SBS
SBS Tamil - SBS தமிழ்
Independent news and stories from SBS Audio, connecting you to life in Australia and Tamil-speaking Australians. - தமிழ் பேசும் ஆஸ்திரேலியர்களுடனும், ஆஸ்திரேலிய வாழ்க்கையுடனும் இணைய உங்களுக்கு உதவும் பக்கசார்பற்ற செய்திகள் மற்றும் கதைகள்.
Be sure to visit the podcast's website and support the creator: www.sbs.com.au
Where to listen?
Podcasts in the app Replaio Radio Coming soonPodcasts are coming to the app soon. Install now and be the first to see a whole new take on podcasts
Episodes
ஏன் ‘நாம் தமிழர்’ கட்சி பிற கட்சிகளுடன் கூட்டணி அமைக்கவில்லை? 17.04.2026 11:22
தமிழக தேர்தல் களத்தில் இருக்கும் முக்கிய கட்சி நாம் தமிழர் கட்சி. இந்த கட்சியின் பார்வை, அவர்களின் திட்டம், இந்த தேர்தலில் அவர்கள் கொண்டிருக்கும் நோக்கம் குறித்த கருத்துகளை முன்வைக்கிறார் நாம் தமிழர் கட்சியின் கும்மிடிப்பூண்டி சட்டமன்ற தொகுதி வேட்பாளரான ஸ்ரீதர். அவருடன் உரையாடியவர் நமது தமிழக செய்தியாளர் தமிழ்ப் பிரபாகரன்.
செய்தியின் பின்னணி: ஆஸ்திரேலியா ஏன் இராணுவச் செலவைப் பல பில்லியன்$ அதிகரிக்க முடிவு செய்தது? 17.04.2026 7:06
ஆஸ்திரேலியா, அதிகரிக்கும் உலக பாதுகாப்பு அபாயங்களை எதிர்கொள்ள அடுத்த 10 ஆண்டுகளில் கூடுதலாக 53 பில்லியன் டாலர்களால் பாதுகாப்பு செலவினத்தை உயர்த்த திட்டமிட்டுள்ளது. இந்த முதலீடு இராணுவ திறன், ட்ரோன் தொழில்நுட்பம், கடற்படை மற்றும் உள்ளூர் பாதுகாப்பு தொழில்துறையை வலுப்படுத்துவதில் கவனம் செலுத்துகிறது. ஆனால், செலவின் தெளிவு மற்றும் இது போதுமானதா என்ற கேள்விகளுடன் சில விமர்சனங்களும் எழுந்துள்ளன. இதுபற்...
இன்றைய செய்திகள்: 17 ஏப்ரல் 2026 - வெள்ளிக்கிழமை 17.04.2026 4:59
SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வெள்ளிக்கிழமை 17/04/2026) செய்திகள். வாசித்தவர் : செல்வி இன்பசேகரன்.
தமிழக தேர்தல் களம் – 17 ஏப்ரல் 2026 17.04.2026 8:39
தமிழ்நாட்டில் ஏப்ரல் மாதம் 23 ஆம் தேதி தமிழக சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த பின்னணியில் தமிழக தேர்தல் கள நிலவரத்தை முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.
நம்ம ஆஸ்திரேலியா: மக்கள் வந்து குவிந்து நடத்திய தங்க வேட்டை வரலாறு தெரியுமா? 17.04.2026 9:45
ஆஸ்திரேலிய வரலாற்றில் தங்கவேட்டை (Gold Rush) என்பது மிகவும் முக்கியமான நிகழ்வு. இந்த தங்க வேட்டையின் பின்னாலிருக்கும் ரகசியங்களும், கதைகளும், வரலாறும் ஏராளம். தங்கவேட்டை வரலாற்றின் குறிப்புகளை “நம்ம ஆஸ்திரேலியா” நிகழ்ச்சி மூலம் முன்வைக்கிறார் கீதா மதிவாணன் அவர்கள். நிகழ்ச்சியாக்கம்: றைசெல்.
Economy பயணிகளுக்கும் படுத்து உறங்கும் வசதி-Air New Zealand அறிவிப்பு 16.04.2026 2:14
நீண்ட தூர விமானப் பயணங்களில் economy வகுப்பு பயணிகளும் படுத்து உறங்கும் வாய்ப்பினை வழங்கும் புதிய திட்டத்தை Air New Zealand அறிவித்துள்ளது. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.
அகதிகள் தங்குமிடம் தொடர்பில் புதிய வழக்கை எதிர்கொள்ளும் ஆஸ்திரேலியா 16.04.2026 2:43
அகதிகள் தங்குமிட செலவுகள் தொடர்பாக, பப்புவா நியூ கினி நாட்டில் உள்ள ஒரு விடுதி ஆஸ்திரேலிய அரசுக்கு எதிராக வழக்கு தொடர முயற்சி செய்துள்ளது. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.
