SBS

SBS Tamil - SBS தமிழ்

News TA ↓ 2747 episodes

Independent news and stories from SBS Audio, connecting you to life in Australia and Tamil-speaking Australians. - தமிழ் பேசும் ஆஸ்திரேலியர்களுடனும், ஆஸ்திரேலிய வாழ்க்கையுடனும் இணைய உங்களுக்கு உதவும் பக்கசார்பற்ற செய்திகள் மற்றும் கதைகள்.

Be sure to visit the podcast's website and support the creator: www.sbs.com.au

Author

SBS

Category

News

Podcast website

www.sbs.com.au

Latest episode

Nov 20, 2026

Where to listen?

Podcasts in the app Replaio Radio Coming soon

Podcasts are coming to the app soon. Install now and be the first to see a whole new take on podcasts

Get it on Google Play Install for free Android 10M+ downloads · 4.7+ rating iOS soon

Episodes

இந்தியா & தமிழ்நாடு: கடந்தவார நிகழ்வுகளின் தொகுப்பு 31.08.2025

இந்திய பிரதமர் நரேந்திர மோடி சீன பயணம் - சீன அதிபர் ஜின்பிங்குடன் சந்திப்பு : இரு நாட்டு உறவில் மாற்றம் நிகழுமா? “மரங்களோடு பேசுவோம்” மாநாடு - சீமானின் அதிரடி பேச்சு; ஒரே மேடையில் எடப்பாடி பழனிசாமி - அண்ணாமலை! மோதல் முடிவுக்கு வந்ததா?; தமிழக வெற்றிக் கழகம் மற்றும் திமுக மோதல்; இவை உள்ளிட்ட செய்திகளோடு “செய்திகளின் பின்னணி” நிகழ்ச்சிக்காக இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்!

ஆஸ்திரேலிய, உலக செய்திகளின் இந்த வார தொகுப்பு 30.08.2025

ஆஸ்திரேலியாவிலும், உலகிலும் இந்த வாரம் (24 – 30 ஆகஸ்ட் 2025) நடந்த முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு. பதிவு செய்யப்படும் நாள்: 30 ஆகஸ்ட் 2025 சனிக்கிழமை. வாசித்தவர்: றைசெல்.

நியூசிலாந்தில் குடியேறுவதற்கான புதிய விசா அறிமுகம்! 29.08.2025

நியூசிலாந்தில் குடியேறுவதற்கான புதிய விசா ஒன்றை அந்நாட்டு அரசு அறிமுகம் செய்துள்ளது. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.

'காலத்துக்கேற்ப என்னை மாத்திட்டேன்': Super Singer பாடகர் அஜய் கிருஷ்ணா 29.08.2025

இசையமைப்பாளர் 'தேனிசைத்தென்றல்' தேவா அவர்கள் ஆஸ்திரேலியாவுக்கு இசைப்பயணம் மேற்கொள்ளவுள்ளார். அந்த நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக வருகைதரவுள்ள பாடகர் அஜய் கிருஷ்ணா எமக்கு வழங்கிய நேர்காணல். அவருடன் உரையாடியவர் மகேஸ்வரன் பிரபாகரன். Music Director 'Thenisai Thendral' Deva will be visiting Australia on a musical tour. As part of the events, singer Ajay Krishna, who will be performing, having a conve...

Penalty Rates, Overtime ratesஐ பாதுகாக்கும் சட்டம் நிறைவேறியது 29.08.2025

ஆஸ்திரேலிய அரசு இந்த வாரம் Penalty Rates Billஐ சட்டமாக நிறைவேற்றியுள்ளது. இது ஊழியர்களின் penalty rates, overtime rates போன்ற உரிமைகளை சட்ட ரீதியாக பாதுகாக்கும் ஒரு முயற்சி எனக் கூறப்படுகிறது. இதுபற்றிய செய்தியின் பின்னணியினைத் தருகிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.

