SBS

SBS Tamil - SBS தமிழ்

News TA ↓ 2198 episódios

Independent news and stories from SBS Audio, connecting you to life in Australia and Tamil-speaking Australians. - தமிழ் பேசும் ஆஸ்திரேலியர்களுடனும், ஆஸ்திரேலிய வாழ்க்கையுடனும் இணைய உங்களுக்கு உதவும் பக்கசார்பற்ற செய்திகள் மற்றும் கதைகள்.

Não deixe de visitar o site do podcast e apoiar quem o produz: www.sbs.com.au

Autor

SBS

Categoria

News

Site do podcast

www.sbs.com.au

Último episódio

11 de jul de 2026

Onde ouvir?

Podcasts no app Replaio Radio Em breve

Os podcasts estão chegando ao app. Instale agora e seja o primeiro a descobrir um jeito totalmente novo de curtir podcasts

Baixe no Google Play Instale grátis Android 5 mi+ downloads · nota 4,8 iOS em breve

Episódios

இன்றைய செய்திகள்: 13 பெப்ரவரி 2026 - வெள்ளிக்கிழமை 13.02.2026

SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வெள்ளிக்கிழமை 13/02/2026) செய்திகள். வாசித்தவர் : செல்வி இன்பசேகரன்.

இலங்கை: இந்த வார முக்கிய செய்திகள் 13.02.2026

யாழில் காவல்துறையின் துப்பாக்கிச் சூட்டில் இளைஞன் பலி; பயங்கரவாத தடை சட்ட வரைபு தொடர்பில் வடக்கு, கிழக்கு உட்பட பல இடங்களில் எதிர்ப்பு போராட்டம் உள்ளிட்ட செய்திகளோடு “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சிக்காக விவரணமொன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.

மில்லியனுக்கும் அதிகமான ஆஸ்திரேலியர்களுக்கு Superannuation உயரப்போகிறது! நீங்கள் அதில் ஒருவரா? 12.02.2026

Superannuationஇல் அதிக சேமிப்பு இருப்பு வைத்திருப்பவர்களுக்கு அதிக வரி, குறைந்த வருமானம் உள்ளவர்களுக்கு அதிக Superannuation என்று சில சீர்திருத்தங்களை கொண்டுவர அரசு முனைந்து வருகிறது. இது குறித்த செய்தியை எடுத்து வருகிறார் செல்வி இன்பசேகரன்.

Public transport in Australia: breaking down the basics - ஆஸ்திரேலியாவில் பொதுப் போக்குவரத்து பயணிகள் தெரிந்துகொள்ள வேண்டிய விதிமுறைகள் 12.02.2026

Like in most countries, public transport in Australia is the cheapest way to get around. It includes trams, buses, trains and ferry services. And each state or territory has its own transport network. However, navigating Australia’s public transport system with ease requires knowing the basics around how it works and what to expect. - ஆஸ்திரேலியாவின் பொதுப் போக்குவரத்து வலையமைப்பு எவ்வாறு செயல்படு...

உலக வானொலி தினம்: வானொலியும் செயற்கை நுண்ணறிவும் 12.02.2026

உலக வானொலி தினம் ஒவ்வொரு ஆண்டும் பெப்ரவரி 13ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக வானொலி ஒலிபரப்புகள் இடம்பெற்று வருகின்றன. இந்த வருட உலக வானொலி தினத்தின் கருப்பொருள், 'வானொலி மற்றும் செயற்கை நுண்ணறிவு'. செயற்கை நுண்ணறிவு குறித்த விவாதம், அதன் உருவாக்கம் மற்றும் ஆய்வுக்கான ஒரு புதிய பாதையைத் திறக்கும் நோக்குடன் இந்தக் கருப் பொருள் வழங்கப்பட்டுள்ளது. “வானொலி மற்றும் அமைதி” என்பதைக்...

