SBS

SBS Tamil - SBS தமிழ்

News TA ↓ 2747 episodes

Independent news and stories from SBS Audio, connecting you to life in Australia and Tamil-speaking Australians. - தமிழ் பேசும் ஆஸ்திரேலியர்களுடனும், ஆஸ்திரேலிய வாழ்க்கையுடனும் இணைய உங்களுக்கு உதவும் பக்கசார்பற்ற செய்திகள் மற்றும் கதைகள்.

Be sure to visit the podcast's website and support the creator: www.sbs.com.au

Author

SBS

Category

News

Podcast website

www.sbs.com.au

Latest episode

Nov 20, 2026

Where to listen?

Podcasts in the app Replaio Radio Coming soon

Podcasts are coming to the app soon. Install now and be the first to see a whole new take on podcasts

Get it on Google Play Install for free Android 10M+ downloads · 4.7+ rating iOS soon

Episodes

கொஞ்சம் அறிதல், நிறைய புரிதல்: செக்ஸ் டாயிஸ் 30.05.2025

டாக்டர் நிவேதிதா மனோகரன் அவர்கள் பாலியல் நலம் மற்றும் எச்.ஐ.வி பராமரிப்பில் 15 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவமுள்ள மருத்துவர். அவர் ஒரு TEDx பேச்சாளர், பாலியல் கல்வியாளர் மற்றும் குடும்ப வன்முறைக்கு எதிராக இயங்கும் சமூக ஆர்வலர். Untaboos எனும் அமைப்பின் நிறுவனராக இயங்கி, சமூகத்திற்கான கல்வி, ஆலோசனை மற்றும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் பணியில் ஈடுபட்டிருப்பவர். பாலியல் நலம் குறித்து அவர் வழங்கும் “செக்ஸ்...

Lifeline அமைப்பை ஆரம்பித்த Dr Alan Walker 30.05.2025

காலத்துளி நிகழ்ச்சியில் தற்கொலையைத் தவிர்க்க வைக்கும் Lifeline அமைப்பை ஆரம்பித்த Dr Alan Walker குறித்து நிகழ்ச்சி படைத்தவர் குலசேகரம் சஞ்சயன்.

இலங்கையின் இந்த வார முக்கிய நிகழ்வுகள் 30.05.2025

தமிழ் அரசியல்வாதிகளின் எதிர்ப்பை அடுத்து வடக்கில் சுமார் 6000 ஏக்கர் நில சுவீகரிப்பினை மீளப்பெற்றது இலங்கை அரசு; இலங்கையின் தென்பகுதி கடற்பரப்பில் சுமார் 800 கிலோ போதைப் பொருளுடன் இரு படகுகளில் 11 பேர் கைது; பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ள உகந்தைமலை புத்தர் சிலை விவகாரம் உள்ளிட்ட செய்திகளோடு “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சிக்காக விவரணமொன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.

NSW-இல் வெள்ள பாதிப்புக்குள்ளானவர்களுக்கு அரசு நிவாரணம் இன்று முதல் வழங்கப்படுகிறது 30.05.2025

SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வெள்ளிக்கிழமை 30/05/2025) செய்திகள். வாசித்தவர் : செல்வி.

இந்த வார உலகம்: அமெரிக்காவுக்கான மாணவர் விசா நிறுத்தம், இனப்படுகொலை தின அனுசரிப்பு 29.05.2025

மாணவர் விசா நேர்காணலை நிறுத்திய அமெரிக்கா; இந்தியா- பாகிஸ்தான் இடையே தொடரும் ராஜாங்க மோதல்; வங்கதேசத்தில் ஜூன் 2026க்குள் தேர்தல்; ரஷ்யா- உக்ரைன் இடையே அடுத்த கட்ட பேச்சுவார்த்தைக்கு வாய்ப்பு; முதல் இனப்படுகொலை நினைவு தினத்தை அனுசரித்த நமீபியா; காசா மீதான இஸ்ரேலின் தாக்குதல்கள் உள்ளிட்ட உலகச் செய்திகளின் பின்னணியை முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் தமிழ்ப் பிரபாகரன்.

ஜூன் 1 முதல் மாணவர் கடன்களில் 20% குறைப்பு 29.05.2025

ஆஸ்திரேலிய அரசு HECS-HELP மற்றும் பிற மாணவர் கடன்களில் 20% குறைப்பு செய்யும் திட்டத்தை நவம்பர் 2024இல் அறிவித்தது. இந்த குறைப்பு 2025 ஜூன் 1 முதல் நடைமுறைக்கு வரவுள்ளது. இதுபற்றிய செய்தியின் பின்னணியினைத் தருகிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.