‘நாட்டின் பெரும்பகுதி வெப்பமான, ஈரமான, காட்டுத்தீ அபாயம் கொண்ட வசந்த காலம்’ – வானிலை ஆய்வு மையம் 29.08.2025

SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வெள்ளிக்கிழமை 29/08/2025) செய்திகள். வாசித்தவர் குலசேகரம் சஞ்சயன்.

இரண்டு போலீசாரை சுட்டுக் கொன்ற Freeman சார்ந்த “இறையாண்மை குடிமக்கள்” என்பவர்களின் கொள்கைகள் என்ன? 28.08.2025

விக்டோரியா மாநிலத்தில் இரண்டு காவல்துறை அதிகாரிகளைச் சுட்டுக் கொன்றதாக குற்றம் சாட்டப்படும் Dezi Freeman எனபவர் Sovereign Citizens - ‘இறையாண்மையுடைய குடிமக்கள்’ எனும் கொள்கையை கடைபிடிப்பவர் என்றும், இது தீவிர விளிம்பு நிலை குழு என்றும் கருதப்படுகிறது. இந்த பின்னணியில் Sovereign Citizens பற்றி விளக்குகிறார் ஊடகத்துறையில் பல ஆண்டுகளாக பணியாற்றும் இரா.சத்தியநாதன் அவர்கள்.

இலங்கையின் இந்த வார முக்கிய செய்திகள் 28.08.2025

இலங்கையில் அரசு நிதியை முறைகேடாக பயன்படுத்திய குற்றச்சாட்டில் கைதான முன்னாள் அதிபர் ரணில் விக்ரமசிங்க பிணையில் விடுவிக்கப்பட்டார்; மீண்டும் ஆரம்பமான யாழ்.செம்மணி மனித புதைகுழி அகழ்வு பணியில் தொடர்ந்து மனித எச்சங்கள் மீட்பு. இவை உள்ளிட்ட செய்திகளோடு “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சிக்காக விவரணமொன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.

இந்த வார உலக செய்திகளின் தொகுப்பு 28.08.2025

காசாவுக்குள் முன்னேறும் இஸ்ரேலிய படைகள்; லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்; கேமரூன் எல்லையில் ஆயுததாரிகள் மீது நைஜீரியா தாக்குதல்; சீனா இயற்கை வளங்களை எடுப்பதாக ஜப்பான் குற்றச்சாட்டு; பிரிட்டனில் புகலிடக்கோரிக்கையாளர்களை விடுதிகளில் வைக்கப்படுவதற்காக எதிராக போராட்டம்; மியான்மர் அகதிகளுக்கு சட்டப்பூர்வமாக வேலை செய்வதற்கு அனுமதி வழங்கிய தாய்லாந்து; இந்தியா மீதான அமெரிக்காவின் 50 சதவீத வரி நடைமுறை; காங்...

‘வடிவம் மாறலாம், வாசிப்பு பழக்கம் மாறாது’ – கார்டூனிஸ்ட் மதன் 28.08.2025

மதன் அவர்கள் தமிழ்நாட்டின் மிகவும் பிரபலமான கார்டூனிஸ்ட். நகைச்சுவை சித்திரம், வரலாறு, தகவல், எழுத்து, திரைப்பட ஆய்வு என்று தொட்ட துறையிலெல்லாம் தனி முத்திரை பதித்தவர் அவர். மதன் அவர்கள் 15 ஆண்டுகளுக்கும் முன்பு (2010 ஆம் ஆண்டு) நமக்கு வழங்கிய நீண்ட நேர்முகத்தின் மறு பதிவு இது. பாகம் 2.

ஆஸ்திரேலிய வானில் தோன்றவுள்ள ‘இரத்த நிலா’! 28.08.2025

ஆஸ்திரேலிய வானில் முழு சந்திர கிரகணம் ''blood moon’ பிரமாண்டமாக காட்சியளிக்க உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.