செய்தியின் பின்னணி: ஆஸ்திரேலியாவில் மது மீதான வரி ஏன் உயர்ந்தது? யாருக்கு பாதிப்பு? 12.02.2026

ஆஸ்திரேலியாவில் கடந்த திங்கள் (2 Feb) முதல் மது மீதான அரசின் வரி உயர்ந்துள்ளது. இது குறித்த செய்தியின் பின்னணி நிகழ்ச்சியை முன்வைக்கிறார் றைசெல்.

இன்றைய செய்திகள்: 12 பெப்ரவரி 2026 வியாழக்கிழமை 12.02.2026

SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வியாழக்கிழமை 12/02/2026) செய்திகள். வாசித்தவர்: றைசெல்.

எதிர்கால ஆபத்தான நோய்களை குழந்தை பிறந்த உடனேயே கண்டுபிடிக்கும் சோதனை ஆஸ்திரேலியாவில் பரவலாக்கப்படுகிறது! 11.02.2026

ஒரு குழந்தை பிறந்த உடனேயே செய்யக்கூடிய DNA mapping என்ற பரிசோதனையை கட்டாயமாக்குவதன் மூலமாக அந்தக்குழந்தைக்கு வாழ்நாளில் ஏற்படக்கூடிய ஆபத்தான நோய்களை உடனடியாகவே அறிந்து கொள்ளலாம் என்று அறிவியலாளர்கள் கூறுகின்றனர். இது தொடர்பாக ஊடகங்கள் முன்வைக்கும் தகவல்களை தொகுத்து முன்வைக்கிறார் ஊடகத்துறையில் பல ஆண்டுகளாக பணியாற்றும் இரா.சத்தியநாதன் அவர்கள். நிகழ்ச்சியாக்கம்: றைசெல்.

சூடான நாட்களில் மருந்துகள்: ஆபத்து வராமல் காப்பது எப்படி? 11.02.2026

நம் நாட்டில் கோடை காலத்தில் வெப்பமான நாட்கள் அதிகரித்து வருகின்றன. சூடான நாட்களில் மருந்துகள் விரைவில் கெட்டுப் போகலாம் என்றும் சில மருந்துகள் உங்கள் உடலின் வெப்பநிலையைப் பாதிக்கலாம் என்றும் எச்சரிக்கைகள் விடப்பட்டுள்ளன. உடலில் இருந்து தண்ணீர் இழப்பு, உடல் வெப்பத்தை சமநிலையில் வைத்திருக்க முடியாமை, சில மருந்துகளின் பக்கவிளைவுகள் போன்ற காரணங்களால், சில பொதுவான மருந்துகள் வெயிலில் உடலை குளிர்விக்கச்...

செய்திகளின் பின்னணி: நாள்தோறும் பயன்படும் மருந்துகள் PBS-இல் இல்லாதது ஏன்? 11.02.2026

நம் நாட்டில் மருந்துகளை மலிவாகப் பெற உதவும் முக்கிய அரசுத் திட்டம் தான் Pharmaceutical Benefits Scheme (PBS). பணம் இல்லாத காரணத்தால் மக்கள் மருந்துகளை தவிர்க்கக் கூடாது என்பதுதான் இந்தத் திட்டத்தின் நோக்கம். ஆனால் சமீபத்திய செய்தி ஒன்று ஒரு முக்கிய கேள்வியை எழுப்புகிறது. “நாள்தோறும் பலர் பயன்படுத்தும் சில பொதுவான மருந்துகள் ஏன் PBS–இல் இல்லை?” என்பதுதான் அந்தக் கேள்வி. இது குறித்த செய்திகளின் பின்...

இன்றைய செய்திகள்: 11 பெப்ரவரி 2026 - புதன்கிழமை 11.02.2026

SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (புதன்கிழமை 11/02/2026) செய்திகள். வாசித்தவர் குலசேகரம் சஞ்சயன்.

இலங்கை: அரசின் தடைகளை நீக்க கோரி மீனவர்கள் போராட்டம் 10.02.2026

கரைவலை மீன் பிடித்தலின்போது வலைகளை இழுப்பதற்கு உழவு இயந்திரங்களை பயன்படுத்தும் முறைக்கும் அரசு தடை விதித்துள்ளது. அரசின் இந்த தடையை நீக்கக்கோரி மீனவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இது தொடர்பில் “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.

