகிறது. இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக நாட்டுப்புற இசைக்கலைஞர் தேவக்கோட்டை அபிராமி சிட்னி வருகை தரவுள்ளார். அவருடன் தொலைபேசி வழி உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.
Coalition ஆட்சியில் சர்வதேச மாணவர் எண்ணிக்கை 80 ஆயிரத்தால் குறைக்கப்படும்- Dutton அறிவிப்பு 09.04.2025 7:31
தாம் ஆட்சிக்கு வந்தால் ஆஸ்திரேலியாவிற்கு வரும் வெளிநாட்டு மாணவர்களின் எண்ணிக்கை சுமார் 80 ஆயிரத்தால் குறைக்கப்படும் என Coalition- எதிர்க்கட்சிக் கூட்டணி அறிவித்துள்ளது. இதுகுறித்த செய்தியின் பின்னணியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.
லேபர், லிபரல் கட்சி தலைவர்கள் நாட்டின் முக்கிய பிரச்சனைகள் குறித்து விவாதித்தனர்! 09.04.2025 4:47
SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (புதன்கிழமை 09/04/2025) செய்திகள். வாசித்தவர் : செல்வி.
தாயகம் சென்றபோது கொலைசெய்யப்பட்ட குயின்ஸ்லாந்துப் பெண்- பிந்திய தகவல்கள் 08.04.2025 2:40
குயின்ஸ்லாந்து பெண் ஒருவர் பங்களாதேஷில் கொலைசெய்யப்பட்டுள்ளதாக கூறப்படும் செய்தி குறித்த பிந்திய விவரங்களைத் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.
தேர்தல் போட்டியில் லேபர் கட்சி முன்னிலை : புதிய கருத்துக்கணிப்பு முடிவு 08.04.2025 2:39
ஆஸ்திரேலிய நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பில் Roy Morgan ஆய்வு நிறுவனம் நடத்தியுள்ள சமீபத்திய கருத்துக்கணிப்பு முடிவில் ஆளும் லேபர் கட்சி முன்னிலை பெற்றுள்ளது. இதுகுறித்த செய்தியைத் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.
மனநல சேவைகளுக்கு ஒரு பில்லியன் டொலர்கள் ஒதுக்குவதாக அரசு உறுதியளித்தது 08.04.2025 5:46
ஆஸ்திரேலியா மற்றும் உலகின் இன்றைய முக்கிய நிகழ்வுகள்: 08 ஏப்ரல் 2025 செவ்வாய்க்கிழமை வாசித்தவர் குலசேகரம் சஞ்சயன்.
ஆஸ்திரேலிய நாடாளுமன்ற தேர்தல் முறை அறிவோம்: House of Representatives 07.04.2025 10:04
ஆஸ்திரேலியாவில் மே மாதம் 3 ஆம் தேதி சனிக்கிழமை நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. நாடாளுமன்றத்தின் ஒரு அங்கமான House of Representatives எனப்படும் மக்கள் பிரதிநிதிகள் சபைக்கு தேர்தல் நடைபெறும் பின்னணியில் மக்கள் பிரதிநிதிகள் சபை குறித்த விரிவான விளக்கத்தை முன்வைக்கிறார் ஊடகத்துறையில் பல ஆண்டுகளாக பணியாற்றும் இரா.சத்தியநாதன் அவர்கள். அவரோடு உரையாடுகிறார்: றைசெல்.
'என்னை நாடு கடத்த வேண்டாம்' - ஈழத்தமிழ் அகதி பாஸ்கரன் குமாரசாமி 07.04.2025 15:58
இந்தியாவிற்குப் புகலிடம் தேடி 2004 ஆம் ஆண்டு சென்ற இலங்கைத் தமிழ் அகதியான பாஸ்கரன் குமாரசாமி, கடந்த 21 ஆண்டுகள் இந்திய மண்ணில் கழித்துள்ளார். தொடர்ச்சியான முரண்பாடான நீதிமன்ற உத்தரவுகள் மற்றும் தமிழ்நாடு காவல்துறையின் குற்றப் புலனாய்வுத் துறையின் நடவடிக்கைகள் காரணமாக அவரது அகதி நிலை நிச்சயமற்றதாகவே உள்ளது. அவர் நாடு கடத்தப்படும் அச்சுறுத்தல் அதிகரித்து வருவதால், அவரது எதிர்காலம் ஊசலாட்டத்தில் உள்ள...
