SBS

SBS Tamil - SBS தமிழ்

News TA ↓ 2198 episódios

Independent news and stories from SBS Audio, connecting you to life in Australia and Tamil-speaking Australians. - தமிழ் பேசும் ஆஸ்திரேலியர்களுடனும், ஆஸ்திரேலிய வாழ்க்கையுடனும் இணைய உங்களுக்கு உதவும் பக்கசார்பற்ற செய்திகள் மற்றும் கதைகள்.

Não deixe de visitar o site do podcast e apoiar quem o produz: www.sbs.com.au

Autor

SBS

Categoria

News

Site do podcast

www.sbs.com.au

Último episódio

11 de jul de 2026

Onde ouvir?

Podcasts no app Replaio Radio Em breve

Os podcasts estão chegando ao app. Instale agora e seja o primeiro a descobrir um jeito totalmente novo de curtir podcasts

Baixe no Google Play Instale grátis Android 5 mi+ downloads · nota 4,8 iOS em breve

Episódios

செய்தியின் பின்னணி : தங்கத்தின் விலை ஏன் குறைய ஆரம்பித்தது? 06.02.2026

தமிழர்களின் பாரம்பரிய செல்வமாகக் கருதப்படும் தங்கத்தின் விலை சமீப நாட்களாக குறையத் தொடங்கியுள்ளது. இது குறித்த செய்தியின் பின்னணியை எடுத்துவருகிறார் குலசேகரம் சஞ்சயன்.

இன்றைய செய்திகள் : 06 பெப்ரவரி 2026 - வெள்ளிக்கிழமை 06.02.2026

SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வெள்ளிக்கிழமை 06/02/2026) செய்திகள். வாசித்தவர் : செல்வி இன்பசேகரன்.

உங்கள் மாநிலத்தை பிற ஆஸ்திரேலிய மாநிலத்தவர் எந்த பெயரில் கிண்டலாக அழைக்கிறார்கள் தெரியுமா? 05.02.2026

ஆஸ்திரேலியாவின் ஒவ்வொரு மாநிலத்தவரும் பிற மாநிலத்தவரைக் கேலியாக குறிப்பிடும் பட்டப்பெயர்கள் ஐரோப்பியக் குடியேற்றத்தின் ஆரம்ப காலத்தில் மக்களிடையே புழக்கத்தில் இருந்திருக்கின்றன. அவற்றின் சுவாரசியங்களையும், அந்த பெயர்களின் பின்னால் ஒளிந்திருக்கும் தகவல்களையும் “நம்ம ஆஸ்திரேலியா” நிகழ்ச்சி மூலம் விளக்குகிறார் கீதா மதிவாணன் அவர்கள். நிகழ்ச்சியாக்கம்: றைசெல்.

2026 Anzac Day : NSW மக்களுக்கு கூடுதல் விடுமுறை வழங்கப்படுமா? 05.02.2026

2026 ஆம் ஆண்டு Anzac day சனிக்கிழமை வார இறுதியில் வருவதினால் NSW மாநில மக்களுக்கு கூடுதல் பொது விடுமுறை வழங்கலாம் என்ற முன்மொழிவு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்த செய்தியை எடுத்து வருகிறார் செல்வி.

புற்றுநோயை தடுக்க முடியுமா? 05.02.2026

பெப்ரவரி 4 ஆம் தேதி உலக புற்றுநோய் தினமாக கடைபிடிக்கப்படுகிறது. புற்றுநோயை தடுக்க முடியுமா? புற்றுநோய் வருவதிலிருந்து நம்மை எப்படி பாதுகாத்துக்கொள்வது? இது போன்ற பல கேள்விகளுக்கு பதில் கூறுகிறார் Queensland Townsville James Cook பல்கலைக்கழத்தில் பேராசிரியராகவும் பல்கலைக்கழக மருத்துவமனையில் Senior Oncologistஆக பணியாற்றும் டாக்டர் சுந்தரம் சபேசன். அவரோடு உரையாடுகிறார் செல்வி.

