SBS

SBS Tamil - SBS தமிழ்

News TA ↓ 2198 episódios

Independent news and stories from SBS Audio, connecting you to life in Australia and Tamil-speaking Australians. - தமிழ் பேசும் ஆஸ்திரேலியர்களுடனும், ஆஸ்திரேலிய வாழ்க்கையுடனும் இணைய உங்களுக்கு உதவும் பக்கசார்பற்ற செய்திகள் மற்றும் கதைகள்.

Não deixe de visitar o site do podcast e apoiar quem o produz: www.sbs.com.au

Autor

SBS

Categoria

News

Site do podcast

www.sbs.com.au

Último episódio

11 de jul de 2026

Onde ouvir?

Podcasts no app Replaio Radio Em breve

Os podcasts estão chegando ao app. Instale agora e seja o primeiro a descobrir um jeito totalmente novo de curtir podcasts

Baixe no Google Play Instale grátis Android 5 mi+ downloads · nota 4,8 iOS em breve

Episódios

இன்றைய செய்திகள்: 26 பெப்ரவரி 2026 - வியாழக்கிழமை 25.02.2026

SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வியாழக்கிழமை 26/02/2026) செய்திகள். வாசித்தவர் குலசேகரம் சஞ்சயன்.

இந்தியாவின் கேரளா மாநிலத்தின் பெயர் மாறுகிறது! 25.02.2026

இந்தியாவின் கேரள மாநிலத்தின் பெயரை மாற்றுவதற்கு இந்திய மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இது குறித்த செய்தியை எடுத்து வருகிறார் செல்வி இன்பசேகரன்.

மேற்கு ஆஸ்திரேலியாவின் மாபெரும் பொங்கல் விழா! 25.02.2026

மேற்கு ஆஸ்திரேலியாவின் மாபெரும் “பொங்கல் – தமிழர் அறுவடைத் திருநாள்” பெப்ரவரி 28 சனிக்கிழமையன்று நடைபெறுகிறது. இந்நிகழ்வு குறித்த விபரங்களை நிகழ்ச்சி ஒழுங்கமைப்பாளர்களில் சிலரான சேதுராமன் முத்தையா,சசிதரன் ராதாகிருஷ்ணன், கவிதா குப்புசாமி, சதீஷ் சந்திரசேகரம், அமர்நாத் புஷ்பராஜ், சத்தியபிரகாஷ் நித்தியசாது மற்றும் யுவராஜ் மூர்த்தி ஆகியோரிடம் கேட்டறிந்து கொள்கிறார் றேனுகா துரைசிங்கம்.

Your guide to using sunscreen in Australia - ஆஸ்திரேலியாவில் sunscreen பயன்படுத்துவது ஏன் முக்கியம் ? சரியாக பயன்படுத்துவது எப்படி? 25.02.2026

Australia’s sun can be harsh. And sunscreen is one key measure protecting us against harmful sun exposure. We asked three scientists about sunscreen facts, myths and choosing the right products. - உலகிலேயே அதிக தோல் புற்றுநோய் விகிதம் கொண்ட நாடுகளில் ஆஸ்திரேலியாவும் ஒன்று. ஆகவே சூரிய ஒளியிலிருந்து பாதுகாப்பாக இருக்க சரியான முறையில் sunscreen ஒன்றை கட்டாயம் பயன்படுத்த வேண்டும். இது குறித்து Zoe Tho...

செய்தியின் பின்னணி : Bondi தாக்குதலுக்கு பிறகு நாட்டின் குடிவரவு கொள்கைகளில் மாற்றம் வருமா? 25.02.2026

ஆஸ்திரேலியாவின் குடிவரவு கொள்கைகள் மீண்டும் தற்போது பேசுபொருளாகியுள்ள பின்னணியில் சில கட்சிகள் பயங்கரவாத்தை எதிர்க்கும் நடவடிக்கைகள் நாட்டின் எல்லை கட்டுப்பாடுகளிலிருந்தே தொடங்க வேண்டும் என வலியுறுத்துகின்றன. இது குறித்த செய்தியின் பின்னணியை தயாரித்து வழங்குகிறார் செல்வி இன்பசேகரன்.

இன்றைய செய்திகள்: 25 பெப்ரவரி 2026 - புதன்கிழமை 25.02.2026

SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (புதன்கிழமை 25/02/2026) செய்திகள். வாசித்தவர் குலசேகரம் சஞ்சயன்.

இலங்கை: காணாமலாக்கப்பட்ட உறவுகளை தேடி தொடரும் போராட்டம் 24.02.2026

வலிந்து காணாமலாக்கப்பட்ட தமது உறவுகளை தேடி கிளிநொச்சியில் அவர்களது உறவுகள் ஆரம்பித்த போராட்டம் 09 ஆண்டுகளை எட்டியது. இது தொடர்பில் “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.

