SBS
SBS Tamil - SBS தமிழ்
Independent news and stories from SBS Audio, connecting you to life in Australia and Tamil-speaking Australians. - தமிழ் பேசும் ஆஸ்திரேலியர்களுடனும், ஆஸ்திரேலிய வாழ்க்கையுடனும் இணைய உங்களுக்கு உதவும் பக்கசார்பற்ற செய்திகள் மற்றும் கதைகள்.
Be sure to visit the podcast's website and support the creator: www.sbs.com.au
Where to listen?
Podcasts in the app Replaio Radio Coming soonPodcasts are coming to the app soon. Install now and be the first to see a whole new take on podcasts
Episodes
ஆஸ்திரேலியாவில் வாடிக்கையாளர் விசுவாசத் திட்டங்களின் எதிர்காலம் என்ன? 25.08.2025 7:20
ஆஸ்திரேலியாவில், டெபிட் மற்றும் கிரெடிட் கார்ட்களுக்கு அறவிடப்படும் கூடுதல் கட்டணங்களை முடிவுக்குக் கொண்டுவர வேண்டுமென ஆஸ்திரேலிய ரசர்வ் வங்கி பரிந்துரைத்துள்ளது. இதைத் தொடர்ந்து, customer loyalty programs என்ற வாடிக்கையாளர் விசுவாசத் திட்டங்களின் எதிர்காலம் என்ன என்ற கேள்வி எழுந்துள்ளது. இது குறித்த செய்தியின் பின்னணியை எடுத்து வருகிறார் குலசேகரம் சஞ்சயன்.
ஆஸ்திரேலியாவில் முதலாவது வீடு வாங்குவோருக்கான அரச சலுகை அக்டோபரில் ஆரம்பம் 25.08.2025 5:01
SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (திங்கட்கிழமை 25/08/2025) செய்திகள். வாசித்தவர் : றேனுகா துரைசிங்கம்.
திறக்கப்படவிருக்கும் ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய விமான நிலையம்: சிறப்புகள் என்ன? 25.08.2025 10:58
ஆஸ்திரேலியாவின் மிகப் பெரிய விமான நிலையமாக இருக்கப்போகிறது திறக்கப்படவிருக்கும் Western Sydney International Airport- சிட்னி மேற்கு சர்வதேச விமான நிலையம். இந்த மிக நவீன விமான நிலையத்தின் சிறப்புகளை விளக்குகிறார் ஊடகத்துறையில் பல ஆண்டுகளாக பணியாற்றும் இரா.சத்தியநாதன் அவர்கள்.
இந்தியா & தமிழ்நாடு: கடந்தவார நிகழ்வுகளின் தொகுப்பு 24.08.2025 10:38
இந்திய தேசத்தை இரண்டாகிய தெரு நாய் விவகாரம் - இந்திய உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு; தவெகவின் மதுரை மாநாடு - எதிர்ப்புகள் மற்றும் எதிர்பார்ப்புகள்; ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு - மீனவர்கள் போராட்டம்; இவை உள்ளிட்ட செய்திகளோடு “செய்திகளின் பின்னணி” நிகழ்ச்சிக்காக இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்!
செக்ஸ் தொழிலாளியுடன் உறவு கொள்வதில் எழும் சிக்கல் என்ன? 24.08.2025 11:49
டாக்டர் நிவேதிதா மனோகரன் அவர்கள் பாலியல் நலம் மற்றும் எச்.ஐ.வி பராமரிப்பில் 15 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவமுள்ள மருத்துவர். அவர் ஒரு TEDx பேச்சாளர், பாலியல் கல்வியாளர் மற்றும் குடும்ப வன்முறைக்கு எதிராக இயங்கும் சமூக ஆர்வலர். Untaboos எனும் அமைப்பின் நிறுவனராக இயங்கி, சமூகத்திற்கான கல்வி, ஆலோசனை மற்றும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் பணியில் ஈடுபட்டிருப்பவர். பாலியல் நலம் குறித்து அவர் வழங்கும் “செக்ஸ்...