பாலியல் தொழிலுக்கு பெண்கள் கடத்தல் 05.02.2026

ஆபாசமான அநீதியான அடிமை வியாபாரத்தையும் மனித கடத்தலையும் ஒழிக்கும் ஒரே நோக்குடன் இயங்கும் ஒரு சர்வதேச நிறுவனம், The Freedom Project. The Freedom Project நிறுவனத்தின் இந்திய இயக்குனர் அனீட்டா கண்ணையா அவர்கள் 2016ஆம் ஆண்டு சிட்னி வந்திருந்தபோது, The Freedom Project செய்யும் வேலைத்திட்டங்கள் குறித்தும், அவரது அனுபவங்கள் குறித்தும் குலசேகரம் சஞ்சயனுடன் உரையாடுகிறார். இது ஒரு மறு ஒலிபரப்பு.

செய்தியின் பின்னணி: அழிவின் விழிம்பில் உலகம்! விஞ்ஞானிகள் எச்சரிக்கை! 05.02.2026

உலகின் அழிவுக்கும், மனித குலத்தின் எதிர்காலத்துக்கும் இடையில் இன்று உள்ள தூரம் வெறும் 85 நொடிகள்தான் என்று அணு விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர். உலகம் அழிந்துவிடும் வாய்ப்பை கணக்கிடும் Doomsday Clock ஐ இதுவரை இல்லாத அளவிற்கு அவர்கள் நள்ளிரவிற்கு நெருக்கமாக நகர்த்தியுள்ளனர். இது குறித்த செய்தியின் பின்னணி நிகழ்ச்சியை SBS Newக்காக Angelica Waite எழுதிய விவரணத் தகவலோடு முன்வைக்கிறார் றைசெல்.

இன்றைய செய்திகள்: 5 பெப்ரவரி 2026 வியாழக்கிழமை 05.02.2026

SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வியாழக்கிழமை 5/02/2026) செய்திகள். வாசித்தவர்: றைசெல்.

வீட்டிற்கு fresh food விநியோகத்தில் அமேசான்! 04.02.2026

ஆஸ்திரேலியாவின் உணவுப் பொருள் விநியோக சந்தையில் Amazon அடியெடுத்து வைத்துள்ளது. இது குறித்த செய்தியை எடுத்து வருகிறார் செல்வி.

Superannuation-இல் உங்கள் தொகையை அதிகரிப்பது எப்படி? 04.02.2026

Superannuation-இல் கூடுதல் பங்களிப்பு செய்து ஓய்வு பெறும் காலத்திற்காக சேமிப்பதுடன் அதன் மூலம் வரிச்சலுகை பெறும் வகையில் பல வகையான பங்களிப்பு contribution வழிமுறைகள் உள்ளன. இப்பங்களிப்பு வழிமுறைகள் குறித்து விரிவாக விளக்குகிறார் பெர்த் நகரில் Prime Accounting AU என்ற நிறுவனத்தை நடத்தி வருபவரும் பொருளாதாரம், வருமானவரி, கம்பனி நிர்வாகம், AI தொழில் நுட்பம் உள்ளிட்ட துறைகளில் பல வருடகால அனுபவம் கொண்டவ...

Townsville நகரில் முதன்முறையாக தமிழர் மரபு திங்கள் & தைப்பொங்கல் விழாக்கள்! 04.02.2026

குயின்ஸ்லாந்து மாநிலத்தின் Townsville நகரில் முதன்முறையாக கடந்த சனிக்கிழமை (31 ஜனவரி) தமிழர் மரபு திங்கள் மற்றும் தைப்பொங்கல் என்ற விழாக்களை Townsvill Tamil Community என்ற அமைப்பு கோலாகலமாக கொண்டாடியுள்ளது. இந்த விழா குறித்த தகவல்களை நம்முடன் பகிர்ந்து கொள்கிறார் விழா ஏற்பாட்டாளர்களில் ஒருவரான Dr சிவஞானம் அகிலன். அவரோடு உரையாடுகிறார் றைசெல்.