நான் எப்படி கார்டூனிஸ்ட் ஆனேன்? 28.08.2025

மதன் அவர்கள் தமிழ்நாட்டின் மிகவும் பிரபலமான கார்டூனிஸ்ட். நகைச்சுவை சித்திரம், வரலாறு, தகவல், எழுத்து, திரைப்பட ஆய்வு என்று தொட்ட துறையிலெல்லாம் தனி முத்திரை பதித்தவர் அவர். மதன் அவர்கள் 15 ஆண்டுகளுக்கும் முன்பு (2010 ஆம் ஆண்டு) நமக்கு வழங்கிய நீண்ட நேர்முகத்தின் மறு பதிவு இது. பாகம் 1.

ஒரு குடும்பம் ஒரு ஆண்டில் வீணடிக்கும் உணவின் மதிப்பு $1,500. நீங்கள் அதில் ஒருவரா? 28.08.2025

ஆஸ்திரேலியாவில் ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக ஒரு குடும்பம் $1,500 மதிப்புள்ள உணவை வீணாக்குறார்கள் என்று ஆய்வு முடிவு தெரிவிக்கிறது. இது குறித்த செய்தியின் பின்னணி நிகழ்ச்சியை முன்வைக்கிறார் றைசெல்.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் ஏற்படுத்தும் வலி தீருமா? 28.08.2025

உலகின் பல்வேறு பகுதிகளில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பது குறித்து ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்ட கவலைகளைத் தொடர்ந்து, அனைத்து மக்களையும் வலிந்து காணாமல் ஆக்கப்படுவதிலிருந்து பாதுகாப்பதற்கான சர்வதேச உடன்படிக்கை 2010ஆம் ஆண்டு ஐ. நா. சபையில் ஏற்றுக் கொள்ளப்பட்டது. அதற்கடுத்த ஆண்டு, 2011 ஆம் ஆண்டு தொடக்கம் ஆகஸ்ட் 30 ஆம் தேதியை, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான சர்வதேச தினமாக ஐக...

நாட்டில் குற்ற செயல்கள் அதிகரிப்பதாக பெரும்பாலான மக்கள் கவலை 28.08.2025

SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வியாழக்கிழமை 28/08/2025) செய்திகள். வாசித்தவர்: றைசெல்.

One of the biggest drivers of anti-gay slurs isn't actually homophobia - நாம் ஏன் இன்னும் ஓரினச்சேர்க்கையாளர்களை அவதூறாகப் பேசுகிறோம்? 27.08.2025

From violent attacks targeting gay men to slurs on the sports field, homophobia has been making headlines. - ஓரினச்சேர்க்கையாளர்களைக் குறிவைக்கும் வன்முறைத் தாக்குதல்கள் முதல் விளையாட்டு மைதானத்தில் நடக்கும் அவதூறு நடவடிக்கைகள் வரை, ஓரினச்சேர்க்கை தலைப்புச் செய்திகளில் இடம் பிடித்து வருகிறது.

3500 பேருக்கு வேலைவாய்ப்பு உள்ளதாக Australia Post அறிவிப்பு! 27.08.2025

3,500-க்கும் மேற்பட்ட seasonal workers எனப்படுகின்ற குறிப்பிட்ட காலப்பகுதிக்கான ஊழியர்களை பணியில் அமர்த்த உள்ளதாக Australia Post அறிவித்துள்ளது. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.

ஆஸ்திரேலியாவின் குடும்பச் சட்டத்தில் கொண்டுவரப்பட்டுள்ள திருத்தங்கள் எவை? 27.08.2025

Family Law Act 1975- ஆஸ்திரேலியாவின் குடும்பச் சட்டத்தில் சில முக்கிய திருத்தங்கள் கடந்த ஜுன் முதல் கொண்டுவரப்பட்டுள்ளன. இதுதொடர்பில் விரிவாக விளக்குகிறார் மெல்பனில் சட்டத்தரணியாக கடமையாற்றுபவரும் Shan Lawyers நிறுவனத்தின் இயக்குனருமான திருமலை செல்வி சண்முகம் அவர்கள். அவரோடு உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.