விழி இழந்த பிறவிக்கலைஞன் 16.04.2026 11:25
பிறவியிலேயே கண்பார்வை இழந்திருந்தாலும் தன்னம்பிக்கையோடு இயங்கும் ஒரு புல்லாங்குழல் இசைக் கலைஞர் வரதராஜன் பெருமாள். Covid-19 பெருந்தொற்று எல்லோரையும் பாதித்திருந்த வேளையில், பெருமாள் எப்படித் தாக்குப் பிடித்தார் என்று எமக்கு 2020ஆம் ஆண்டு வழங்கிய நேர்காணலின் மறு ஒலிபரப்பு இது. அவரை நேர்கண்டவர் குலசேகரம் சஞ்சயன்.
செய்தியின் பின்னணி: Coalition கூட்டணியின் குடிவரவுக் கொள்கை – மாறப்போவது என்ன? 16.04.2026 11:49
ஆஸ்திரேலிய அரசியலில் இந்த வாரம் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் ஒரு முக்கியமான தலைப்பு, Coalition கூட்டணிக் கட்சியின் புதிய குடிவரவுக் கொள்கை. சிட்னியில் உள்ள மென்சீஸ் ஆய்வு மையத்தில் (Menzies Research Centre), நேற்று முன்தினம், செவ்வாய்க்கிழமை, எதிர்க்கட்சித் தலைவர் ஆங்கஸ் டெய்லர் (Angus Taylor) தனது முதல் கொள்கை உரையை நிகழ்த்தினார். ஆஸ்திரேலியாவின் குடிவரவு முறையை முழுமையாக மாற்றியமைக்க...
சுவை மிகுந்த Chicken Rendang செய்வது எப்படி? 16.04.2026 5:06
Chicken Rendang செய்முறை தொடர்பில் விளக்குகிறார் பிரபல சமையல்கலை மற்றும் கேக் வடிவமைப்பு நிபுணர் சாந்தா ஜெயராஜ் அவர்கள். அவரோடு உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.
இன்றைய செய்திகள்: 16 ஏப்ரல் 2026 - வியாழக்கிழமை 16.04.2026 4:01
SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வியாழக்கிழமை 16/04/2026) செய்திகள். வாசித்தவர் குலசேகரம் சஞ்சயன்.
NSW மாநிலத்தில் இனி மருந்தாளர்களே கருத்தடை மாத்திரைகளை வழங்க முடியும் 15.04.2026 2:30
நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் பெண்கள் இனி நேரடியாக மருந்தகங்களிலிருந்து கருத்தடை மாத்திரைகளை பெறுவதற்கான வசதி வழங்கப்படுகிறது. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.
Australia’s unique wildlife: what makes it special and what’s at risk - ஆஸ்திரேலியாவின் தனித்துவமான விலங்குகளைக் காக்க என்ன செய்யலாம்? 15.04.2026 10:43
Australia is one of the most biodiverse places on Earth, home to wildlife and plant species found nowhere else on the planet. In this episode of Australia Explained you’ll learn about what makes Australia’s biodiversity so special, the threats it faces and how we can all help protect it. - ஆஸ்திரேலியாவின் biodiversity-உயிரியல் பல்வகைமை ஏன் இவ்வளவு தனித்துவமானது, அது எதிர்கொள்ளும் அச்சுறுத்தல்கள் எ...
இன்றைய செய்திகள்: 15 ஏப்ரல் 2026, புதன்கிழமை 15.04.2026 3:37
SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (புதன்கிழமை 15/04/2026) செய்திகள். வாசித்தவர்: மகேஸ்வரன் பிரபாகரன்.
இலங்கை: சித்திரை புத்தாண்டு கொண்டாட்டங்கள் 15.04.2026 8:37
இலங்கையில் சித்திரை புது வருடத்தின் கொண்டாட்டங்கள் மற்றும் நிகழ்வுகள் எவ்வாறு அமைந்திருந்தன என்பது தொடர்பில் “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.
தமிழக தேர்தல் களம் – 15 ஏப்ரல் 2026 14.04.2026 8:56
தமிழ்நாட்டில் ஏப்ரல் மாதம் 23 ஆம் தேதி தமிழக சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த பின்னணியில் தமிழக தேர்தல் கள நிலவரத்தை முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் தமிழ்ப் பிரபாகரன்.
போலி நோட்டுகள் குறித்து ஆஸ்திரேலியர்களுக்கு எச்சரிக்கை-புதிய சோதனை நடவடிக்கையும் ஆரம்பம் 14.04.2026 2:22
ஆஸ்திரேலியாவில் போலி நோட்டுகளின் புழக்கம் அதிகரித்து வருவதால், அதிகாரிகளும் வணிக நிறுவனங்களும் அதிக எச்சரிக்கையுடன் உள்ளனர்.இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.