இலங்கை முன்னாள் அதிபர் ரணில் விக்ரமசிங்கவின் கைதும் அதன் பின்னணியும் 23.08.2025 4:34
அரச நிதியை முறைகேடாக பயன்படுத்தினார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட முன்னாள் அதிபர் ரணிலுக்கு எதிர்வரும் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இது தொடர்பில் “பார்வைகள்” நிகழ்ச்சிஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச்செய்தியாளர் மதிவாணன்.
ஆஸ்திரேலிய, உலக செய்திகளின் இந்த வார தொகுப்பு 23.08.2025 6:09
ஆஸ்திரேலியாவிலும், உலகிலும் இந்த வாரம் (17 – 23 ஆகஸ்ட் 2025) நடந்த முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு. பதிவு செய்யப்படும் நாள்: 23 ஆகஸ்ட் 2025 சனிக்கிழமை. வாசித்தவர்: றைசெல்.
Understand Aboriginal land rights in Australia - பூர்வீகக்குடி மற்றும் டோரஸ் நீரிணை தீவு மக்களின் நில உரிமைகள் என்றால் என்ன? 22.08.2025 8:20
You may hear the protest chant, “what do we want? Land rights!” —but what does it really mean? Land is at the heart of Aboriginal and Torres Strait Islander identity, culture, and wellbeing. Known as “Country,” it includes land, waterways, skies, and all living things. In this episode of Australia Explained, we explore Indigenous land rights—what they involve, which land is covered, who can make c...
விக்டோரியாவில் இந்தியப் பெண் கொலை: முன்னாள் கணவன் கைது! 22.08.2025 2:27
விக்டோரியாவில் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 45 வயது நபரான பிரேம்குமார் என்பவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.
நாடு கடத்தல் அச்சுறுத்தலில் இருந்து நிரந்தர வதிவிடத்திற்கு: டிக்ஸ்ரன் அருள்ரூபனின் கதை 22.08.2025 12:45
இலங்கை உள்நாட்டுப் போரின்போது கணவரைப் பறிகொடுத்த தமிழ் அகதி ரீட்டா அருள்ரூபன் அவர்களின் ஒரே மகன் டிக்ஸ்ரன் அருள்ரூபன் இலங்கைக்கு நாடு கடத்தப்படுவார் என்று அரசு கூறியதைத் தொடர்ந்து, தமிழ் ஏதிலிகள் கழகத்தின் உதவியை நாடினார் ரீட்டா அருள்ரூபன். அவர்கள் முன்னெடுத்த நடவடிக்கைகள், பொது மக்கள் அரசிடம் முன்வைத்த கோரிக்கை என்பவற்றால், டிக்ஸ்ரன் அருள்ரூபனுக்கு ஆஸ்திரேலியாவில் நிரந்தர வதிவிட வீசா இந்த வாரம் வ...
Thriving Kids: NDIS தொடர்பிலான புதிய அறிவிப்புகள் 22.08.2025 6:17
அரசானது NDIS தொடர்பில் சில முக்கியமான புதுப்பிக்கப்பட்ட அறிவிப்புகள் மற்றும் மாற்றங்களை வெளியிட்டுள்ளது. குறிப்பாக குழந்தைகள் வளர்ச்சி, முழுமையான சேவை அணுகல், மற்றும் தொடர்ச்சியான தர மேம்பாடு ஆகிய துறைகளில் புதிய திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. இதுபற்றிய செய்தியின் பின்னணியினை விளக்குகிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.
குழந்தை பராமரிப்புத் துறைக்கு 189 மில்லியன் டொலர் நிதி ஒதுக்கீடு? 22.08.2025 4:34
SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வெள்ளிக்கிழமை 22/08/2025) செய்திகள். வாசித்தவர் குலசேகரம் சஞ்சயன்.
இலங்கையின் இந்த வார முக்கிய செய்திகள் 21.08.2025 8:32
யாழ்ப்பாணம். பலாலி விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மாற்றப்போவதாக அரசு அறிவிப்பு; அரசுக்கு எதிராக பல்வேறு துறைகளை சேர்ந்தவர்கள் பணி புறக்கணிப்பு போராட்டம் உள்ளிட்ட செய்திகளோடு “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சிக்காக விவரணமொன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.