சிட்னியில் சித்திரைப் புத்தாண்டு விழா! 07.04.2025 13:25
சிட்னி தமிழ் அமைப்புகள் மற்றும் வர்த்தகர்கள் ஆதரவோடு தாயகம் குழுமம் வழங்கும் “சித்திரைப் புத்தாண்டு விழா” ஏப்ரல் மாதம் 20 ஆம் தேதி ஞாயிறு காலை 10 மணி முதல் மாலை 5 மணிவரை சிட்னியின் Merrylands நகரில் நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சி குறித்து கலந்துரையாடுகின்றனர்: பாலா விக்னேஸ்வரன் (தாயகம் வானொலி) & சிவா சிவராஜ் (தமிழர் ஒருங்கிணைப்புக்குழு). நிகழ்ச்சி தயாரிப்பு: றைசெல்.
தேர்தல் பிரச்சாரங்கள் சூடுபிடிக்கத் தொடங்குகின்றன ! 07.04.2025 10:48
நாடாளுமன்றத் தேர்தல் மே 3ஆம் தேதி நடக்க இருக்கும் பின்னணியில், அரசியல் கட்சிகள் தேர்தல் பிரச்சாரங்களில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. கடந்த பத்து நாட்களில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரங்கள் குறித்த செய்திகளின் பின்னணியைத் தொகுத்து வழங்குகிறார் குலசேகரம் சஞ்சயன்.
வீட்டிலிருந்து வேலை செய்வது முடிவுக்கு வரும் எனும் கொள்கையை கைவிடுகிறோம் - Peter Dutton 07.04.2025 4:28
ஆஸ்திரேலியா மற்றும் உலகின் இன்றைய முக்கிய நிகழ்வுகள்: 07 ஏப்ரல் 2025 திங்கட்கிழமை வாசித்தவர் குலசேகரம் சஞ்சயன்.
இந்திய பிரதமரின் இலங்கைப் பயணம் – விரிவான தகவல் 06.04.2025 6:35
இந்திய பிரதமர் நரேந்திர மோடி மூன்று நாட்கள் அரசுமுறைப் பயணமாக இலங்கை சென்றுள்ளார். இந்த பயணத்தில் அவர் பல்வேறு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டதுடன், வளர்ச்சி திட்டங்களை ஆரம்பித்து வைத்தார். குறிப்பாக, இந்திய உதவியில் அமைக்கப்பட்ட நலத் திட்டங்களை மக்களிடம் கையளித்தார். இது தொடர்பில் “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சிக்காக விவரணமொன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.
ஆஸ்திரேலிய, உலக செய்திகளின் இந்த வார தொகுப்பு 05.04.2025 6:17
ஆஸ்திரேலியாவிலும், உலகிலும் இந்த வாரம் (30 மார்ச் – 05 ஏப்ரல் 2025) நடந்த முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு. பதிவு செய்யப்படும் நாள்: 05 ஏப்ரல் 2025 சனிக்கிழமை. வாசித்தவர்: றைசெல்.
How to vote in the federal election - ஆஸ்திரேலிய நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களிப்பது எப்படி? 04.04.2025 9:27
On election day the Australian Electoral Commission anticipates one million voters to pass through their voting centres every hour. Voting is compulsory for everyone on the electoral roll, so all Australians should familiarise themselves with the voting process before election day. - ஆஸ்திரேலிய நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னமும் 4 வாரங்களே உள்ள பின்னணியில், வாக்காளர் பட்டியலில் உள்ள அனைவரும் வாக்கள...
Daylight saving நேரமாற்றம் நடைமுறைக்கு வருகிறது! 04.04.2025 2:38
ஆஸ்திரேலியாவின் பல மாநிலங்களில் Daylight saving நேரமாற்றம் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 3 மணிக்கு நடைமுறைக்கு வருகிறது. இதுகுறித்த செய்தியைத் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.
இலங்கையின் இந்த வார முக்கிய நிகழ்வுகள் 04.04.2025 8:36
இந்திய பிரதமர் மூன்று நாட்கள் உத்தியோகபூர்வ பயணமாக இன்று இலங்கை வருகிறார்; சூடுபிடிக்கும் உள்ளூராட்சி தேர்தல் பிரச்சார பணிகள்; ஊழல் குற்றச்சாட்டின் கீழ் சில அரசியல் தலைவர்கள் கைது; தொடரும் விசாரணைகள் உள்ளிட்ட செய்திகளோடு “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சிக்காக விவரணமொன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.
