SBS

SBS Tamil - SBS தமிழ்

News TA ↓ 2198 episódios

Independent news and stories from SBS Audio, connecting you to life in Australia and Tamil-speaking Australians. - தமிழ் பேசும் ஆஸ்திரேலியர்களுடனும், ஆஸ்திரேலிய வாழ்க்கையுடனும் இணைய உங்களுக்கு உதவும் பக்கசார்பற்ற செய்திகள் மற்றும் கதைகள்.

Não deixe de visitar o site do podcast e apoiar quem o produz: www.sbs.com.au

Autor

SBS

Categoria

News

Site do podcast

www.sbs.com.au

Último episódio

11 de jul de 2026

Onde ouvir?

Podcasts no app Replaio Radio Em breve

Os podcasts estão chegando ao app. Instale agora e seja o primeiro a descobrir um jeito totalmente novo de curtir podcasts

Baixe no Google Play Instale grátis Android 5 mi+ downloads · nota 4,8 iOS em breve

Episódios

சிறு வணிகங்களுக்கு தேவையான AI கல்வியை இலவசமாக தருவதாக NSW அரசு அறிவிப்பு! 30.01.2026

NSW அரசு சிறு வணிகங்களுக்கு இலவச செயற்கை நுண்ணறிவு (AI) பயிற்சிகளை வழங்குகிறது. இது குறித்த செய்தியை எடுத்து வருகிறார் செல்வி.

விக்டோரியாவில்/மெல்பனில் போலி நோட்டுகள் புழக்கம்: எச்சரிக்கும் காவல்துறை 30.01.2026

விக்டோரியா மாநிலத்தில் உயர்தர போலி நோட்டுகள் பரவி வருவதாகவும் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் பணப்பரிவர்த்தனை செய்யும்படி விக்டோரியா மாநில காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இது குறித்த செய்தியை எடுத்து வருகிறார் செல்வி.

இன்றைய செய்திகள்: 30 ஜனவரி 2026 - வெள்ளிக்கிழமை 30.01.2026

SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வெள்ளிக்கிழமை 30/01/2026) செய்திகள். வாசித்தவர் : செல்வி.

மீண்டும் நிபா வைரஸ்! இந்தியாவிற்கு வந்திருக்கும் ஆபத்து உலகம் முழுவதும் பரவுமா? 29.01.2026

இந்தியாவின் மேற்கு வங்க மாநிலத்தில் இரண்டு பேருக்கு, கொடிய நிபா (Nipah) வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது, அத்துடன் குறைந்தது 190 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இந்த நிலையில் தடுப்பூசி அல்லது நிரூபிக்கப்பட்ட சிகிச்சை இல்லாத இந்த தொற்று பரவுவதைத் தடுக்க, ஆசியாவின் பல நாடுகள் விமான நிலையங்களில் வைத்தே பரிசோதனைகள் செய்யத் தொடங்கியுள்ளன. அதிக இறப்பு விகிதத்தைக் கொண்ட ஆபத்தான வைரஸ்...

SBS தமிழ் ஒலிபரப்பில் Casual நிகழ்ச்சி தயாரிப்பாளராக பணியாற்ற வாய்ப்பு! 29.01.2026

சிட்னி அல்லது மெல்பன் நகரில் Casual அடிப்படையில் SBS தமிழ் ஒலிபரப்பில் பணியாற்ற விரும்புகின்றவர்களின் விண்ணப்பங்களை SBS வரவேற்கிறது.

SBS On Demandயின் தற்போதைய பிரபலமான நிகழ்ச்சிகள்! 29.01.2026

SBS On Demand என்பது SBS வழங்கும் காணொளிகளை இலவசமாக stream செய்யும் ஒரு சேவை. இந்த சேவையில் தற்போது பிரபலமாக பார்க்கப்படும் சில நிகழச்சிகளை விவரிக்கிறார் ஊடகத்துறையில் பல ஆண்டுகளாக பணியாற்றும் இரா.சத்தியநாதன் அவர்கள். நிகழ்ச்சி தயாரிப்பு: றைசெல்.