செய்தியின் பின்னணி: ஈரான் துறைமுகங்கள் மீதான அமெரிக்க முற்றுகை ஆரம்பம்- அடுத்தது என்ன? 14.04.2026 7:08
உலகின் முக்கியமான கடல் வர்த்தக பாதைகளில் ஒன்றான ஹோர்முஸ் நீரிணையை முடக்கும் அமெரிக்காவின் கடற்படை முற்றுகை நடைமுறைக்கு வந்துள்ளது. இது குறித்து SBS News-க்காக ஆங்கிலத்தில் Camille Bianchi எழுதிய விவரணத்தை அடிப்படையாக கொண்டு செய்தியின் பின்னணியை தயாரித்து வழங்குகிறார் றேனுகா துரைசிங்கம்
ஆஸ்திரேலியாவில் வீட்டு விலை எங்கே குறைகிறது? எங்கே அதிகரிக்கிறது? 14.04.2026 2:48
ஆஸ்திரேலியாவின் வீட்டு விலை தொடர்பில் தற்போது கலவையான நிலை உருவாகியுள்ளதுடன், வளர்ச்சி வேகம் மந்தமடையும் அறிகுறிகள் தென்படுகின்றன. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.
இன்றைய செய்திகள்: 14 ஏப்ரல் 2026 - செவ்வாய்க்கிழமை 13.04.2026 3:50
SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (செவ்வாய்க்கிழமை 14/04/2026) செய்திகள். வாசித்தவர் குலசேகரம் சஞ்சயன்.
மெல்பன் தமிழ் சந்தை: வணிகமும் கலாச்சாரமும் இணையும் பெருவிழா! 13.04.2026 10:38
Australian Tamil Chamber of Commerce - Victorian Chapter ஏற்பாட்டில் 'மெல்பன் தமிழ் சந்தை' விரைவில் நடைபெறவுள்ளது. இதுதொடர்பில் அந்த அமைப்பைச் சேர்ந்த செந்தில் வேல்-Executive Vice President மற்றும் திருமலை செல்வி சண்முகம்-Vice President of Membership ஆகியோரோடு உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.
மின்சார மிதிவண்டிகள் (e-Bikes) வரமா சாபமா? 13.04.2026 10:41
நம் நாட்டின் சாலைகளில் மின்சார மிதிவண்டிகள் – e-Bikeகளின் பாவனை மிக வேகமாக வளர்ந்து வருகிறது. மத்திய கிழக்கில் ஏற்பட்டிருக்கும் போர், எரிபொருள் விலை மீது நேரடித்தாக்கம் செலுத்துகிறது. அதிகரித்துவரும் வாழ்க்கைச் செலவைக் குறைப்பதற்கு ஒரு வழியாக, மக்கள் வாகனங்களை ஓட்டுவதை விடுத்து மின்மிதிவண்டிகளைப் பயன்படுத்துகிறார்கள். அதிகரிக்கும் e-Bikeகள் சாலைப் பாதுகாப்பில் ஏற்படுத்தும் தாக்கம் என்ன, இந்த மின்ம...
செய்தியின் பின்னணி: அமெரிக்கா – ஈரான் சமாதானப் பேச்சுவார்த்தைகள் - உடன்பாடு ? 13.04.2026 9:19
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையிலான, இருபத்தொரு மணி நேரம் நீடித்த, பேச்சுவார்த்தைகள் எந்த உடன்பாடும் இல்லாமல் முடிவடைந்துள்ளன. எரிபொருள் பற்றாக்குறை மற்றும் உயரும் வட்டி விகிதங்களை ஏற்கனவே எதிர்கொண்டிருக்கும் ஆஸ்திரேலியர்களுக்கு இது மிகவும் விரும்பத்தகாத செய்தி. இந்த செய்தியின் பின்னணியை எடுத்து வருகிறார் குலசேகரம் சஞ்சயன்.
இன்றைய செய்திகள்: 13 ஏப்ரல் 2026 - திங்கட்கிழமை 13.04.2026 4:32
SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (திங்கட்கிழமை 13/04/2026) செய்திகள். வாசித்தவர் : றேனுகா துரைசிங்கம்.
‘திராவிட முன்னேற்றக் கழகம் சவாலை சமாளிக்கும், களத்தில் வெல்லும்’ - பேராசிரியர் ரவீந்திரன் 12.04.2026 11:05
தமிழ்நாட்டில் தேர்தல் பிரச்சாரம் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த பின்னணியில் திமுகவின் வெற்றிவாய்ப்பு குறித்து கலந்துரையாடுகிறார் அண்மையில், திமுகவின் மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் அவர்கள். அவரோடு உரையாடுகிறார் நமது தமிழக செய்தியாளர் தமிழ்ப் பிரபாகரன்.
Similar podcasts
Replaio is not a podcast publisher; show names, artwork and audio belong to their authors and are distributed through public RSS feeds.