SBS

SBS Tamil - SBS தமிழ்

News TA ↓ 2198 episódios

Independent news and stories from SBS Audio, connecting you to life in Australia and Tamil-speaking Australians. - தமிழ் பேசும் ஆஸ்திரேலியர்களுடனும், ஆஸ்திரேலிய வாழ்க்கையுடனும் இணைய உங்களுக்கு உதவும் பக்கசார்பற்ற செய்திகள் மற்றும் கதைகள்.

Não deixe de visitar o site do podcast e apoiar quem o produz: www.sbs.com.au

Autor

SBS

Categoria

News

Site do podcast

www.sbs.com.au

Último episódio

11 de jul de 2026

Onde ouvir?

Podcasts no app Replaio Radio Em breve

Os podcasts estão chegando ao app. Instale agora e seja o primeiro a descobrir um jeito totalmente novo de curtir podcasts

Baixe no Google Play Instale grátis Android 5 mi+ downloads · nota 4,8 iOS em breve

Episódios

தமிழனின் கண்டுபிடிப்பு - கல்வெட்டிலுள்ளவற்றைக் கண்டறியும் செயலி 19.02.2026

SSN பொறியியல் கல்லூரி பட்டதாரியான சதீஷ் பழனியப்பன், Institute of Mathematical Sciences பேராசிரியர் ஒருவருடன் இணைந்து, அகழாய்வுகளில் பெறப்படும் பொருட்களிலுள்ள முத்திரைகளை இலகுவில் அடையாளம் காணக்கூடிய செயலி ஒன்றை 2017ஆம் ஆண்டில் உருவாக்கியிருந்தார். இது குறித்து சதீஷ் பழனியப்பன் அவர்களுடன் குலசேகரம் சஞ்சயன் நடத்திய உரையாடலின் மறு ஒலிபரப்பு இது.

Macular Degeneration என்ற கண் நோய் ஏற்படாமல் தடுக்க முடியுமா? 19.02.2026

வயதானவர்கள் மத்தியில் பார்வை இழப்பை ஏற்படுத்துவதில் Macular degeneration (AMD) க்கும் முக்கிய பங்கு உண்டு. Macular degeneration பற்றியும் அதைத் தடுக்க முடியுமா என்பது பற்றியும் விளக்கமளிக்கிறார் மெல்பனைச் சேர்ந்த கண் மருத்துவ நிபுணர் ராஜ் பத்மராஜ் அவர்கள். அவரோடு உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.

Childcare - குழந்தை பராமரிப்பு நிலையம் ஒன்றை ஆரம்பிப்பது எப்படி? 19.02.2026

குழந்தை பராமரிப்பு நிலையம் ஒன்றை ஆரம்பிப்பது எப்படி? அதன் இயக்கத்தில் உள்ள நடைமுறை என்ன? போன்ற விடயங்களுக்கு NSW Blairmount Kids learning academy- இன் உரிமையாளர் கிருஷ்ணபவானி அண்ணாமலை வழங்கிய தகவல்களை கொண்டு விவரணம் ஒன்றை தயாரித்து வழங்குகிறார் செல்வி இன்பசேகரன்.

செய்தியின் பின்னணி: தனியார் சுகாதார காப்பீட்டு கட்டணம் அதிகரிக்கவுள்ளது. ஏன்? 19.02.2026

வாழ்க்கைச் செலவைக் கட்டுப்படுத்த முடியவில்லை என்று பல ஆஸ்திரேலியர்கள் தவித்து நிற்கும் வேளையில், தனியார் சுகாதார காப்பீட்டு கட்டணம் ஏப்ரல் மாதத்திலிருந்து அதிகரிக்கவுள்ளது. இது குறித்த செய்தியின் பின்னணியை எடுத்து வருகிறார் குலசேகரம் சஞ்சயன்.

இன்றைய செய்திகள்: 19 பெப்ரவரி 2026 - வியாழக்கிழமை 18.02.2026

SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வியாழக்கிழமை 19/02/2026) செய்திகள். வாசித்தவர் குலசேகரம் சஞ்சயன்.