இந்த வார உலக செய்திகளின் தொகுப்பு 21.08.2025 6:46
சீன அதிபர் திபெத்தை பார்வையிட்டார்; காசா மீதான ராணுவ நடவடிக்கையை இஸ்ரேல் தீவிரப்படுத்தியது; பாகிஸ்தான், மற்றும் இந்திய காஷ்மீரில் பெருவெள்ளம்; உக்ரைன்-ரஷ்யா பேச்சுவார்த்தை நிலவரம்; அர்ஜெண்டீனாவில் தஞ்சம் கோர பிரேசில் முன்னாள் அதிபர் முயற்சித்தார் உள்ளிட்ட உலகச்செய்திகளின் பின்னணியை முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் தமிழ்ப் பிரபாகரன்.
Fast Track முறையினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தீர்வு வழங்குமாறு முன்னாள் குடிவரவு அமைச்சர் வலியுறுத்தல் 21.08.2025 2:29
Fast Track என்ற நடைமுறையினால் பாதிக்கப்பட்டுள்ள அகதிகளின் பிரச்சினையை தீர்க்க லேபர் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என முன்னாள் குடிவரவு அமைச்சர் Alex Hawke வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.
இளைஞர்கள் மத்தியில் அதிகரிக்கும் புற்றுநோய் பாதிப்பு: தடுப்பது எப்படி? 21.08.2025 11:03
இளம் வயதிலேயே புற்றுநோய் ஏற்படும் விகிதம் தற்போது அதிகரித்துள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன. இதற்கான காரணம் தொடர்பிலும் இந்தப் போக்கினை தடுக்க முடியுமா என்பது தொடர்பிலும் கன்பராவைச் சேர்ந்த புற்றுநோய் மருத்துவ நிபுணர் பிரணவன் கணேசலிங்கம் அவர்களோடு உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.
386 வயதான சென்னை 21.08.2025 16:09
மெட்ராஸ் அல்லது சென்னை என்ற நகரம் 1639ஆம் ஆண்டு ஆகஸ்ட் 22ஆம் தேதி நிறுவப்பட்டது. அதனை நினைவுகூரும் வகையில் சென்னை தினம் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாதம் 22ஆம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. 2014ஆம் ஆண்டு சென்னை நகரம் 375 ஆண்டுகளைப் பூர்த்தி செய்ததை சிறப்பிக்கும் வகையில் நடந்த சென்னை தின ஒருங்கிணைப்பாளர்கள் - வரலாற்றாசிரியர் S. முத்தையா, சமூக செய்தித்தாள்களை இயக்கி வரும் வின்சன்ட் டீ சொய்சா, மற்றும் ரேவ...
தமிழ் இலக்கியம், இந்தி மொழி, சமஸ்கிருதம்: மறைந்த இல.கணேசனின் கருத்துக்கள் என்ன? 21.08.2025 13:43
இந்தியாவில் நாகாலாந்து மாநில ஆளுநரும், தமிழ்நாடு மாநில பா.ஜ.கவின் முன்னாள் தலைவருமான இல. கணேசன் அவர்கள் கடந்த வாரம் வெள்ளிக்கிழமை (15 ஆகஸ்ட்) சென்னையில் காலமானார். அவருக்கு வயது 80. அவர் ஆஸ்திரேலியாவுக்கு 2014 செப்டம்பர் மாதம் வருகை தந்திருந்தபோது SBS ஒலிப்பதிவு கூடத்தில் வைத்து வழங்கிய நீண்ட நேர்முகத்தின் சுருக்கமான பதிவு. அவரோடு உரையாடியவர் றைசெல். நேர்முகம் பாகம் 2.