இந்தியா செல்லும் வெளிநாட்டு பயணிகள் எவ்வளவு தங்க நகைகள் எடுத்துச் செல்லலாம்? 24.02.2026

இந்தியாவிற்கு வரும் வெளிநாட்டு பயணிகளுக்கு இந்த மாதம் முதல் புதிய சுங்க விதிமுறைகளை இந்திய அரசு அறிவித்துள்ளது. இது குறித்த செய்தியை எடுத்து வருகிறார் செல்வி இன்பசேகரன்.

ஆஸ்திரேலியாவில் விரைவில் வருகிறது உயரமான Trump Tower கட்டிடம் : எங்கு வருகிறது? 24.02.2026

ஆஸ்திரேலியாவின் மிக உயரமான Trump Tower கட்டிடம் விரைவில் உருவாக உள்ளது. இது குறித்த செய்தியை எடுத்து வருகிறார் செல்வி இன்பசேகரன்.

இன்றைய செய்திகள்: 24 பெப்ரவரி 2026 - செவ்வாய்க்கிழமை 24.02.2026

SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (செவ்வாய்க்கிழமை 24/02/2026) செய்திகள். வாசித்தவர் : செல்வி இன்பசேகரன்.

'எனது மகன் கிறிஸ் மிகவும் அன்பானவன்' 23.02.2026

மெல்பன் Narre Warren தெற்கில் நடந்த விபத்தில் 16 வயது மாணவன் Chris Rua Antony பலியானமை பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம். உள்ளடக்க எச்சரிக்கை: இவ்விவரணத்தில் பகிரப்படும் தகவல்கள் சிலருக்கு மன உளைச்சலை ஏற்படுத்தக்கூடும். Content warning: This episode contains material that may be distressing to some listeners.

காலத்துளி: 110 வருடங்களிற்குப் பின் ஜிம்மி தம்போ என்ற பூர்வீக ஆஸ்திரேலியர் நாடு திரும்பியது 23.02.2026

பழைய உலக நிகழ்வுகள், தடம் பதித்த சம்பவங்கள், ஆஸ்திரேலியாவின் வரலாறு, தமிழர் தொடர்பான பதிவுகள் இடம் பெறும் காலத்துளி நிகழ்ச்சியில் 1994ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 23ம் நாள், 110 வருடங்களிற்குப் பின் நாடு திரும்பிய ஜிம்மி தம்போ என்ற பூர்வீக ஆஸ்திரேலியரது உடலை அவருக்கு உரித்தான இடத்தில் அடக்கம் செய்தது குறித்து நிகழ்ச்சி படைத்தவர் குலசேகரம் சஞ்சயன்.

Centrelink உதவித் தொகை உயர்கிறது : யாரெல்லாம் பெறமுடியும்? 23.02.2026

Centrelink உதவித் தொகை மீண்டும் உயர்த்தப்பட உள்ளதால் கோடிக்கணக்கான மக்கள் பயனடைய உள்ளனர். இது குறித்த செய்தியை எடுத்து வருகிறார் செல்வி இன்பசேகரன்.

உலகத் தாய்மொழி தினம்: தமிழ் கற்றலின் நன்மைகள் & சவால்கள் – இவர்கள் என்ன சொல்கிறார்கள்? 23.02.2026

உலக தாய்மொழி தினம் ஒவ்வொரு ஆண்டும் பெப்ரவரி 21ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. தாய்மொழி தினம் கடைபிடிப்பதன் அவசியம் மற்றும் புலம்பெயர்ந்த நாடொன்றில் தாய்மொழியை கற்பதில் உள்ள சவால்கள் குறித்து சிட்னி Ashfield பாலர்மலர் தமிழ் பாடசாலை மாணவிகள் சாத்விகா அரவிந்தன், ரித்தன்யா ரமேஷ், மெல்பன் பாரதி பள்ளி மாணவி காவ்யா செல்வரூபன் மற்றும் மேற்கு ஆஸ்திரேலியா தெற்கு தமிழ்ப்பள்ளி மாணவர் ஐனேஷ்கண்ணா மயூரதன் ஆகியோரின்...

இன்றைய செய்திகள்: 23 பெப்ரவரி 2026 - திங்கட்கிழமை 23.02.2026

SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (திங்கட்கிழமை 23/02/2026) செய்திகள். வாசித்தவர் : றேனுகா துரைசிங்கம்.

செயற்கை நுண்ணறிவு முன்னோடியாக இந்தியா மாறுமா? 22.02.2026

செயற்கை நுண்ணறிவு துறையில் உலகளாவிய முன்னணிக்கு இந்தியாவைக் கொண்டு செல்லும் நோக்கில், India AI Impact Summit 2026 என்ற மாநாடு கடந்த வாரம் வெற்றிகரமாக நடைபெற்றது. இந்த மாநாடு, இந்தியாவின் செயற்கை நுண்ணறிவு பயணத்தின் திசை மற்றும் தாக்கங்களைப் பற்றி முக்கியமான விவாதங்களை எழுப்பியுள்ளது. இந்தப் பின்னணியில், செயற்கை நுண்ணறிவு (AI), மேம்பட்ட பகுப்பாய்வு (Advanced Analytics), மற்றும் சமூக மற்றும் சமூக-தொ...