How does IVF work in Australia? - ஆஸ்திரேலியாவில் IVF (செயற்கை கருத்தரிப்பு) சிகிச்சை : நீங்கள் அறிந்து கொள்ள வேண்டியவை 18.02.2026

Did you know that IVF is not the first, but in fact the last step in a sequence of fertility treatments? In Vitro Fertilisation is regulated by state and territory laws. It can also be expensive and emotionally challenging. Here’s what to expect when aiming to start a pregnancy with IVF in Australia. - IVF (செயற்கை கருத்தரிப்பு) சிகிச்சை, ஆஸ்திரேலியா முழுவதும் பலரின் பெற்றோராகும் கனவிற்கு வழிவகுக்...

ஆஸ்திரேலியா அறிவோம்: Port Arthur நகரின் சிறப்புகள் தெரியுமா? 18.02.2026

ஆஸ்திரேலியாவின் வரலாற்றில் மிகவும் முக்கியமான இடங்களில் ஒன்று Port Arthur. இந்த இடத்தின் வரலாற்றையும், அங்கு நடந்த நிகழ்வுகளையும், அங்குச் சென்றால் என்னென்ன சுவையான அம்சங்களையெல்லாம் பார்க்கலாம், அனுபவிக்கலாம் என்ற தகவல்களையும் தருகிறார் உயிர்மெய்யார்.

Between Law and Poetry: Maithri Panagoda’s Purple Patch - ‘எரிக்கப்பட்ட யாழ்ப்பாண நூலகத்தின் கதையைக் கேட்டு மிகவும் நொந்துபோனேன்’ 18.02.2026

In this interview with Kulasegaram Sanchayan, lawyer and poet Maithri Panagoda reflects on his life journey from Sri Lanka to Australia following the publication of his poetry collection Purple Patch. He speaks about his early struggles as a migrant lawyer, his long legal career working with Aboriginal communities, and how poetry became both a creative outlet and a source of balance. A thoughtful...

இன்றைய செய்திகள்: 18 பெப்ரவரி 2026 - புதன்கிழமை 17.02.2026

SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (புதன்கிழமை 18/02/2026) செய்திகள். வாசித்தவர் குலசேகரம் சஞ்சயன்.

இலங்கை: தமிழர் இனப்பிரச்சினைக்கான தீர்வாக என்ன கலந்துரையாடப்பட்டது? 17.02.2026

தமிழர் இனப்பிரச்சினைக்கான தீர்வுத் திட்டம் தொடர்பில் பல்வேறு தமிழ் கட்சிகளும் பொது அமைப்புக்களும் ஒன்றிணைந்து யாழ்ப்பாணத்தில் கலந்துரையாடலை நடத்தியுள்ளன. இது தொடர்பில் “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.

மேற்கு சிட்னி பகுதியில் நடந்த கத்திக்குத்து தாக்குதலில் ஒருவர் பலி ; இருவர் படுகாயம் 17.02.2026

மேற்கு சிட்னி Merrylandsஇல் நேற்று காலை நடந்த கத்திக்குத்து தாக்குதலில் ஒருவர் பலி மேலும் இருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்த செய்தியை எடுத்து வருகிறார் செல்வி இன்பசேகரன்.

இந்த சிறிய பிழையினால் நீங்கள் அதிக சுகாதார காப்பீடு/ health insurance செலுத்தக்கூடும்! 17.02.2026

தனியார் சுகாதார காப்பீடு எதிர்வரும் வாரங்களில் அதிகரிக்கவுள்ள வேளையில் பலர் இந்த சிறிய பிழையினால் அதிகம் சுகாதார காப்பீடு/health insurance செலுத்தி வருவதாக புதிய ஆய்வு ஒன்று கூறுகிறது. இது குறித்த செய்தியை எடுத்து வருகிறார் செல்வி இன்பசேகரன்.