உற்பத்தித் திறன் உச்சி மாநாட்டின் முதல் இரண்டு நாட்களில் என்ன நடந்தன? 21.08.2025 9:45
உயர்மட்ட பொருளாதார வல்லுனர்கள், வணிகத் தலைவர்கள் மற்றும் தொழிற்சங்கங்கள் இந்த வாரம் கன்பராவில், ஆஸ்திரேலியாவின் உற்பத்தித் திறனை அதிகரிப்பதற்கான தேசிய வட்ட மேசை மாநாட்டில் கலந்து கொள்ள கூடினார்கள். மற்றைய முன்னேறிய பொருளாதார நாடுகளைப் போலவே கடந்த பல தசாப்தங்களாக ஆஸ்திரேலியாவும் தொடர்ந்து குறைந்த உற்பத்தித் திறன் வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. இந்த வட்ட மேசை மாநாட்டில் யதார்த்தமான, ஆனால் நம்பிக்கை...
காஸா நகரத்தின் மீதான தாக்குதலைத் தொடங்கியுள்ளதாக இஸ்ரேலிய இராணுவம் அறிவித்தது 21.08.2025 4:44
SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வியாழக்கிழமை 21/08/2025) செய்திகள். வாசித்தவர் குலசேகரம் சஞ்சயன்.
இலங்கை இனப்பிரச்சனை, தமிழ் மீனவர் பிரச்சனை: மறைந்த இல.கணேசனின் கருத்துக்கள் என்ன? 20.08.2025 10:54
இந்தியாவில் நாகாலாந்து மாநில ஆளுநரும், தமிழ்நாடு மாநில பா.ஜ.கவின் முன்னாள் தலைவருமான இல. கணேசன் அவர்கள் கடந்த வாரம் வெள்ளிக்கிழமை (15 ஆகஸ்ட்) சென்னையில் காலமானார். அவருக்கு வயது 80. அவர் ஆஸ்திரேலியாவுக்கு 2014 செப்டம்பர் மாதம் வருகை தந்திருந்தபோது SBS ஒலிப்பதிவு கூடத்தில் வைத்து வழங்கிய நீண்ட நேர்முகத்தின் சுருக்கமான பதிவு. அவரோடு உரையாடியவர் றைசெல். நேர்முகம் பாகம் 1.
ஆஸ்திரேலிய விசாவுக்கு தேவைப்படும் ஆங்கிலத் தேர்வில் வந்துள்ள மாற்றம் என்ன? 20.08.2025 10:09
ஆஸ்திரேலியாவுக்கு குடிபெயரவோ, படிக்கவோ விரும்புகின்றவர்கள், தங்கள் ஆங்கில மொழித் திறனை நிருபிக்க எழுத வேண்டிய ஆங்கில தேர்வுகளில் ஒன்றான PTE (Pearson Test of English Academic) ஸ்கோர் குறித்து நடைமுறைக்கு வந்துள்ள மாற்றங்களை விவரிக்கிறார் உயிர்மெய்யார்.
Qantas விமான நிறுவனத்திற்கு விதிக்கப்பட்ட 90 மில்லியன் டொலர் அபராதம் 20.08.2025 9:05
ஆஸ்திரேலிய வரலாற்றில் மிகப்பெரிய சட்டவிரோத பணி நீக்க வழக்கு என்று அழைக்கப்படும், Qantas விமான நிறுவனத்தின் மீதான வழக்கில் ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய விமான நிறுவனம் மீது உச்ச நீதிமன்றம் 90 மில்லியன் டொலர்கள் அபராதம் விதித்துள்ளது. இது குறித்த செய்தியின் பின்னணியை எடுத்து வருகிறார் குலசேகரம் சஞ்சயன்.
'ஆஸ்திரேலிய பிரதமர் இஸ்ரேலை வஞ்சித்துவிட்டார்' - இஸ்ரேலிய பிரதமர். 20.08.2025 3:20
SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (புதன்கிழமை 20/08/2025) செய்திகள். வாசித்தவர் : மகேஸ்வரன் பிரபாகரன்.
மாகாண சபை தேர்தல்: இலங்கை அரசியலில் என்ன நடக்கிறது? 19.08.2025 6:36
இலங்கையில் மாகாண சபை தேர்தல் நடத்தப்படாமல் இழுத்தடிக்கப்பட்டு வருவதாகவும் தேர்தலை நடத்தவேண்டும் எனவும் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இது தொடர்பில் “பார்வைகள்” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.
Similar podcasts
Replaio is not a podcast publisher; show names, artwork and audio belong to their authors and are distributed through public RSS feeds.