NSW ஆற்றில் மூழ்கி இந்தியர் இருவர் மரணம் - கர்ப்பிணி மனைவி கண்முன் நடந்த துயரம் 29.01.2026

NSW ஆற்றில் நீந்த முயன்ற இந்தியர் இருவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு – கர்ப்பிணி மனைவி கண்முன்னே நடந்த சோகம். இது குறித்த செய்தியை எடுத்து வருகிறார் செல்வி.

தமிழைப் பரப்பும் சீன கவிஞர் யூசி 29.01.2026

கவிஞர் யூசி தைவான் நாட்டைச் சேர்ந்த உலகக் கவிஞர். இவர் திருக்குறள், பாரதியார், பாரதிதாசன் கவிதைகள், ஆத்திசூடி ஆகியவற்றை சீன மொழியில் மொழிபெயர்த்தவர். தமிழக அரசின் 2014 ஆம் ஆண்டுக்கான திருவள்ளுவர் விருதை பெற்ற முதல் அயல் நாட்டுக் கவிஞர் இவர். கவிஞர் யூசியுடன் நேர்காணல். இந்த நேர்காணலை ஒழுங்கமைக்க உதவிய தைவான் தமிழ்ச்சங்கத்தைச் சார்ந்த அருள் வேலு பாலாசி, கவிஞர் யூசி குறித்த கருத்துகளையும் பகிர்ந்து...

பயன்படுத்திய காரை தனிப்பட்ட முறையில் விற்பது மற்றும் வாங்குவது எப்படி? 29.01.2026

நாம் பயன்படுத்திய காரை தனிப்பட்ட முறையில் விற்பனை செய்ய நினைக்கும் போது அதில் உள்ள சிக்கல்கள் என்ன? எவ்வாறு அவதானமாக விற்பனை செய்ய வேண்டும்? தனிப்பட்ட முறையில் விற்பனை செய்யப்படும் காரை வாங்குபவர்கள் எவ்வாறு பரிசோதித்து அவதானமாக வாங்க வேண்டும் என்ற பல கேள்விகளுக்கு விடை அளிக்கிறது இந்த விவரணம். தயாரித்து முன் வைக்கிறார் செல்வி.

இன்றைய செய்திகள்: 29 ஜனவரி 2026 வியாழக்கிழமை 29.01.2026

SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வியாழக்கிழமை 29/01/2026) செய்திகள். வாசித்தவர்: றைசெல்.

செய்தியின் பின்னணி: நம்மைச் சுற்றி நடக்கும் Food Fraud - உணவு மோசடி பற்றி தெரியுமா? 28.01.2026

உணவுப் பொருட்களில் நடைபெறும் மோசடி – அதாவது Food fraud தற்போது ஆஸ்திரேலியாவில் அதிக கவனம் பெறும் ஒரு பிரச்சினையாக மாறியுள்ளது. இது குறித்த செய்தியின் பின்னணி நிகழ்ச்சியை SBS Small Business Secrets யின் Sandra Fulloon எழுதிய விவரணத் தகவலோடு முன்வைக்கிறார் றைசெல்.

எச்சரிக்கை! மோசடிகளால் ஆஸ்திரேலியர்கள் கடந்த ஆண்டு இழந்தது $335 மில்லியன்! 28.01.2026

கடந்த ஆண்டு ஆஸ்திரேலியர்கள் மோசடிகளால் சுமார் $335 மில்லியன் இழந்துள்ளனர். இது குறித்த செய்தியை எடுத்து வருகிறார் செல்வி.