மெல்பன் விபத்தில் தமிழ் மாணவன் பலி: தந்தை தரும் தகவல்கள் 22.02.2026

மெல்பன் Narre Warren தெற்கில் நடந்த விபத்தில் தமிழ்ப்பின்னணி கொண்ட 16 வயது மாணவன் Chris Rua Antony மரணமடைந்தார். இதுகுறித்த செய்தியின் பின்னணியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம். உள்ளடக்க எச்சரிக்கை: இவ்விவரணத்தில் பகிரப்படும் தகவல்கள் சிலருக்கு மன உளைச்சலை ஏற்படுத்தக்கூடும். Content warning: This episode contains material that may be distressing to some listeners.

இந்த வார ஆஸ்திரேலிய செய்திகள் (15 – 21 பெப்ரவரி 2026) 20.02.2026

ஆஸ்திரேலியாவில் இந்த வாரம் (15 – 21 பெப்ரவரி 2026) நடந்த முக்கிய செய்திகளின் தொகுப்பு. வாசித்தவர்: செல்வி இன்பசேகரன்.

நானூறு ஆண்டுகளில் பிரிட்டன் அரச பரம்பரையில் ஒருவர் கைது 20.02.2026

பிரிட்டன் மன்னர் சாள்ஸின் சகோதரர் Andrew Mountbatten-Windsor கைது செய்யப்பட்டு விசாரணை நடைமுறைகளின் கீழ் விடுவிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.

How to recover from bushfires - காட்டுத்தீ பாதிப்பிலிருந்து மீள்வது எப்படி? 20.02.2026

Australia’s hot, dry climate and unique landscapes make it one of the most bushfire-prone countries in the world. As climate change drives higher temperatures and drier conditions, we can expect more frequent and more intense bushfires in the future. But once the fire is out, how do you return home safely, find support, and look after yourself? - காட்டுத்தீ அணைந்ததும், எப்படி பாதுகாப்பாக வீட்டுக்க...

நெருப்புக் குதிரை ஆண்டு – உங்கள் வாழ்க்கையில் என்ன மாறப் போகிறது? 20.02.2026

Lunar புத்தாண்டு அல்லது சந்திர புத்தாண்டு என்றால் என்ன, நம் நாட்டில் அது எவ்வாறு கொண்டாடப்படுகிறது என்ற தரவுகளையும், இந்தப் புத்தாண்டு குறித்து SBS Cantonese நிறைவேற்றுத்தயாரிப்பாளர் Kat Siuயின் கருத்துகளையும் உள்ளடக்கிய விவரணத்தை முன்வைக்கிறார் குலசேகரம் சஞ்சயன்.

செய்தியின் பின்னணி: இந்தப் பெண்கள் நாடு திரும்ப தடை விதிக்கப்பட்டது ஏன்? 20.02.2026

ஆஸ்திரேலிய குடிமக்கள் சிலர் காலவரையின்றி நாடு திரும்புவதற்கு அரசு தடை விதித்துள்ளது. பயங்கரவாத எதிர்ப்புச் சட்டங்களின் கீழ் ஆஸ்திரேலிய குடிமக்கள் வெளிநாட்டிலிருந்து திரும்புவதற்குக் காலவரையின்றி தடை உத்தரவை அரசு விதித்துள்ளது. இது குறித்த செய்தியின் பின்னணியை எடுத்து வருகிறார் குலசேகரம் சஞ்சயன்.

இன்றைய செய்திகள்: 20 பெப்ரவரி 2026 - வெள்ளிக்கிழமை 20.02.2026

SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வெள்ளிக்கிழமை 20/02/2026) செய்திகள். வாசித்தவர் : செல்வி இன்பசேகரன்.

பெர்த்தில் வீட்டின்மீது கார் மோதியதில் பெண் மரணம்- நியாயம் கோரும் குடும்பம் 19.02.2026

பெர்த்தில் அண்மையில் இடம்பெற்ற விபத்தில் நேபாளிப் பெண் ஒருவர் மரணமடைந்த நிலையில் இவ்விபத்து குறித்த கேள்விகளுக்கான பதில்களை அவரது குடும்பத்தினர் தேடுகின்றனர். இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.

ஆஸ்திரேலியாவின் முதல் அதிவேக ரயில் சேவை எப்போது தொடங்கும்? 19.02.2026

ஆஸ்திரேலியாவின் முதல் அதிவேக ரயில் திட்டம் குறித்து வரும் வாரங்களில் முக்கிய அறிவிப்பு வெளியாகும் என பிரதமர் Anthony Albanese தெரிவித்துள்ளார். இது குறித்த செய்தியை எடுத்து வருகிறார் செல்வி இன்பசேகரன்.

Ouça o podcast SBS Tamil - SBS தமிழ் no Replaio

Rádio e podcasts em um só app - grátis e sem cadastro. Instale hoje e não perca o lançamento

Baixe no Google Play

O Replaio não é o publicador dos podcasts; os nomes dos programas, as capas e o áudio pertencem aos seus autores e são distribuídos por feeds RSS públicos