சிட்னி, பெர்த் பகுதிகளில் தட்டம்மை(Measles) தொற்று எச்சரிக்கை! 17.02.2026

சிட்னி மற்றும் பெர்த் பகுதிகளில் தட்டம்மை (Measles) தொற்று பரவல் அதிகரிப்பு என சுகாதார எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்த செய்தியை எடுத்து வருகிறார் செல்வி இன்பசேகரன்.

இன்றைய செய்திகள்: 17 பெப்ரவரி 2026 - செவ்வாய்க்கிழமை 17.02.2026

SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (செவ்வாய்க்கிழமை 17/02/2026) செய்திகள். வாசித்தவர் : செல்வி இன்பசேகரன்.

Anzac Day தினம் : NSW மக்களுக்கு கூடுதல் விடுமுறை! 16.02.2026

2026 மற்றும் 2027 ஆகிய ஆண்டுகளில் ஆன்சாக் தினம் (ஏப்ரல் 25) வார இறுதியில் வரும் நிலையில், அதற்கான மாற்றாக கூடுதல் ஒரு பொது விடுமுறை வழங்கப்படும் என்று NSW அரசு அறிவித்துள்ளது. இது குறித்த செய்தியை எடுத்து வருகிறார் செல்வி இன்பசேகரன்.

செய்தியின் பின்னணி: காவல்துறை அதிகாரி கிருத்தன் விகாஷ் குட்டிக்கு சிறை! 16.02.2026

நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தின் Oaklands காவல்நிலையத்தில் காவல்துறை அதிகாரியாகப் பணியாற்றிய கிருத்தன் விமல் விகாஷ் குட்டி பல்வேறு குற்றங்கள் புரிந்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு, விசாரணையின் பின்னர் மூன்று ஆண்டு சிறைத்தண்டனை விதித்து நீதி மன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இது குறித்த செய்தியின் பின்னணியை எடுத்துவருகிறார் குலசேகரம் சஞ்சயன்.

வலியின்றி வாழ வழிவகுக்க ஒரு பரதநாட்டிய நிகழ்வு - 'வழி(லி)' 16.02.2026

பன்முக கலாசார சமூகங்களில் Palliative care இறுதிக்கால பராமரிப்பு சேவைகளை மேம்படுத்துவதை நோக்கமாக கொண்டு இயங்கி வரும் ‘பாலம்’ தொண்டு நிறுவனம் யாழ்ப்பாணம் மற்றும் தமிழ்நாட்டில் Palliative care ward ஒன்றை கட்டுவதற்கு நிதி திரட்டும் நிகழ்வாக வழி(லி) என்ற பரதநாட்டிய நிகழ்ச்சி ஒன்றை நடத்தவுள்ளது. இந்த நிகழ்ச்சி குறித்த தகல்களை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்கள் ‘பாலம்’ நிறுவனத்தின் Dr பிரணவன் கணேசலிங்கம் மற...

இன்றைய செய்திகள்: 16 பெப்ரவரி 2026 - திங்கட்கிழமை 16.02.2026

SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (திங்கட்கிழமை 16/02/2026) செய்திகள். வாசித்தவர் குலசேகரம் சஞ்சயன்.

நீங்கள் Social Mediaவில் எதை பார்க்கவேண்டும் என்று முடிவு செய்வது யார்? எது? 15.02.2026

Social Media Algorithm எனும் தொழில் நுட்பத்தை அரசு முறைப்படுத்தவேண்டும் என்று சமீபத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குரல் தர ஆரம்பித்துள்ளனர். இந்த பின்னணியில் Social Media Algorithm குறித்து ஏன் மக்கள் அதிகம் புரிந்துகொள்ளவேண்டும் என்று விளக்குகிறார் பிரிஸ்பேன் நகரில் வாழும் நதியா சந்திரசேகரன் அவர்கள். தொழில்நுட்ப துறையில் Test Manager ஆக பணியாற்றும் நதியா, “Kaapiyam with Nadhiya” என்ற தனது சமூக ஊட...