அக்டோபரில் திறக்கப்படும் Western Sydney விமானநிலையத்திற்கு வரும் சர்வதேச விமானங்கள் எவை? 10.02.2026

சிட்னியின் புதிய சர்வதேச விமான நிலையமான மேற்கு சிட்னி சர்வதேச விமான நிலையம் எதிர்வரும் அக்டோபரில் பயணிகள் சேவைகளை ஆரம்பிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த செய்தியை எடுத்து வருகிறார் செல்வி இன்பசேகரன்.

செய்தியின் பின்னணி : வீடுகளில் முதலீடு செய்திருப்போரின் வரி தொடர்பான அரசின் ஆலோசனை என்ன? 10.02.2026

Capital gains tax மூலதன லாப வரி தள்ளுபடியில் மாற்றம் கொண்டுவர அரசு ஆலோசித்து வருகிறது. இது குறித்த செய்தியின் பின்னணியை எடுத்து வருகிறார் செல்வி இன்பசேகரன்.

நம்மை ஏமாற்றும் சந்தா மோசடிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க அரசு இதை செய்யப்போகிறது! 10.02.2026

மறைமுக கட்டணங்களுக்கும் சந்தா ரத்து செய்வதில் நிலவும் சிக்கல்களுக்கும் முடிவு காணும் புதிய நுகர்வோர் பாதுகாப்பு சட்டங்கள் அறிமுகமாகவுள்ளன. இது குறித்த செய்தியை எடுத்து வருகிறார் செல்வி இன்பசேகரன்.

இன்றைய செய்திகள்: 10 பெப்ரவரி 2026 - செவ்வாய்க்கிழமை 09.02.2026

SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (செவ்வாய்க்கிழமை 10/02/2026) செய்திகள். வாசித்தவர் : செல்வி இன்பசேகரன்.

விக்டோரியாவில் இந்த மாதம் நிறுவப்பட்ட மொபைல் கேமரா எந்த இடங்களில் உள்ளன? 09.02.2026

மெல்பன் மற்றும் பிராந்திய விக்டோரியாவில் மொபைல் & சீட் பெல்ட் கண்காணிப்பு கேமராக்கள் பெப்ரவரி மாதத்தில் நிறுவப்படும் இடங்களின் பட்டியல் வெளியாகியுள்ளன. இது குறித்த செய்தியை எடுத்து வருகிறார் செல்வி இன்பசேகரன்.

RBA வட்டி வீத உயர்வு எதிரொலி: வங்கிகள் செய்வது என்ன? 09.02.2026

ஆஸ்திரேலிய ரிசர்வ் வங்கி RBA அறிவித்த வட்டி வீத உயர்வுக்குப் பிறகு சேமிப்பு மற்றும் mortgage வீட்டு கடன் மீதான வட்டி விகிதங்களில் வங்கிகள் மாற்றங்களை அறிவித்துள்ளன . இது குறித்த செய்தியை எடுத்து வருகிறார் செல்வி இன்பசேகரன்.

முதுகு வலியா? அச்சம் வேண்டாம் ! 09.02.2026

நம் நாட்டில் முதுகுவலி இப்பொழுது மிகவும் பரவலாக உள்ளது. சுமார் 4 மில்லியன் மக்களை (சுமார் ஆறு பேரில் ஒருவரை) இது பாதிக்கிறது. பாதிக்கப்பட்டவர்களை இயலாமைக்கு உள்ளாக்க ஒரு முக்கிய காரணமாகவும், குறிப்பிடத்தக்க பொருளாதார சுமையாகவும் இது ஆக்குகிறது. அன்றாட வாழ்க்கை, வேலை மற்றும் மன ஆரோக்கியத்தை இது பாதிக்கிறது என்றும், வயதுக்கு ஏற்ப பாதிப்பு அதிகரித்து வருகிறது மற்றும் பின்தங்கிய பகுதிகளில் இது அதிகமாக...