யூத விரோதத் தாக்குதல்களின் பின்னணியில் ஈரான், தூதர் நாடுகடத்தல் 27.08.2025

SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (புதன்கிழமை 27/08/2025) செய்திகள். வாசித்தவர் : மகேஸ்வரன் பிரபாகரன்.

வடக்கு ,கிழக்கு மற்றும் மலையக மக்களுக்காக ஒன்றுபட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் 26.08.2025

இலங்கையின் வடக்கு ,கிழக்கு மற்றும் மலையக மக்கள் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைகளுக்கும் தீர்வு காணுமாறு நாடாளுமன்றத்தில் தமிழ் மற்றும் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒருமித்து குரல் எழுப்பினார்கள். இது தொடர்பில் “பார்வைகள்” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.

விக்டோரியாவில் துப்பாக்கிச் சூடு: இரு காவல்துறையினர் பலி, துப்பாக்கிதாரி தப்பியோட்டம்! 26.08.2025

விக்டோரியாவின் Porepunkah அருகே இன்று காலை நடந்த துப்பாக்கிச் சூட்டில் இரண்டு காவல்துறையினர் உயிரிழந்துள்ளனர். இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.

அமெரிக்காவுக்கு பொதி(parcel) அனுப்பும் சேவையை இடைநிறுத்திய Australia Post- பின்னணி என்ன? 26.08.2025

அமெரிக்கா மற்றும் Puerto Ricoக்கு பார்சல் - பொதிகளை அனுப்பும் சேவையை Australia Post தற்காலிகமாக நிறுத்துகிறது.இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.

5% வைப்புத் தொகையுடன் வீடு வாங்கும் திட்டம்: அரசு நடைமுறைப்படுத்தும் மாற்றம் என்ன? 26.08.2025

நாட்டிலுள்ள அனைத்து first home buyersஉம் அதாவது தமது முதலாவது வீட்டை வாங்குபவர்களும் 5 சதவீத deposit- வைப்புத் தொகையுடன் ஒரு வீட்டை வாங்கிக்கொள்ள அனுமதிக்கும் திட்டத்தை Albanese அரசு எதிர்வரும் அக்டோபர் மாதம் நடைமுறைப்படுத்த உள்ளது. இதுகுறித்த செய்தியின் பின்னணியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.

காசா மருத்துவமனை மீதான தாக்குதல் ஒரு 'துயரமான விபத்து' - இஸ்ரேலிய பிரதமர் 26.08.2025

SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (செவ்வாய்க்கிழமை 26/08/2025) செய்திகள். வாசித்தவர் குலசேகரம் சஞ்சயன்.

வாலாட்டி & வாழ்வின் வழிகாட்டி: சர்வதேச நாய் தினம் 25.08.2025

ஆண்டுதோறும் ஆகஸ்ட் 26 ஆம் தேதி கொண்டாடப்படும் சர்வதேச நாய் தினம், மனிதர்களுக்கும் நாய்களுக்கும் இடையிலான சிறப்புப் பிணைப்பைப் போற்றுவதற்கும் கொண்டாடுவதற்கும் அர்ப்பணிக்கப்பட்ட ஒரு நாளாகும். இது குறித்து ஒரு சிறப்பு நிகழ்ச்சியை முன்வைக்கிறார் குலசேகரம் சஞ்சயன்.

Listen to the SBS Tamil - SBS தமிழ் podcast in Replaio

Radio and podcasts in one app - free, with no sign-up. Install today and do not miss the launch

Get it on Google Play

Replaio is not a podcast publisher; show names, artwork and audio belong to their authors and are distributed through public RSS feeds.