இந்த வார ஆஸ்திரேலிய செய்திகள் (8 – 14 பெப்ரவரி 2026) 14.02.2026

ஆஸ்திரேலியாவில் இந்த வாரம் (8 – 14 பெப்ரவரி 2026) நடந்த முக்கிய செய்திகளின் தொகுப்பு. வாசித்தவர்: றைசெல்.

மிளகின் மருத்துவ குணங்கள் 13.02.2026

மிளகு, நாம் தினமும் சமையலில் பயன்படுத்தும் ஒரு பொருள். மிளகின் மருத்துவ நலன்கள் மற்றும் அதனை உபயோகமாக பயன்படுத்தும் முறைகள் போன்றவற்றை நம்மோடு பகிர்ந்துக்கொள்கிறார் சித்த வைத்தியர் டாக்டர் செல்வி மணி. அவரோடு உரையாடுகிறார் செல்வி இன்பசேகரன்.

13 கோடியில் ஒருவருக்கு கிடைக்கும் யோகம் - $80 மில்லியன் லாட்டரி பரிசு! 13.02.2026

விக்டோரியா மாநிலத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற ஒருவர் கடந்த வியாழக்கிழமை நடந்த Powerball லாட்டரி divison ஒன்றில் முழு $80 மில்லியன் ஜாக்பாட்டையும் வென்றுள்ளார். இது குறித்த செய்தியை எடுத்து வருகிறார் செல்வி இன்பசேகரன்.

NSW Driver Licenceஇல் உங்கள் demerit pointகளை குறைக்கும் வழி தெரியுமா? 13.02.2026

NSW Driver Licenceஇல் உள்ள Demerit புள்ளிகளை குறைக்க உதவும் வகையில் தற்காலிகமாக நடைமுறையில் உள்ள Demerit Point Reward திட்டத்தை நிரந்தரமாக்கும் நடவடிக்கைகளை அம்மாநில அரசு ஆரம்பித்துள்ளது. இது குறித்த செய்தியை எடுத்து வருகிறார் செல்வி இன்பசேகரன்.

தங்கத்தின் விலை சரிந்தது ஏன்? விலை மீண்டும் உயருமா? 13.02.2026

கடந்த ஆண்டு அதிகமான ஏற்றத்தை கண்ட தங்கத்தின் விலை இந்த மாத தொடக்கத்தில் வீழ்ச்சியை கண்டுள்ளது என்பது நாம் அறிந்த செய்தி. தங்கத்தின் விலையில் ஏன் இந்த ஏற்றம் மற்றும் இறக்கம் மேலும் தங்கத்தின் விலை மீண்டும் உயருமா போன்ற பல கேள்விகளுக்கு விளக்கமாக பதில் தருகிறார் பெர்த் நகரில் Prime Accounting AU என்ற நிறுவனத்தை நடத்தி வருபவரும் பொருளாதாரம், வருமானவரி, கம்பனி நிர்வாகம், AI தொழில் நுட்பம் உள்ளிட்ட துற...

செய்தியின் பின்னணி: லிபரல் கட்சி புதிய தலைவர்களை தேர்ந்தெடுத்தது ஏன்? 13.02.2026

ஆஸ்திரேலிய லிபரல் கட்சி புதிய தலைவராக Angus Taylor அவர்களையும் துணைத் தலைவராக Jane Hume அவர்களையும் இன்று காலை தெரிவு செய்துள்ளது. இது குறித்த செய்தியின் பின்னணியை எடுத்து வருகிறார் குலசேகரம் சஞ்சயன்.

Ouça o podcast SBS Tamil - SBS தமிழ் no Replaio

Rádio e podcasts em um só app - grátis e sem cadastro. Instale hoje e não perca o lançamento

Baixe no Google Play

O Replaio não é o publicador dos podcasts; os nomes dos programas, as capas e o áudio pertencem aos seus autores e são distribuídos por feeds RSS públicos