செய்தியின் பின்னணி : வட்டி விகிதம் உயர்ந்தது: காரணங்களும், தாக்கங்களும் 04.02.2026

இருபத்தாறு மாத கால இடைவெளிக்குப் பின்னர், Reserve Bank of Australia அல்லது RBA எனப்படும் நாட்டின் மத்திய வங்கி நேற்று வட்டி விகிதத்தை உயர்த்தி, அரசின் செலவினமா அல்லது தனியார் தேவையா தொடர்ச்சியான பணவீக்கத்தைத் தூண்டுகிறது என்பது குறித்து கடுமையான அரசியல் விவாதத்தைத் தூண்டியுள்ளது. நிதிநிலையைப் பாதுகாத்து, வெளிப்புற அழுத்தங்களைக் கருவூலக்காப்பாளார் சுட்டிக்காட்டும் அதே வேளையில், அரசின் தற்போதைய கொள்...

இன்றைய செய்திகள்: 04 பெப்ரவரி 2026 - புதன்கிழமை 04.02.2026

SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (புதன்கிழமை 04/02/2026) செய்திகள். வாசித்தவர் குலசேகரம் சஞ்சயன்.

இலங்கை: கிவுல் ஓயா நதி நீர் திட்டத்திற்கு எதிராக போராட்டம் 03.02.2026

வடக்கின் நீர் பிரச்சினையை தீர்ப்பதற்காக அரசு முன்வைத்துள்ள கிவுல் ஓயா திட்டத்திற்கு எதிராக வவுனியாவில் ஆர்ப்பாட்டப் பேரணி ஒன்று இடம்பெற்றுள்ளது. இது தொடர்பில் “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.

நாட்டில் வட்டி வீதம் உயர்ந்தது - RBA அறிவிப்பு! 03.02.2026

ஆஸ்திரேலியாவின் அதிகாரபூர்வ வட்டி வீதம் குறித்த தனது முடிவினை ரிசர்வ் வங்கி இன்று அறிவித்தது. இதுகுறித்த செய்தியை எடுத்து வருகிறார் செல்வி.

How to cater for your dietary restrictions - உணவுக் கட்டுப்பாடுகளை கவனத்தில் கொள்ளுவது எப்படி? இதோ சில வழிமுறைகள்! 03.02.2026

Australia is known as the allergy capital of the world. Our diverse population also means that we express our religious beliefs, ethics, health and personal choices through the food we eat. We called on some experts to help us navigate all the labelling, certifications and resources that can inform our food choices. - பல்லின பல்கலாசார நாடான ஆஸ்திரேலியாவில் உணவு ஒவ்வாமை உள்ளவர்கள் அதிகம் என கூறப்பட...

இன்றைய செய்திகள்: 03 பெப்ரவரி 2026 - செவ்வாய்க்கிழமை 03.02.2026

SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (செவ்வாய்க்கிழமை 03/02/2026) செய்திகள். வாசித்தவர் : செல்வி.

ஆஸ்திரேலிய மகத்தான மனிதரின் 75 ஆண்டுகால தொப்பி 4.6 லட்சம் டாலருக்கு விற்பனை! 02.02.2026

ஆஸ்திரேலிய கிரிக்கெட் விளையாட்டின் மகத்தான மனிதர் Sir Donald Bradman 75 ஆண்டுகளுக்கு முன்னர் அணிந்திருந்த ‘Baggy green’ தொப்பி ஏலத்தில் பல லட்சம் டாலர்களுக்கு விற்பனையாகி உள்ளது. இது குறித்த செய்தியை எடுத்து வருகிறார் செல்வி.

பெர்த்தில் இரு மகன்களை கொன்றுவிட்டு பெற்றோர் தற்கொலை? 02.02.2026

பெர்த்தில் ஒரு குடும்பத்தை சேர்ந்த இரண்டு குழந்தைகளை கொன்று விட்டு பெற்றோர் தற்கொலை செய்து கொண்டதாக சந்தேகிக்கும் சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்த செய்தியை எடுத்து வருகிறார் செல்வி.