MCG மைதானத்திற்குள் துப்பாக்கிகளை எடுத்துச் சென்றதாகக் கூறப்படும் இரண்டு ஆண்கள் கைது 03.04.2025 5:38
ஆஸ்திரேலியா மற்றும் உலகின் இன்றைய முக்கிய நிகழ்வுகள்: 04 ஏப்ரல் 2025 வெள்ளிக்கிழமை வாசித்தவர் குலசேகரம் சஞ்சயன்.
நரசிங்கம்பேட்டை நாதஸ்வரத்தின் உருவாக்கமும் பின்னணியும் 03.04.2025 7:12
இசைக்கச்சேரிகள் முதல் திருமணங்கள் வரை நாதஸ்வரம் எனும் இசைக்கருவி தமிழர்களின் வாழ்வில் இணைந்திருக்கிறது. அப்படியான நாதஸ்வரம் தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டத்தில் அமைந்திருக்கும் நரசிங்கம்பேட்டையில் உருவாக்கப்பட்டு வருகிறது. புவிசார் குறியீட்டைக் கொண்ட நரசிங்கம்பேட்டை நாதஸ்வர உருவாக்கத்தின் பின்னணியை முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் தமிழ்ப் பிராபாகரன்.
அமெரிக்கா விதித்துள்ள புதிய இறக்குமதி வரி ஆஸ்திரேலியாவை பாதிக்குமா? 03.04.2025 8:54
அமெரிக்கா இறக்குமதி செய்யும் பெரும்பாலான பொருட்களுக்கு புதிய வரிகளை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நேற்று அறிவித்துள்ளார். இதில் ஆஸ்திரேலிய பொருட்கள் மீது 10 சதவீத வரி அறிவித்துள்ளார். இது குறித்த செய்தியின் பின்னணியை தயாரித்து வழங்குகிறார் செல்வி.
ஆஸ்திரேலியாவில் எந்த நகரங்களில் அதிகமானோர் குடியேறுகின்றனர்? 03.04.2025 2:23
நாட்டின் முக்கிய நகரங்களில் கடந்த ஜுன் வரையிலான 12 மாதங்களில் கூடுதலாக 4,30,000 பேர் குடியேறியுள்ளனர். இதுகுறித்த செய்தியைத் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.
சிகரெட் தொடர்பில் ஆஸ்திரேலிய அரசு நடைமுறைப்படுத்தியுள்ள புதிய மாற்றம்! 03.04.2025 2:18
ஒவ்வொரு சிகரெட்டிலும் உடல்நலம் தொடர்பில் கடுமையான எச்சரிக்கை செய்திகள் அச்சிடும் நாடாக ஆஸ்திரேலியா மாறியுள்ளது. இதுகுறித்த செய்தியைத் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.
உங்களுக்கு எல்லாமாய் இது! 03.04.2025 12:50
மனித இயந்திரத்தைப் பயன்படுத்தி மருத்துவ பரிசோதனை செய்யும் ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்கும் தமிழ் மருத்துவர் டாக்டர் பாலாஜி பிக்சாண்டி, முதியவர்களுக்கும் புனர்வாழ்வு தேடுபவர்களுக்கும் உதவும் வகையில் அவற்றைப் பயன்படுத்த ஒரு சர்வதேச முயற்சியில் இறங்கியுள்ளார். அவரை 2018ஆம் ஆண்டு குலசேகரம் சஞ்சயன் நேர்கண்டு உரையாடியிருந்தார், அந்த நேர்காணலின் மறு ஒலிபரப்பு இது.
இறந்தவர்களின் superannuation நிதியை திரும்ப தருவதில் ஏன் தாமதம்? - ASIC கேள்வி 03.04.2025 6:54
Superannuation துறையில் claim விண்ணப்பங்கள் பரிசீலனையில் நிலவும் கூடுதலான தாமதங்கள் மற்றும் மோசமான வாடிக்கையாளர் சேவை போன்றவை சமீபத்திய ASIC-இன் மதிப்பாய்வு அறிக்கையில் கோடிட்டு காட்டப்பட்டுள்ளது. அவ்வறிக்கையில் 34 பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. இது குறித்து ஆங்கிலத்தில் Tys Occhiuzzi எழுதிய விவரணத்தை தமிழில் தருகிறார் செல்வி.
Podcasts parecidos
O Replaio não é o publicador dos podcasts; os nomes dos programas, as capas e o áudio pertencem aos seus autores e são distribuídos por feeds RSS públicos