‘சாதி அடிப்படையிலான இட ஒதுக்கீடு மேலும் விரிவுபடுத்தப்பட வேண்டும்’- பேரா. ரவிவர்மகுமார் 28.01.2026

இந்தியாவில் 50 ஆண்டுகளுக்கும் மேலான சட்ட அனுபவம் கொண்ட பேராசிரியர் ரவிவர்மகுமார் அவர்கள் கர்நாடக மாநிலத்தின் முன்னாள் Advocate General ஆவார். இந்தியாவில் சமூக நீதியும் இடஒதுக்கீடும் குறித்த அரசியலமைப்பு சட்ட நிபுணராக பரவலாக அறியப்படுகிறார். கர்நாடக மாநில பின்தங்கிய வகுப்புகள் ஆணையத்தின் நிறுவனர் தலைவரான அவர், சில சர்வதேச நாடுகளின் அரசியலமைப்பு வடிவமைப்பில் சமூக நீதி, இட ஒதுக்கீடு கொள்கைகள் சேர்க்க...

செய்தியின் பின்னணி: Centrelink சட்டத்தை முறையாக பின்பற்றவில்லை. எப்படி? 28.01.2026

குழந்தை பராமரிப்பு நிதி (Child Support) தொடர்பான சட்டங்களை, நம் நாட்டின் 'சர்வீசஸ் ஆஸ்திரேலியா' (Services Australia) அமைப்பு முறையாகப் பின்பற்றவில்லை என்றும் தெரிந்து கொண்டே சட்டத்தை மீறி செயல்பட்டது என்றும் அதிர்ச்சியூட்டும் தகவல்கள் அடங்கிய அறிக்கையை குறைகேள் அதிகாரி (Ombudsman) பணிமனை வெளியிட்டுள்ளது குறித்த செய்தியின் பின்னணியை எடுத்து வருகிறார் குலசேகரம் சஞ்சயன்.

இன்றைய செய்திகள்: 28 ஜனவரி 2026 - புதன்கிழமை 28.01.2026

SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (புதன்கிழமை 28/01/2026) செய்திகள். வாசித்தவர் குலசேகரம் சஞ்சயன்.

இலங்கை: கிவுல் ஓயா திட்டமும் தமிழர் தரப்பின் எதிர்ப்பும் 27.01.2026

மகாவலி நதி நீரை வவுனியா மற்றும் முல்லைத்தீவுக்கு கொண்டு செல்லும் கிவுல் ஓயா திட்டத்தை ஆரம்பிக்கும் முயற்சியில் அரசு ஈடுபட்டுள்ளது. ஆனால் இதற்கு கடும் எதிர்ப்பை தமிழ்த்தரப்பு வெளியிட்டுள்ளது. இது தொடர்பில் “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.

அகதிகளின் பங்களிப்புகளை அங்கீகரிக்கும் ‘SBS Les Murray’ விருது – நீங்களும் பரிந்துரைக்கலாம் 27.01.2026

அகதிகளின் சாதனைகளை கொண்டாடும் ‘SBS Les Murray’ விருதிற்கான பரிந்துரைகள் கோரப்படுகின்றன. இது குறித்த செய்தியை எடுத்து வருகிறார் செல்வி.

இலங்கையில் வேர்... இங்கிலாந்தில் மகுடம்! : ‘Sir’ பட்டம் பெற்ற தமிழர் 27.01.2026

இங்கிலாந்திலுள்ள லெஸ்டர் பல்கலைக்கழகத்தின் தலைவரும் துணைவேந்தருமான பேராசிரியர் நிஷான் கனகராஜா அவர்களுக்கு, ஆண்டகை (knighthood அல்லது Sir) பட்டத்தை இந்த வருட தொடக்கத்தில் மன்னர் மூன்றாவது சார்ள்ஸ் கொடுத்துள்ளார். தனிப்பட்ட காரணங்களுக்காக கடந்த வாரம் ஆஸ்திரேலியாவிற்கு அவர் வந்திருந்த போது, SBS கலையகத்தில் சந்தித்து குலசேகரம் சஞ்சயன் நேர்கண்டிருந்தார். இலங்கையில் அவரது வளர்ப்பு, கேம்பிரிட்ஜ் பல்கலைக்...