ஆஸ்திரேலியா அறிவோம்: கங்காரு தீவின் சிறப்புகள் தெரியுமா? 02.02.2026

ஆஸ்திரேலியாவின் மூன்றாவது மிகப் பெரிய தீவு கங்காரு தீவு (Kangaroo Island). இந்த தீவின் பூர்வீக வரலாற்றையும், சமீபத்தில் நடந்த நிகழ்வுகளையும், அங்குச் சென்றால் என்னென்ன சுவையான அம்சங்களையெல்லாம் பார்க்கலாம், அனுபவிக்கலாம் என்ற தகவல்களை தருகிறார் உயிர்மெய்யார்.

செய்தியின் பின்னணி: மருந்துகளை தவறாக பயன்பபடுத்துகின்றீர்களா? அரசின் கண்காணிப்பு திட்டம் அறிமுகம்! 02.02.2026

மருந்து பயன்பாட்டில் பாதுகாப்பை உறுதி செய்யும் புதிய சீர்திருத்த திட்டங்களை கடந்த வாரம் பெடரல் அரசு அறிவித்துள்ளது. இது குறித்த செய்தியின் பின்னணியை எடுத்து வருகிறார் செல்வி.

இன்றைய செய்திகள்: 02 பெப்ரவரி 2026 - திங்கட்கிழமை 01.02.2026

SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (திங்கட்கிழமை 02/02/2026) செய்திகள். வாசித்தவர் குலசேகரம் சஞ்சயன்.

இந்தியா & தமிழ்நாடு: கடந்த 7 நாட்கள் செய்திகளின் தொகுப்பு 01.02.2026

விண்ணை தொட்ட தங்கம்-வெள்ளி விலையில் வீழ்ச்சி; பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் தாக்கல் செய்யப்பட்ட இந்திய நிதிநிலை அறிக்கை; சூடு பிடிக்கும் தமிழக அரசியல் களம் - தவெக யாருடன் கூட்டணி? உள்ளிட்ட செய்திகளோடு “செய்திகளின் பின்னணி” நிகழ்ச்சிக்காக இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.

ஆஸ்திரேலியாவில் 35 ஆண்டுகள்; 98 வயது புவனேஸ்வரி பகிரும் ஆரோக்கிய ரகசியம்! 01.02.2026

இந்தியாவிலிருந்து 35 ஆண்டுகளுக்கு முன்பு ஆஸ்திரேலியாவிற்கு குடிபெயர்ந்த புவனேஸ்வரி வெங்கடராமன் அவர்களுக்கு தற்போது 98 வயதாகும் நிலையில், அவர் தனது அற்புதமான வாழ்க்கைப் பயணத்தை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார். மேலும், ஆரோக்கியமாகவும் சுறுசுறுப்பாகவும் நீண்ட காலம் வாழ உதவிய தனது தனிப்பட்ட உடல்நல பழக்கங்கள் மற்றும் ரகசியங்களையும் அவர் பகிர்கிறார். அவரை நேர்கண்டு உரையாடுகிறார் செல்வி.

இந்த வார ஆஸ்திரேலிய செய்திகள் (25 – 31 ஜனவரி 2026) 31.01.2026

ஆஸ்திரேலியாவில் இந்த வாரம் (25 – 31 ஜனவரி 2026) நடந்த முக்கிய செய்திகளின் தொகுப்பு. வாசித்தவர்: றைசெல்.

Ouça o podcast SBS Tamil - SBS தமிழ் no Replaio

Rádio e podcasts em um só app - grátis e sem cadastro. Instale hoje e não perca o lançamento

Baixe no Google Play

O Replaio não é o publicador dos podcasts; os nomes dos programas, as capas e o áudio pertencem aos seus autores e são distribuídos por feeds RSS públicos