இன்றைய செய்திகள்: 09 பெப்ரவரி 2026 - திங்கட்கிழமை 08.02.2026

SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (திங்கட்கிழமை 09/02/2026) செய்திகள். வாசித்தவர் குலசேகரம் சஞ்சயன்.

இந்த வார ஆஸ்திரேலிய செய்திகள் (1 – 7 பெப்ரவரி 2026) 07.02.2026

ஆஸ்திரேலியாவில் இந்த வாரம் (1 – 7 பெப்ரவரி 2026) நடந்த முக்கிய செய்திகளின் தொகுப்பு. வாசித்தவர்: றைசெல்.

செய்தியின் பின்னணி : மாணவர் விசா நிராகரிக்கப்பட்டால் மேல்முறையீட்டில் புதிய கட்டுப்பாடு! 06.02.2026

Administrative Review Tribunal-இல் மேல்முறையீடு செய்யப்படும் மாணவர் விசா விண்ணப்ப விசாரணையில் சில கட்டுப்பாடுகள் அறிமுகமாகின்றன. இது குறித்த செய்தியின் பின்னணியை எடுத்து வருகிறார் செல்வி இன்பசேகரன்.

இந்தியா – ஆஸ்திரேலிய மகளிர் அணிகளுக்கிடையேயான கிரிக்கெட் போட்டிக்கு இலவச நுழைவுச் சீட்டு! 06.02.2026

மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் - பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் நடைபெறும், ஆஸ்திரேலியா – இந்தியா முன்னணி தரவரிசை பெற்ற மகளிர் கிரிக்கெட் அணிகள் மோதும் விளையாடுகளை இலவசமாக கண்டு கழிக்க உங்ககளுக்கு ஒரு அறிய வாய்ப்பு.

BhuMeJha - பண்டைய நாகரிகங்களுக்கிடையேயான தொடர்பைத் தேடும் முயற்சி 06.02.2026

BhuMeJha நாட்டிய நிகழ்வு - காலத்தைத் தாண்டியும், நில எல்லைகளை மீறியும் நிலைக்கும் ஒரு பிணைப்பை பிரதிபலிக்கும் வெளிப்பாடு. பண்டைய Gondwanaland நாகரிகங்களுக்கிடையேயான தொடர்பைத் தேடும் தொடர்ச்சியான முயற்சி. எதிர்வரும் பெப்ரவரி 21 & 22 ஆம் தேதி என இரு நாட்கள் பெர்த்தில் நடைபெறும் BhuMeJha நாட்டிய நிகழ்வு குறித்த தகவல்களை பகிர்ந்துக்கொள்கிறார் இந்நாட்டிய நிகழ்வை நடத்தும் சிதம்பரா அமைப்பை சேர்ந்த பாலகிர...

ஒரு துளி நம்பிக்கை, ஒரு முழு வாழ்க்கை 06.02.2026

அமெரிக்காவில் வசிக்கும் ஜெகாத்ரி தயாபரன், பதினெட்டு ஆண்டுகளுக்கு முன்னர் எடுத்த ‘குருத்தணு தானம் செய்வதற்குப் பதிவு செய்வது’ என்ற முடிவு அவரது அக்காவின் சிறு குழந்தையின் உயிரைக் காப்பாற்றும் நம்பிக்கையில் எடுக்கப்பட்டது. அவரது முயற்சி அந்தக் குழந்தைக்கு உதவவில்லை என்றாலும் அந்தக் கருணைச் செயல் எப்போது, யாருக்குப் பயன்படும், அதன் வரம்பு எவ்வளவு தூரம் நீடிக்கும் என்பதை அவர் கற்பனை செய்திருக்கவில்லை....

Ouça o podcast SBS Tamil - SBS தமிழ் no Replaio

Rádio e podcasts em um só app - grátis e sem cadastro. Instale hoje e não perca o lançamento

Baixe no Google Play

O Replaio não é o publicador dos podcasts; os nomes dos programas, as capas e o áudio pertencem aos seus autores e são distribuídos por feeds RSS públicos