சாதாரண தொடக்கம்... அசாத்தியமான பயணம்: ‘Sir’ பட்டம் பெற்ற தமிழர் 27.01.2026

இங்கிலாந்திலுள்ள லெஸ்டர் பல்கலைக்கழகத்தின் தலைவரும் துணைவேந்தருமான பேராசிரியர் நிஷான் கனகராஜா அவர்களுக்கு, ஆண்டகை (knighthood அல்லது Sir) பட்டத்தை இந்த வருட தொடக்கத்தில் மன்னர் மூன்றாவது சார்ள்ஸ் கொடுத்துள்ளார். தனிப்பட்ட காரணங்களுக்காக கடந்த வாரம் ஆஸ்திரேலியாவிற்கு அவர் வந்திருந்த போது, SBS கலையகத்தில் சந்தித்து குலசேகரம் சஞ்சயன் நேர்கண்டிருந்தார். இலங்கையில் அவரது வளர்ப்பு, கேம்பிரிட்ஜ் பல்கலைக்...

இன்றைய செய்திகள்: 27 ஜனவரி 2026 - செவ்வாய்க்கிழமை 27.01.2026

SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (செவ்வாய்க்கிழமை 27/01/2026) செய்திகள். வாசித்தவர் : செல்வி.

விக்டோரியாவில் விரைவில் பொது போக்குவரத்திற்கு myki கார்டு தேவையில்லை 26.01.2026

விக்டோரியாவில் $1.7 பில்லியன் Myki card மேம்பாட்டில் முக்கிய கட்டமாக contactless பயணம் மிக விரைவில் ஆரம்பமாகவுள்ளது. இது குறித்த செய்தியை எடுத்து வருகிறார் செல்வி.

செய்தியின் பின்னணி : ஆஸ்திரேலிய டாலரின் மதிப்பு தற்போது உயர என்ன காரணம்? 26.01.2026

ஆஸ்திரேலிய டாலரின் மதிப்பு கடந்த 15 மாதங்களில் இல்லாத அளவிற்கு தற்போது உயர்ந்துள்ளது. இது குறித்த செய்தியின் பின்னணியை எடுத்து வருகிறார் செல்வி.

What actually happened on January 26? - ஆஸ்திரேலியா தினம் – ஜனவரி 26 தேர்வு செய்யப்பட்டதன் பின்னணி 26.01.2026

January 26 is one of the most debated dates in Australia’s history. Often described as the nation’s birthday, the day marks neither the formal founding of the colony nor the creation of the Commonwealth. Instead, it reflects a layered history shaped by colonisation, political decisions, and ongoing First Nations resistance. Understanding what actually happened on January 26 reveals why the date is...

இன்றைய செய்திகள்: 26 ஜனவரி 2026 - திங்கட்கிழமை 26.01.2026

SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (திங்கட்கிழமை 26/01/2026) செய்திகள். வாசித்தவர் குலசேகரம் சஞ்சயன்.

இந்தியா & தமிழ்நாடு: கடந்தவார செய்திகளின் தொகுப்பு 25.01.2026

குடியரசு தினத்தை இன்று கொண்டாடும் இந்தியா; தமிழகத்தில் அதிமுக பாஜக கூட்டணியில் தினகரன்; விஜய் நடத்திய மாநாடு உள்ளிட்ட செய்திகளோடு “செய்திகளின் பின்னணி” நிகழ்ச்சிக்காக இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.

Ouça o podcast SBS Tamil - SBS தமிழ் no Replaio

Rádio e podcasts em um só app - grátis e sem cadastro. Instale hoje e não perca o lançamento

Baixe no Google Play

O Replaio não é o publicador dos podcasts; os nomes dos programas, as capas e o áudio pertencem aos seus autores e são distribuídos por feeds RSS públicos