வான்வழியாக, ஆஸ்திரேலியாவின் தொலைதூர இடங்கள் அளவை செய்யப்பட்டது 29.05.2025

காலத்துளி நிகழ்ச்சியில் ஆஸ்திரேலிய outback என்று சொல்லப்படும் தொலைதூர இடங்களை நிலஅளவை செய்ய ஊக்குவித்த Donald George Mackay குறித்தும், 1930ம் ஆண்டு மே மாதம் 23ம் நாள் ஆரம்பிக்கப்பட்ட அளவை குறித்தும் நிகழ்ச்சி படைத்தவர் குலசேகரம் சஞ்சயன்.

ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: மனம்... உடல் நலமடைய..! 29.05.2025

பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் இந்தியாவில் அரும்பிய ஆயுர்வேதம் வாழ்க்கை மற்றும நீ்ண்ட ஆயுளுக்கான அறிவியலாகும் என்றும் அதுவே உலகின் மிகவும் பழமையான ஆரோக்கிய பராமரிப்பு அமைப்பாகும் எனக் கூறப்படுகிறது. ஆயுர்வேத சிகிச்சை மற்றும் வர்மக் கலை பற்றி உரையாடுகிறார் சிட்னியில் ஆயுர்வேத மருத்துவராக கடமையாற்றும் டாக்டர் நிக்கிலா வேணுகோபால். அவரோடு உரையாடுகிறார் செல்வி.

உள்ளூர் விமானக் கட்டணங்கள் குறைகின்றன 29.05.2025

விமான எரிபொருளின் விலைகள் குறைவாக உள்ள காரணத்தினால் Domestic Airlines உள்நாட்டு விமானச் சேவைகளின் விமானக் கட்டணங்கள் குறைத்துள்ளன. இது குறித்த செய்தியின் பின்னணியை தயாரித்து வழங்குகிறார் செல்வி.

சிரிப்பு யோகா பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? 29.05.2025

யோகாவில் பல வகைகள் இருப்பதை நாம் அறிவோம். இது சற்றுவித்தியாசமான சிரிப்பு யோகா. இதை பல இடங்களில் பரப்பி வருகிறார் சிரிப்பானந்தா. அவருடன் தொலைபேசிவழி உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.

NT காவல்துறை கட்டுப்பாட்டில் உயிரிழந்த பூர்வீகக்குடி இளைஞர்: சுயாதீன விசாரணைக்கு அழைப்பு 29.05.2025

SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வியாழக்கிழமை 29/05/2025) செய்திகள். வாசித்தவர் : செல்வி.

லிபரல்- நேஷனல் கட்சிகள் மீண்டும் இணைந்தன! 28.05.2025

லிபரல் கட்சியும் நஷனல் கட்சியும் மீண்டும் கூட்டணியாக இணைந்துள்ளன. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.

கைலாய மலை கிரிவலம் செல்வது எப்படி? : விரிவான தகவல் 28.05.2025

கைலாய மலையை சுற்றிய பரிக்கரமா(கிரிவலம்) நடை பயணம் சிறப்பானது என்பது பலரது நம்பிக்கை. கைலாய மலை பரிக்கரமா நடை பயணம் வெற்றிகரமாக செய்து முடித்துள்ள Touch Kailash Australiaவை சேர்ந்த செல்வராஜ் ராஜேந்திரன் அவர்கள் கைலாய மலைக்கு குழுவாக அழைத்து செல்லும் பணியும் செய்துவருகிறார். கடந்த ஆண்டு கைலாய மலை சென்று திரும்பியுள்ள 15 வயதான தியானா மற்றும் செல்வராஜ் ராஜேந்திரன் இருவரும் SBS ஒலிப்பதிவுக்கூடம் வரை வந...

Would you consider nominating someone for an Order of Australia? - Order of Australia விருதுக்கு ஒருவரை பரிந்துரைப்பது எப்படி? 28.05.2025

Do you know someone who makes an extraordinary impact in the community? It could be a person from any background or field of endeavour. You can help celebrate their achievements by nominating them for an Order of Australia. The more we recognise extraordinary members within our communities, the more Australia’s true diversity is reflected in the Australian honours list. - எமது சமூகத்திலுள்ள சாதாரண...

விக்டோரியாவில் வெட்டுக்கத்திகளின் விற்பனைக்குத் தடை: பின்னணி என்ன? 28.05.2025

விக்டோரியா மாநிலத்தில், மே 28 புதன்கிழமை மதியம் முதல், Machete எனப்படும் வெட்டுக்கத்திகளின் விற்பனைக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த செய்தியின் பின்னணியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.

தமிழகம்/இந்தியா செய்திகளின் பின்னணி 28.05.2025

இந்தியாவில் நிதி ஆயோக் கூட்டம் தொடர்பாக திமுக- அதிமுக கட்சிகளின் தொடரும் காரசார விவாதம்; சென்னை அடையார் ஆற்றங்கரை பகுதியில் வீடுகள் இடிப்பும், எதிர்ப்பும்; மாவோயிஸ்ட் அமைப்பின் முக்கிய தலைவர் உள்பட பலர் சுட்டுக்கொலை; ஆவணங்களற்ற குடியேறிகள் என அடையாளப்படுத்தப்பட்ட வங்கதேசிகளை நாடுகடத்தியுள்ள இந்தியா உள்ளிட்ட செய்திகளின் பின்னணியை முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் தமிழ்ப் பிரபாகரன்.

NSW வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பிரதமர் பார்வையிட்டார் 27.05.2025

SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (புதன்கிழமை 28/05/2025) செய்திகள். வாசித்தவர் : மகேஸ்வரன் பிரபாகரன்.

விக்டோரிய நிதிநிலை அறிக்கை: அகதிகள் தொடர்பில் என்ன உதவிகள் அறிவிக்கப்பட்டுள்ளன? 27.05.2025

2025–26 விக்டோரிய நிதிநிலை அறிக்கையில் அகதிகள் தொடர்பில் என்னென்ன உதவிகள் அறிவிக்கப்பட்டுள்ளன என்பது குறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.

நாட்டின் சில பகுதிகளில் ஜூலை முதல் மின்சார கட்டணம் உயருகிறது! 27.05.2025

SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (செவ்வாய்க்கிழமை 27/05/2025) செய்திகள். வாசித்தவர் : செல்வி.

மறதி நோய்க்கான புதிய மருந்து ஆஸ்திரேலியாவில் பயன்பாட்டுக்கு வருகிறது 27.05.2025

அல்சைமர் நோயின் தீவிரத்தன்மையை மெதுவாக்கும் ஒரு மருந்து ஆஸ்திரேலியாவில் பயன்பாட்டுக்கு வருகிறது. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.

Who are the Stolen Generations? - திருடப்பட்ட தலைமுறையினர்: வரலாறு என்ன? 26.05.2025

Australia has a dark chapter of history that many are still learning about. Following European settlement, Aboriginal and Torres Strait Islander children were removed from their families and forced into non-Indigenous society. The trauma and abuse they experienced left deep scars, and the pain still echoes through the generations. But communities are creating positive change. Today these people ar...

SBS வானொலிக்கு வயது 50! 26.05.2025

SBS வானொலி 50 வருடங்களைப் பூர்த்தி செய்யும் இவ்வேளையில் SBS தமிழ் ஒலிபரப்பு கடந்துவந்த பாதையை விளக்கும் விவரணத்தை முன்வைக்கிறார் றேனுகா துரைசிங்கம்.

இந்தியா & தமிழ்நாடு: கடந்தவார நிகழ்வுகளின் தொகுப்பு 26.05.2025

உலகின் 4வது பெரிய பொருளாதார நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது; டாஸ்மாக் விவகாரத்தில் அமலாக்க துறை விசாரணைக்கு இந்திய உச்சநீதிமன்றம் தடை; நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு - இ.டி விசாரணைக்கு பயந்து ஸ்டாலின் பங்கேற்றதாக எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு; இவை உள்ளிட்ட செய்திகளோடு “செய்திகளின் பின்னணி” நிகழ்ச்சிக்காக இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்!

AI ஐ பயன்படுத்தி நம்மை எப்படியெல்லாம் ஏமாற்றுவார்கள்? 26.05.2025

இணையம், மொபைல் என்று பல வழிகளில் ஒருவர் எமாற்றப்படுவதும், Scam போன்ற மீள முடியாத சிக்க்களில் மாட்டிக்கொள்வதும் அதிகரித்து வருகிறது. இந்த பின்னணியில் நாம் எப்படி எச்சரிக்கையாக இருப்பது என்று விளக்குகிறார் Cyber Risk Senior Manager, Master of Cybersecurity and Forensics எனும் தகுதிகள் கொண்ட C. செந்தில் அவர்கள். அவர் University of Sunshine Coastயில் இணைய பாதுகாப்பு குறித்த கல்வியாளர் ஆவார். நிகழ்ச்சி...

ஆஸ்திரேலியாவில் இன்று தேசிய மன்னிப்பு தினம் கடைப்பிடிக்கப்படுகிறது 26.05.2025

SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (திங்கட்கிழமை 26/05/2025) செய்திகள். வாசித்தவர் : றேனுகா துரைசிங்கம்.

Listen to the SBS Tamil - SBS தமிழ் podcast in Replaio

Radio and podcasts in one app - free, with no sign-up. Install today and do not miss the launch

Get it on Google Play

Replaio is not a podcast publisher; show names, artwork and audio belong to their authors and are distributed through public RSS feeds.